Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பதில் தாருங்கள்
#61
வணக்கம்

வார்த்தைகளால் விளையாடிவிட்டால் எதுவும் உண்மையாக்கலாம் என்ற அதீன துணிச்சலை பாராட்டாமல் இருக்கமுடியாது. இருந்தாலும் அக்கால வாழ்க்கையை நீங்கள் ஏன் ஒப்பிடுவது என்பது புரியவில்லை. இப்படிப் பட்ட நியாயப்படுத்தல் போலவே நாளைக்கு ஒருத்தன் அக் காலத்தில் ஜாதி குறைந்த ஒருவன் அடிமையாக வாழ்ந்தது போல இருக்கவேண்டும் என்று வாதிடுவான். அப்போது அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதா? ஏன் என்றால் சங்ககாலத்தில் அப்படி இருந்தாங்களாமே. (அரசன் மலம் இருந்தால் கூட பக்குவமாக கழுவிக் கொண்டு.)

எந்தவொரு விடயமும் இயல்பாக எல்லோருக்கும் தெரியும். அதை மைக் போட்டு விவாதிக்கதேவையில்லை. முதலிரவுக்கு போகின்ற இருவருக்குமே அங்கே என்ன செய்யவேண்டும் என்பதை அறிவார். அதற்காக பட்டிமன்றம் போட்டு நீ. அப்படி நடக்கவேண்டும். இப்படி நடக்கவேண்டும். என்று விவாதித்தா செய்கின்றனர்.
அது மாதிரித்தான் இலக்கியங்களில் எழுதப்படுபவையும் அது சார்ந்ததே. "தன் மகன் புறமுதுகிட்டு தோற்றிருந்தால் மார்பறுத்து எறிவேன்" என்று விளம்பிய வீரத் தாயைப் பற்றிக் கதைக்கும்போது எல்லோரும் வீரத்தை பற்றித் தான் கதைக்கின்றார்களே தவிர, வேறு ஏதுமல்ல. அவ்வாறே எல்லா இலக்கியமும். ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் தனித்தே அதை பற்றி கதைக்கும்போது அங்கே தான் தப்பு.
து}சணத்தை பற்றி சொன்னீர்கள். பெண்ணின் உறுப்புக்கள் தான் அப்படி மாற்றம் பெற்றன என்று. இப்போது நான் ஒரு சொல்லை உங்கள் மீது சொல்லுகின்றேன். ஆனால் உங்களுக்கு கோபம் வரக்கூடாது. ஏனென்றால் அது காரணச்சொல்

**********.

ஏற்றுக்கொள்கின்றீர்களா? உங்கள் கருத்துப்படி அதில் ஒரு தப்புமே இல்லை.

**********. நீக்கப்பட்டுள்ளது. உங்களதுகருத்துக்கள் மற்றவர்களை மறைமுகமாகவோ நேரடியாகவே தாக்கதவகையில் வையுங்கள். - yalini
Reply
#62
ஏன் நீங்கள் திட்டும்போது .......மவன் என்று திட்டுகிறீர்கள் ......னி மவன் என்று திட்டுவதில்லை.ஏனென்றால் காலம் காலமாக உங்களுக்குள் அழுத்தப்பட்டு வந்திருக்கும் பாலியல் உறுப்புகள் பற்றிய கற்பனாவாதங்களும் பெண்ணின் கற்புப் பற்றிய புனைவுகளும் பெண்ணின் உறுப்பைச் சொல்லித் திட்டுவதன் மூலம் ஒருவனைக் கேவலப்படுத்தலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

உதாரணம் காட்டுகிறேன் எனு சொல்லி உங்களை நீங்களே காட்டிக் கொடுத்ததற்கு நன்றி

கொஞ்சம் முன்னுக்குப் போய் களத்தில் நான் எழுதியதைப் படித்துப் பாருங்கள்.

எதற்காக தூஷணம் என்று நீங்கள் கருதுபவையெல்லாம் பெண்களின் உறுப்புகளாயிருக்கின்றன எதற்காக ஒரு ஆணைத் திட்டவேண்டுமானால் அவன் அம்மாவை சகோதரியைத் திட்டுகிறீர்கள்.

மற்றது சங்க காலத்தில் இச்சொற்கள் குறிப்பிடப்பட்டதை எதற்கு உதாரணம் காட்டுகிறேனா சங்க காலத்தில் தமிழில் வழங்கிய சொற்களை இப்போது டி.சே சொன்னால் அதை ஆபாசம் என்றார்கள் அதனாற்தான் அவை சங்க காலத்திலியே புழக்கத்தில் இருந்தன என்று உதாரணம் காட்டினேன்.

சங்க காலத்தில் செய்தார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் செய்வீர்களா என்றால் இல்லை.உங்களைப்போல நாய்வாய்க்கழி பற்றிய குருடர்கள் போல எதையும் நிராகரிக்கவோ கண்மூடி ஏற்றுக்கொள்ளவோ செய்யாமல் பகுத்தறிந்து பயன்படுத்துவோம்.

மற்றது நீங்கள் சொன்ன....மவனே என்று என்னை அழைத்தால் எனக்குக் கோபம் வராது எங்கிருந்து வந்தோம் அதனைச் சொல்லிக்காட்டுவது தூஷணமா நல்ல பகிடி போங்கள்.

இந்தச் சொல்லையே சாதரண வழக்குச் சொல் ஆக்கிவிட்டால் அந்தச் சொல் வீரியமிழந்து திட்டும் அர்த்தமிழந்து போகிறதல்லவா அதற்காகத் தானே இவ்வளவு வாதாட்டமும்

தூயவனுக்குப் புரிந்துவிட்டது என நினைக்கிறேன்.மற்றவர்கள்?
\" \"
Reply
#63
http://nunippul.blogspot.com/2005/10/sexua...harassment.html

இந்தப் பதிவில் போய்ப் பாருங்கள் நண்பியின் மகனின் வகுப்பில் நடந்த சம்பவத்தை எவ்வளவு யதார்த்தமாக அலசுகிறார்கள்.இதற்குப் பேர் மைக் போட்டுப் பேசுவதா இல்லை சமுதாயத்தில் உள்ள நடைமுறைகளின் சரி பிழை பற்றி ஆராய்கிறார்கள்.ஆராயும் போதுதான் தெளிவு பிறக்கும் மூடி மறைக்கும் போது அல்ல.

எங்கள் வீட்டில் மலசலகூடம் இல்லை என்று என்னாலும் சொல்லிவிட முடியும்
ஆனால்
காலையில் எழுந்து நான் தானே கஷ்டப்படவேண்டும்
\" \"
Reply
#64
புள்ளிகளின் மவன் என்பதில் என்ன காரணப்பெயர் உள்ளதோ தெரியவில்லை.

அடுத்தவன் அறைக்குள் ஏன் எட்டிப்பார்க்கிறீர்கள் என்பதற்கு இன்னும் பதில்லை.
மற்றவனெல்லாம் அரிப்பெடுத்துத் திரியிறான் எண்ட பழைய பல்லவி தான் மீண்டும் பாடப்படுது.
முதலில என்னத்தைக் கேக்கிறாங்கள் எண்ட அடிப்படை விளக்கமேயில்லாமல் உவங்கள் "உந்த அறைக்குள்ள போய் வி;ல்லங்கமா ஏதோ செய்யப்போறாங்கள்" எண்ட அதே மனநோயின்ர பிரதிபலிப்புக்களாத்தான் பதில்கள் வருது.

முலையறுத்த தாயின் கதையில் வீரம் மட்டுமே தெரிந்தவர்களுக்கு நனைந்த உடைபார்த்து அப்பெண்ணைப் பழித்தவர் பற்றிப் பாடிய கவிதையில், பெண்ணின் குமுறலை வெளிப்படுத்திய கவிதையில் மட்டும் பாலியல் உணர்வு வந்ததென்றால் என்ன அர்த்தம்?

பூட்டிய அறைக்குள் மற்றவர்கள் செய்வதைப்பற்றி என்ன அக்கறை? வாவென்றால் வரவும் மாட்டார்கள். போவென்றால் போகவும் மாட்டார்கள். வெளியே நின்று கத்திக்கொண்டிருப்பது மட்டுமே அவர்களால் முடியும்.

ஓரளவு அவரவரின் கருத்துக்கள் தெரிந்துவிட்டன. இனியும் இது பற்றிக் கதைத்துப் பிரியோசினமில்லை. பழையநிலைக்கு யாழ்க்களம் திரும்பிவிட அதிக நேரமாகாது. கவிஞர் காவடியிடம் சொல்லி வழமையான ஒரு கவிதையோடு பழையபடி களத்தில புகுந்து ஜோதியில கலந்திட வேண்டியதுதான்.
Reply
#65
இவோன் இதே களத்தில் முன்னே சொன்னதை பின்னே பலதடவைகள் மறுக்கப்பட்டாயிற்று முன்னே தவறு என்று சொன்னவை கூட ஏற்றுக்கொள்ளப்படலாம் என்றளவில் வந்தாயிற்று

அடுத்த கருத்து ஈழவனுக்குப் பதில் டி.சேயே பரவாயில்லை என்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
\" \"
Reply
#66
ஆம் ஈழவன்,
முன்பு எங்கள் பண்பாட்டில், கலாச்சாரத்தில் இவையெல்லாம் இல்லை என்று தூய்மை வாதம் பேசியநிலையில் இப்போது பழையபண்பாட்டில் இன்று நாம் கீழ்த்தரம் என்று ஒதுக்கும் பலவிடயங்கள் உள்ளன என ஏற்றுக்கொண்டுள்ளார்கள் (ஆனா இதெல்லாம் இதயசுத்தியோடு இல்லை.மாட்டுக்கு விழுந்த வளம் குறிசுடுற மாதிரித்தான்)

இவற்றையே முன்பொருமுறை நான் சொன்னபோது தமிழ்ப்பண்பாட்டின் மீது சேறு பூசுகிறாய் என்றார்கள். (சேற்றின் மீது யாராவது சேறு பூசுவார்களா?) ஆனால் இப்போது இன்னொரு கருத்தை எதிர்த்துச் சளாப்ப அதே சேற்றைக் கையில் தூக்கியுள்ளார்கள்.

எங்களுக்கேனப்பா வம்பு? பேசாமல் தேசியக் கோசத்தில் கரைஞ்சு போறதுதான் நல்லது. எங்களால தேசியப்போராட்டம் அழிஞ்சு போகக்கூடாது பாரும்.
பிறகு
Reply
#67
கண்ணே என் காதலி
என்னை நீ காதலி..
போன்ற கவிதைகளை எழுதினால் ரசிக்கமுடியும். நான் நல்ல கவிதைகளை ரசிக்கவும் நகைச்சுவையாக இருக்கவுமே களத்திற்கு வருகிறென்.தயவு செய்து அடுத்த நபர்களை கீழ்த்தரமாக திட்டுவதற்கு மட்டுமே நானும் என்னைப் போன்றவர்களும் பயன்படுத்துகின்ற சொற்களை வைத்து கவிதை எழுதி எஙகள் கலாசாரத்தை கெட வைக்காதீர்கள்..



!
--
Reply
#68
சட்டபூர்வமாக்கப்பட்ட பாலியல் தொழில்,ஒரு பாலுறவு போன்றவை உள்ள ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் கெட்டுப்போகமாட்டீர்கள் ஆனால் ஈழத்தில் அவை சட்டபூர்வமாக்கப்பட்டால் அவர்கள் கெட்டுப்போவார்கள் ஏனென்றால் அங்கிருப்பவர்கள் எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்கத் தெரியாத அறிவிலிகள்.அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்துக் கொடுக்கும் வேலையை நீங்கள் பார்க்கிறீர்கள்.

ஈழவன் அப்ப முடிவெடுத்திட்டியள், ஓரின சேர்க்கைக்கு சட்ட அங்கிகாரம் வாங்கிகொடுக்கிறதா? என்ன "நாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறட்டும்" தத்துவமா? அப்ப எதற்கு குடும்பம், கட்டுப்பாடு, கலாச்சாரம்,பண்பாடு?
சிறுவர்கள் வருவதால் இங்கு வேண்டாம் என்றேன், நீங்கள் ஏதோ நான் உங்கள் பேச்சு சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் கதைக்கிறீர்கள். அதற்காகத்தான் புதியபிரிவுகள் உருவாக்கப்படுகின்றன, அங்கே வைக்கலாம் உங்கள் ஓரினச்சேர்க்கை சட்ட அங்கிகார கோரிக்கையை, நாகரீக முன்னெடுப்பு என்று சொல்லிக்கொண்டு, அவ்வையாரையும் கம்பனையும்தானே உதாரணம் காட்டுகிறீர்கள்.

பலமும் பலவீனமும் இச்சைகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை.

பலமும் பலவீன இச்சையும்தான் மனித வாழ்க்கை என்றால் கட்டுப்பாடுகளே தேவையில்லை, யார் யாருடன் வேண்டுமென்றாலும் கூடலாம் குலவலாம், தாயுடனும் மகளுடனும் கூட, ஏன் இதுகூட மேலைத்தேயங்களில் நடைபெறும் ஒன்றுதானே, அவர்கள் அனுபவிக்கலாம் நம்மவர் அனுபவித்தால் தாப்பா, நான் யார் நல்லது கெட்டதை வரையறுக்க, கிட்டத்தட்ட மிருகங்கள்போல, இதில் எங்கிருக்கு நாகரீகமுன்னெடுப்பு.

யாழ்க்களம் தான் தேசியப் போராட்டத்தை நிர்ணயிக்கிறது.
யாழ்க்களம் தான் ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கலாச்சாரம், பண்பாட்டை நிர்ணயிக்கிறது.

இங்கு எழுதும் நாலு பேரின் கருத்துக்கள்தான் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை நிர்ணயிக்கிறது. எனவே ஈழநாதன் போன்ற சமூகவிரோதிகளை ஏதாவது செய்ய வேணும். 'அண்ணா' மாரிட்டைச் சொல்லி அவருக்கு ஏதாவது செய்ய வேணும். தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தம் கருத்துக்களால் அழிக்க நினைக்கும் துரோகிகளை சும்மாவிடக்கூடாது.

இவோன் நாலுபேரின் கருத்து ஒட்டுமொத்த சமுதாயத்தின் கருத்து இல்லைத்தான், ஆனால் "ஒருகுடம் பாலுக்கு ஒரு துளி விசம்" போதும் முழுபாலையும் பழுதாக்க.
அது சரி இவோன் அண்ணாமார் என்றால் ஏன் உங்களுக்கு இவ்வளவு பயம், ஏதாவது பிரச்சனை, பயம் வேண்டாம் இவோன் பயம் வேண்டாம், கெட்டவர்களுக்குத்தான் அவர்கள் எதிரிகள் நல்லவர்களுக்கு அவர்கள் என்றும் நண்பர்கள்தான்.

இது தமிமீழத்துக்கு ஒவ்வாததாயிருக்கலாம். ஆனால் இதைப்பற்றி வாயே திறக்கக்கூடாது என்று சொல்வது இங்குமட்டும்தான் நடக்கிறது.

இவோன் நீங்கள் தமிழீழத்துக்கு ஒவ்வாது என்கிறீர்கள், ஈழவன் சட்ட அங்கிகாரம் வேண்டும் என்கிறார், ஒத்தகருத்துடையவர்களுக்கே தடுமாற்றமா? இந்த தடுமாற்றம்தான் எம் பண்பாடு கலாச்சாரம் பற்றி சிந்திக்கவைக்கும், எண்ண ஊற்று.
.

.
Reply
#69
பிருந்தன்.. ஈழநாதன் என்ன கேட்கிறார்.. இவையெல்லாம் சட்ட அங்கீகாரங்களாக உள்ள ஐரோப்பா முதலான நாடுகளில் இருக்கின்ற நீங்கள் கெட்டுப் போய்விட்டீர்களா..? இல்லத்தானே.. அவ்வாறெனில் ஈழத்தில உள்ளவர்கள் எப்படி கெட்டுப் போவார்கள்..?

திரும்பவும்.. இவை சட்ட அங்கீகாரங்களாக உள்ள நாடுகளில் வசிக்கின்ற எம் தமிழ் சகோதர உறவுகள் கெட்டுப் போயி விட்டார்களா.? இல்லையெனின் ஈழத்தில இது சட்டமாக்கப்பாட்டால் எப்படி அவர்கள் கெட முடியும்..



!
--
Reply
#70
kpriyan Wrote:பிருந்தன்.. ஈழநாதன் என்ன கேட்கிறார்.. இவையெல்லாம் சட்ட அங்கீகாரங்களாக உள்ள ஐரோப்பா முதலான நாடுகளில் இருக்கின்ற நீங்கள் கெட்டுப் போய்விட்டீர்களா..? இல்லத்தானே.. அவ்வாறெனில் ஈழத்தில உள்ளவர்கள் எப்படி கெட்டுப் போவார்கள்..?

திரும்பவும்.. இவை சட்ட அங்கீகாரங்களாக உள்ள நாடுகளில் வசிக்கின்ற எம் தமிழ் சகோதர உறவுகள் கெட்டுப் போயி விட்டார்களா.? இல்லையெனின் ஈழத்தில இது சட்டமாக்கப்பாட்டால் எப்படி அவர்கள் கெட முடியும்..

தமிழீழத்தில் இதற்க்கு ஏன் சட்ட அங்கிகாரம் வேண்டும் அதுதான் எனக்கு புரியவில்லை. :wink:
.

.
Reply
#71
ம் தலைப்பு வேறெங்கோ செல்கிறது,
ஒன்று நல்லதா கெட்டதா என்பதை விவாதிக்க களம் வேண்டும் என்பது தான் இங்கே வைக்கப் பட்ட விடயம்.
இல்லை அதை விவாதிக்கவே கூடாது அது தடை செய்யப் பட வேணும் என்று வைக்கப்பட்ட கருத்துக்கு ஆதாரமாக வைக்கப்பட்ட யாவுமே வலுவிழந்த வாதங்களாகவே தெரிகிறது.இந்த நிலயில் கருத் தாடலை தனி நபர் தூற்றலாகவே அன்றி வேறு விடயங்களாகவோ (அதாவது ஓரினச் சேர்க்கை தேவயா இல்லயா என ) திசை திருப்ப வேண்டாம்.அதனை வேறு ஒரு பகுதியில் தனியாக விவாதிப் போம்.அதனை விவாதிப் பதற்காகவே களம் வேண்டும் என்பதே ஈழவன்,இவோன் ஆகியோரின் வாதமாக இருக்கிறது.ஆகவே பிருந்தன் இதனை நீங்களும் இபோது ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.இது பற்றி தனி ஒரு விவாதத்தில் விவாதிக்கப் படும் போது அவர்,அவர் தங்கள் கருத்துக்களை முன் வைக்கலாம் ,இங்கல்ல.
Reply
#72
அதைத்தான் நானும் சொல்கிறேன் இங்கு வேண்டாம் என்று.
.

.
Reply
#73
நான் அங்கத்தவர் பகுதியில் எழுதிய ஒரு பதிவின் சில பகுதிகள் இவை.

பாலியல் குறித்த எழுத்துக்கள் தீவிர எழுத்தாக இருக்க கூடும். ஆனால் தீவிர எழுத்துக்கள் என்றால் அது பாலியல் மட்டும் இல்லை. அதற்குள்ளே அதிகார வெறியர்களின் கொரூர முகம் குறித்த எழுத்து இருக்கும். அடக்கப்படுகின்ற மக்களின் குமுறல் குறித்த எழுத்து இருக்கும். ஆண் பெண் காமத்தில் தன் ஆசைகள் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் இருக்கும். அல்லது தன் மீது திணிக்கப்பட்ட காமம் மீதான கோபம் இருக்கும்.

இவையெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களா? ஒரு பெண் தன் மீது தன் விருப்பின்றி காமம் திணிக்கப்படுகிறது.. என்னும் போது எழுகின்ற கோபத்தை எழுதினால்.. இவளெல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ.. நாலு சுவருக்குள்ளை நடக்கிறதை இப்பிடி பப்பிளிக்காக சொல்லுறாளே.. உவளின்ரை எழுத்தை தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்

அல்லது ஒரு ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான காமத்தில் தன்னுடைய ஆசைகள் நிராகரிக்கப்படுகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுவதில்லை. நான் வெறும் பிணமாகவே நடாத்தப்படுகின்றேன் என்னும் அவளது ஏக்கத்தை எழுத்தில் பதிவு செய்தால் .. ச்சீ இவள் எல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ..? உவள் அலையிறாள்.. என்கிற வரிசையில் அதியுச்சமாக அவளுக்கு விபசாரி பட்டம் கட்டுகிறீர்கள்.

நான் மேலே சொன்ன விடயங்கள் சமூக தளத்தில் விவாதிக்கப்பட கூடாதவையா..? அவையெல்லாம் பாரதூரமான விடயங்களாக உங்களுக்கு தெரியவில்லையா..

அவைதான் தீவிரமான எழுத்துக்கள். மற்றும்படி.. நீங்கள் சிந்தித்தது போல ஆண் பெண் புணர்ச்சிகளையும் புணர்ச்சியூடான உணர்ச்சிகளையும் அக்கு வேறு ஆணி வேறாக எடுத்துச் சொல்பவை அல்ல. தயவு செய்து அப்படி நினைப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கும் பரப்பாதீர்கள்.

எல்லாம் சரி.. யாழில் பக்கம் திறந்தாயிற்று. அவற்றிற்கு தனியாக அனுமதி என்கிறார்கள் சரியாக தெரியவில்லை. நான் எதிர்பார்ப்பது இதனைதான்.அங்கு நீங்களும் வர வேண்டும்.. சொல்லப்பட்ட விடயம் பற்றி விடயம் பற்றி மட்டுமேயான விமர்சன எழுத்தை தர வேண்டும். அதுவேயன்றி.. உதை எழுதினவனுக்கு அக்கா தங்கச்சி இல்லயைா என்ற கேள்விகளோ..

உதை தங்கச்சியோடு சேந்து வாசிப்பியோ என்ற கேள்வியோ
வேண்டாம்..

வாருங்கள் தீவிர இலக்கியம் பகுதியில் இலக்கியம் மீது மட்டும் சண்டை பிடிப்போம். மாறாக அதை எழுதியவன் மீதோ அல்லது எழுதியதை இங்கே போட்டவன் மீதோ அல்ல..
Reply
#74
பிருந்தன் நீங்கள் எழுதியதை வாசிக்காமலேயே உங்கள் பதிலை எழுதுகிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு.

அவ்வையாரையும் கம்பனையும் நான் உதாரணம் காட்டியது தமிழில் காலம் காலமாக இவை உள்ளன என்று காட்டத்தான்.

நவீனத்துவம் என்பது இரண்டாயிரம் வருடம் பாரம்பரியமுள்ள எமது மரபிலிருந்து கட்டமைக்கப்படவேண்டும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை மரபை நிராகரித்து நவீனத்தை வசியப்படுத்துவது அத்திவாரமில்லாமற் கோட்டை கட்டுவதற்குச் சமானமானது.நான் இன்றும் திருவாசகத்தையும்,அவ்வையாரையும்,சிலப்பதிகாரத்தையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

மரமானது இரண்டு பக்கமும் வளரவேண்டும்.கிளைகள் மேலே மேலே உயரும் அதே சமயம் வேர்கள் ஆழ ஆழ உள்ளே போகவேண்டும்.

நீங்கள் இருக்கிற வேரே போதும் கிளைகள் எதற்கு வளர்வேண்டும் என்கிறீர்கள்.நானோ வேரின் ஆழத்தை பரிசோதித்து இன்னும் ஆழப்படுத்தியவாறே கிளைகளை நீட்ட விரும்புகிறேன்.

உங்கள் நம்பிக்கைகளும் எங்கள் நம்பிக்கைகளும் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நானும் நீங்களும் ஒரே தளத்தில் தான் இருக்கிறோம் உங்கள் கருத்தை நீங்கள் முன்வையுங்கள் அதற்காக களத்தில் இடம் வேண்டாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் பழமொழியையே மீளவும் நினைவுறுத்துகிறது.

தமிழீழத்தில் ஓரினச் சேர்க்கை எதற்கு என்று கேட்கிறீர்களா அப்படியானால் இப்போது இருக்கும் பாலியல் தொழிலாளர்களையும்,ஓரினச் சேர்க்கையாளர்களையும் நாடு கடத்தலாமா அல்லது மின்கம்பத்தில் தொங்கவிடலாமா.

பாருங்கள் எவ்வளவு வக்கிரபுத்தி தமிழீழத்தில் வேண்டுமா வேண்டாமா என்று ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் தீர்மானிக்கும் அவலம் அங்குள்ள மக்களுக்கு.

களத்தில் தனியான பக்கம் திறந்தாலும் நீங்களும் அங்கு வரவேண்டும் இல்லையானால் இவற்றையெல்லாம் யாருடன் விவாதித்துத் தெளிவது
\" \"
Reply
#75
Eelavan Wrote:பிருந்தன் நீங்கள் எழுதியதை வாசிக்காமலேயே உங்கள் பதிலை எழுதுகிறீர்களோ என்ற சந்தேகம் எனக்கு.

அவ்வையாரையும் கம்பனையும் நான் உதாரணம் காட்டியது தமிழில் காலம் காலமாக இவை உள்ளன என்று காட்டத்தான்.

நவீனத்துவம் என்பது இரண்டாயிரம் வருடம் பாரம்பரியமுள்ள எமது மரபிலிருந்து கட்டமைக்கப்படவேண்டும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை மரபை நிராகரித்து நவீனத்தை வசியப்படுத்துவது அத்திவாரமில்லாமற் கோட்டை கட்டுவதற்குச் சமானமானது.நான் இன்றும்

இதைதான் நானும் கூறுகிறேன் எமது மரபில் இருந்து நாம் மாறுபடக்கூடாது அதனுடன் சேர்ந்த நவீனத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும், ஆனால் ஓரினசேர்க்கை எமது மரபா? ஏதோ ஒரு இருவர் அப்படி இருந்தார்கள் என்பதற்காக அதுதான் எம்மரபு என எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
ஒருத்தனுக்கு ஒருத்தி இதுதானே மரபு ஒருத்தனுக்கு ஒருத்தன் எப்போது வந்தது.

திருவாசகத்தையும்,அவ்வையாரையும்,சிலப்பதிகாரத்தையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

மரமானது இரண்டு பக்கமும் வளரவேண்டும்.கிளைகள் மேலே மேலே உயரும் அதே சமயம் வேர்கள் ஆழ ஆழ உள்ளே போகவேண்டும்.

நீங்கள் இருக்கிற வேரே போதும் கிளைகள் எதற்கு வளர்வேண்டும் என்கிறீர்கள்.நானோ வேரின் ஆழத்தை பரிசோதித்து இன்னும் ஆழப்படுத்தியவாறே கிளைகளை நீட்ட விரும்புகிறேன்.
நீங்கள் கிளைகள் வளரவேண்டுமென விரும்பவில்லை, வேற்று கிளைகளைக் கொண்டுவந்து எமது மரத்தில் ஒட்டுகிறீர்கள். ஒட்டுங்கள் நல்ல இனகிளைகளாக எம்சமுதாயத்துக்கு பயன்தரக்கூடிய கிளைகளாக ஒட்டுங்கள், ஏன் நச்சுக்கிளைகளை கொண்டுவந்து ஒட்டுகிறீர்கள்.

உங்கள் நம்பிக்கைகளும் எங்கள் நம்பிக்கைகளும் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நானும் நீங்களும் ஒரே தளத்தில் தான் இருக்கிறோம் உங்கள் கருத்தை நீங்கள் முன்வையுங்கள் அதற்காக களத்தில் இடம் வேண்டாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டால் பழமொழியையே மீளவும் நினைவுறுத்துகிறது.

தமிழீழத்தில் ஓரினச் சேர்க்கை எதற்கு என்று கேட்கிறீர்களா அப்படியானால் இப்போது இருக்கும் பாலியல் தொழிலாளர்களையும்,ஓரினச் சேர்க்கையாளர்களையும் நாடு கடத்தலாமா அல்லது மின்கம்பத்தில் தொங்கவிடலாமா.

பாருங்கள் எவ்வளவு வக்கிரபுத்தி தமிழீழத்தில் வேண்டுமா வேண்டாமா என்று ஐரோப்பாவில் இருந்துகொண்டு நீங்கள் தீர்மானிக்கும் அவலம் அங்குள்ள மக்களுக்கு.

அப்ப ஓரினசேர்கையாளருக்கு சட்ட அங்கிகாரம் கொடுத்து றேஷன்(குடும்ப முத்திரை) காட்டும் கொடுத்து, குடித்தனம் நடத்தவிடுவோமா? இதுதானா? குடும்பம் குட்டி(குட்டி எப்படிவரும்) அழகான குடுப்ப வாழ்வு இருக்க ஏன் வக்கிர வாழ்வு எனக்கேட்ட நான் வக்கிரபுத்திகாரனா?
வாழ்க உங்கள் நவீனத்துவம்.

களத்தில் தனியான பக்கம் திறந்தாலும் நீங்களும் அங்கு வரவேண்டும் இல்லையானால் இவற்றையெல்லாம் யாருடன் விவாதித்துத் தெளிவது
.

.
Reply
#76
என்னவோ அற்புதமான கருத்துக்களை சொல்லிவிட்டது போல காட்டிக் கொள்கின்றீர்கள். அப்படி ஒன்றும் உருப்படியாக ஏதும் எழுதியது போல தெரியவில்லையே. அப்படியிருக்க எதையாம் கண்டு நான் சொக்கிப்போய் நிற்;பதற்கு.
ஒரு விடயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். உங்களின் எதிர்காலம் நோக்கிய விழிப்புணர்ச்சிக்கு(?) சங்ககாலத்தை ஏன் உதாரணமாகக் கொள்கின்றீர்கள் என்று தான் கேட்கின்றேன். அதற்கு ஏன் சொதப்பலான பதில்கள். மீண்டும் நீங்கள் மீண்டும் சங்ககாலத்துக்கு தான் போக இருக்கின்றீர்கள் என்றால் தெளிவாகவே சொல்லுங்களேன். என்ன தயக்கம்? கூடவே இருக்கின்ற பழைய வேட்டியில் 4 துண்டைக் கிழித்து தருகின்றேன் கட்டிக் கொண்டு சென்று வாருங்கள். (அதுக்கும் முற்பட்ட காலமெண்டால் அதுவும் தேவையில்லைங்க) அதை விட்டிட்டு புதுமையாம்.....புரட்சியம்......

நான் உங்களை ......மவனே என்று காரணச்சொல் கொண்டு அழைத்ததை பவ்வியமாக ஏற்றுக் கொண்டீர்கள். (உங்கள் வாதம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும.; வேறு என்ன வழி) ஆனால் மட்டறுத்தினர் தனிநபர் தாக்குதலாக கருதுகின்றாரே ஏன்? அவருக்கு உங்கள் சீர்திருத்தக்கொள்கைகளில்(?) என்னும் தெளிவு ஏற்படவில்லையா?. ஜயகோ! உங்களின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கித் தான் இவ் இணைப்பை ஆரம்பிக்கபோகின்றனரா?
உள்ளும் வராமல், வெளியிலும் போகாமல் நின்று கத்திக்கொண்டு நிற்கின்றோமாம். ஜயா!! பொது இடத்தில் நின்று கூத்துக்காட்ட இந்தக் கூத்தே இங்கே வேண்டாம் என்று தானே நாம் கத்துகின்றோம். உங்களுக்கு அது ஏன் புரிவதில்லை. ஏன் இப்போதும் அந்தப் போதையில் தான் வாழ்கின்றீர்களா? அது தான் தெளிவற்று இருக்கின்றீர்களோ?

வேறு ஒரு பகுதியில் நடந்த வாதம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கண்ணன் பற்றிய பாடல் ஒன்றை விமர்சித்த விதம் ஒன்றில் "பசுக்களை கூடச் செய்த கண்ணனாம்" என்பதற்கு ஒருவர் கொடுத்த காம விளக்கத்தை படித்திருப்பீர்கள். கூடச் செய்தல் என்பது அவரது பார்வையில் அப்படித் தெரிந்தது. ஆனால் உண்மையில் கண்ணன் தனது பாடல் மூலம் மேய்ந்துகொண்டிருந்த (புல் மேய்தலை தான் சொல்கின்றேன். இதற்கும் தங்களின் பார்வை ?)பசுக்கள் மேய்ச்சலை விட்டு இங்கு கூடி அவன் இசையை ரசிப்பதாக தான் சொல்லப்படுகின்றது. இப்படியான உண்மைகளைத் திரிவுபடுத்தி வாதம் என்ற பெயரில் எம் முன்னோர்களின் கல்லறைகளில் மலம் அடிக்கவேண்டும் என்பது தான் இந்த அவா. இப்படிப்பட்டவர்களின் விவாதங்கள் ஏற்புடையதாகவா இருக்கப்போகின்றது.
மது, போதைப்பொருள் பாவிப்பதே தப்பென்ற நிலையில், தம் பிள்ளை வெளியில் பாவிப்பதை தடுக்காமல் "வா...மகனே.. வா" என்று வரவேற்று தாங்களே வாங்கிக் கொடுத்தால் தப்பில்லை என்று சொல்வதைப் போலத்தான் உங்கள் வாதம். சிங்கப்புூரிலும், ஜரோப்பாவிலும் விபச்சாரம் ஓகே. ஈழத்தில் கூடாதா? என்று விதண்டாவாதங்கள் வேறு. எங்கையுமே விபச்சாரத்தை ஆதரிப்பதாக நாம் கூறவில்லையே. எம் சக்திக்கு ஈழத்தில் மட்டும் தான் கட்டுப்படுத்த முடிகின்றது. மேலைத்தேசத்தில் எத்தனை தமிழ்பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றனர் தெரியுமா? ("புரட்சித்"தமிழரை குறிக்கவில்லை)

ஈழவன் தனது தளத்தில் இது பற்றி எல்லாம் விவாதித்து முடிந்தாகிவிட்டது. அதனால் தான் யாழ்களத்தில் விவாதிப்போம் என்கின்றார். விவாதித்து முடிந்த ஒரு விடயத்தை திரும்பவும் விவாதிக்கவேண்டும் என்ற தேவையை ஈழவன் ஏன் ஏற்படுத்த விரும்புகின்றார். 2 காரணங்களைக் கூறலாம்.
1. அது பற்றிய சிந்தனைகளை சுமந்து திரிதல்(அரிப்பெடுத்து)
2. பின்ணனியில் ஏதும் சதி இருக்கலாம். ஏனென்றால் தமிழீழ தேசியவிடுதலைப் போராட்டத்துக்கு முமுமையான சார்பினை யாழ் இது வரைக்கும் எடுத்து வந்திருக்கின்றது. அதை விட அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தளமும் இதுவே. இந்த தளத்தின் கொள்கையை திசைதிருப்பும் விதத்தில் ஏதும் முயற்சிகள் நடக்கலாம். இது ஈழவனை தப்பாக பேசவரவில்லை. ஆனால் அவருக்கே தெரியாமல் நடக்கும் தி;ட்டமாக இருக்க கூடும்.

உண்மையான தமிழ்பற்று கொண்டவர் நீங்கள் என்றால் இப்படியான தேடலை மேற்கொள்ளுங்கள்.
சேரநாடு மலையாளமண்ணாய் மாறியது ஏன்?
பிராமி எழுத்துக்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு?
காப்பியங்களான வளையாபதியும், குண்டகேசியும் எங்கே போயின?
சோழசாம்ராட்சியத்தின் அடிச்சுவடுகள் எங்கே?
தமிழ்சங்கங்களின் அழிவுகளால் ஏற்பட்ட விளைவுகள்?
இப்படி ஏராளமான தேடல்கள் உள்ளன. அதை விட்டிட்டு இப்பவும் மடியிக்குள்ளேயே தலையைவிட்டோண்டு..... இப்படிச் சொன்னவுடன் சில "நல்ல உள்ளங்கள்" வருவினம். நீ அதைச் செய்யலாமே என்று. வரட்டும் பதில் சொல்கின்றேன்.

பிருந்தன் சொன்ன இக் கொள்கைகளோடு நான் ஒத்துப்போகின்றேன். இன்று நீலப்படங்களை சார்ந்த தளங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு எவர் போவதையும் தடுக்கமுடியாது. அது போலவே மோகன் அண்ணாவிடம் வேண்டுகோள் என்னவென்றால் இதை நீங்கள் அமைக்கவேண்டும் என விரும்பினால், இப்படிப்பட்ட செய்திகளைத் தாங்கிய பக்கத்தை யாழுடன் தொடர்பற்ற நிலையில் தனித்தளமாக அமைத்துக் கொடுங்கள். இத் தளத்தோடு இணைத்து யாழுக்கு இது வரைக்கும் உள்ள மரியாதையை இதன் மூலம் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஒரு விடயம் மட்டும் உண்மை. எல்லோரும் செய்கின்றனர் என்று நாமும் செய்யவெளிக்கிட்டோம் என்றால் எமது அடையாளத்தை நாமே தொலைப்பதற்கு அத்திவாரம் இடுகின்றோம். தமிழ் இனம் என்பது உலகிலே தனித்த அடையாளத்தைக் கொண்ட இனம் என்ற தேசியத்தலைவனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்றால் எம் சமுதாயக் கட்டமைப்புகளுடன் பிணைந்தே வாழவேண்டும். இது தான் எமக்காக மறைந்த மாவீரர்களுக்கு நாம் கொடுக்கும் உயர்ந்தபட்ச மரியாதை. இல்லை உலகம் போகின்ற திசைக்கேற்ற வகையில் நாமும் அடிபட்டு, இச்சைகளுக்கு இசைவாகத் தான் வாழப்போகின்றோம் என்றால் அது எம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் வெட்டும் புதைகுழி அதுவாகத்தான் இருக்கும்.

மோகன் அண்ணா யோசித்து முடிவெடுங்கள். எது எப்படியோ என்றும் யாழ்களத்தோடு இணைந்தே இருப்போம்.

...................................................................................................................................................................
மேலே உள்ளகருத்துக்கள் யாவும் குறித்த நபர்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றே தரப்பட்டதே தவிர மனதை நோகடிக்கும் எண்ணத்தில் அல்ல.
Reply
#77
தூயவன்... எனது கீழ்க்குறித்த கேள்விகள் கருத்துக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்.. ?

Quote:பாலியல் குறித்த எழுத்துக்கள் தீவிர எழுத்தாக இருக்க கூடும். ஆனால் தீவிர எழுத்துக்கள் என்றால் அது பாலியல் மட்டும் இல்லை. அதற்குள்ளே அதிகார வெறியர்களின் கொரூர முகம் குறித்த எழுத்து இருக்கும். அடக்கப்படுகின்ற மக்களின் குமுறல் குறித்த எழுத்து இருக்கும். ஆண் பெண் காமத்தில் தன் ஆசைகள் புறக்கணிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோபம் இருக்கும். அல்லது தன் மீது திணிக்கப்பட்ட காமம் மீதான கோபம் இருக்கும்.

இவையெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயங்களா? ஒரு பெண் தன் மீது தன் விருப்பின்றி காமம் திணிக்கப்படுகிறது.. என்னும் போது எழுகின்ற கோபத்தை எழுதினால்.. இவளெல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ.. நாலு சுவருக்குள்ளை நடக்கிறதை இப்பிடி பப்பிளிக்காக சொல்லுறாளே.. உவளின்ரை எழுத்தை தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்

அல்லது ஒரு ஒருத்தி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான காமத்தில் தன்னுடைய ஆசைகள் நிராகரிக்கப்படுகின்றன. தன்னுடைய எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படுவதில்லை. நான் வெறும் பிணமாகவே நடாத்தப்படுகின்றேன் என்னும் அவளது ஏக்கத்தை எழுத்தில் பதிவு செய்தால் .. ச்சீ இவள் எல்லாம் ஒரு தமிழ் பொம்பிளையோ..? உவள் அலையிறாள்.. என்கிற வரிசையில் அதியுச்சமாக அவளுக்கு விபசாரி பட்டம் கட்டுகிறீர்கள்.

நான் மேலே சொன்ன விடயங்கள் சமூக தளத்தில் விவாதிக்கப்பட கூடாதவையா..? அவையெல்லாம் பாரதூரமான விடயங்களாக உங்களுக்கு தெரியவில்லையா..

அவைதான் தீவிரமான எழுத்துக்கள். மற்றும்படி.. நீங்கள் சிந்தித்தது போல ஆண் பெண் புணர்ச்சிகளையும் புணர்ச்சியூடான உணர்ச்சிகளையும் அக்கு வேறு ஆணி வேறாக எடுத்துச் சொல்பவை அல்ல. தயவு செய்து அப்படி நினைப்பது மட்டுமன்றி மற்றவர்களுக்கும் பரப்பாதீர்கள்.
Reply
#78
முதலில் பிருந்தனுக்கு

ஏதோ ஓரிருவர் ஓரினச் சேர்க்கையாளராக இருக்கிறார்கள் என்பதற்காக அதுதான் தமிழர் மரபென்று நான் சொன்னேனா நீங்கள் அடியும் முடியும் தெரியாமற் பேசுகிறீர்கள்.உங்கள் விதண்டாவாதத்தில் இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலில்லை ஆனான் மீண்டும் மீண்டும் நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொண்டு போகிறீர்கள்

தமிழர் மரபென்பது ஓரினச் சேர்க்கையாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதுதான் என்று நான் சொல்கிறேன் அவர்களைத் தவிர்த்துவிட்டு அது தமிழ் மரபுக்கு விரோதமென்றும் அவையெல்லாம் ஒட்டுக் கலாச்சாரம் என்று வாதிட்டீர்கள் அதற்கு சங்க காலத்தில் உதாரணம் காட்டினால் ஐயகோ உங்களின் நவீனத்துவத்திற்கு எதற்கு சங்க காலத்தைத் துணைக்கழைக்கிறீர்கள் என்கிறீர்கள்.இலை எமக்கு வேரும் வேண்டும் கிளையும் வேண்டுமென்று சொன்னால் அவை நச்சுக் கிளை என்று நீங்கள் சொல்கிறீர்கள் திரும்பத் திரும்ப நீங்கள் சொன்னதையே நீங்களே மறுத்து திரும்பவும் அதையே சொல்லி...வாதத்தை முதலிலிருந்து திரும்பவும் வாசித்து நான் கேட்டவற்றுக்குப் பதிலுடன் வாருங்கள்
\" \"
Reply
#79
ஒரிண்டு ஓரினச் செயற்கையாளர் தமிழருக்குள் ஒட்டி இருந்தனர் என்பதற்காக அதுவும் தமிழ்மரபு என்ற மடத்தனமான வாதத்தை கொள்ளாதீர்கள். அவர்கள் தமிழ் பண்பாட்டுக்குள் வாழ எத்தனித்தார்களே தவிர, தமிழ்மரபு என்பது உள்ளவாங்கவில்லை.

அது நிற்க, அவ் ஓரிரண்டு பெயருக்கு வக்காளத்து வாங்குவதற்கு யாழ் களத்தை உபயோகிக்கவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? :roll: :roll:
Reply
#80
உங்கள் முட்டாள்தனத்திற்கு அளவேயில்லை என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள்.ஓரிரண்டு பேர் என்பது உலகத்தின் மொத்த தமிழ்ச் சமூகத்தையும்(அதாவது ஆறரைக் கோடி பேர்)கணக்கெடுத்துப் பார்த்தால் ஒரு சில லட்சங்கள் தேறும்.

அவர்களும் தமிழ்ச் சமூகத்திற்குள் உள்ளடங்குவார்கள்.அவர்களும் சமூகத்தின் முன் சமதையாக வாழவேண்டும் என்பதுதான் எனது வாதமேயொழிய அவர்கள் வாழ்வது மட்டும்தான் வாழ்க்கை தமிழ் மரபே ஓரினச் சேர்க்கைதான் என்று எங்கேயாவது சொன்னதற்கு ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்.

எல்லாவற்றையும் உள்ளடங்கியதுதான் தமிழர் வாழ்க்கை.அவர்களும் சமூகத்தில் மரியாதையாக வாழவேண்டும்.ஒருவன் ஆணைத் திருமணம் செய்வதோ பெண்ணைத் திருமணம் செய்வதோ அவனது உரிமை.அதனை நீங்கள் தீர்மானிக்க எந்தவித உரிமையும் இல்லை.இல்லை அது விதிவிலக்கு தமீழத்துக்கு அவர்கள் தேவையில்லை என்பதை ஐரோப்பாவில் இருக்கும் நீங்கள் தீர்மானிக்க முடியாது.தமிழீழத்திற்கு அவர்களும் தேவை என்பதை சக மனிதனாக சொல்லப் பாருங்கள்.

இரண்டு பெண்கள் கூடிவாழ்ந்தால் உங்களுக்கென்ன குறைவு.இரண்டு ஆண்கள் திருமணம் செய்தால் உங்களுக்கு என்ன குறைந்தது.வழக்கம்போது புசித்து,புணர்ந்து மரித்துப் போகவேண்டியதுதானே.அவர்கள் புறம்போக்குகள் என்றும் தமிழ்ச் சமூகத்துக்கு ஒவ்வாதவர்கள் என்றும் நச்சுச் செடிகள் என்றும் தீர்மானிக்கும் உரிமையை எங்கிருந்து பெற்றீர்கள்.

இவையெல்லாம் தமிழ் மரபில் இல்லவே இல்லை என்றீர்கள்.பழந்தமிழ் இலக்கியத்தில் உதாரணம் காட்டினால் முற்போக்குவாதிக்கு எதற்கு பழந்தமிழ் இலக்கியம் என்கிறீர்கள்.முற்போக்குவாதி என்பவன் நாயின் வாயிலுள்ள தடியைப் பிடித்து நடக்கும் குருடன் இல்லை.தனக்குத் தேவையானதை அவன் தீர்மானிக்கட்டும் நீங்களோ நானோ அல்ல.

நான் சொல்ல விரும்புவதெல்லாம் இவையும் மனித இயல்புகளே இவ்விளிம்பு நிலை மனிதர்களைப் புறக்கணிக்காதீர்கள் சக மனிதராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதுதானொழிய ஆணும் ஆணும் புணர்வதுதான் முற்போக்கு பெண்ணும் பெண்ணும் புணர்வதுதான் நவீனத்துவம் என்பதில்லை.அது அவரவர் தெரிவு.

அவை விவாதிக்கப்படவேண்டுமா இல்லையா என்பதையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.சரியா தவறா என்று விவாதம் வந்தால் சூடு பொறுக்க முடியாது போலிருக்கிறது.

யாழ் களத்தில் இதுபற்றிய விவாதங்கள் வேண்டுமா இல்லையா என்பதற்கு எதிர்த்த உங்களைப் போலவே ஆதரித்த நண்பர்களும் சமனான எண்ணிகையில் இருக்கிறார்கள்.ஆகவே இவ்விவாதம் தொடராமற் போனாலும் நான் சொல்ல வந்தவற்றை சரியாகச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.மிகுதி நேரத்தையும் உங்கள் பதிலையும் பொறுத்து
\" \"
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)