10-26-2005, 03:53 AM
'ஏழாம் ஆண்டு நிறைவில் ஓயாத அலைகள் -02
ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு?
பாகம் - 7
-இ.சசிக்குமார்-
ஓயாத அலைகள் - 02 கிளிநொச்சி மீட்புச் சமரானது இலகுவான முறையில் வெற்றி கொள்ளப்பட்ட சமரல்ல. எதிரி அனைத்து வளங்களையும் பலங்களையும் இணைத்து தன்னிடமிருந்த அதியுயர் இராணுவ வல்லமைகளையும், தாக்குதல் வியுூகங்களையும் மிக உச்ச அளவில் பயன்படுத்தி முகாமைத் தக்கவைப்பதற்கான அதிஉக்கிர முறியடிப்பு சமரில் ஈடுபட்டிருந்தான்.
இந்த சமரில் வாழ்வா சாவா என்ற நிலையில் எதிரியுடன் களமாடிய புலிகள் அணிகளில் மகளிர் படையணிகளின் தீரமிகு தாக்குதலும் எதிரியை திணறடித்தன. இராணுவ hPதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சியை முல்லைச் சமருக்கு அடுத்த படியாக சிறிலங்காப் படைகளுக்கு இச்சமர் உணர்த்தியிருந்தது.
இவ்வாறு இரண்டு நாட்களாக நடந்த உக்கிர சமரின் தீவிரத்தை மாலதி படையணி தளபதி கேணல் விதுசா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
'இரண்டு நாள் தொடர் சண்டையில் காப்பரண்கள் எங்களிடமும் இராணுவத்தினரிடமும், மாறி மாறிக் கைமாறின. எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு, பகலிரவாகத் தொடர்ந்த சண்டையில் உண்டான களைப்பு எல்லாமாகச் சேர்ந்து வெற்றி எம் கைக்கு வரும் சூழலை மாற்றி விடுமோ என்ற ஐயம் எழுந்தபோது தலைவர் அவர்கள் நிலைமையை மாற்றியமைத்தார். கனரக ஆயுதங்கள் யாவற்றையும் ஒருங்குவித்து கிளிநொச்சி படைத்தளத்தின் குறிப்பிட்ட சில மையப்பகுதிகளை நோக்கி செறிவான தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இது இராணுவத்தினருக்கு பாரிய தாக்கத்தை உண்டாக்கியது. இந்த அடியோடுதான் கிளிநொச்சியை விட்டு ஓடும் முடிவை இராணுவம் எடுத்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இத்தீவிர தாக்குதலில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் சோதியா படையணி கிளிநொச்சி படைத்தளத்திலிருந்து தப்பியோடும் படையினரை தாக்கியழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. இத்தாக்குதலில் தப்பியோட முயன்ற பெரும்தொகையான படையினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் நடவடிக்கைக்கு தலைமை வகித்த சோதியா படையணித்தளபதி கேணல் துர்க்கா அன்றைய களத்தின் நிலைப்பாட்டினை இன்று இவ்வாறு நினைவுக்கு கொண்டு வருகின்றார்.
ஓயாத அலைகள்- 02 களம் வலிந்த தாக்குதல் களங்களில் மாறுபட்டது. ஏனெனில் இதுவரை காலமும் எதிரியின் முன்னரங்கக் காவல் நிலைகளைக் கைப்பற்றி அதனு}டாக உள்நுழைந்து மினிமுகாம்களைக் கைப்பற்றும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன. அதற்கு மாறாக ஓயாத அலை- 02 இல் தடையுடைத்துக் காவலரண்களைப் பிடிக்கும் பணி சில அணிகளால் செய்யப்பட்டது. அந்தப்பாதையினு}டாக நான்கு படையணிகள் உள்நுழைந்து கிளிநொச்சி இராணுவ முகாமிற்கும், பரந்தன் இராணுவ முகாமிற்கும் இடையில் கண்டி வீதியை ஊடறுத்து நிலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். விடிவதற்குள் நிலைகளை அமைத்து உருமறைத்துவிட்டு சகல நகர்வுகளையும் நிறுத்திவிட்டுத் தாக்குதல் நடவடிக்கைக்குத் தயாராக வேண்டும். விடிந்தால் எதிரியின் சினைப்பர் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் இந்தப் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டது.
கண்டி வீதியை ஊடறுக்கும் திட்டத்தில் இரு வகைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
01. கண்டி வீதியினு}டாக ஓர் அணி கிளிநொச்சி இராணுவ முகாம் நோக்கியதாக இருந்து அதிலிருந்து வெளியேறி தப்பியோட முனையும் இராணுவத்தைத் தாக்கி அழிப்பதற்கும்.
02. அடுத்த அணி பரந்தன் படைமுகாமில் இருந்து கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு வரக்கூடிய அனைத்து இராணுவ உதவிகளையும் முறியடிப்பதற்கும் என நிறுத்தப்பட்டன.
கண்டி வீதியின் இடது பக்கம் இரு படையணிகளும் கண்டி வீதியின் வலது பக்கம் இரு படையணிகளும் விடப்பட்டிருந்தன. அதில் பரந்தன் முகாம் நோக்கி விடப்பட்ட அணியில் எமது ஒரு பிளட்டுன் ஜெயந்தன் படையணியினருடன் விடப்பட்;டிருந்தது. கிளிநொச்சி இராணுவத்தின் தப்பியோட்டத்தைத் தடுக்கும் பணியில் வீதியின் ஒருபுறம் எமது அணியின் பொறுப்பில் தரப்பட்டிருந்தது. எமது கொம்பனியுடன் ஜெயந்தன் படையணியின் மணிவண்ணனின் பிளட்டுன் ஒன்று தரப்பட்டிருந்தது. நாங்கள் கிளிநொச்சி முகாம் நோக்கி நிலைகளை அமைத்திருந்தோம்.
இந்தத் தடுப்பு நடவடிக்கையில் கண்டி வீதியின் ஊடறுப்பு முக்கியமானதாக இருந்தது. இதில் இருபக்க அணிகளில் எந்த ஒரு முனையில் அணிபலம் இழந்தாலும் பாதகமான நிலையாகவே இருக்கும். பரந்தன் இராணுவ உதவியைத் தடுப்பது இயலாது போனால் கிளிநொச்சி முகாம் எமது கட்டுப்பாட்டில் வருவது கடினம். அதேவேளை கிளிநொச்சி இராணுவ முகாமிலிருந்து தப்பியோடும் இராணுவத்தைத் தாக்கி அழிக்காவிட்டால் எமது தரப்பின் அனைத்துச் செயற்பாடுகளும் அர்த்தமற்றதாகி எமது தரப்பில் இழப்புக்கள் மட்டுமே எஞ்சிவிடும் எனவே 'கட்அவுட்", 'கட் ஓவ்" (கு) இரண்டுமே சிறந்த முறையில் அமையவேண்டும் என எமக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சி முகாம் முற்றுகையிடப்பட்ட நிலையில் இதர உதவிகளும் நிறுத்தப்பட்டால் முகாமை விட்டுத் தப்பியோடும் எதிரித்தரப்பினால் மேற்கொள்ளப்படும் உக்கிரமான தாக்குதல் எமது அணிகள் மீதே அதிகமாக இருக்கும் என்றும் அதற்கேற்ப அணிகளின் பாதுகாப்பும் சிறந்த தாக்குதல் வியுூகமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் தலைவரால் எமக்கு நன்கு வலியுறுத்தப்பட்டிருந்தன.
இந்தப் பணிகளுக்காக களத்துள் இறங்கியதும் அதற்கேற்ப நிலைகளை அமைத்து எந்த நேரத்திலும் சண்டையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். 28 ஆம் திகதி காலை எமது அணிக்குப் பின்புறமாக பரந்தன் நோக்கி நிலையமைத்திருந்த அணியினருக்கும் பரந்தனில் இருந்து வந்த இராணுவத்தினருக்கும் இடையில் கடும் சண்டை மூண்டது. எனினும் அந்த நகர்வு முறியடிக்கப்பட்டு உள்ளே செல்ல இருந்த உதவிகள் தடுக்கப்பட்டன.
அதே நாள் மாலை எதிரியின் எறிகணைத் தாக்குதல்கள் அதிகரித்தன. புகைக்குண்டுத் தாக்குல்களும் நடத்தப்பட்டன. எமது அணிகளைத் தாண்டி எதிரி தனது வெடிபொருட்களுடன் தப்ப முடியாது என்ற நிலையில் அவை அனைத்தையுமே எங்கள் பகுதியை நோக்கிப் பிரயோகித்தப்படி நகர்வைத் தொடங்கினான். இதன் மூலம் எமது பலத்தில் பாதியை அழித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் எதிரி நகர்வைத் தொடங்கியபோதும் கட்ஓப் (கு) அணிகளின் தாக்குதல்கள் அவனை நிலைகுலைய வைத்தன.
அதில் எமது படையணிக்குத் தரப்பட்ட பகுதியில் கண்டி வீதியில் இடப்பக்கமாக சுமார் நு}று மீற்றர் து}ரத்தில் இருக்கும் குளத்து வாய்காலையும், கண்டி வீதியையும் அதனிடைப்பட்டபகுதியையும் பயன்படுத்திய படியே தாக்குதல் நடத்தியபடி தப்பிப்போக முனைந்த எதிரி மீது எம்மவர்களின் தாக்குதல்கள் உக்கிரமாக நடத்தப்பட்டன எமது கண் பார்வைக்குட்பட்ட எந்தப் பிரதேசத்தாலும் எதிரியால் தப்பிப்போக முடியாதவாறு எமது தாக்குதல்கள் இருந்தன. இறந்தவனின் உடலைக் காப்பாக வைத்தே தப்பியோடிய எதிரி தமது உயிரை காப்பாற்றினான்.
எமது நிலைகள் எதுவும் தலைக்கு மேலாக பாதுகாப்புச் செய்யப்பட்டிருக்கவில்லை எழுந்து நின்றால் முழங்கால் மட்டுமே மறைக்கப் படக்கூடிய நிலைகளில் மனஉறுதி, துணிவு என்பவற்றையே காப்பாகக் கொண்டு அணிகள் சண்டையிட்டன. ஒரு கட்டத்தில் எம்மிடம் இருந்த வெடிபொருட்கள் தீர்ந்து போகத் தொடங்கின. அதில் நின்ற எங்கள் ஒவ்வொருவரின் குண்டுகளும் 5 மீற்றர்வரை வந்த எதிரிமீது வீசப்பட்டன. அதில் வீழ்ந்து இறந்த இராணுவத்தின் வெடிபொருட்களையும் கனரக ஆயுதங்களையும் எடுத்தே தொடர்ந்து வந்த எதிரிமீது தாக்குதலை மேற்கொண்டோம்.
எமது பகுதியில் கப்டன் எழிற்செல்வியின் பீ.கே., அருவியால் தப்பிச் செல்ல முற்பட்;ட எதிரியில் பலரை அழித்தது. பீ.கே நிலையில் நின்று வீரவேங்கை நல்லரசி, வீரவேங்கை உயிரொளி, லெப்ரினன்ட் மதுசா போன்றோர் தாக்குதலை நடத்தி அதிலே வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். கப்டன் எழிற்செல்வி அச்சண்டையிலே மிகத்; திறமையாகச் செயற்பட்டவர். பின்னர் வேறு ஒரு சண்டையில் வீரச்சாவு அடைந்தார். அவ்வாறே மணிவண்ணனுடன் சிலர் கண்டி வீதிக்கரையுடன் நின்று சண்டையிட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
நள்ளிரவுடன் முடிந்துபோன அச் சண்டையில் எமது படையணியில் 28 பேர் மாவீரர்களாகினர். எமது தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இரு நு}ற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தின் சடலங்கள் குவிந்து கிடந்தன. எமது அணி நிலைகொண்டிருந்த அப்பகுதியில் சண்டை ஆரம்பிக்க முன் இராணுவத்தின் நகர்வை அறிவதற்கு எமது அணியினர் சிலர் முன்சென்று வேவுத்தரவுடன் வர நாம் அணியைத் தயார்படுத்தி நிற்க எதிரியும் நகர்ந்து வந்தான். இச் சமர்க்களத்தில் எமது அணியினரின் சண்டையிடும் ஆற்றலை எதிரி தரப்பில் தப்பியோடி இருப்பவர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
களத்தில் இறங்கிய நேரத்தில் இருந்து தண்ணீரும் இன்றி அந்த வெட்டையில் எந்தச் சோர்வும் இன்றித் துரிதமாகத் தமக்குரிய காவல் நிலைகளைச் சரியான முறையில் அமைத்துக் கொண்டனர். காலை விடிந்ததும் எதிரியின் சினைப்பர் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலைகளில் இருந்தவர்கள் நிலையெடுத்து இருந்தவாறே மண்ணை வழித்து மூடையாக்கி நிலைகளை மேலும் பலப்படுத்திக் கொண்ட இடங்களும் உண்டு. அத்துடன் அணியினர் அனைவரும் பயிற்சியில் அறிவுறுத்தப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட்டதுடன் அதில் பங்கு பற்றிய அணிகள் அனைத்துமே தமது உயரிய பங்களிப்பைச் செய்து அந்தச் சமரை வெற்றியடையச் செய்தன, என அன்றைய களமுனையின் தீவிரத்தையும், மாவீரர்களின் தியாகங்களையும் களத்தில் எதிரிமீது போராளிகள் நடாத்திய தாக்குதலின் தீவிரத்தையும் வெளிப்படுத்தினார் கேணல் துர்க்கா அவர்கள்.
தொடரும
நன்றி தமிழ்நபதம்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]