Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்
#1
"எனக்கு திருமணமான பின்பும்
என்னை மனதில் வைத்துக்
கொண்டிருக்கும் காதலனுக்காக...

கோடி முறை யோசித்து
நீ எழுதிய எனக்கான காதல் கடிதம்
பத்திரமாக இருக்கிறது
மடித்து வைத்த
என் கூரைச் சேலை மத்தியில்

முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்
மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று..."

இப்படியாக நீள்கிறது
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

--மூலம்..http://gganesh.blogspot.com/2005/11/blog-post_11.html
Reply
#2
ஏற்கனவே அத்தளத்தில் வாசித்து விட்டேன்
.
Reply
#3
நானும் வாசித்து விட்டேன், அத்தளத்தில்.
.

.
Reply
#4
நானின்னும் வாசிக்கவில்லை.. ம்.. படிக்க உதைக்கிற மாதிரி இருக்கு.. காதலனையும் ஏமாற்றி.. கணவனையும் ஏமாற்றி... இவொன் போடுகின்ற கவிதைகளில்.. எப்பொதுமே.. இவ்வாறான தொனி தெரிகிறது.. என்ன மர்மமோ..



!
--
Reply
#5
கல்வெட்டு என்பவரின் கருத்துக்கள் தான் எனதும்.

யாருடைய மனதையும் நேகடிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. சொல்லி; வரும் பிரச்சனைகளை விட சொல்லாமல் விடுவதால் வரும் பிரச்சனைகள் தான் அதிகம். சொல்லிவிடுவதால் பிரச்சனைகளை எதிhகொள்ளுவதற்கு நீங்கள் உங்களை யார்படுத்தி ஒரு முடிவைக்கண்டு கொள்ளலாம். பயந்து சொல்லாமல் விடும் விடையங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்களால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
Reply
#6
<!--QuoteBegin-kpriyan+-->QUOTE(kpriyan)<!--QuoteEBegin-->நானின்னும் வாசிக்கவில்லை.. ம்.. படிக்க உதைக்கிற மாதிரி இருக்கு.. காதலனையும் ஏமாற்றி.. கணவனையும் ஏமாற்றி... இவொன் போடுகின்ற கவிதைகளில்.. எப்பொதுமே.. இவ்வாறான தொனி தெரிகிறது.. என்ன மர்மமோ..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இவோனின் அனுபவங்கள் பேசுகின்றன என்று அர்த்தம். :?:
:::: . ( - )::::
Reply
#7
<!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->

தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று...\"

இந்த வரிகள்  
என்னை மிகவும்
கவர்ந்த வரிகள்..
எல்லா காதலிகளும்
இதை விரும்புவதும் இல்லை
வேண்டுவதும் இல்லை..!!

ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.

இந்த மாதிரி கணவர்
மற்றும் கவிதை எழுதினவர்
பாராட்டுக்குரியவர்கள்..!!


--மூலம்..http://gganesh.blogspot.com/2005/11/blog-post_11.html<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)