Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>காதல்...</span>
<img src='http://www.yarl.com/forum/files/kavithai1_355.jpg' border='0' alt='user posted image'>
தோற்றுப் போவேன்
என்பதால் 'தோழா' என்றேன்
எதிர்காலத்தை நாங்கள்
உருவாக்குவோம்..
நிகழ்காலத்தை நேசி 'காதலி'
என்றான்..
காதல் கொண்டேன்
காலம் கடந்தது..
அவசரமாய் ஆதிக்கமாய்
விசாரிக்கிறான்
'வருத்தம் எப்படி இருக்கு'
அன்பாய்
'நீ எப்படி இருக்கிறாய்'
என விசாரிக்காமல்..
ம்ம்
என்னை விடவும்
என் பிரிவைத்தானே
பிரியப்படுகிறான்
வஞ்சகன்
அன்றும்
காதலன் இருந்தான்
காதல் தோற்றது
இன்றும்
காதலன் இருந்தான்
காதல் தோற்கடிக்கப்பட்டது
[b]காதலுடன் நித்தியா</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாவம் இந்த நித்தியா பேசுது...பறையது...ஆனா மறைஞ்சிருக்கு..ஏனாம்...ஒரு வேளை... கண்ணைக்கட்டி காட்டில விட புதுமை படைக்குதோ..இல்ல கை விலங்கிட்டிருக்கோ...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
தூது , பிரியம், போல் காதல்......ஐயும் ஒலி பதிவா இணைச்சிருக்கலாமே இளைஞன். நன்றாக இருந்திருக்கும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நல்ல கவிதை நன்றி இளைஞன்அண்ணா
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>கற்பனை</span>
<img src='http://www.yarl.com/forum/files/karpanai_nithi_141.jpg' border='0' alt='user posted image'>
இடை நோகக் கட்டியணைத்து
இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட
சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது
27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது
விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்
சுமையாகிப் போனது..
உயிரைப் பிழியும் உன் பார்வை
தேடல் கொண்டதில்
21 ஆண்டுகள் கன்னக்குழியில்
தொலைந்து போனது..
கிளிப்பேச்சு கேட்கும் காலையில்
அவன் விழிப்பேச்சு கண்டு
மூச்சுமுட்ட கட்டியணைத்து
இறந்தபோன உடலுக்கு அவன்
உதடுகளால் உயிர் தந்த போது..
தொலைந்து போகும் என் காதலை
எண்ணி இதயம் வேகமாய்த் துடித்தது..
"காந்த"க் கண்ணில் தீப்பொறி கண்டதும்
மின்னலின் தலைக்கனம்
மெத்தைமேல் இளகிப்போனது..
கண்ணின் மணி 72கிலோ'வை
எடை போட்டபோது
மெல்லிடை நூலாகிப்போனது..
வஞ்சகன்...
சென்மம் முழுதும்
தொலைந்து போகிறவளுக்கு
இரண்டு நாள் ஈடாக கொடுத்தான்
திருமார்பில் முகம் புதைப்பதுக்குள்
தேய்ந்து போனதடா
அந்த 43 மணித்தியாலங்கள்..
தூக்கி எடைபார்த்த போது
கண்ணடித்த கறுப்புமுகம்
இன்னும் பாதத்தை
கோலம் போட வைக்குதடா..
விழி சொரியும் கண்ணீருடன் கடைசி முத்தம்
தந்து விடை பெற்ற போது - காதல்
நிரந்தரமாக விடைபெறுகிறதோ..?
என்று ஏக்கத்தில் கை நடுங்க
நடை தானாகத் தளர்ந்தது..
கத்தரிக்காய் எடை இல்லாக்காதல்
என்று ஊர் தூற்றுகையில்
இதயம் வெடித்து சிதறியது
காதலுக்காய் மரணிக்க
மாற்றுயிர் இல்லையே என்று..
[b]எழுதியவர்: நித்தியா</b>
பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
இழஞ்ஞன் ஏன் நித்தியாவின் எல்லாக் கவிதைகளிலும் ஒரு ஏக்கம் கலந்த சோகம் இழையோடுகிறது.வாசகன் என்ற ரீதியில் இது அலுப்புத் தட்டுகிறது.ஏன் அவர் வேறு உணர்வுகளையும் விடயங்களையும் கவியாக்கலாமே.தனது கவி புனையும் ஆழுமயை வளர்ப்பதற்கு.ஏக்கம்,தவிப்பு,காதலன் இவற்றிற்கு அப்பாலும் பல உணர்வுகளும்,கருப் பொருட்களும் உண்டல்லவா.ஏன் படைப்பின் எல்லைகளைக் குறுக்குவான். நான் அவரின் எல்லாக் கவிதைகளையும் படிக்கவில்லை.வேறு விடயங்களும் எழுதி இருந்தால் போடுங்கள்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
நித்தியா என்று தமிழ்மணத்தில் ஒரு பதிவு கண்டபோது கேக்க நினைத்தேன். இந்த நித்தியாவா என்டு. நீங்களா சொல்லீட்டீங்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சோகமான கவிதைகள் எழுதுவதில் ஒரு சுகம் உண்டாம். (எழுதிறவை சொன்னாங்க நமக்கு தெரியாது) :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நித்தியாவின் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. ஒலிப்பதிவுகளும் மிக மிக நன்றாக இருக்கின்றன. கவிதைகளை எங்களுக்காக வழங்குகின்ற இளைஞனுக்கும் , கவிகளை எழுதி ஒலிவடிவில் வழங்கும் நித்தியாவுக்கும் வாழ்த்துக்கள் .மேலும் கவிதைகளை ஆவலோடு எதிர் பார்க்கின்றேன். நன்றி
[b][size=18]
Posts: 2,016
Threads: 72
Joined: Sep 2003
Reputation:
0
நித்தியாவின் கவிதைகள் அருமையாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்...
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
பிரிவின் வலி அனுபவித்து எழுதிய கவிதை நன்று
inthirajith
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
நித்தியாக்கா இது என்னவென்று அறியலாமா? :wink:
<img src='http://photos1.blogger.com/blogger/4236/1731/1600/arimugapaduthu2.JPG' border='0' alt='user posted image'>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 566
Threads: 7
Joined: Feb 2005
Reputation:
0
அருவியண்ணா என்ன சின்னப்பிள்ள மாதிரி கேள்வி கேக்குறீங்கள்...... இது ஒரு கவிதையாக்கும்.....இது கூடத் தொயாதா????????
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இளைஞன் Wrote:இடை நோகக் கட்டியணைத்து
இளந்தென்றல் வெளியேறப் போட்டி போட
சுடு மூச்சு தேகம் பட உள் ஆவி இறந்தது
27 ஆண்டுகளை நல்லிரவில் கைதான போது
விழியோரம் எட்டிப்பார்த்த கண்ணீர்
சுமையாகிப் போனது..
பி.கு.: இந்தக் கவிதை வைரமுத்துவின் ஒரு கவிதையின் பாதிப்பில் எழுதியது என நித்தியா குறிப்பிடச் சொன்னார்.
இது வைரமுத்துவின் உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே கவிதையின் பாதிப்பா?
அவருடைய அந்த கவிதையின் ஒரு பகுதி இருவர் படத்தில் அரவிந்தசாமியின் குரலில் வெளிவந்தது தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>