Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கைக்கூ கவிதைகள்
#1
<img src='http://media.gatewaync.com/wsj/photos/specialreports/attack/remember/2pilot2.jpg' border='0' alt='user posted image'>

யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி
Reply
#2
<img src='http://kids.msfc.nasa.gov/shared/news2002/clouds/clouds.jpg' border='0' alt='user posted image'>

புதிதுபுதிதாய்
நவீன
ஓவியங்கள்
Reply
#3
நீங்களும் எழுதுங்கள்...
Reply
#4
<img src='http://www.lumika.org/vietnam/thumbnails/lovers.jpg' border='0' alt='user posted image'>

வானவில்லை
வளைப்பதற்கு
முதற்பயிற்சி
Reply
#5
கைக்கூ கவிதைகள் பற்றி எழுதுங்கள். என்னைப்போன்றவர்களுக்கு உதவியாய் இருக்கும்
Reply
#6
<img src='http://www.gardencourtyard.co.uk/clock.JPG' border='0' alt='user posted image'>

ஆண்டுகள்
பலவாய்த்
தொடர்ந்து ஓட்டம்

வெற்றிக்கோப்பை
இல்லை
Reply
#7
2. <b>ஹைக்கூ பெயர்க் காரணம்</b>
ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு
ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி
போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.

தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,
மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக
அழைக்கப்படுகிறது.

தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான
விளக்கம் அளித்திருகிறார்.

ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது !)

ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி,
கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை
உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை.

தமிழக பெண் கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று
பொருள் தருகிறார்.

<b>ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை </b>
ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்
7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்
கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில்
ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.

ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று
எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும்
பொருந்தி வரும் விதி!)

ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை
பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத்
தூர எறிந்து விட்டார்கள்.

தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த
ஹைக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார் (காற்றின் கைகள்)


ஹைக்கூ ஓர் அலசல்

nantri - www.tamiloviam.com
Nadpudan
Chandravathanaa
Reply
#8
சரியாக நேரத்தில் சரியான தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.....
Reply
#9
<img src='http://community.webshots.com/s/image6/9/15/61/78091561jHUrDQ_ph.jpg' border='0' alt='user posted image'>


இரவில் மலர்ந்த முத்தங்கள்
காலையில் படர்ந்தன
இலைகளில் பனித்துளிகளாய்...
Reply
#10
மேகங்கள் மோதுகின்றன
மழைக்காக!!!!!!!
தேகங்கள் மோதுகின்றன
மழலைக்காக!!!!!!!
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply
#11
பெண்களை மலரென்பார்கள் !!!!!
தினமும் மலர்வதாலா? அன்றேல்
தினந்தோறும் வாடுவதாலா?
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply
#12
கும்பிடுவதற்காய் கோவிலுக்குப் புறப்பட்டேன்
ஆனால்!!!!!!!!!!!!!!!
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது
<b>..............</b>

[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]
Reply
#13
அருமையான கவிதைகள்...
Reply
#14
மேலும் ஒரு இணைய முகவரி. இவ்வுரையாடல் கவியாடல் சம்பந்தமாய்:

http://www.lsi.usp.br/usp/rod/poet/haiku.html
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
<b>மனிதன் தானே சாகின்றான்
எதற்காக என்னைப்
புதைக்கின்றீர்கள்?</b>
<b>-சவப்பெட்டி-</b>
----------
Reply
#16
<img src='http://www.kestan.com/dcstock/landmarks/metro/IMG_6991_Ride-On_bus_small.JPG' border='0' alt='user posted image'>

உனக்குக் காத்திருந்ததில் எனக்கொரு காதலி கிடைத்தாள். நன்றி.
Reply
#17
<img src='http://www.allposters.com/IMAGES/ISI/I16007.jpg' border='0' alt='user posted image'>

குடைக்குள் மழை
Reply
#18
கைகூ கவிதை பற்றி இன்றுதான் நான் அறிந்தேன் விளக்கமாக.. இனிமேல் நானும் எழுதுவதற்கு முயற்சிக்கிறேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#19
<b>சேறுபட்டதால்
அழகானது
விதவையின்
வெள்ளைப்புடைவை</b>
----------
Reply
#20
<img src='http://www.pnl.gov/cse/images/rclimate.jpg' border='0' alt='user posted image'>

நீ அழுதால்தான்
கொஞ்சம் சந்தோசம்.....
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)