Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னும் பயம் எனக்கு
#1
இன்னும் பயம் எனக்கு

தயவு செய்து என்னை
தனிமையில் விட்டு விடு

கசங்கிய இதயத்திலே
இன்னும்
உயிர்ப்போடு இருப்பது
எனது நினைவுகள்
மட்டுமே

வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை

எனெனில் உன்னிடம் என் கடந்த
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு

Reply
#2
கவிதை நன்று புரியாதவனிடம் மனதை சொல்லகூடாது புறக்குடத்தில் நீர் இறைப்பது போல் ஆகும்
inthirajith
Reply
#3
எனெனில் உன்னிடம் என் கடந்த
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு


கீதா நல்ல வரிகள். இப்படியானவர்களிடம் எமது மனக்கஷ்டங்களை சொல்வதை விட எமக்குள்ளே புட்டி வைத்திருக்கலாம். நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்.

Reply
#4
நன்றி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ரமா நன்றிகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரமா உங்களை காணகிடைப்பதில்லை ஏன் Cry

Reply
#5
கவிதை நல்லாகவே உள்ளது! அதுசரி எப்படி இவ்வளவு தூரம் வேதனைகள்........

''வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை ''

Arrow வேதனையை மற்றவர்களோடு பகிர்ந்தால் தானே மனதுக்கு ஆறுதல்! :?:
!:lol::lol::lol:
Reply
#6
உங்கள் வேதனை சொல்லும் கவி அழகாக இருக்கிறது. மேலும் தொடருங்கள்.
<b> .. .. !!</b>
Reply
#7
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்க கீதா, எழுத எழுத இன்னும் சிறப்பாக எழுதுவீங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
அனுமாந்தன்அண்ணா ரகிகைஅக்கா மதன்அண்ணா உங்கள் நன்றிகளுக்கு என் நன்றிகள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)