Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாய்படும் பாடும், நாய்படா பாடும்
#1
<img src='http://img410.imageshack.us/img410/9871/hond20springt6ep.gif' border='0' alt='user posted image'>

நம்மை பற்றி பேச நாலு சனம் இருக்கு, நாய பற்றி பேச யார் இருக்கிறார்கள். அதனால் நாயப்பற்றி நான் பேசுகிறேன். பின்னர் யாரும் வந்து நாயின் பெயரில் பேசக்கூடாது, யாரடா உனக்கு அதிகாரம் தந்தது எம்மை பற்றி பேச என்று, அதனால் முதலிலேயே இங்குகூறிவிட்டால் தப்பித்துக்கொள்ள ஏதுவாக அமையும் அல்லவா? இது ஒருவகை பாதுகாப்புதான்.

குளக்காட்டான் போட்ட ஒழுங்கை படத்துக்கு, பூராயம் ஒழுங்கை பற்றி எழுத, அது பற்றி தொடர்ந்து உறவுகள், துரத்தும் நாய்களைப்பற்றி பேச, எழுந்ததே இக்கட்டுரை.

நாய்களில் பலவிதம் உண்டு, பணக்கார நாய்கள் அதை விட்டு விடுவோம். நான் பேசஎடுத்தது சாதாரன நாய்கள். இவையின் பாடு பெரும் பாடுதான்.

ஒரு அலுவல் கனநாட்களாக முடிக்க முடியாது இழுத்துக்கொண்டு சென்றால் சொல்வார்கள், "நாய் படாத பாடு படுறன் அலுவல்தான் முடியுது இல்லை" என்று. நாயுக்கு உன்மையிலேயே அலுவல் இருக்குதா? அதை முடிக்க அது பாடு படுதா? அது சும்மா ஒரு இடத்தில் இருக்காது எந்தநேரமும் ஓட்டமும் நடையும்தான். அதையும் சொல்வார்கள், "நாயுக்கு நிக்க நேரமும் இல்லை செய்ய வேலையும் இல்லை" என்று.

உண்மயில் இங்கத்திய நாய்களை விட எங்கள் ஊர்நாய்கள் பாவம்தான். நாய்கள் அங்க வாழுறது என்பதே பெரும்பாடுதான். ஓரளவு வசதியான ஆக்கள் வளர்க்கும் நாய்கள் பாடு பறவாய் இல்லை. வசதி குறைந்த ஆட்களும், வசதி இல்லாவிட்டாலும் நாய் வளர்க்கும் ஆசையில் வளப்பவர்கள் நாய்களும், தெரு நாய்களும் படும் பாடு பெரும்பாடு.

அவைக்கு முதல் பிரச்சனை உணவு, உணவு காணாமையால் அல்லது இல்லாமையால் அவை முதல் செய்யிற வேலை களவு. களவு என்றால் பெரிய கள்ளக்கடத்தல் அல்ல, உணவின் உரிமையாளருக்கு தெரியாமல் உணவை எடுத்து வருதல், அல்லது அங்கேயே வைத்து உண்ணுதல். இதை சமுதாயம் களவு என்கிறது. அது அதுகளுக்கு தெரியுமா? அது தெரியாமல் அடி வாங்குகின்றன. அடிவாங்கியபின்னர் தப்பித்து ஓடுகின்றன. சிலதுக்கு அடிவிழும் சிலதுக்கு அடிவிழாது, அடி விழுந்தாலும் நொண்டி நொண்டி ஓடித்தப்பும்.

நானும் ஒரு நாய் வளர்த்தேன். நான் சாப்பிடுகிறேனோ இல்லையோ நாய்க்கு மட்டும் சாப்பாடு வைத்து விடுவேன். ஆனால் ஒவ்வரு நாளும் காலையில் கரிபூசியமுகத்தோட கானப்பட்டார். இரவில் நாய்களை அவிழ்த்து விடுவது வழமை. இரவுதானே அவையளின் காவல்கடமை. கரிபூசிய மூஞ்சையை பார்த்த உடனேயே எனக்கு விழங்கிட்டுது, அண்ணாத்தை இரவில் எங்கயோ போய் அலுவல் குடுத்திட்டு வாறார் என்று. எப்படி கண்டு பிடிக்கிறது, ஒரு நாள் அவராவே மாட்டுப்பட்டார் வரும்போது ஒரு அப்ப சட்டியோட வந்தார். நீங்கள் நினைக்கக்கூடாது நான் பழக்கின விளையாட்டு என்று. எங்கள் ஊரிலேயே ஒரேஒரு அப்பக்காற ஆச்சிதான் இருக்கிறா, சில நாட்களின் பின் அவர் வீட்டுபக்கம் வாறதே இல்லை. அப்பக்காற ஆச்சி வீட்டுக்கு போனால் அங்க இருப்பார். கூப்பிட்டாலும் வர மாட்டார் கட்டி இழுத்துக்கொண்டு வருவம், திரும்பவும் போயிடுவார். அங்க ரெண்டு பெடியள் இருக்கிறாங்கள் அவங்கள்தான் எங்கட நாயுக்கு அப்பத்தை குடுத்து மயக்கி போட்டாங்கள் என்று, நானும் தம்பியும் அவங்களோட சண்டையும் போட்டு இருக்கிறம். அவங்களோட சண்டை போட்டாலும் எங்கட நாய் கேட்டால்தானே, சொன்னாலும் நாயுக்கு விளங்கவாபோகுது. பாத்தம் நாயுக்கு அப்பம்தான் விருப்பம் என்றால் அதோட ஆசையை ஏன் கெடுப்பான். அவங்களிடமே நாயை குடுத்துவிட்டோம், நாங்கள் எங்க குடுத்தம் அதுவே ஓடிப்போயிட்டுது.

வளர்த்த நாய் ஓடிப்போனாலும் நாய் வளர்க்கும் ஆசை மட்டும் எங்களை விட்டு போகவில்லை. ஊரில நாய்க்கா பஞ்சம், திரும்பவும் ஒரு நாய் அதன் முடிவு சோகமானது. லிபரேஷன் ஒப்பிறேஷன் நேரம். பொம்மறும், நேவியும் அடித்த அடியில் ஓடிவிட்டோம் கட்டி இருந்த நாயை கவனியாது. ஏழு நாட்களின் பின் வந்து பார்த்தபோது, சங்கிலியில் முறுகி செத்துக்கிடந்தது. அந்த சோகம் இன்னும் உண்டு.

அதோடசரி நாய் வளர்க்கும் ஆசை, அதன் பின் புலம்பெயர்ந்து விட்டோம். அதுகள் எங்களுடன் வாழ்ந்தகாலத்தில் அவையளின் விளையாட்டு சொல்லி மாளாது. ஒழுங்கயால் ஒரு சனமும் போய்வர ஏலாது. பிச்சைக்காரர் வந்தால் அவை துலஞ்சினம், துண்டகாணல்ல துனியகானல்ல நிலைதான்.

ஜரோப்பாவுக்கு வந்தவுடன் அவைக்கு இருக்கிற மரியாதயை பாத்து பெரிய ஆச்சரியம்தான்.
அவையை கிழவிமார் தூக்கிக்கொண்டும் போவினம். குளிர்காலத்தில் அவைக்கு குளிருடுப்பும் போட்டு விடுவினம். படுப்பதுக்கு வீட்டிக்குள் குட்டி மெத்தை சாப்பிட சாப்பிட குறையாத சாப்பாட்டு தட்டு, நேற்று வேலைக்கு போகும் போது பார்த்தேன், குழந்தைகளை வைத்து தள்ளும் வண்டிலில் வைத்து ஒரு நாயை, கிழவி ஒண்று தள்ளிக்கொண்டு போகுது. அது குஜாலா இருந்து கொண்டு போற வாற ஆக்களை பாத்துக்கொண்டு போகுது. ராஜ வாழ்க்கைதான் போங்கள்.

எங்கள் நாய்கள் பாவம் இங்கத்திய நாய்கள் கொடுத்து வைத்தவை என்று சொல்வோம் என்று பார்த்தால், இங்கத்திய சில நாய்களும், நாய் படாப்பாடு படுகினம். இங்கையும் அவை போய் சேரும் இடத்தை பொறுத்தது. "பெனா" என அழைக்கப்படும் பிச்சைகாரர்களிடம், இவர்கள் உண்மையில் பிச்சைகாரர் இல்லை, ஏனெனில் இருக்க வீடும், உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்கும் இவர்கள் எப்படி? பிச்சைக்காரர்கள் ஆவர், இவர்களுடன் ஒப்பிடும்போது எங்கள் ஊர் பிச்சைகாரர்கள் பாவம். இதுவேறு ஒரு தலைப்பு அதை பிறகு பார்ப்போம். இவர்கள் வளர்க்கும் நாய்கள் பாவம்தான். இத்தனைக்கும் இவ் அரசு நாய்க்கும் சாப்பாட்டுக்கு காசு கொடுக்கிறது. இவர்கள் நாயை வளர்ப்பதே இதற்க்காகத்தான். அதோடகாசுக்கும் வாங்கி குடித்து விடுவார்கள். போனால் போகுது என்று ஒரு சொற்ப உணவை போடுவார்கள். பசிவெறியில் திருப்பி தம்மை கடித்து விடக்கூடாது என்பதற்க்காக. தெளிவாக இருந்தால் ஞாயம் கேட்கும் என்றோ என்னவோ அவைக்கும் கொஞ்சம் பியர் ஊத்தி விடுவினம், தண்ணி இல்லாட்டி அதுகளும் என்ன செய்யும் குடித்து விட்டு போதையில் படுத்து விடும். அதுகளும் பெரும்பாடுதான் படுகிறது.

இவ்வளவு மிருகங்கள் உலகத்தில் இருக்க, இந்தநாய்கள் வந்து எப்படி மனிதர்களுடன் இனைந்து கொண்டன? ஆதிகாலத்தில் நாயும் காட்டு விலங்குதான், ஏன் மனிதன் கூடத்தானே. நாயால் சிங்கம், புலி போல் வேட்டையாட முடியவில்லை, சிங்கம் புலிகூட கூட்டுவைக்க முடியுமா? கடிச்சு போடுங்கள். பாத்திச்சு நாய் மனிதனுக்கு கிட்டபோய் நின்றிச்சுது. சும்மா நின்றால் தப்பா நினைப்பான் என்று, வாலை வேறை ஆட்டிச்சுது. அவனும், தான் சாப்பிட்ட மிச்சமீதியையும், எலும்புகளையும் போட்டான். சும்மா இருந்த நாய்க்கு இது போதாதா? அப்படியே சேந்திச்சு, அடிச்சு துரத்தினாலும் அதுக்கு வேற ஏது போக்கிடம் திரும்பவும் வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிக்கும். மனிதனும் பார்த்தான் ஆஹா நன்றி உள்ள பிராணி நாய் என்றான். தான் போட்ட உணவை மறக்காது நன்றியோடு திரும்பவும் வந்திட்டுது என்று நினைத்தான். நாயோ அடுத்த வேளை சாப்பட்டுக்காக திரும்பவும் கூட்டு சேர்ந்து கொண்டது. இப்பொது அது வீட்டு நாய்.
இங்கு அதற்கு ராஜபோக வாழ்க்கை, பிழைக்கத்தெரிந்தநாய்.
.

.
Reply
#2
அடக் கடவுளே நாய்க்கு வந்த சோதனை பெரும் சோதனை போல இருக்கு
<b> .. .. !!</b>
Reply
#3
ஆகா பிருந்தன் நீங்கள் எங்கயோ போயிட்டீங்கள்.. :wink:
நாய்கள் எல்லாம் சேர்ந்து உங்களை கொள்கை பரப்பு
செயலாளர் ஆக்கிட்டுதா? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அருமையா எழுதியிருக்கிறீங்கள்.. பாராட்டுக்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Quote:அவைக்கு முதல் பிரச்சனை உணவு, உணவு காணாமையால் அல்லது இல்லமையால் அவை முதல் செய்யிற வேலை களவு. களவு என்றால் பெரிய கள்ளக்கடத்தல் அல்ல, உணவின் உரிமையாளருக்கு தெரியாமல் உணவை எடுத்து வருதல், அல்லது அங்கேயே வைத்து உண்ணுதல். இதை சமுதாயம் களவு என்கிறது. அது அதுகளுக்கு தெரியுமா? அது தெரியாமல் அடி வாங்குகின்றன. அடிவாங்கியபின்னர் தப்பித்து ஓடுகின்றன. சிலதுக்கு அடிவிழும் சிலதுக்கு அடிவிழாது, அடி விழுந்தாலும் நொண்டி நொண்டி ஓடித்தப்பும்.


ஆஆ பாவம் நாய்கள்.. இது தெரியாமல் எல்லாரும்
அதுகளை கல்லால எறிந்து துரத்துகிறார்களே.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
சுவராசியமா கொண்டு போக முயற்சித்திருக்கீங்க... நல்ல முயற்சி பிருந்தன் தொடருங்கோ..!

எங்களுக்கும் நாய் ரெம்ப பிடிக்கும்... என்ன எங்க வீட்டு நாய்க்கும் எங்களுக்கும் ஒரே சட்டம் தான்... வீட்டைவிட்டு வெளிய போகக் கூடாது...! நாங்களா கூட்டிப் போனாத் தவிர அது பாவம் எங்களையே சுத்திட்டுதான் நிக்கும்...!

அப்படி இருந்தும்...ஒரு நாள் காலைல கேற்றடியில் பார்த்தா பெரிய குழி கிண்டி இருக்கு....பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய்க்கு..பொறுமை எல்லை மீறிட...அது கேற்றைத் தாண்டிட்டு... விடிய எழும்பி ஆளைத் தேடினா... கூப்பிட முதல் காலடி நிக்கிறவரைக் காணேல்ல... என்னடா என்று பார்த்தா பக்கத்து வளவுக்க கடி வாங்கிட்டு முணகிக்கிட்டு இருக்கார்... தேவையா உனக்கு இது என்றிட்டு.. கூட்டி வரப் போனம்.. அப்ப பாத்தம்... உண்மையா அதின்ர கண்ணில கண்ணீர் ஓடி இருக்கு... எங்களைக் கண்டதும் சந்தோசத்தில வேதனையையும் கடந்து நடந்து வர முயலுது.. பின் கால் தொடையில பலமான கடி வாங்கி இருக்கார்..நடக்க முடியல்ல.... போய் அதின்ர காலில இருந்த காயத்துக்கு ஊதி விட்டம்...அதுக்கு ரெம்ப மகிழ்ச்சி... அப்புறம் நொண்டிட்டு நடந்து வந்திச்சு...அதுக்கு அப்புறம் நாங்க இல்லாம வெளிய போகவே மாட்டுது...கேற் திறந்திருந்தாலும் போய் எட்டிப் பாத்திட்டு வந்திடும்...!

இன்னொரு நாய் அது எங்களது இல்ல... ஒரு ஆச்சிட நாய்... அது சாவகச்சேரிப் பக்கம்... அங்க நாயை கட்டி வளர்த்ததைக் காண்பதே அரிது... ஆக்களைப் போல அதுக்கும் சுதந்திரம்...அது ஊரெல்லாம் திரிஞ்சிட்டு... வேளைக்கு வரும் சாப்பிட...! அதுக்கு உண்மைப் பெயர் ரைகர்... நாங்க வச்ச பெயர் நக்குத்தண்ணி... ஏன்னா அது எல்லா வீட்டிலும் சாப்பாட்டுக்கு முதலில நிக்கும்...! அது குளிச்சதே கிடையாது... மழைல நனைஞ்சா ஒரே கப்பு....! பாவம் மழை குளிருக்க அதை எவரும் அண்டாயினம்...எங்க வீட்ட வரும்... சரி என்று அவருக்கு ஒரு மூலைல கொஞ்ச பழைய உடுப்புகளைப் போடுறது...அவர் அதுகளை மெத்தையாக்கி அழகாத் தூங்கிட்டு இருப்பார்..விடிய போய் தட்டினா...ஒரு உறுமல்... என்ன செய்யுறது... வாளி நிறைய தண்ணி எடுத்து ஊத்த... ஓடிடும்...! அவருக்கு இன்னொரு படுக்கையும் இருக்கு... சாவகச்சேரில நெல்லு அதிகம்... சனம் அதை வெளில வைச்சுத்தான் அவிக்கும்...அந்த இடம் கீற்றா இருக்குமா... சோ பல இரவுகள் அவருக்கு அடுப்புக்கத்தான் தூக்கம்...செலவே இல்லாம கீற்றர் போட்ட முதல் ஆளு அவரேதான்..!

இன்னொரு நாய் அது எங்களதுவானது... அது ஒரு அழகான நாய்...அது அதிஷ்டமா கிடைச்சது... அதுவா குட்டியா இருக்கேக்க வீட்ட வந்துது...நல்ல அழகு.. குண்டு..யாரோ வளர்த்தது என்று தெரியுது...யாரென்று நமக்குத் தெரியும்..??! நாங்க விடுவமா...பிடிச்சு கட்டி வைச்சு வளர்த்தம்....அது வளர்ந்து வர.. இரண்டு கிழமைகள் கழித்து ஒரு பெண் வீட்ட வந்தார்... என் நாய் இங்க நிக்காம் என்றார்.. இதுவா என்று கேட்டம்...ஆமா என்றார்...சரி இது உங்க நாய் என்றீங்க தானே... கூப்பிடுங்க வந்தா கூட்டிப் போங்க என்றம்...நாங்க வைச்ச பெயர் லக்கி...அது மனிசி என்னவோ சொல்ல நாய் எங்க மடில.. குஜால படுத்திட்டு பார்த்திட்டு இருக்கு...மனிசி திரும்ப திரும்ப கூப்பிட நாய் எங்க போச்சு...என் நாயை மயக்கிப் போட்டேள் என்று புறுபுறுத்திட்டு நிக்க... பிறகு பெரியாக்கள் ஏதோ சொல்லி சமாளிச்சு விட்டுச்சினம்...! நாங்க விடுவமா எங்க லக்கியை...!

இப்படி நிறைய நாய் அனுபவங்கள்...கடைசியா...எங்க தம்பி என்றே சொல்லலாம்...அவர்தான் எங்க செல்லம்...ஒரு பொம்மேரியன் நாய்...அதுக்கு எனிமி...லேடிஸ்... வீட்ட லேடிஸ் வந்தா...செய்யுற ஒரே வேலை... போய் வாலை ஆட்டிட்டு அழகா சமத்தா பக்கத்தில படுத்திருக்கும்...அப்படியே மனசுக்க கறுவிட்டு இருக்கும் போல...ஏன்னா... சேலை சட்டை இதுகளை நைஸா வாய்க்கில்ல வைச்சி கடிச்சு துப்பி வைச்சிடும்... எழும்பத்தான் தெரியும்...பெரிய பழுதுகள் இருக்கும்...! இப்படித்தான் ஒரு அன்ரி வெடிங் போக வெளிக்கிட்டு எங்க வீட்ட இக்ஸோரா (Ixora) பூக்கு வந்தாங்க...சரி வாங்க இருங்க எண்டு பூ பிடுங்கி வாறத்துக்கு இடைல.... நாய் தன்ர வேலையைக் காட்டிட்டு... பட்டுச் சேலைல பெரிய பொத்தல் போட்டிட்டு... ஆனா எங்க நாய் ஆண்களுக்கு எந்தத் துன்பமும் செய்யாது... இது கதையில்ல...நிஜம்..! இப்ப பிருந்தன் நாய்கள் பற்றி பகிர்ந்து கொள்ளத்தான் எங்களுக்கும் ஒரு உந்துதல் வந்திச்சு...பிருந்தன் போல சுவாரசியமா தர முடியல்ல என்றாலும்...நிகழ்ந்த உண்மைகளைச் சொல்லி இருக்கம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
ம்ம்ம் பிருந்தன் நன்றி உங்கள் தகவலுக்கு......
என்ன பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறீர்கள்?

Reply
#6
நாய்கள் பற்றி சுவாரசியமாக சொன்ன பிருந்தன் அ\ண்ணாக்கும் குருவியண்ணாக்கும் நன்றிங்க
----------
Reply
#7
தொடருங்கோ பிருந்தன்
Reply
#8
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#9
vennila Wrote:நாய்கள் பற்றி சுவாரசியமாக சொன்ன பிருந்தன் அ\ண்ணாக்கும் குருவியண்ணாக்கும் நன்றிங்க
இதுக்கிலை எங்களைப்(முகம்ஸ் .சின்னப்பு .சாத்திரி) பற்றி ஆராவது எழுதினீங்கள் எண்டா தெரியும்தானே :evil: :evil: :evil: :evil:
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
அடட்டடா,,, நக்கீட்டீங்க போங்க பிருந்தன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வவ்வ் வவ்வவ்வாவ்வ்.. (ஜோவ்வ் இது எண்ட சவுண்ட் இல்லையப்பா நம்மட புலனாய் நன்றி சொல்லுது. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
MUGATHTHAR Wrote:
vennila Wrote:நாய்கள் பற்றி சுவாரசியமாக சொன்ன பிருந்தன் அ\ண்ணாக்கும் குருவியண்ணாக்கும் நன்றிங்க
இதுக்கிலை எங்களைப்(முகம்ஸ் .சின்னப்பு .சாத்திரி) பற்றி ஆராவது எழுதினீங்கள் எண்டா தெரியும்தானே :evil: :evil: :evil: :evil:

கவலைப்படாதீங்க தாத்தா. இப்பகுதிக்குள் நாய்கள் பற்றிதான் கதைக்கிறார்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#12
இது ஒரு உண்மைச் சம்பவம்.....


எனது நண்பி ஒருவர் 15 வருடங்களுக்கு பின்னார் தாயகம் சென்றிருந்தார்.. அவரின் பக்கத்து வீட்டு நாய் அவரைப் பார்த்த நாளிலிருந்து அவர்களின் வீட்டை விட்டு போகவே இல்லையாம். எங்கையாவது எனது நண்பி போனாலும் அவா வருமட்டும் வாசலில் காத்திருக்குமாம். பின்னார் அது அவாவின் மோட்டார் பைக்குப் பின்னாலும் போகத் தொடங்கியது. அவா பல சமயம் றோட்டில் இறங்கி அதை கலைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எற்பட்டதாம். நானும் அச் சமயம் தாயகம் போய் இருந்தபடியால் அவரின் வீட்டிற்கு போயிருந்தேன். அப்போது அந்த நாய் அவாவையே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தது. அவா கீச்சினுக்கு போனால் கீச்சினுக்கு கிணற்றடிக்கு போனால் கிணற்றடிக்கு என்று. எனக்கு ஒரு அதிசயம். ஒரு சமயம் நான் ஏதோ பகிடி கதைக்கும் போது தெரியாமால் அவாவிற்கு அடித்து விட்டேன். உடனே அது உறுமிக் கொண்டு (எங்கள் டண்ணின் புலனாய் போல்) வந்தது. நான் பயந்தே விட்டேன்.... பின்னார் அவா இங்கு திரும்பி வரும்போது அதை கட்டியணைத்து போட்டே எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தார். எங்களுக்குள் ஒரே ஆச்சரியம். எப்படி அவா வெளிக்கிட்டு 15 வருடங்களுக்கு மேல்.... அந்த நாய் இப்படி சுத்துவதற்கு என்ன காரணம் என்று.....

இதை பார்த்த பின்பு மறு பிறப்பு என்பது உண்மையோ என்றா சந்தேகம் வந்திட்டுது....

Reply
#13
ஆகா நாயை பற்றி எல்லோரும் அந்த மாதிரி சொல்லுறீங்கள். மிக சுவாரிசியமாக இருக்கிறது பட் எனக்கு நாயை கண்டால் பயமப்பா Cry
<b> .. .. !!</b>
Reply
#14
உள்ளதைச் சொல்லுங்கோ இரசிகை

உங்களுக்கு நாயைக் கண்டால் பயமா?? அல்லது
நாய்க்கு உங்களைக் கண்டால் பயமா??
Reply
#15
[quote=Vasampu]உள்ளதைச் சொல்லுங்கோ இரசிகை

உங்களுக்கு நாயைக் கண்டால் பயமா?? அல்லது
நாய்க்கு உங்களைக் கண்டால் பயமா??

ஆஆ வம்பண்ணா ஏன் இப்படி கேக்குறீங்கள். :oops:
<b> .. .. !!</b>
Reply
#16
Rasikai Wrote:ஆகா நாயை பற்றி எல்லோரும் அந்த மாதிரி சொல்லுறீங்கள். மிக சுவாரிசியமாக இருக்கிறது பட் எனக்கு நாயை கண்டால் பயமப்பா Cry

புலநாயைக் கண்டாலா...??? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#17
[size=16]±ýà ¾¡ò¾¡ «ó¾ì¸¡Äò¾¢Ä §Åð¨¼ìÌ ±ñÎ ÃñÎ ãñÎ ¿¡Âû ÅÇ÷ò¾Åáõ. «¾¢Ä ´Õ ¦À𨼠¿¡ö ¿øÄ Ýâ. ¬É¡ø «Ð ´Õ ¿¡û «Îò¾ Å£ðÎì ¸Îŧɡ¼ ´Êô§À¡ðÎÐ... ´Õ ¿¡Ö ¿¡û ¸Æ¢îÍ ¾¢ÕõÀ¢ Åó¾¢îº¡õ.. ¬É¡.. ±ýà ¾¡ò¾¡ÌÎõÀõ «Å¨Ç ¾¢ÕôÀ¢ ²üÚ즸¡ûÇÅ¢ø¨Ä.. À¡Åõ «ó¾ì¸¡¾ø á½¢.. «ôÀʧ ¾¢ÕõÀ¢ ±í¸§Â¡ §À¡öðξ¡õ.. «ÐìÌ À¢ÈÌ «¨¾ ¡Õõ ¸¡§½øÄ¡õ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://www.adventurepostoffice.com/cards/love/dog-rose-l.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
என்னுடைய அண்ணாக்கள் வளர்த்த ஒரு நாய், ஜோன்,அவருக்கு பிடித்த சாப்பாடு "பப்படம்". இன்னுமொண்ரு இருந்ததாம், சின்னனில நான் அவங வீட்டுக்கு போன, தொட்டிலுக்கு கிட்டயே இருக்குமாம், தெரியாதவர்கள் கிட்ட வந்தால் 16 ஊசி நிச்சயமாம். போட்டோ எல்லாம் இருக்கு ஆனால் எனக்கு நினைவு இல்லை
[b][size=15]
..


Reply
#19
நாய்களைப் பற்றிக் கதைக்கேக்கை ஞாபகத்துக்கு வாரது
"குட்டி நாய்க்கும் குழந்தைப்பிள்ளைக்கும் இடம் குடுக்கப் கூடாது" எண்டு ஏன் தெரியுமோ???????????...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
MUGATHTHAR Wrote:நாய்களைப் பற்றிக் கதைக்கேக்கை ஞாபகத்துக்கு வாரது
"குட்டி நாய்க்கும் குழந்தைப்பிள்ளைக்கும் இடம் குடுக்கப் கூடாது" எண்டு ஏன் தெரியுமோ???????????...


ஏன் என்று சொல்ல முடியுமா தாத்தா?
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)