Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தல் 2005
#81
back button problem :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
Reply
#82
narathar Wrote:
Thala Wrote:
kurukaalapoovan Wrote:ஓம் ஓம் நீங்கள் வெளிநாடுகளில தப்பி இருந்து கொண்டு நல்லா எழுதுவியள். உங்களுக்கு சமாதானம் வேண்டாம் சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா ஏன் விட்டுட்டு வந்தனீங்கள். சனம் பென்ரோச் பற்றரி, பெற்றோல், பனடேல்க்கு எல்லாம் எவ்வளவு அவதிப்பட்டது தெரியுமே?

<b>கொழும்பில கூட எவ்வளவு கெடுபிடியள், நிம்மதியா கோல்பேசில கடலை வேண்டித்தின்னலமே? பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் ஒரு பிளட்டை கிளட்டை வேண்டிவிடலாமே, எவ்வளவு பயந்து கொணடிருந்தது சனம். யாழ்பாணத்துக்போய் விடுவளவுகளை நல்ல காசுக்கு வித்திருக்கேலுமே?</b>

உங்களுக்க எங்கை உதுகள் விளங்கப்போகுது, நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்சாலாவது பெரியாக்கள் சொல்லுறதை விளங்கிக் கொள்ளலாம்.

காத்துவாங்க(கச்சான்) ஏன் கொழும்பு காலிமுகத்திடலுக்கே போகோணும் காரைநகர் கசோரினா (நல்ல வெள்ளைக் மண்கரை) பீச்சுக்கும் போகலாம் தானே..????.... கச்சானும் காரதீவில விளையிறதால உள்ளூர் வியாபாரியளுக்கு லாபமும் கிட்டும்.... ......... Idea


(ஆமி..நேவி எலும்பை முறிச்சா நான் பொறுப்பில்லை) :wink:

வணகம் தல,

மீண்டும் காண்பது சந்தோசம் உங்கள் பயண அனுபவங்களை ஆவலுடன் எதிர்பாக்கிறோம்,படங்கள் எடுக்கவில்லயா?
களத்தில கன வியசம் நடந்திட்டுது ஆறுதலா வாசிச்சுப்போட்டு எழுதினாத் தான் குறுக்காலபோவன் பூடகமாப் பேசுறது விளங்கும்.
நாரத சுவாமி .....அவங்களுக்கு தெரியாத மாதிரி.. நீங்க நோட்டியாய் கதைக்கிறீங்க....அவங்க இப்ப தான் என்ன பிருந்தாவனத்தில் இருந்து பறந்து வந்த தூயவரம் மாதிரி கதைக்கீங்க... அவங்க தான் எல்லாமாய் அறிந்தவங்க... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



Reply
#83
<b>தேர்தலில் தமிழர்கள் அக்கறைகாட்ட வேண்டியதில்லை: சு.ப. தமிழ்ச்செல்வனுடனான சந்திப்புக்குபின் இரா. சம்பந்தன் அறிவிப்பு!!
[வியாழக்கிழமை, 10 நவம்பர் 2005, 16:24 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர்கள் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இரா.சம்பந்தன் இதை அறிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் இரா.சம்பந்தன் கூறியதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கி 3 மணிக்குத்தான் நிறைவடைந்தது.

இந்தக் கூட்டம் 3 மணித்தியாலத்துக்கும் மேலாக நடைபெற்றது. எதிர்வரும் சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்கள் மேற்கொள்ள வேண்டியது பற்றி மிகவும் ஆழமாகவும் தெளிவாகவும் ஆராயப்பட்டது.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் மாறி மாறி வந்த சிங்கள அரசியல் தலைமைகள் எதுவிதமாக தமிழ் மக்களை நடத்தினார்கள் என்பது பற்றியும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எப்படிச் செயற்பட்டார்கள் என்பது பற்றியும் தமிழ் மக்கள் இராணுவ ரீதியாக எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பது பற்றியும் இனப்படுகொலையை அரசுகள் எப்படியெல்லாம் நடத்தின என்பது பற்றியும் நீண்ட நேரமாக பேசப்பட்டன.

கடந்த மூன்றரை வருடகாலமாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அரசும் பொதுக் கூட்டமைப்பு அரசும் எப்படியாக செயல்பட்டன என்பது பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக தமிழ்ச்செல்வனும் தங்களது கருத்தைத் தெரிவித்தார்.

இறுதியில் எடுக்கப்பட்ட முடிவு,

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலால் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தமிழ் மக்கள் விரும்புகிற ஒரு தீர்வு ஏற்பட முடியாது. ஏற்படாது என்பதுதான்.

அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்ட, சமாதான காலம் ஆகியவற்றை மனதில் வைத்து தேர்தலை அணுகுகின்ற போது இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகாட்ட வேண்டியது இல்லை. இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டுவதன் மூலமாக எதுவித நன்மையும் அடைய முடியாது என்பது எங்களது திடமான கருத்து.

தற்போது போட்டியிடும் இரு கட்சிகளனது வேட்பாளர்களும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மனதில் கொண்டு ஆராய்ந்து சிந்திக்கிற போது இந்தக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது எம்மால் நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது மக்களும் இந்த நிலைமைகளை அனுபவித்திருக்கிறார்கள். அவதானித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நிலைமைகள் எல்லாம் தெரியும். வடக்கு-கிழக்கில் வாழ்கிற மக்கள் அனைவரும் நிலைமைகளை புரிந்தவர்கள். எமது மக்களும் இதே சிந்தனையில்தான் இருக்கிறார்கள். எமது மக்களும் இதேவிதமான முடிவைத்தான் எடுப்பார்கள் என்பதில் எதுவிதமான ஐயப்பாடும் இல்லை.

எமது பழைய அனுபவங்களின் அடிப்படையில் விசேடமாக யுத்த நிறுத்தம் ஏற்பட்ட பிறகு- தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்த சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கிய பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது இந்தத் தேர்தலில் எமது மக்கள் அக்கறை காட்ட வேண்டியதில்லை என்பது எமது முடிவு என்றார் இரா. சம்பந்தன்.

அப்படியானால் சிங்களத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இரா. சம்பந்தன், இந்தத் தேர்தலில் எமது மக்கள் அக்கறைகாட்ட வேண்டியதில்லை என்பது எமது தெளிவான கருத்து என்றார் சம்பந்தன்.

தமிழ் மக்கள் வாக்களிக்க விரும்பினால் நீங்கள் தடுப்பீர்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், நிச்சயமாக தடுக்கமாட்டோம். தமிழ் மக்களினது ஜனநாயக உரிமையை பறிக்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் அனுபவங்களின் அடிப்படையில் நிச்சயம் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகாட்டமார்கள் எமது நம்பிக்கை என்றார் அவர்.

ஊடகவியலாளர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கூறியதாவது:

சிங்களத் தேசத்துக்கான தேர்தல் தொடர்பாக தமிழர்கள் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.

1972-77 ஆம் ஆண்டு காலகட்ட அரசியல் அமைப்புகளை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இதை எங்கள் அரசாக ஏற்கவில்லை நாம். இது எங்கள் தேசத்துக்கான தேர்தலும் அல்ல. சிங்கள தேசத்துக்கானத் தேர்தல் என்றார் அவர்.</b>


நன்றி: புதினம்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#84
தனது மாமனார் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினரென்கிறார் அமைச்சர் மங்கள

தனது குடும்பத்தில் சகல மதத்தவர்களும் இருப்பதாகவும் தெரிவிப்பு

தனது குடும்பத்தில் பௌத்த,இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் இருப்பதாக கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, தனது மாமனார் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினரெனவும் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி வேட்பாளர் பிரசார இணைப்பாளர் காரியாலயத்தினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மங்கள சமரவீர அங்கு மேலும் பேசுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டதால் இன்று மக்களிடம் தவறான பிரசாரங்களை செய்து இந் நாட்டில் மீண்டுமொரு இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஐ.தே.க. மற்றும் அக் கட்சிக்கு ஆதரவான வர்த்தகர்களே இந் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதையிட்டு நாம் விசனமடைந்துள்ளோம். மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கமொன்றில் மீண்டுமொரு இனவாத வன்முறைக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.

ஐ.தே.க. சார்பான பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவல ரணிலுக்காக பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் இன மற்றும் மத பேதங்களை உருவாக்கப் பார்க்கிறார்.இலங்கையைப் போன்று வேறெங்கும் ஒரே இடத்தில் சர்வ மத ஸ்தலங்களும் இல்லை. எம்மிடம் தான் அந்த சிறப்பம்சம் இருக்கிறது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். எம்மிடையே எப்போதும் மத பேதங்கள் இருந்ததில்லை.

உதாரணமாக, எனது குடும்பத்திற்குள்ளேயே பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, எனது மாமனார் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினராவார். அதாவது, அவர் எனது தந்தையின் சகோதரியின் கணவராவார். எனவே, ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆதரவாளர்களுமே இன மற்றும் மத பேதங்களை உருவாக்கப் பார்க்கின்றனர்.

பிரிவினைகள் இல்லாத நாம் அனைவரும் ஒரே மேடையில் இருக்கிறோம். தனியான ஈழ இராச்சியம் கேட்கும் பிரபாகரன் , தனி மலை நாடு கோரும் ஆறுமுகம் தொண்டமான், தனியான கிழக்குப் பிராந்தியம் கேட்கும் ரவூப் ஹக்கீம், தற்போது மத பேதங்களை உருவாக்க முயற்சிக்கும் லலித் கொத்தலாவல போன்றவர்கள் அனைவரும் ரணிலுடன் ஒரே மேடையில் இருக்கின்றனர்.

எனவே, ஒரே நாட்டில் அனைத்து இன சமூகங்களும் எந்த தலைமைத்துவத்தின் கீழ் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியுமென நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.

Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#85
அடப்பாவிகளா கிளம்பீட்டாங்கையா.. கிளம்பீட்டாங்கை. :evil: :evil:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#86
ஆகா தேர்தலுக்காக சொந்தம் கொண்டாடுகிறார்களா இவர்கள்?

Reply
#87
அட பாவி மனிசா.................................................................
நாற்காலிக்காக இப்படி சொல்லுகிறானே..........................................
[size=18]<b> ..
.</b>
Reply
#88
தமிழர் வாக்குகளால் வெற்றியை உறுதிப்படுத்தலாம் எண்டு நம்பியிருந்த ஜதேகா புறக்கணிக்கப் போகிறார்கள் என்றதை உணர்ந்ததும் சிங்களத் தேசிவாதம் பேசி சிங்கள மக்களின் வாக்குகளால் தான் தமது வெற்றியை உறுதி செய்யலாம் என்று தொடர்கிறார்கள் பிரச்சாரங்களை. இந்த யுக்தி மகிந்தவின் வாக்குகளை ரணில் பக்கம் இழுத்துவிட்டது போலுள்ளது.

முற்று முழுதாக பெரும்பான்மையினரின் வாக்குகளை நம்பியிருந்த மகிந்த தரப்பு சிறுபான்மையினரின் வாக்குகளின் தேவையை உணர்ந்து தமது பிரச்சார உத்திகளையும் மாற்றியுள்ளார்கள் போலுள்ளது.
Reply
#89
thiru Wrote:நான் மிகவும் வேதனையுடன் இந்தப் பதிவினை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறேன்.

<b>காரணம் 1.</b>

இங்கு எழுப்பப்பட்ட ஒரு வினாவிற்கு எவருமே சரியாக விடையளிக்கவில்லை. அப்படியானால் முதலில் நாம் எம்மவர்கள் மத்தியிலேதான் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்யவேண்டுமா என்ற வினா எழுகிறது.

கேட்டகப்பட்ட வினா மிக முக்கியமானது. விடையோ மிக எளிதானது.

ஒருவர் தமிழர்தேசத்தின் நகர்வுகளை, அங்கிருந்து வரும் வெளியீடுகளைத் தொடர்ந்து கிரகித்துவருவாராயின் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது ஒரு பொருட்டல்ல.

<b>கேள்வி: </b>கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் தாயகத்தினைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்குமாறு கோரப்பட்டனர்? ஏன் தற்போது வாக்களிக்காது தவிர்க்குமாறு வேண்டப்படுகிறார்கள்??

<b>விடை:</b> கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க்கூட்டமைப்பு என்ன விடயங்களை முன்வைத்துத் தேர்தலில் மக்கள் முன் சென்றார்கள்?

தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை உறுதிப்படுத்தியும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் மக்கள் முன் சென்றார்கள்.

அதனால் 'தமிழர்களது தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றையும், தமிழ்மக்களுக்காகப் போராடும் சக்தி விடுதலைப் புலிகளே என்பதை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவேண்டும்' என்று கோரப்பட்டனர்.

இங்கு இருந்தது தெளிவான அரசியல் இலக்கு. அதாவது சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களது அபிலாசை என்ன, கோரிக்கை என்ன என்பதை எடுத்துரைப்பதுதான் அந்த இலக்கு. மக்கள் திரண்டு வாக்களித்ததன் மூலம் அந்த இலக்கு எட்டப்பட்டது.

<b>அதுதவிர இந்த வாக்குகளால் வரும் பாராளுமன்றப் பதவிகளால் எமது சிக்கல் தீர்க்கப்படும் என்றோ, அல்லது ஏதாவது புதிதாக அதிசயம் நடக்கும் என்றோ எவரும் எதிர்பார்க்கவில்லை. அது நோக்கமும் அல்ல.</b>

ஆனால் இப்போது வந்திருப்பது சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தல்.

<b>இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்தருக்கு வாக்களித்தால் என்ன நடக்கும்?</b>

உடனே சர்வதேசம் புலிகளைப் பார்த்து 'தமிழர்கள் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண விரும்புகிறார்கள். எனவே மகிந்தர் தருவதைப் பெற்றுக்கொள்ளுங்கள். தமிழ்மக்களது ஆதரவு அவருக்கு இருப்பதால் அவர்களும் மகிந்தர் தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார்கள்' என்று சொல்லும்.

<b>சரி ரணில் ஐயாவுக்கு வாக்களித்தால் என்னவாகும்?</b>

அவர் ஏற்கெனவே 'சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குப் பெயர்போனவர்.' தற்போது சமாதான காவலராக நடிக்க முற்பட்டாலும், அவரது கூடாரத்திலிருந்தே நேற்றைய தினம் வெளியாகிய விடயம் ஒன்று அவரது வேடத்தை உறுதி செய்கிறது. அதாவது 'ரணில் பதவிக்கு வந்து விடுதலைப் புலிகள் அவர் சொல்வதைக் கேட்காமல் யுத்தத்திற்குப் போனால், இலங்கை இராணுவம் யுத்தம் செய்யாது. பதிலாக அமெரிக்க, இந்திய இராணுவங்களே புலிகளுடன் போரிடும்.' இவ்வாறு சொல்லியிருப்பவர் ஐ.தே.கவின் முக்கிய புள்ளியான நவீன் திசநாயக்கா!

அதனால் ரணிலிற்கு வாக்களித்தால் சர்வதேசம் புலிகளிடம் 'ரணில் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள். தமிழர்களது அமோக ஆதரவு அவருக்கு உண்டு. எனவே தமிழர்கள் அவர் தருவதற்கு மறுப்புச் சொல்லமாட்டார்கள்' என்று வேதம் ஓதுவார்கள்.

இதனால்தான் தற்போதும் எமது அரசியல் அபிலாசை என்ன என்பதைக் காட்டுவதற்குத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் நாலாதிக்கிலிருந்தும் வருகின்றன.

'இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தால் அதனையே விடுதலைப் போராட்டத்தின் இராணுவப் பரிமாணத்தால் தமிழர்கள் பெற்ற பேரம்பேசும் வலிமையைச் சிதைப்பதற்காகச் சர்வதேசமும் சிங்களமும் பயன்படுத்தலாம்' என்ற சந்தேகத்தைத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள்; எழுப்பிவருகிறார்கள்.

சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் நாம் அரசியலிலும் ஏமாளிகள் அல்ல என்று நிரூபிப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக வந்து வாய்த்துள்ளது. தேர்தல் புறக்கணிப்பு என்பதும் ஒருவிதத்தில் எமது இலக்கை அரசியல் ரீதியாக வலியுறுத்தும் ஒரு உத்தியே.


'தேர்தலைத் தமிழர்தேசம் புறக்கணிக்க வேண்டும்' என்ற கருத்து ஏறத்தாழ இரண்டு மூன்று மாதங்களின் முன்பே பல தமிழ்த் தினசரிகள், வார ஏடுகளில் அரசியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியாகிவிட்டது.

இன்று திடீரென முளைக்கும் சுவரொட்டிகள் எவரால் வெளியிடப்படுகின்றன என்பது குறித்துப் பலத்த சந்தேகம் பலருக்கும் உண்டு. தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க வேண்டாம் என்றும், வாக்களிக்கும்படியும் நானாவித பிரசுரங்கள் அண்மைக்காலங்களில் தமிழர் தாயகத்தில் உலவிவருகின்றன.

பலநாட்களின் முன்பே ஊடகங்கள் வாயிலாக ஏன் இம்முறை வாக்களிப்பினைப் புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இத்தருணத்தில் விடுதலைப் புலிகள் இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மாறாக தமிழர் தாயக வாக்காளர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி தமது அரசியல் நலன்களை அடைய முயற்சிக்கும் ஒரு தரப்பினர்தான் இவற்றின் பின்னால் இருக்கமுடியும்.

இங்கே ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்ததை அவதானித்தேன். <b>'ஒட்டியவர் யார் என்று தெரியாவிடின் ஏன் அதனை யாழ். தளத்தில் பிரசுரித்தீர்கள். இது என்ன குப்பைத்தொட்டியா?" </b>என்பதுதான் அந்தக் கேள்வி.

தமிழர்கள் இன்றிருக்கிற நிலையில் ஒட்டியவர் யார் என்று தெரிந்தால் அதுகுறித்து விவாதிக்கவேண்டிய அவசியமே இல்லை.

மாறாக பல்வேறு பன்னாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளும் இறங்கி விளையாடும் களமான யாழ்ப்பாணக் குடாநாட்டில் அனாமதேய சுவரொட்டி ஒட்டப்பட, அதனை இத்தளத்திலே போட்டு விவாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் கேள்வி எழுப்பப்படும்போதுதான் அதற்குத் தகுந்த விடை கிடைக்கும்.

<b>காரணம் 2. </b>

இந்தச் சுவரொட்டி தொடர்பான விவாதம் இடையில் திசைமாறி எங்கெங்கோ தறிகெட்டுப்போனது.

தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்றால் அவர் எமக்கு உறவுமுறையானவர். விருந்தினர். எதிரியின் து}துவனுக்குக் கூட மரியாதை செய்த பரம்பரையில் வந்தவர் நாங்கள். அப்படியிருக்க வந்த விருந்தினர் மனம்நோகும்படி செய்யக்கூடாதல்லவா.

எங்களைப் போலவே அவர்களும் நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். நாம் எப்படி எமது தாயகத்தை நேசிக்கிறோமோ அவ்வாறே அவர்களும் தமது தாயகத்தை நேசிப்பவர்கள். அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை அவர்கள் தமது தலைவரது இழப்பிற்காக இன்றுவரை வருந்துவதுபோலவே நாமும் எமது தலைவர்களை,மக்களை, நட்புகளை இழந்து வருந்திக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் தான் அவர்களுக்குச் சொல்லவேண்டும். 'அவர்கள் இழந்தது ஒருவரைத்தான். அந்த இழப்பின் வேதனை எமக்கும் நன்கு புரியும். ஏனெனின் அந்த ஒருவரால் நாம் பலரை இழந்தவர்கள்' என்பதை எங்களால்தான் அவர்களுக்குப் புரியவைக்க முடியும்.

அதேவேளை அவர்களுக்கு அங்குள்ள ஊடகங்கள் பிழையான தகவல்களை வழங்கி அண்டையிலுள்ள எம்மைப்பற்றிய மோசமான கருத்துலகத்தை அவர்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளன.

இந்த நிலையில் அங்கிருந்து பேசும் ஒருவர் எதையாவது தவறாகப் புரிந்து கொண்டு சொல்லியிருந்தால், அதனை அவருக்குப் புரியும்படி எடுத்துச்சொல்வது எமது கடமை. அதை விடுத்து நாமும் எதிர்த்து நின்றால் ஒரு நல்ல நண்பரை நாமே எமக்கு எதிரியாக்கிக் கொள்ளும் முட்டாள்தனத்தினைச் செய்தவர்களாவோம்.

அப்படியானால்; எமது எதிரிகள் எதை விரும்புகிறார்களோ - அதாவது நாமும் தாய்த்தமிழகமும் பிரிந்தே இருக்கவேண்டும் என்பதை- அதை நாமே செய்து முடிக்கிற காரியத்தையல்லவா நாம் செய்ய முற்படுகிறோம்.

சுவரொட்டியில் தெரிவித்திருப்பது <b>சனநாயகமா</b> என்று அவர் கேட்டதற்குப் பதில் <b>'இல்லை"</b> என்பதுதான். அதைக் கூறிவிட்டு இந்தச் சுவரொட்டியை ஒட்டியவர்கள் குறித்த சந்தேகங்கள் உள்ளன என்பதை நாம்தான் அவருக்குப் புரியவைத்திருக்கவேண்டும்.

அடுத்து <b>சனநாயகத்தின் எல்லைகள் எவை, அவை எப்போது மீறப்படலாம்</b> என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். 'அனைவருக்கும் பேச்சுச் சுதந்திரம் உண்டு என்பதற்காக தெருவீதியில் தாயாரை இழுத்துப் பழிபேசுபவனை அப்படியே விடுவதுதான் சனநாயகம் என்றால் அது எமக்குத் தேவையில்லை' அதுபோலவே 'வாக்களித்தால் எமது போராட்டத்தினால் இதுவரை நாம் அடைந்த பலன்கள் எம் கைநழுவிப்போகும் என்று எவராவது அதைத் தடுத்தால்- அப்படித் தடுப்பது சர்வாதிகாரம் என்று உலகம் சொன்னால் -அதுவே எமக்குத் தேவை!'

சனநாயகம் சனநாயகம் என்கிறார்களே உண்மையில் அதுதான் இவர்கள் சர்வாதிகாரம் என்று சொல்வதிலும்பார்க்கக் கொடுமையானது. எப்படி என்கிறீர்களா? 51 வீதம்பேரின் விருப்பங்களின் முன்பாக 49 வீதம் பேரின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுவதுதான் சனநாயகம். இங்கு சனநாயகம் தீர்மானிக்கப்படுவது அந்த மேலதிகமான 2 வீதம்பேரினால்.

<b>காரணம் 3:</b>


Vasampu Wrote:தூயவன்

தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>



<b>'தற்போதைய தேர்தலில் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே"</b> என்ற ஒரு கருத்தை நண்பர் முன்வைத்தபோதும் எவரும் அதனை ஒட்டியோ வெட்டியோ ஆதாரபூர்வமான விவாதத்தை வளர்க்கவில்லை. அதாவது எப்படி இந்த முடிவிற்கு அவர் வந்தார் என்று அவரை யாரும் வினவவேயில்லை.

எனக்குத் தெரியக் கடைசியாக நேற்றுமாலை ஏவ்பி வெளியிட்ட செய்தியில் கூட 'இலங்கையின் சனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழர்களது வாக்குகளே விளங்குகின்றன' என்ற சாரப்படக் குறிப்பிட்டிருந்தார்கள். (Sun Nov 6, 3:14 AM ET COLOMBO (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels have decided to remain neutral in the presidential election this month, a pro-rebel website reported <b>as minority Tamil voters emerged as potential king-makers</b>.) சிங்களதேசத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் தமிழர்தேசம் யாருக்கு வாக்களிக்கப்போகிறது என்பதை அறிய ஆலாய்ப்பறக்கிறார்கள். சிறிலங்காப் புலனாய்வுத்துறை தன் பங்குக்கு தலைப்போட்டு உடைத்துக்கொள்கிறது.

<b>'தற்போதைய தேர்தலில் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே" என்றால் -தமிழர் தேசத்தின் முடிவு யார் சனாதிபதியாவது என்பதைத் தீர்மானிக்கப்போவதில்லை என்றால்- ஏன் இப்படி அனைவரும் அந்தரிக்கிறார்கள்?</b>

உண்மையில் தமிழர்தரப்பின் முடிவு ஒருமித்து எடுக்கப்படுமானால்- கடந்த பொதுத்தேர்தல் போல விடுதலைப்புலிகள் எவருக்காவது வாக்களிக்கச் சொல்வார்களானால் -அதன் தாக்கம் தமிழர் தாயகத்தையும் கடந்து முழு இலங்கைத்தீவிலுமுள்ள அனேக தமிழ் வாக்குகளில் காணப்படும் என்பதை இந்தத் தேர்தலில் தொடர்புடைய சகலரும் அறிவர்.

அதனால் தான் தமிழ் வாக்காளர்களைக் குழப்பியடிக்கவும், அச்சத்தில் ஆழ்த்தவும் திட்டமிட்ட செயற்பாடுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இப்படிக் குழப்பங்களில் ஈடுபடுவர்களது எண்ணம் 'இறுதி நேரத்தில் எங்கே புலிகள் ரணிலுக்கு ஆதரவளிக்கச் சொல்லிவிடுவார்களோ' என்பதுதான்.சுவரொட்டிக் குழப்பங்கள், கைக்குண்டெறிதல்கள் என்பவற்றின் பின்னணியில் இருப்பவர்களும் இவர்கள்தான்.

சரி. தமிழர் வாக்குகள் சனாதிபதியைத் தீர்மானிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா. இதோ இறுதியாக இலங்கையில் (1999ல்) நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள்.

<img src='http://img450.imageshack.us/img450/6673/19cc.jpg' border='0' alt='user posted image'>

இதில் தமிழர் தேசத்தின் மொத்த வாக்குகளும் ரணிலுக்கு அளிக்கப்பட்டிருப்பின் ரணிலே சனாதிபதியாக வந்திருப்பார் என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

ரணில் பெற்ற சிங்களப் பிரதேச வாக்குகள் <b>3233684 </b>
சந்திரிகா பெற்ற சிங்களப் பிரதேச வாக்குகள் <b>3978653</b>

தமிழர்தாயகத்தில் போட்டியிட்ட அனைத்து
வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் <b>757979</b>

<b>இந்த தமிழர் தேச வாக்குகளை சிங்களதேசத்தில் ரணில் பெற்றவைகளுடன் கூட்ட வருவது 3991663</b>

தவிர, தமிழர் தாயகத்தின் வாக்காளர்களில் ஏறத்தாள அரைப்பங்கினரே 1999ல் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

தமிழர் தாயக வாக்காளர் மொத்த எண்ணிக்கை <b>1634125.</b> இதில் 1999 தேர்தலில் வாக்களித்துள்ளவர்களது மொத்த எண்ணிக்கை <b>757979.</b> எனவே தமிழர் தாயக வாக்குகள் ஆகக் கூடியளவில் பயன்படுத்தப்படுமாயின், அதுவும் ஒரு குறித்த நபருக்காகப் பயன்படுத்தப்படுமாயின் அவர் வெல்லுவதற்கே வாய்ப்புகள் உண்டு.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது தனியே தமிழர்தாயக வாக்குகள். விடுதலைப்புலிகள் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தால் இலங்கைத்தீவின் ஏனைய பகுதித் தமிழர்களும் பெருமளவில் ரணிலுக்கே வாக்களித்திருப்பர் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.


இறுதியாக ஒரு வேண்டுகோள்! விவாதங்களை நாம் அவதானமாக மேற்கொள்வோமாயின் அது எமது தேசத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும் என்பது எனது பணிவான கருத்து. காரணம் இது ஒரு பொதுத்தளம். அதாவது கண்ணாடி போல என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கண்ணாடி வழியாகத் தான் அனேகமானவர்கள் - இந்தத் தமிழக நண்பரைப்போல- எமது தேசத்தைப் பார்க்கப்போகிறார்கள். கண்ணாடியில் மாசு படிந்தால் அதனு}டாகத் தெரியும் தேசமும் அவ்வாறுதான் தென்படும்.

<b>அன்புடன் திரு</b>

நன்றி திரு மிகவும் அவசியமான கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு. இதுபோன்ற கருத்துக்கள் அவ்வப்போது யாழ்க்களத்திற்கு தேவைப்படுகின்றது. சிரமங்கள் பாராது வாருங்கள் உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#90
யாழ்ப்பாணத்தில் தேர்தல் முகவர்களாகச் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விடுதலைப் புலிகள அனுமதி யாழ்ப்பாணத்தில் தேர்தல் முகவர்களாகச் செயற்படுவதற்கு விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி வழங்கியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறைகொள்ளத் தேவையில்லையென விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பினைப் பயன்படுத்தி ஈ.பி.டி.பியினர் வாக்கு மோசடிகளில் ஈடுடத்திட்டமிட்டிருப்பதால் அதனைத் தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முகவர்களை நியமிப்பதற்கு விடுதலைப் புலிகள் அனுமதி வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோர் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதற்கமைய யாழ் மாவட்டத்தில் அமைக்கப்படவிருக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முகவர்களை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#91
ஈ.பி.டி.பியினருக்கு வச்சங்கள் ஆப்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#92
ஈ.பி.டி.பி யினருக்கு இருந்த ஒரு வழியையும் அடைச்சுப்போட்டாங்கள் :oops: :oops: :oops: அவையள் எப்படி கள்ளஓட்டு போடுறது :oops: :oops: :oops:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#93
உந்த விடயத்தைத் தானே நான் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டினேன். அப்ப ஆ உ என்றவர்களெல்லாம் இப்போ மீண்டும் ஜால்ரா. <b>என்றுதான் எம்மினம் சுயமாகச் சிந்திக்கப் போகுதோ??????????</b>
Reply
#94
தேர்தலில் போட்டியிடும் 2 முன்னணி வேட்பாளர்களிலும் அவர்கள் சார்ந்த கட்சிகளிலும் தமிழருக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் தமிழர் தேசியம் பற்றி கதைப்பது தமிழர் வாக்குகளை பெற்றுக்கொள்ளவே. இது எமக்கு கடந்த கால அனுபவங்கள் தந்த பாடம்.

மகிந்த விடமிருந்து எதிர்பார்க்கக்கூடியது வெளிப்படையான ஆபத்து. ரணல் புரிந்துணர்வேடு நடப்பவராகக் வெளிப்பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும் தனது வாக்குறுதிகளை மதித்து அமுல்படுத்துவதில்லை. அமுல்படுத்தக்கூடி சூழ்நிலையிருந்தும் அதை தவிர்த்து இன்று தமிழரை விரக்தியின் உச்சத்திற்கும் பெறுமையின் விளிம்பிற்கும் கொண்டு வந்ததில் ரணில் பெரும்பங்கு வகிக்கிறார்.

அண்மைக் காலங்களில் நடந்துவரும் மக்களின் எழுச்சிகள், அவர்களின் விரக்திக்கு ஏமாற்றத்திற்னு எடுத்துக்காட்டுகள். மக்களே எமது போராட்டத்தின் அடுத்த நகர்வை தீர்மானிக்கும் நீதிபதிகள். இராணுவ ஆக்கிரமிப்புகள் தொடரும்பட்சத்தில் அவர்களின் வெகுஜன எழுச்சிகள் ஜநனாயகரீதியில் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும்.

<i>தென்னிலங்கையில் நடக்கும் தமிழரின் பிரிவினைவாதம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் காலம் கடந்தவை. அவர்கள் பேசிக்கொள்ளும் ஒற்றையாட்சியின் கீழான தீர்வு என்பது வெறும் கனவு. தமிழருக்கு என்று ஒரு தேசியம் இங்கு ஒருகாலத்தில் இருந்தது, அதை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை ஏற்க மறுத்தால் கொழும்பு பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.</i>

http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3580&SID=526
Reply
#95
வவுனியா வரை வந்துவிட்டு மீண்டும் கிளிநொச்சிக்கு சென்றார் சந்திரசேகரன்கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை அவசரப்பயணமொன்றை மேற்கொண்டு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனுடன் பேச்சுவார்த்தை நடத்திய மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிய வருகிறது.

நேற்று திங்கட்கிழமை காலை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சந்திரசேகரன் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையதொரு நிலைப்பாட்டை நாடு பூராவுமுள்ள தமிழ் மக்கள் எடுக்க வேண்டுமென்பது தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிய வருகிறது.

இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இன நெருக்கடித் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ எந்தவொரு உரிய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லையெனவும் அதனாலேயே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டவில்லை என்றும் இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழ்ச்செல்வன் சந்திரசேகரனுக்கு நேற்றைய பேச்சுவார்த்தையில் தெரிவித்ததாகவும் அறிய வருகிறது.

இதனையடுத்து நேற்று நண்பகல் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு வந்த சந்திரசேகரன் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் கொழும்புக்கு வராமல் மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

விசேட செய்தியொன்றுடன் அவர் திரும்பிச் சென்றதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்திலும் கொழும்பிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


http://www.thinakural.com/New%20web%20site...er/15/index.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#96
ஒரு கோடியை எட்டியிருக்கும் தேர்தல் 'பந்தயம்'
<b>சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் ஐக்கியத் தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் எனக் கூறி இரத்தினபுரியில் இரத்தினக்கல் வியாபாரியொருவர் ஒருகோடி ரூபாவிற்குப் பந்தயம் பிடித்துள்ளார்.</b>

http://www.eelampage.com/?cn=21717
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#97
[size=18][u]<b>சனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார்?</b>
தேர்தல் தொடர்பாக பல யூகங்கள் பலவாறு வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிலர் மகிந்த என்கிறார்கள் சிலர் ரணில் என்கிறார்கள். வேறுசிலர் "கடுமையான போட்டி" என்று சொல்லித்தப்பித்துக் கொள்கிறார்கள். இச்சமயத்தில் எனது யூகத்தையும் இங்கே பதிந்துவைக்க விரும்புகிறேன்.

எனது ஊகத்தின் படி ஸ்ரீ லங்காவின் அடுத்த சனாதிபதி மஹிந்த என்பதுதான். நான் இந்த முடிவுக்கு வரக்காரணம் யாதெனில்:

1) சிங்கள பௌத்த பேரினவாதிகளை திருப்திப்படுத்தாத எவரும் இதுவரை சனாதிபதியானதில்லை. இனி ஆகப்போவதுமில்லை.
2) ஸ்ரீ லங்காவிலே ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி என்பது தனித்தனியே உண்டு. முந்தைய தேர்தல்களின் புள்ளிவிபரங்களின் படி பார்த்தால், ரணில் சார்பான கட்சிகளின் வங்கிகளின் கூட்டுத்தொகையை விட, மகிந்த சார்பான வங்கிகளின் கூட்டுத்தொகைதான் அதிகம் (ஹெல உறுமயவுக்கு இப்படி ஒரு வங்கி இல்லாவிட்டாலும் அதற்கென ஓரளவு வாக்குகள் உண்டு என்பதே உண்மை)
3) தமிழ் மக்கள் இம்முறை பாரிய அளவில் தேர்தலை பகிஷ்கரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரணிலுக்கு கிடைக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச வாக்கும் கிடைக்கப்போவதில்லை.

மேற்குறித்த காரணிகளால் மகிந்தவின் வெற்றிவாய்ப்புக்களே அதிகமாக இருக்கிறது.

ஒரேயொரு காரணத்தால் மட்டுமே ரணில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதுதான் பேரினவாதிகளின் மனமாற்றம். பெருமளவிலான மக்கள் மனம்மாறி பேரினவாதிகளுக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பேரினவாதமா? கொக்கா? ஐம்பது ஆண்டுகளாக மாறாத மனமா இனி மாறப்போகிறது?

இன்னுமொரு விடயம் ரணிலையும் மகிந்தவையும் தவிர்ந்த வேட்பாளர்களில் விக்டர் ஹெட்டிகொட ஒரளவு வாக்குகளைப் பெறக்கூடும் (சிலவேளை மொத்த வாக்குகளில் 5% வரை அவரது வாக்குகள் செல்லலாம்). இதற்குக்காரணம் இரண்டு கட்சிகளின் போக்கையும் விரும்பாத மக்கள் இந்தத் தொழிலதிபருக்கு வாக்களிக்கக்கூடும் என்பதனாலாகும்.

இன்னும் இரண்டு நாட்கள்தானே...எனது ஊகம் பலிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

எனது குடிலில் பார்வையிட: http://thamilmahan.blogspot.com
Reply
#98
மகிந்த என்றுதான் எனக்கும் தோன்றுகிறது..
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#99
ஆமாம்... தமிழ் மக்களின் நிலையோவென்றால்.... இராவணன் ஆண்டால் என்ன.... இராமன் ஆண்டால் என்ன... கூடவந்த குரங்குக் கூட்டம் ஆண்டால் என்ன என்பது போன்ற நிலமை தான்........

இது தொடர்பான செய்தி.....http://news.bbc.co.uk/2/hi/south_asia/4438214.stm
Reply
யார் வெற்றி பெற்றாலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வென்றபின் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான் இருக்கும்.
enrum anpudan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)