11-06-2005, 08:05 AM
<b>கேணல் சொர்ணத்தைக் குறிவைத்த சிறிலங்கா புலனாய்வுத்துறை!</b>-இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்திரிகையில் தகவல்-( I am trying to get at Sornam. I am running him. This guy has promised he would kill him- Col.T.R.Meedin)
விடுதலைப் புலிகள் மீதான நிழல்யுத்தத்தினைத் தொடங்கி நடத்திவருவது சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவு. இதனை சிறிலங்கா அரசும் அதன் புலனாய்வுப் பிரிவும் இந்தக் கணம்வரை மறுத்துரைத்துவருகின்றன.
போகிற போக்கில் 'மத்திய மலைநாட்டில் மண்சரிவா? அது விடுதலைப் புலிகளின் சதி' என்று செய்தி வெளியாகும் அளவிற்குச் சிங்கள தேசத்தில் எது நடந்தாலும் அதனை விடுதலைப் புலிகளின் தலையில் கட்டிவிடுவதில் குறியாக உள்ளனர் இந்த அரச புலனாய்வுப் பிரிவினர்.
இது இவ்வாறிருக்க, சிறிலங்கா அரசாங்கத்தினதும், அதன் புலனாய்வுக் கட்டமைப்பினதும் இரட்டைவேடத்தினை இன்று 06-10-2005 வெளியான கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று தன்னையறியாமலே வெளிக்கொண்டுவந்துவிட்டது.
அது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் அவரது சகாக்களாலேயே வஞ்சகமாகக் கடத்திக் கொல்லப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி கேணல் மீடின், அவருக்கு நெருங்கியோரிடம் கேணல் சொர்ணத்தைத் தாம் குறிவைத்து நெருங்கிவருவதாகக்; கூறியிருக்கிறார்.
'கேணல் மீடின் அவரது தனிப்பட்ட பாதுகாப்புக் குறித்துக் கவனமாக இருக்கவேண்டும்' என்று எச்சரித்த அவரது நண்பரும், சேர்ந்து பணியாற்றுபவருமான ஒருவரி;ம் ' பயப்படவேண்டாம். நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் அவதானமாகத்தான் இருந்துவருகிறேன். நான் சொர்ணத்தை நெருங்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பேர்வழிதான் சொர்ணத்தைக் கொல்வதாக எனக்கு வாக்குறுதியளித்திருக்கிறார்") என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கு 'இந்தப் பேர்வழி' என்று கேணல் மெய்டின் குறிப்பிட்டது சமிந்த என்ற 'ஐஸ் மஞ்சு' வைத்தான் என்கிறார் இந்த விடயத்தைப் போட்டுடைத்துள்ள இக்பால் அத்தாஸ்.
இது உண்மையானால் 'யுத்தநிறுத்தம் அமுலுக்கு வந்தபின்னர் புலனாய்வுத் துறையினர் நல்லபிள்ளைகளாகக் காலிமுகத்திடலின் கடற்கரையில் காற்றாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போது புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செய்வதில்லை. புலிகள்தான் வெறுமனே அரச புலனாய்வுப்பிரிவைக் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்' என்று வாய்ஓயாது புலம்பிவரும் சிறிலங்காவின் சனாதிபதியிலிருந்து சிங்களப் பத்திரிகைகள் வரை என்னசொல்லப்போகிறார்கள்?
அவர்களை விடுங்கள். யுத்தநிறுத்ததைக் கண்காணிக்கும் குழு இதுகுறித்து என்ன சொல்லப்போகிறது?
நன்றி: த சண்டே ரைம்ஸ் (06-10-2005)
தமிழில்;: திருமகள் (ரஷ்யா)

hock: இந்த ஐரோப்பிய ஒன்றியமும் இப்படியான செய்திகளை படிப்பதும் நல்லது.