Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜனாதிபதி தேர்தல் 2005
#61
வானம்பாடி போன்றவர்களுக்கு யாழ்.மருத்துவமனைப் படுகொலை பற்றிய விவரங்கள் இங்கே கிடைக்கும். கீழ்க்கட்ட சுட்டிகளைச் சுட்டி அப்பதிவுகளை வாசிக்கவும்.

பச்சைக்குழந்தைகள் கூடவா புலிகளாகத் தெரிந்தார்கள்?
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்களென்று கெஞ்சிய நோயாளிகளா புலிகளாகத் தெரிந்தார்கள்?
வைத்திரை நெருங்கி அவர் காதருகில் வெடிதீர்த்துக் கொல்லும்போதும் (பட்டப்பகலில்) அவர் புலியாகவா தெரிந்தார்?
அப்பதிவுகளை முழுமையாக வாசித்தால் நடந்தது என்னவென்று புரியும்.

அவை முறிந்தபனை என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. முறிந்தபனை புலிகளுக்கு ஆதரவான புத்தகமன்று. இன்று எஞ்சியுள்ள ஏனைய 3 புத்தக ஆசிரியர்களும் புலி எதிர்பையே முக்கிய வேலையாகக் கொண்டவர்கள்.

இன்னொருவர் ராஜினி திரணகம. இவர் இப்புத்தகம் எழுதியதற்காகவே புலிகளால் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுபவர். ஆகவே நடுநிலை பற்றிய ஐயம் தேவையில்லை.

http://koluvithaluvi.blogspot.com/2005/10/...og-post_20.html
http://koluvithaluvi.blogspot.com/2005/10/2.html
http://koluvithaluvi.blogspot.com/2005/10/3.html
Reply
#62
[quote=Vasampu]<b>அன்பான வேண்டுகோள்</b>

வானம்பாடி எமது போராட்ட வரலாற்றில் நாமும் தவறிழைத்தள்ளோம் அதுபோல் இந்தியாவும் தவறிழைத்துள்ளது. இவற்றை மீண்டும் மீண்டும் கிளறுவதால் எந்தவித இலாபமும் இல்லை. எனவே இவ்விடயத்தில் நீங்கள் அமைதி கொள்ளுங்கள். நீங்கள் எத்தனை பதில்கள் தந்தாலும் திருப்திப் பட மாட்டார்கள்.


Dear Vasampu
உங்களுக்கு விளங்குது ... அப்பஏன் அந்த சாட்டிரிக்கு விளங்கல .......
நீங்க சொன்ன அந்த பாய்ண்டு சரிதானுங்க....ரொம்ப நன்றிங்க ... இந்த தலைபில இருந்து நான் ஒதுங்கிகிறேனுங்க
நன்றி வணக்கம்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
ஆமாங்க சாத்திரிக்கு விளக்கம் குறைவு பாத்தீங்களா உங்களிற்கு ஒரு அய்ந்தாம் படை கிடைச்சிட்டுது இனி அவை பாத்து கொள்ளுவினம் இன்p நிங்க நிம்மதியா இருக்கலாம் வானம்பாடி
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#64
வானம்பாடி சோவின் பரமரசிகன் போலிருக்கு.
.
Reply
#65
இப்போது இந்திய றோ சொல்லும் ஒரு செய்தி, இலங்கையில் தமிழீழம் அமைந்தால் அது இந்திய நலனுக்குத் தான் ஆபத்து. இப்போது அதை வெளிப்படுத்துபவர்கள் அன்றும் அதே கொள்கையுடன் இருந்தபடி தான் எம்மை காப்பற்றவருபவர்களாக காட்டிக் கொண்டனர்.இது புூச்சாண்டி விளையாட்டை புரிந்து கொண்ட புலிகள் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டனர்.

முதலில் புலிகள் யுத்தம் தொடங்குமுன் இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் திலீபன், குமரப்பா, புலேந்திரன், உற்பட பல வீரர்கள் வீரச்சாவு அடைந்தனர். இது எல்லாம் எவ் வகையில் அடக்குவது.

யாழ்பாண ஆஸ்பத்திரியில் மட்டுமல்ல, பல இடங்களில் மக்களைப் படுக்க வைத்து டாங்கியால் ஏற்றிக் கொன்றதெல்லம் எவ்வகையில் அடக்குவது

வானம்பாடி யாருடைய கதையையும் கேட்டு எம்மிடம் வாதத்துக்கு வராதீர்கள். உண்மையில் அந்த வலியை அனுபவித்து வந்தவர்கள் நாங்கள். பழையதை கிளற விரும்பினால் நாங்களும் தயாராகாவே இருக்கின்றோம். பல வலிகளை புரட்டிப்பார்க வேண்டி வரும்
[size=14] ' '
Reply
#66
Vasampu Wrote:தூயவன்

தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>

தேவையில்லாத விளைவுகள் என என்னத்தை கருதுகின்றீர்கள் எனச் சொல்லமுடியுமா?
[size=14] ' '
Reply
#67
Vaanampaadi Wrote:நாரதசாமி உண்மையா சொல்லு உள்ளத சொல்லு,
நீங்கதான எங்க ராணுவத்தை வா வா ன்னு அழச்சீங்க ...
உண்மயை தயவுசெய்து ஒத்துகிங்க ....

நாங்கள் ஒருபோதும் வா என்று அழைக்கவே இல்லை. பொட்டலம் போடுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு நீங்கள் தான் மூக்கை நீட்டினீர்கள். திருப்பி இடித்த இடியில குதிக்கால் ..........பட ஓடினியள். திரும்பியும் மூக்கை நுழைக்காதையுங்கோ.
[size=14] ' '
Reply
#68
வானம்பாடி, சீதை நிலத்தை பிளந்து கொண்டு பூமிக்கு வந்தவ எண்டு புராணக்கதைகளிலில இருந்து சரித்திரத்தை அறிஞ்சு கொள்ளுறது கடினம் எண்ட சமகால நிகழ்வுகளையும் "ஈழத்தமிழர் காங்கேசன்துறைமுகத்தில நிண்டு வங்கோ வாங்கோ காப்பாத்துங்கோ எண்டு கத்தினவை கப்பல் கப்டன் ரஜீவுக்கு அதை றேடியோவில சொல்லி அமைதிப்படை வந்தது" எண்டு அம்புலிமாமா கதை சொல்லுறியள். விளக்கம் கேட்டா ஒதுங்கிக் கொள்ளுறன் எண்டு முருங்கை மரத்தில ஏறுங்கோ ஏனெண்டால் உங்கள் தரவளிக்கு ஜநனாயகம் கருத்துச்சுதந்திரம் எண்டா அது தானே.

அமைதிப்படை வரமுதல் நீங்கள் மகாத்தமா, காந்தியம் பற்றி கதைச்சீங்கள் எண்டால் ஈழத்தமிழர் மத்தியில நல்ல செல்வாக்கு, மதிப்பு மரியாதை இருந்தது. இப்ப அதை எதிர்பார்த்து உங்களை நீங்களே நொந்து கொள்ளாதேங்கோ.

உங்கள் நாட்டு தற்போதைய வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிக்கும் (அதை இரட்டை வேடத்தில் மறைக்க முயற்சிக்கலாம்) இந்தியனாக கதைக்கும் பொழுது ஈழத்தமிழரோடை முரன்பாட்டை தவிர்க்க முடியாது. தமிழனாக கைதையுங்கோ சர்ச்சையில்லாமல் கதைக்கலாம்.
Reply
#69
ரணிலின் உருவாக்கமே கருணா குழு
ஐ.தே.கட்சி எம்.பி. நவீன் பெருமிதம்
பிரபா போருக்குத் தயாரானால் எதிர்க்க
அமெ. இந்தியப் படைகள் ஏற்பாடாம்

புலிகளிடமிருந்து கருணா குழு பிரிந்து தனியாக உருவாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலே காரணம் என்ற பெருமிதத்தோடு கூறுகின்றார் அக்கட்சியின் நுவ ரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸநாயக்க.
பேச்சு முயற்சிகளை விடுத்து யுத்தம் ஒன்றுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் முற் படுவாரானால் அவரது புலிப்படையோடு இலங்கைப் படைகள் மோதவேண்டிய தேவையில்லை. அதற்கு இந்திய, அமெரிக்கப் படைகளை ஒழுங்கு செய்து வைத்திருக் கிறார் ரணில் விக்கிரமசிங்க என்றும் அவர் கூறினார்.
கடந்த வியாழனன்று கினிகத்தேனையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப் பினர் நவீன் திஸநாயக்க உரையாற்றினார்.
ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றுகையில் நவீன் திஸநாயக்க மேலும் கூறியதாவது:
இந்நாட்டில் சமாதானத்தை உருவாக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பான நோர்வே யின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் சிலமுறை அமைதிப் பேச்சுகளை நடத்தினார்கள்.
அப்பொழுது கருணாவை இச்சமாதானப் பேச்சுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனு மதித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அதன் மூலம் அவர் வெளியுலக அனுபவத்தைப் பெற்றார்.
நாடு திரும்பிய கருணா தமிழர் விடு தலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிர பாகரன் அந்த இயக்கத்தை தவறாக இயக் கிக்கொண்டிருக்கிறார்என்பதை இந்த அறிவு
மூலம் உணர்ந்து கொண்டார். அதன் காரணமாகக் கருணா இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் தனியாகக் குழுவை அமைத் துப் புலிகளுக்கு எதிராகச் செயலாற்றச் சென்றார். அந்த அடிப்படை காரணமாகத்தான் பிரபாகரன் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியாமலிருக்கிறார். இவ்வாறு அமைந்த துக்குக் காரணமே ரணில் விக்கிரமசிங்கதான்.
இந்த நிலைமைகளையும் மீறி யுத்தம் ஒன்றைப் பிரபாகரன் ஆரம்பித்தால் அந்த யுத்ததிற்கு எங்கள் இராணுவத்தை நாம் அனுப்ப வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக இந்திய இராணுவமும் அமெரிக்கா இராணுவமும்தான் அத்தகைய யுத்தத்தில் ஈடுபடும்.
இதற்கான அடிப்படை ஒப்பந்தப் பேச் சுக்களை ரணில் விக்கிரமசிங்க, இந்திய நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைவி திரு மதி சோனியா காந்தியுடனும் அமெரிக்க நாட்டுத் தலைவர் ஜோர்ஜ் புஷ்ஷுடனும் நடத்தியுள்ளார். என்றார் நவீன் திஸநாயக்க.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர்களான பந்துல குணவர்த்தன, கே. கே. பியதாஸ, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் துணைவியார் திருமதி பிரேமதாஸா மற்றும் மலையக மக்கள் முன்னணி செய லாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண் டார்கள்.
இக்கூட்டத்தை மஸ்கெலியத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் கே.கே. பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.


uthayan
.
Reply
#70
<b>ரணில் குறித்த புலிகளின் எச்சரிக்கையை மெய்ப்பிகிறது நவீன் திசநாயக்கவின் பேச்சு!!</b>

சிறிலங்கா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய அரசியல் சதித் திட்டத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே. பாலகுமாரன் அண்மையில் எச்சரித்திருந்தார்.

ரணிலின் அமைதிப் பேச்சுக்களின் அழைப்புகளுக்குப் பின்னால் உள்ள பாரிய சதியை அவர் விளக்கி இருந்தார். இதை நிரூபிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசநாயக்கவின் கினிகத்தேனை பேச்சு அமைந்துள்ளது. மேலும் ரணிலின் எதிர்கால சதித் திட்டங்களையும் நவீன் திசநாயக்க அந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நுவரெலியா மாவட்டத்தின் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நவீன் திசநாயக்க பேசியுள்ளதாவது:

சமாதானத்தை உருவாக்கும் முயற்சியாக மூன்றாம் தரப்பான நோர்வேயின் அனுசரணையுடன் வெளிநாடுகளில் சிலமுறை அமைதிப் பேச்சுகளை நடத்தினார்கள்.

அப்பொழுது கருணாவை இந்த சமாதானப் பேச்சுக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. அதன் மூலம் அவர் வெளியுலக அனுபவத்தைப் பெற்றார். பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தான் தனியாகக் குழுவை அமைத்துப் புலிகளுக்கு எதிராகச் செயலாற்றச் சென்றார். இவ்வாறு அமைந்ததுக்குக் காரணமே ரணில் விக்கிரமசிங்கதான்.

மேலும் வாசிக்க:
http://www.eelampage.com/?cn=21490
Reply
#71
நான் மிகவும் வேதனையுடன் இந்தப் பதிவினை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறேன்.

<b>காரணம் 1.</b>

இங்கு எழுப்பப்பட்ட ஒரு வினாவிற்கு எவருமே சரியாக விடையளிக்கவில்லை. அப்படியானால் முதலில் நாம் எம்மவர்கள் மத்தியிலேதான் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்யவேண்டுமா என்ற வினா எழுகிறது.

கேட்டகப்பட்ட வினா மிக முக்கியமானது. விடையோ மிக எளிதானது.

ஒருவர் தமிழர்தேசத்தின் நகர்வுகளை, அங்கிருந்து வரும் வெளியீடுகளைத் தொடர்ந்து கிரகித்துவருவாராயின் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது ஒரு பொருட்டல்ல.

<b>கேள்வி: </b>கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் தாயகத்தினைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்குமாறு கோரப்பட்டனர்? ஏன் தற்போது வாக்களிக்காது தவிர்க்குமாறு வேண்டப்படுகிறார்கள்??

<b>விடை:</b> கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க்கூட்டமைப்பு என்ன விடயங்களை முன்வைத்துத் தேர்தலில் மக்கள் முன் சென்றார்கள்?

தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை உறுதிப்படுத்தியும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் மக்கள் முன் சென்றார்கள்.

அதனால் 'தமிழர்களது தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றையும், தமிழ்மக்களுக்காகப் போராடும் சக்தி விடுதலைப் புலிகளே என்பதை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவேண்டும்' என்று கோரப்பட்டனர்.

இங்கு இருந்தது தெளிவான அரசியல் இலக்கு. அதாவது சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களது அபிலாசை என்ன, கோரிக்கை என்ன என்பதை எடுத்துரைப்பதுதான் அந்த இலக்கு. மக்கள் திரண்டு வாக்களித்ததன் மூலம் அந்த இலக்கு எட்டப்பட்டது.

<b>அதுதவிர இந்த வாக்குகளால் வரும் பாராளுமன்றப் பதவிகளால் எமது சிக்கல் தீர்க்கப்படும் என்றோ, அல்லது ஏதாவது புதிதாக அதிசயம் நடக்கும் என்றோ எவரும் எதிர்பார்க்கவில்லை. அது நோக்கமும் அல்ல.</b>

ஆனால் இப்போது வந்திருப்பது சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தல்.

<b>இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்தருக்கு வாக்களித்தால் என்ன நடக்கும்?</b>

உடனே சர்வதேசம் புலிகளைப் பார்த்து 'தமிழர்கள் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண விரும்புகிறார்கள். எனவே மகிந்தர் தருவதைப் பெற்றுக்கொள்ளுங்கள். தமிழ்மக்களது ஆதரவு அவருக்கு இருப்பதால் அவர்களும் மகிந்தர் தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார்கள்' என்று சொல்லும்.

<b>சரி ரணில் ஐயாவுக்கு வாக்களித்தால் என்னவாகும்?</b>

அவர் ஏற்கெனவே 'சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குப் பெயர்போனவர்.' தற்போது சமாதான காவலராக நடிக்க முற்பட்டாலும், அவரது கூடாரத்திலிருந்தே நேற்றைய தினம் வெளியாகிய விடயம் ஒன்று அவரது வேடத்தை உறுதி செய்கிறது. அதாவது 'ரணில் பதவிக்கு வந்து விடுதலைப் புலிகள் அவர் சொல்வதைக் கேட்காமல் யுத்தத்திற்குப் போனால், இலங்கை இராணுவம் யுத்தம் செய்யாது. பதிலாக அமெரிக்க, இந்திய இராணுவங்களே புலிகளுடன் போரிடும்.' இவ்வாறு சொல்லியிருப்பவர் ஐ.தே.கவின் முக்கிய புள்ளியான நவீன் திசநாயக்கா!

அதனால் ரணிலிற்கு வாக்களித்தால் சர்வதேசம் புலிகளிடம் 'ரணில் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள். தமிழர்களது அமோக ஆதரவு அவருக்கு உண்டு. எனவே தமிழர்கள் அவர் தருவதற்கு மறுப்புச் சொல்லமாட்டார்கள்' என்று வேதம் ஓதுவார்கள்.

இதனால்தான் தற்போதும் எமது அரசியல் அபிலாசை என்ன என்பதைக் காட்டுவதற்குத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் நாலாதிக்கிலிருந்தும் வருகின்றன.

'இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தால் அதனையே விடுதலைப் போராட்டத்தின் இராணுவப் பரிமாணத்தால் தமிழர்கள் பெற்ற பேரம்பேசும் வலிமையைச் சிதைப்பதற்காகச் சர்வதேசமும் சிங்களமும் பயன்படுத்தலாம்' என்ற சந்தேகத்தைத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள்; எழுப்பிவருகிறார்கள்.

சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் நாம் அரசியலிலும் ஏமாளிகள் அல்ல என்று நிரூபிப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக வந்து வாய்த்துள்ளது. தேர்தல் புறக்கணிப்பு என்பதும் ஒருவிதத்தில் எமது இலக்கை அரசியல் ரீதியாக வலியுறுத்தும் ஒரு உத்தியே.


'தேர்தலைத் தமிழர்தேசம் புறக்கணிக்க வேண்டும்' என்ற கருத்து ஏறத்தாழ இரண்டு மூன்று மாதங்களின் முன்பே பல தமிழ்த் தினசரிகள், வார ஏடுகளில் அரசியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியாகிவிட்டது.

இன்று திடீரென முளைக்கும் சுவரொட்டிகள் எவரால் வெளியிடப்படுகின்றன என்பது குறித்துப் பலத்த சந்தேகம் பலருக்கும் உண்டு. தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க வேண்டாம் என்றும், வாக்களிக்கும்படியும் நானாவித பிரசுரங்கள் அண்மைக்காலங்களில் தமிழர் தாயகத்தில் உலவிவருகின்றன.

பலநாட்களின் முன்பே ஊடகங்கள் வாயிலாக ஏன் இம்முறை வாக்களிப்பினைப் புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இத்தருணத்தில் விடுதலைப் புலிகள் இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மாறாக தமிழர் தாயக வாக்காளர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி தமது அரசியல் நலன்களை அடைய முயற்சிக்கும் ஒரு தரப்பினர்தான் இவற்றின் பின்னால் இருக்கமுடியும்.

இங்கே ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்ததை அவதானித்தேன். <b>'ஒட்டியவர் யார் என்று தெரியாவிடின் ஏன் அதனை யாழ். தளத்தில் பிரசுரித்தீர்கள். இது என்ன குப்பைத்தொட்டியா?" </b>என்பதுதான் அந்தக் கேள்வி.

தமிழர்கள் இன்றிருக்கிற நிலையில் ஒட்டியவர் யார் என்று தெரிந்தால் அதுகுறித்து விவாதிக்கவேண்டிய அவசியமே இல்லை.

மாறாக பல்வேறு பன்னாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளும் இறங்கி விளையாடும் களமான யாழ்ப்பாணக் குடாநாட்டில் அனாமதேய சுவரொட்டி ஒட்டப்பட, அதனை இத்தளத்திலே போட்டு விவாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் கேள்வி எழுப்பப்படும்போதுதான் அதற்குத் தகுந்த விடை கிடைக்கும்.

<b>காரணம் 2. </b>

இந்தச் சுவரொட்டி தொடர்பான விவாதம் இடையில் திசைமாறி எங்கெங்கோ தறிகெட்டுப்போனது.

தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்றால் அவர் எமக்கு உறவுமுறையானவர். விருந்தினர். எதிரியின் து}துவனுக்குக் கூட மரியாதை செய்த பரம்பரையில் வந்தவர் நாங்கள். அப்படியிருக்க வந்த விருந்தினர் மனம்நோகும்படி செய்யக்கூடாதல்லவா.

எங்களைப் போலவே அவர்களும் நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். நாம் எப்படி எமது தாயகத்தை நேசிக்கிறோமோ அவ்வாறே அவர்களும் தமது தாயகத்தை நேசிப்பவர்கள். அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை அவர்கள் தமது தலைவரது இழப்பிற்காக இன்றுவரை வருந்துவதுபோலவே நாமும் எமது தலைவர்களை,மக்களை, நட்புகளை இழந்து வருந்திக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் தான் அவர்களுக்குச் சொல்லவேண்டும். 'அவர்கள் இழந்தது ஒருவரைத்தான். அந்த இழப்பின் வேதனை எமக்கும் நன்கு புரியும். ஏனெனின் அந்த ஒருவரால் நாம் பலரை இழந்தவர்கள்' என்பதை எங்களால்தான் அவர்களுக்குப் புரியவைக்க முடியும்.

அதேவேளை அவர்களுக்கு அங்குள்ள ஊடகங்கள் பிழையான தகவல்களை வழங்கி அண்டையிலுள்ள எம்மைப்பற்றிய மோசமான கருத்துலகத்தை அவர்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளன.

இந்த நிலையில் அங்கிருந்து பேசும் ஒருவர் எதையாவது தவறாகப் புரிந்து கொண்டு சொல்லியிருந்தால், அதனை அவருக்குப் புரியும்படி எடுத்துச்சொல்வது எமது கடமை. அதை விடுத்து நாமும் எதிர்த்து நின்றால் ஒரு நல்ல நண்பரை நாமே எமக்கு எதிரியாக்கிக் கொள்ளும் முட்டாள்தனத்தினைச் செய்தவர்களாவோம்.

அப்படியானால்; எமது எதிரிகள் எதை விரும்புகிறார்களோ - அதாவது நாமும் தாய்த்தமிழகமும் பிரிந்தே இருக்கவேண்டும் என்பதை- அதை நாமே செய்து முடிக்கிற காரியத்தையல்லவா நாம் செய்ய முற்படுகிறோம்.

சுவரொட்டியில் தெரிவித்திருப்பது <b>சனநாயகமா</b> என்று அவர் கேட்டதற்குப் பதில் <b>'இல்லை"</b> என்பதுதான். அதைக் கூறிவிட்டு இந்தச் சுவரொட்டியை ஒட்டியவர்கள் குறித்த சந்தேகங்கள் உள்ளன என்பதை நாம்தான் அவருக்குப் புரியவைத்திருக்கவேண்டும்.

அடுத்து <b>சனநாயகத்தின் எல்லைகள் எவை, அவை எப்போது மீறப்படலாம்</b> என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். 'அனைவருக்கும் பேச்சுச் சுதந்திரம் உண்டு என்பதற்காக தெருவீதியில் தாயாரை இழுத்துப் பழிபேசுபவனை அப்படியே விடுவதுதான் சனநாயகம் என்றால் அது எமக்குத் தேவையில்லை' அதுபோலவே 'வாக்களித்தால் எமது போராட்டத்தினால் இதுவரை நாம் அடைந்த பலன்கள் எம் கைநழுவிப்போகும் என்று எவராவது அதைத் தடுத்தால்- அப்படித் தடுப்பது சர்வாதிகாரம் என்று உலகம் சொன்னால் -அதுவே எமக்குத் தேவை!'

சனநாயகம் சனநாயகம் என்கிறார்களே உண்மையில் அதுதான் இவர்கள் சர்வாதிகாரம் என்று சொல்வதிலும்பார்க்கக் கொடுமையானது. எப்படி என்கிறீர்களா? 51 வீதம்பேரின் விருப்பங்களின் முன்பாக 49 வீதம் பேரின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுவதுதான் சனநாயகம். இங்கு சனநாயகம் தீர்மானிக்கப்படுவது அந்த மேலதிகமான 2 வீதம்பேரினால்.

<b>காரணம் 3:</b>


Vasampu Wrote:தூயவன்

தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>



<b>'தற்போதைய தேர்தலில் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே"</b> என்ற ஒரு கருத்தை நண்பர் முன்வைத்தபோதும் எவரும் அதனை ஒட்டியோ வெட்டியோ ஆதாரபூர்வமான விவாதத்தை வளர்க்கவில்லை. அதாவது எப்படி இந்த முடிவிற்கு அவர் வந்தார் என்று அவரை யாரும் வினவவேயில்லை.

எனக்குத் தெரியக் கடைசியாக நேற்றுமாலை ஏவ்பி வெளியிட்ட செய்தியில் கூட 'இலங்கையின் சனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழர்களது வாக்குகளே விளங்குகின்றன' என்ற சாரப்படக் குறிப்பிட்டிருந்தார்கள். (Sun Nov 6, 3:14 AM ET COLOMBO (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels have decided to remain neutral in the presidential election this month, a pro-rebel website reported <b>as minority Tamil voters emerged as potential king-makers</b>.) சிங்களதேசத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் தமிழர்தேசம் யாருக்கு வாக்களிக்கப்போகிறது என்பதை அறிய ஆலாய்ப்பறக்கிறார்கள். சிறிலங்காப் புலனாய்வுத்துறை தன் பங்குக்கு தலைப்போட்டு உடைத்துக்கொள்கிறது.

<b>'தற்போதைய தேர்தலில் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே" என்றால் -தமிழர் தேசத்தின் முடிவு யார் சனாதிபதியாவது என்பதைத் தீர்மானிக்கப்போவதில்லை என்றால்- ஏன் இப்படி அனைவரும் அந்தரிக்கிறார்கள்?</b>

உண்மையில் தமிழர்தரப்பின் முடிவு ஒருமித்து எடுக்கப்படுமானால்- கடந்த பொதுத்தேர்தல் போல விடுதலைப்புலிகள் எவருக்காவது வாக்களிக்கச் சொல்வார்களானால் -அதன் தாக்கம் தமிழர் தாயகத்தையும் கடந்து முழு இலங்கைத்தீவிலுமுள்ள அனேக தமிழ் வாக்குகளில் காணப்படும் என்பதை இந்தத் தேர்தலில் தொடர்புடைய சகலரும் அறிவர்.

அதனால் தான் தமிழ் வாக்காளர்களைக் குழப்பியடிக்கவும், அச்சத்தில் ஆழ்த்தவும் திட்டமிட்ட செயற்பாடுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இப்படிக் குழப்பங்களில் ஈடுபடுவர்களது எண்ணம் 'இறுதி நேரத்தில் எங்கே புலிகள் ரணிலுக்கு ஆதரவளிக்கச் சொல்லிவிடுவார்களோ' என்பதுதான்.சுவரொட்டிக் குழப்பங்கள், கைக்குண்டெறிதல்கள் என்பவற்றின் பின்னணியில் இருப்பவர்களும் இவர்கள்தான்.

சரி. தமிழர் வாக்குகள் சனாதிபதியைத் தீர்மானிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா. இதோ இறுதியாக இலங்கையில் (1999ல்) நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள்.

<img src='http://img450.imageshack.us/img450/6673/19cc.jpg' border='0' alt='user posted image'>

இதில் தமிழர் தேசத்தின் மொத்த வாக்குகளும் ரணிலுக்கு அளிக்கப்பட்டிருப்பின் ரணிலே சனாதிபதியாக வந்திருப்பார் என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

ரணில் பெற்ற சிங்களப் பிரதேச வாக்குகள் <b>3233684 </b>
சந்திரிகா பெற்ற சிங்களப் பிரதேச வாக்குகள் <b>3978653</b>

தமிழர்தாயகத்தில் போட்டியிட்ட அனைத்து
வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் <b>757979</b>

<b>இந்த தமிழர் தேச வாக்குகளை சிங்களதேசத்தில் ரணில் பெற்றவைகளுடன் கூட்ட வருவது 3991663</b>

தவிர, தமிழர் தாயகத்தின் வாக்காளர்களில் ஏறத்தாள அரைப்பங்கினரே 1999ல் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள்.

தமிழர் தாயக வாக்காளர் மொத்த எண்ணிக்கை <b>1634125.</b> இதில் 1999 தேர்தலில் வாக்களித்துள்ளவர்களது மொத்த எண்ணிக்கை <b>757979.</b> எனவே தமிழர் தாயக வாக்குகள் ஆகக் கூடியளவில் பயன்படுத்தப்படுமாயின், அதுவும் ஒரு குறித்த நபருக்காகப் பயன்படுத்தப்படுமாயின் அவர் வெல்லுவதற்கே வாய்ப்புகள் உண்டு.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது தனியே தமிழர்தாயக வாக்குகள். விடுதலைப்புலிகள் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தால் இலங்கைத்தீவின் ஏனைய பகுதித் தமிழர்களும் பெருமளவில் ரணிலுக்கே வாக்களித்திருப்பர் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.


இறுதியாக ஒரு வேண்டுகோள்! விவாதங்களை நாம் அவதானமாக மேற்கொள்வோமாயின் அது எமது தேசத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும் என்பது எனது பணிவான கருத்து. காரணம் இது ஒரு பொதுத்தளம். அதாவது கண்ணாடி போல என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கண்ணாடி வழியாகத் தான் அனேகமானவர்கள் - இந்தத் தமிழக நண்பரைப்போல- எமது தேசத்தைப் பார்க்கப்போகிறார்கள். கண்ணாடியில் மாசு படிந்தால் அதனு}டாகத் தெரியும் தேசமும் அவ்வாறுதான் தென்படும்.

<b>அன்புடன் திரு</b>
Reply
#72
<b>தூயவன் எழுதியது:</b>
தேவையில்லாத விளைவுகள் என என்னத்தை கருதுகின்றீர்கள் எனச் சொல்லமுடியுமா?

உண்மையில் நீங்கள் அவதானிக்காமல் கேட்கின்றீர்களோ அல்லது கேள்வி கேட்கவேண்டுமென்று கேட்கினறீர்களோ எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் எழுதிய கருத்தினிலேயே பதிலுண்டு. அவதானித்துப் பாருங்கள்.

தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல்.
Reply
#73
<b>நன்றி திரு உங்கள் நீண்ட பதிலிற்கு</b>
ஆனாலும் நீங்கள் சொன்ன சில விடயங்களில் போதிய விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை.

1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே??

2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??

3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??[/color]
Reply
#74
[quote=Vasampu]
தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல்

ஆயர்கள் என்ன உள்நோக்கத்தோடு அறிக்கை விட்டார்களோ எனக்குத் தெரியாது. ஆயினும் வாக்களிக்க கூடாது என்பது தான் சரியான தீர்வு

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்களின் பலத்தை காட்டவேண்டிய தேவை இருந்தது. காட்டப்பட்டது. இப்போது சிங்கள ஜனாதிபதி குறித்தான தமிழ்மக்களின் வெறுப்பு வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றால் எதிர்ப்பு என்பது அவசியம். இவை உண்மையில் சர்வதேசத்துக்கான காட்சிகளே தவிர சிங்கள பேரினவாதிகளுக்கானது அல்ல. ஏன் என்றால் அவர்கள் உண்மையை உணர்ந்திருப்பின் இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே சர்வதேசத்தை நம் பக்கம் இழுக்கும் முயற்சியில் நடக்கும் இச் செயற்பாட்டில் நல்ல முடிவுகளை எடுப்போம்.
[size=14] ' '
Reply
#75
[quote=Vasampu]<b>நன்றி திரு உங்கள் நீண்ட பதிலிற்கு</b>
ஆனாலும் நீங்கள் சொன்ன சில விடயங்களில் போதிய விளக்கம் எனக்கு கிடைக்கவில்லை.

1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே??

2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??

3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??[/color]


<b>தங்களது கேள்விகளிற்கான விடைகளை என்னால் முடிந்தளவு விளக்கமாகத் தர முற்படுகிறேன்.</b>


<b>1) நீங்கள் சொன்னது போலவே பாராளுமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால் மக்கள் வாக்களித்து வெற்றியீட்டிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இராஜினாமா செய்ய வைக்க்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் பாராளுமன்றம் பிரதமர் என்றிருந்தாலும் அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியின் கைகளில் தானே</b>

1) ஆம் அவ்வாறு செய்யப்பட்டமைக்குக் காரணம் உள்ளது என்றே கருதுகிறேன். பாராளுமன்றில் தமிழ்க்கூட்டமைப்பின் சார்பில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் 'தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம், தாயகக்கோட்பாடு என்பவற்றின்பால் தமிழ்மக்கள் கொண்டுள்ள தாகத்தை வெளிப்படுத்தவும், தமிழரின் விடுதலைப் போரினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும்" தமிழ் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். எனவே இவர்களில் எவராவது மேற்படி கொள்கைகளுக்கு மாறாகச் செயற்படுவார்கள் அல்லது செயற்படக்கூடும் என்று தோன்றும் பட்சத்தில் அவர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்கவேண்டியது அவசியம்தானே.

ஏனெனில் ஏதாவது சாதிக்கிறார்களோ இல்லையோ இருப்பதையும் கெடுத்துவிடக்கூடாதே என்கிற அச்சம்தான் இதற்குக் காரணம். அதாவது சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகள் இவர்களைச் சந்திக்கும்போது அனைவரும் ஒருமித்த கருத்துடன் அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட நோக்கத்தை சர்வதேசத்திற்கு முன்வைக்கவேண்டும். அந்த நோக்கத்திற்கு எதிராகச் செயற்படவிழையும் ஒருவர் அந்தக் குழுவில் இருப்பது எவ்வளவு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்?


ஆம். தாங்கள் கூறியது சரியே. 'சிறிலங்காவின் சனாதிபதி ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர ஏனைய அனைத்தையும் அவருக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு செய்யமுடியும்' என்று வேடிக்கையாகச் சொல்வார்கள்.
ஆனால் பாராளுமன்ற அதிகாரத்தை நம்பி அல்லது அங்கு போய் ஏதாவது செய்யலாம் என்று நம்பி இவர்கள் தெரிவுசெய்யப்படவில்லையே. அதுகுறித்து ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.

<b>
2) முதன் முதலில் சந்திரிக்கா தமிழ் மக்களின் ஆதரவோடும்தான் ஜனாதிபதி ஆனார். பின்னர் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த போதும் சர்வதேசம் ஜனாதிபதி தருவதை ஏற்றுக் கொண்டு சமாதானம் ஆகுங்கள் என்று தமிழ் மக்களைக் கேட்கவில்லையே. அப்புறம் எதைவைத்து தமிழ் மக்கள் வாக்களித்தால் சர்வதேசம் சொல்லும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்??</b>

2) சர்வதேச சமூகத்தின் முன் சந்திரிகா விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறு. மக்கள் எனக்குத்தான் வாக்களித்தார்கள். அதனால் அவர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கிறேன். யுத்தம் மூலம் சமாதானத்தை நிலைநாட்டுகிறேன் என்று வேடமிட்டுத்தானே தமிழின அழிப்பைக் கச்சிதமாகச் செய்தார்.

அதனால்தான் சரியாக இதே காலப்பகுதியில் நடந்த மாபெரும் சரித்திர இடப்பெயர்வான வலிகாம இடப்பெயர்வின்போது கூடச் சர்வதேசம் வாய்மூடிக் கைகட்டிப் பார்த்திருந்தது.

சீனாவிலோ கியூபாவிலோ நான்குபேர் சந்தியில் கூடிக் கதைத்தாலே அதனை சனநாயகத்திற்காகப் போராடும் மக்கள் எழுச்சி என்று வருணித்து நாளுக்கு நான்குதரம் காட்டும் சர்வதேச ஊடகங்கள் சந்திரிகா சொன்னதைத்தானே எழுதிக்கொண்டிருந்தன.

நவாலியில் நடந்த நரபலி வேட்டையைச் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மட்டும்தானே தட்டிக்கேட்டது.

இவை அனைத்துக்குமே காரணம் தமிழ்மக்கள் சமாதானத்தைத் தருவார் என்று அளித்த அமோக ஆதரவுதான். அந்த ஆதரவை அம்மையார் மக்கள் வேறு புலிகள் வேறு என்று காட்டக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதற்குப் பின்புலமாக இருந்து வழிநடத்தியவர் கதிர்காமர்.

எனவே அவர் நடத்திய போரை அதன் அழிவைக் கண்டும் வாளாதிருந்த சர்வதேசம் 'அவர் தருவதை வாங்கிக் கொள்க' என்று சொல்லாமல் சொன்னதாகத்தானே அர்த்தம்.

ஆனையிறவைப் புலிகள் பிடித்து யாழ்ப்பாணத்தின் வாயிலைத் தட்டும்வரைக்கும் இந்தச் சர்வதேசம் அம்மையார் சொன்னதைத்தானே நம்பியது.

<b>3) சென்ற ஜனாதபதித் தேர்தலில் புலிகளின் மறைமுகமான ஆதரவு ரனிலுக்கு இருந்தும் சந்திரிகாதான் ஜெயித்து வந்தார். அத்துடன் தமிழ்ப் பிரதெச வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களின் வாக்குகள் தான் என்று எப்படிச் சொல்கின்றீர்கள்??</b>

3) மறைமுகமாக விடுதலைப் புலிகள் ரணிலை ஆதரித்ததாக எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் குறிப்பிடுவதால் அதுகுறித்து ஆராய்ந்து சொல்ல எனக்கு அவகாசம் தேவை. அதற்கு ஏதாவது ஆதாரமிருப்பின் தயைகூர்ந்து தனிமடலில் அனுப்பிவையுங்கள்.

அவ்வாறே தாங்கள் சொல்வது போல மறைமுக ஆதரவு என்று எடுத்துக்கொண்டாலே, அதுகுறித்துப் பலருக்கு அறியக்கிடைத்திருக்காதல்லவா?

ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் துறைப்பொறுப்பாளரே தமிழ்ககூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு கோரி அது ஊடகங்களிலும் முதன்மைப்படுத்தப்பட்டு அனேகருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அப்படி ஒன்று இந்தத் தேர்தலில் நடந்துவிடுமா என்ற அச்சம்தான் தென்னிலங்கையின் இன்றைய பதட்டத்திற்குக் காரணம்.


தங்களது வாதம் மிகச்சரியானதே. தமிழ்ப்பிரதேச வாக்குகள் அனைத்தும் தமிழ்வாக்குகள் அல்ல. ஆனால் ஏறத்தாளப் பதினைந்து லட்சம் வாக்குகளில் எட்டிலிருந்து பத்துலட்சம் வரை தமிழர்களுடையது என்று நாங்கள் கொள்ளலாம்.(<i>இந்தப் புள்ளிவிபரத்தைக் கூடத் துல்லியமாக என்னால் தரமுடியும்.அதற்கு ஒரு மணிநேரமாவது ஒதுக்கவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக எனக்கு இப்படி ஓய்வுநேரம் கிடைப்பது அரிது. கிடைக்கும் ஓய்வில் உறங்காவிடின் மறுநாள் பலர் நிரந்தரமாக உறங்கிவிடும் அபாயம் உண்டு. பார்க்கும் தொழில் அத்தன்மையது. அதனால் தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள். நீங்களே கூடச் சற்று நேரம் ஒதுக்கித் தேடுவீர்களாயின் சரியான புள்ளிவிபரத்தை எடுக்கலாம்.) </i>

அதுதவிர இம்முறை வன்னியில் மட்டும் நான்கு லட்சம் புதிய வாக்காளர்கள் (அதாவது முதன்முறையாக) வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். எனவே ஏற்கெனவே இருந்த இரண்டு லட்சத்துடன் இந்த நான்கு லட்சமும் சேர ஆறுலட்சம் வாக்குகளை வன்னி மட்டுமே கொண்டிருக்கிறது

அதுவும் அனைவர் வயிற்றிலும் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.

<b>இறுதியாக தேவையற்ற பிரச்சினைகள் என ஆயர்கள் சொன்னபிரச்சினை எழலாம் என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். (து}யவன் தலையைப் பிய்க்கமுன்பே இதையும் விளக்கிவிடுகிறேன்)</b>

து}யவன், இங்கே நண்பர் ஆயர்கள் குறிப்பிட்ட வேண்டத்தகாத விளைவுகள் என்று குறிப்பிடுவது, எனது ஊகம் சரியானால் (பி.பி.சி தமிழ்ச்சேவையில் ஆயரின் பேட்டியை இணையத்தளமூடாகக்கேட்டதை வைத்து) "மக்கள் வீடுகளில் இருந்தால் அவர்களது வாக்குகளை விரும்பியவாறு அரசியல் கட்சிகளின் குண்டர்கள் தத்தமது கட்சி வேட்பாளருக்கு அளித்துவிடுவார்கள். அதனால் தமிழ்மக்கள் வாக்களிக்கப்போகவேண்டும்." என்று ஆயர் சொல்லியிருந்தார்.

நியாயமான அச்சம்தான். ஆனால் அந்த அச்சத்திற்கான தீர்வு குறித்து இப்போது தமிழர்தாயகப்பகுதியில் அரசியல் நோக்கர்கள், புத்திஜீவிகள் மட்டத்தில் விவாதித்து வருகிறார்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

வாக்களிக்கச் சென்று அங்கே அந்த வாக்குகளை செல்லா வாக்குகளாக்கி எமது எதிர்ப்பைக் காட்டலாமா என்றும் சிந்திக்கப்படுவதாக அறிந்தேன்.

இன்னுமொன்று. இந்த ஆயர்கள் எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது அப்படியிருக்கையில் இப்போது ஆயர்கள் இவ்வாறு தெரிவித்திருப்பது எதைக்காட்டுகிறது.

அண்மையில் ஆயர்களுடன் விடுதலைப் புலிகள் முரண்பட்டதாகவோ, அல்லது ஆயர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திரும்பியதாகவோ எந்தத் தகவலும் இல்லையே.

எனவே விடுதலைப் புலிகளின் கருத்தைப் பிரதிபலிப்பதாகச் சொல்லப்படும் ஆயர்கள் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது, விடுதலைப் புலிகள் இந்த விடயத்தில் யாதொரு அழுத்தத்தினையும் எவருக்கும் வழங்கவில்லை என்பதையே காட்டுகிறது.

<b>அன்புடன் திரு</b>

<b>குறிப்பு: </b>அடிக்கடி இந்தத் தளத்திற்கு வருவதோ அல்லது இப்படி விரிவாகப் பதில் எழுதுவதோ எனக்கு இயலாத காரியம். எனது பதிவுகளைப் பார்த்தாலே தங்களுக்கு அது புரியும். எனவே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் உடன் தராதுபோனால் அதுகுறித்து மனவருத்தமடையவேண்டாம். எத்தனை காலம் சென்றாலும் மீண்டும் வரும்போது பதில் தருவேன்.
Reply
#76
<b>மிக்க நன்றி திரு</b>
உங்கள் விளக்கங்கள் நியாயமானதோ இல்லையோ என்பது வேறுவிடயம். ஆனால் நீங்கள் பொறுப்பாகவும் பொறுமையாகவும் பதிலளித்திருக்கும் தன்மையை என்னால் மனமாரப் பாராட்டாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு விடயத்தையும் நீங்கள் அணுகியிருக்கும் விதம் எல்லாவற்றிற்கும் எனது உளப்புூர்வமான நன்றிகளும் வாழ்த்துக்களும். களத்தில் எழுதக் கூடாத வார்த்தைகளையெல்லாம் எழுதிவிட்டு கௌரவமாக எழுதுகின்றோமென்றும் தனிநபர் தாக்குதல்களையே நடாத்திக் கொண்டு மற்றவர் புண்பட எழுதவில்லை என்று மறுதலிப்போரும் உங்களிடம் கற்றுக் கொள்ள நிறையவேயிருக்கின்றது. அடிக்கடியில்லாவிட்டாலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இடைக்கிடையாவது வந்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து செல்லுங்கள்.

நன்றி

என்றென்றும் அன்புடன்
வசம்பு
Reply
#77
அமைதிப் பேச்சுக்கள் என்ற பெயரில் ரணில் செய்த சதிகளின் பட்டியல்: மிலிந்த மொறகொட ஒப்புதல் வாக்குமூலம்!!
[செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2005, 15:28 ஈழம்] [ம.சேரமான்]

அமைதிப் பேச்சுக்கள் மூலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு உருவாக்கியதும், அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளை சர்வதேச வலைப்பின்னலில் சிக்க வைத்ததும், அமைதிப் பேச்சுக்களினூடே விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழித்ததும் நாம்தான் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.


கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் ஆங்கில நாளிதழுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவும், கடந்த கால அமைதிப் பேச்சுக்களில் சிறிலங்கா அரச பிரதிநிதியாகவும் பங்கேற்ற மிலிந்த மொறகொட அளித்துள்ள நேர்காணலில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த மொறகொட அளித்துள்ள நேர்காணல் விவரம்:

சிங்களத் தீவிரவாதிகள் சொல்வது போல் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் நாட்டினது பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படவில்லை. மாறாக எமது ஆட்சிக்காலத்தில் வலுவாக இருந்தது. அமைதிப் பேச்சுக்களை நாம் நடத்திக் கொண்டிருந்த போதும் விடுதலைப் புலிகளின் இரு வர்த்தகக் கப்பல்களை கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் சர்வதேச கடல் எல்லையில் தாக்கி அழித்தோம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் நாம் முழுவீச்சில் செயற்பட்டோம். விடுதலைப் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை நமது கடற்படை இடைமறித்தது.

ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினது செயற்பாடுகளில் குறுக்கீடுகள் இருந்ததாக கேள்விப்பட்டோம்.

இராணுவத்தினது எண்ணிக்கையை நாம் குறைக்கப் போவதில்லை. உண்மையில் நமது இராணுவத்துக்கு கூடுதலான படையினர் தேவை. நாம் அரசு அமைத்தால் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவ ஆய்வாளர்களின் ஆலோசனைகளுக்கு அமையவே நமது இராணுவ வலிமை அதிகரிக்கப்படும். ஆனால் இந்த விடயம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெரிக்க, இந்தியப் படைகளை நாம் களம் இறக்க உள்ளதாக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச பாதுகாப்பு வலையத்துடன் சிக்க வைத்துள்ளோம். அதன் மூலமாக அவர்கள் மீண்டும் ஒரு யுத்தத்துக்குத் திரும்புவது தடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக அமைதி ஒப்பந்தம் நீடிப்பது என்பதும் சர்வதேச பாதுகாப்பு வலையத்தில் இப்போது நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அப்படி இல்லாது இருந்தால் நாம் மீண்டும் யுத்தத்துக்குத் திரும்பியிருப்போம். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகளை ஒவ்வொருவரும் குறை சொல்கிறார்கள். ஆனால் அது தொடர்பில் எதுவும் செய்ய எவரும் முன்வரவில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்தால் யுத்தம்தான்.

அமைதி முயற்சிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்களுக்கமைய நாம் யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வோம். அதில் எதுவித சந்தேகமும் இல்லை. இந்த உண்மையை தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யுத்த காலத்தில் பிளவை ஏற்படுத்தியிருக்க முடியாது. அதற்கான சரியான சூழலை உருவாக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இதற்காக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே கருணாவை ஆதரித்து வலை விரித்திருந்தோம். துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்து, வீதிகளைத் திறப்பது, வீதித் தடைகளை நீக்குவது போன்ற செயற்பாடுகள் மூலம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் கொடூரத்துக்கு மாற்றுச் சூழலை நாம் உருவாக்கி கொடுத்துள்ளோம்.
தற்கொடைதாரியாக செயற்படக் கூடியவர் கூடிய இந்த சூழ்நிலைகளை அவதானிக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை தனது மரணம் குறித்து யோசிக்க நேரிடும். மற்ற பிரஜைகள் போல் நாமும் உரிய வாய்ப்புகளை வாழ வேண்டும் என்றுதான் கண்டிப்பாக சிந்திக்கத் தூண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், ஆதரவாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தாக்குதல் நடத்தும் ஆயுதக் குழுக்கள், கருணா குழுவுக்கு சிறிலங்கா புலனாய்வுத் துறையினரது ஆதரவு இருப்பதாக விடுதலைப் புலிகள் கூறுவது உண்மைதான். ஆனால் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஆயுதக் குழுக்களை களையவில்லை என்பதை மறுக்கிறோம். கிழக்கு மாகாணத்தில் அதை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவே அதை பார்த்தோம்.

"கருணா" என்பது அமைதி முயற்சிகளினால் உருவாக்கப்பட்டது. எமது வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கருணா குழுவுடன் நாம் செய்ய வேண்டிய சிலவற்றை கண்டிப்பாக செய்வோம் என்றார் மிலிந்த மொறகொட.

http://www.eelampage.com/?cn=21518
Reply
#78
ஓம் ஓம் நீங்கள் வெளிநாடுகளில தப்பி இருந்து கொண்டு நல்லா எழுதுவியள். உங்களுக்கு சமாதானம் வேண்டாம் சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா ஏன் விட்டுட்டு வந்தனீங்கள். சனம் பென்ரோச் பற்றரி, பெற்றோல், பனடேல்க்கு எல்லாம் எவ்வளவு அவதிப்பட்டது தெரியுமே?
கொழும்பில கூட எவ்வளவு கெடுபிடியள், நிம்மதியா கோல்பேசில கடலை வேண்டித்தின்னலமே? பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் ஒரு பிளட்டை கிளட்டை வேண்டிவிடலாமே, எவ்வளவு பயந்து கொணடிருந்தது சனம். யாழ்பாணத்துக்போய் விடுவளவுகளை நல்ல காசுக்கு வித்திருக்கேலுமே?

உங்களுக்க எங்கை உதுகள் விளங்கப்போகுது, நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்சாலாவது பெரியாக்கள் சொல்லுறதை விளங்கிக் கொள்ளலாம்.
Reply
#79
kurukaalapoovan Wrote:ஓம் ஓம் நீங்கள் வெளிநாடுகளில தப்பி இருந்து கொண்டு நல்லா எழுதுவியள். உங்களுக்கு சமாதானம் வேண்டாம் சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா ஏன் விட்டுட்டு வந்தனீங்கள். சனம் பென்ரோச் பற்றரி, பெற்றோல், பனடேல்க்கு எல்லாம் எவ்வளவு அவதிப்பட்டது தெரியுமே?

<b>கொழும்பில கூட எவ்வளவு கெடுபிடியள், நிம்மதியா கோல்பேசில கடலை வேண்டித்தின்னலமே? பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் ஒரு பிளட்டை கிளட்டை வேண்டிவிடலாமே, எவ்வளவு பயந்து கொணடிருந்தது சனம். யாழ்பாணத்துக்போய் விடுவளவுகளை நல்ல காசுக்கு வித்திருக்கேலுமே?</b>

உங்களுக்க எங்கை உதுகள் விளங்கப்போகுது, நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்சாலாவது பெரியாக்கள் சொல்லுறதை விளங்கிக் கொள்ளலாம்.

காத்துவாங்க(கச்சான்) ஏன் கொழும்பு காலிமுகத்திடலுக்கே போகோணும் காரைநகர் கசோரினா (நல்ல வெள்ளைக் மண்கரை) பீச்சுக்கும் போகலாம் தானே..????.... கச்சானும் காரதீவில விளையிறதால உள்ளூர் வியாபாரியளுக்கு லாபமும் கிட்டும்.... ......... Idea


(ஆமி..நேவி எலும்பை முறிச்சா நான் பொறுப்பில்லை) :wink:
::
Reply
#80
Thala Wrote:
kurukaalapoovan Wrote:ஓம் ஓம் நீங்கள் வெளிநாடுகளில தப்பி இருந்து கொண்டு நல்லா எழுதுவியள். உங்களுக்கு சமாதானம் வேண்டாம் சண்டைதான் பிடிக்க வேணும் எண்டா ஏன் விட்டுட்டு வந்தனீங்கள். சனம் பென்ரோச் பற்றரி, பெற்றோல், பனடேல்க்கு எல்லாம் எவ்வளவு அவதிப்பட்டது தெரியுமே?

<b>கொழும்பில கூட எவ்வளவு கெடுபிடியள், நிம்மதியா கோல்பேசில கடலை வேண்டித்தின்னலமே? பம்பலப்பிட்டி வெள்ளவத்தைப்பக்கம் ஒரு பிளட்டை கிளட்டை வேண்டிவிடலாமே, எவ்வளவு பயந்து கொணடிருந்தது சனம். யாழ்பாணத்துக்போய் விடுவளவுகளை நல்ல காசுக்கு வித்திருக்கேலுமே?</b>

உங்களுக்க எங்கை உதுகள் விளங்கப்போகுது, நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்சாலாவது பெரியாக்கள் சொல்லுறதை விளங்கிக் கொள்ளலாம்.

காத்துவாங்க(கச்சான்) ஏன் கொழும்பு காலிமுகத்திடலுக்கே போகோணும் காரைநகர் கசோரினா (நல்ல வெள்ளைக் மண்கரை) பீச்சுக்கும் போகலாம் தானே..????.... கச்சானும் காரதீவில விளையிறதால உள்ளூர் வியாபாரியளுக்கு லாபமும் கிட்டும்.... ......... Idea


(ஆமி..நேவி எலும்பை முறிச்சா நான் பொறுப்பில்லை) :wink:

வணகம் தல,

மீண்டும் காண்பது சந்தோசம் உங்கள் பயண அனுபவங்களை ஆவலுடன் எதிர்பாக்கிறோம்,படங்கள் எடுக்கவில்லயா?
களத்தில கன வியசம் நடந்திட்டுது ஆறுதலா வாசிச்சுப்போட்டு எழுதினாத் தான் குறுக்காலபோவன் பூடகமாப் பேசுறது விளங்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)