Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என் நாட்குறிப்பில்கிறுக்கியது
#81
<b>வளிமேல் மேல் விழிவைத்து போன கால பெண்கள் அந்தகாலம்...
ஆதலால் தான் ஆண்கள் விழிமேல் விழிவைக்க இன்று பயப்புடுகிறாரோ...
காதலித்துப் பார்க காசு போயிருமே என்ற பயம்...
காதலித்தால் காதல் வந்திரும் என்ற பயம்...
காதலி கிடைத்தால் காண்பவற்றை பின் பாக்க முடியாத பயம்...
உண்மையாகவே கலியுகத்தில் காதலியை காதலிக்க காதலியில் பயம்...
உண்மையாகவே கலியுகத்தில் காதலிக்க காமம் தாணோ என பயம்...
காதலுக்கு மரியாதை செய்ய பின் காதலுக்கு பயம்...
காதலுக்கு பயம் கலியுக காதலுக்கு பயம்...
இப்படியா கவிதை எழுதுவது என பயம்...
காதலுக்கு இப்படி கவிதைகள் எழுத பயம்...
இப்படி கவிதை எழுதவைத்தவர்களை எண்ணி பயமோ பயம்...
இந்த கலியுகத்தில் காதலிக்காததே அதுவே காதலுக்கு நிஜம் காதல் நிஜம்.[b]
:roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :mrgreen: </b>
Reply
#82
அண்ணன் நீங்க சொல்றது நிஜம்தான்.இஞ்ச பொடியன்கள் காதலிக்குறதை விட வேலை செஞஇசு வீட்டுக்கு காசணுப்பி ,வீட்டாக்கள பாக்கிறதுக்கே நேரமில்லை.அங்க சாகாமல் ஒருநேரக் கஞ்சொட இருக்கினமெண்டா அது இஞ்ச உள்ள இவையாலதான்.உங்களுக்கும் ஆரும் காசனுப்புறவையாக்கும்.ஓசியல எல்லாம் செய்யலான்தானே?
Reply
#83
<img src='http://www.catholicireland.net/gettingmarried/img/inlondon.jpg' border='0' alt='user posted image'>மன்னிக்கவும் இது கவிதையல்ல

எனக்குத்தெரிந்த ஒரு ஜோடி இலண்டனில் வசிக்கிறார்கள். அவர்கள் காதலித்துத்திருமணம் செய்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அவர்கள் காதல் வாழ்வு மிக மிக இயற்கையாக அமைந்தது. இருவரும் வெவ்வேறு கல்லூரி. ஒரு தமிழ் விழாவின் போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. அப்போதே அவர்கள் பகுதிநேர வேலை செய்துகொண்டிருந்தவர்கள். இரண்டு பேரும் பலமைல் தூர இடைவெளியில் வசித்துவந்தார்கள். ஒருவரை ஒருவர் பார்ப்பது மிக கடினம். மாதத்தில இரண்டுமுறைதான் பார்க்கும் வாய்ப்பு. பரிட்சை என்றால் அதுவும் கிடையாது. இன்று படித்து முடித்து திருமணம் செய்து நல்ல நிலையில் உள்ளார்கள்.

எதற்காக இந்த உதாரணம் என்றால் நேரம் இன்மை என்பது காதலுக்குத்தடை கிடையாது. அதுமட்டுமன்றி வேலையின்றி வெட்டியாக சுற்றுபர்கள் மற்றும் சமூகத்தின் மேல் அக்கறையற்றவர்கள் தான் காதல் செய்கிறார்கள் என்ற உங்கள் கருத்து சரியானதல்ல.
காதல் என்பது பெண்களின் பின்னால் செல்வதையோ அல்லது பார்க்கும் பெண்ணுக்கெல்லாம் கடிதம் கொடுப்பதோ அல்ல. இந்தச்செயலுக்குப்பெயர் காதல் அல்ல. இவர்கள் செய்வது பெண்ணை வற்புறுத்தியோ ஆசை வார்த்தைகள் கூறியோ காதல் என நடித்தோ திருமணத்திற்கு ஒரு பெண்ணை தயார்செய்வது அல்லது தம் இச்சைகளுக்கு பெண்ணைப்பலிக்கடா ஆக்குவது.

காதல் இயற்கையானது. அங்கே வற்புறுத்தல் கிடையாது. உண்மையான காதல் எனில் ஒருவர் காதலை நிராகரித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்டுகிறது. காதல்தான் மனிதனை மிருகத்திடம் இருந்து இனம்பிரித்தது. அது தான் நாகரிகம் கற்றுக்கொடுத்தது.

ஆதலினால் காதல் செய்வீர்.
Reply
#84
நீங்கள்தானா அந்த காதல் சாமியார்.

எனக்குகொரு அண்ண இருக்கிறார்.அவருக்கு ஒரு பெண் பார்த்து கொடுங்கோ?
Reply
#85
வானதி.. தமிழ் விளங்குதில்லையோ? அண்ணாக்கு பெண்ணெடுக்க தரகரை நாடவேணும்.. பெண் கிடைக்குமா என அறிய வேண்டுமானால் சாமியாரை நாடலாம்.. ஆதியை ஏன் இழுக்கிறீர்கள்.. அவர் தனது கருத்துகளை முன்வைக்கிறார்.. மேலும் அவரை எழுத துாண்ட முயற்சி செய்தால்.. பற்பல கிடைக்கலாம்.
பனைக்கு கீழ பால் குடிக்கிறவனைப் பார்த்து.. நீதானா கள்ளிறக்குறவர் என்று கேட்கிறமாதிரி இருக்கு.
.
Reply
#86
<img src='http://www.innerfamilyarchetypes.com/images/pages/LovingMother.jpg' border='0' alt='user posted image'>

நான் கனவில் அலறி
உன் பெயர் சொன்னது
அம்மாவின் காதுகளிலும்
விழுந்து விட்டிருக்க வேண்டும்
அன்புடன் பதை பதைத்து ஓடிவந்து
அருகே அணைத்து நின்றாள்

என்ன? ஏது? என்று கேட்டாள்
கனவு என்றதும்..
மௌனமாகிப்போனாள்
எதுவும் கேட்கவில்லை
ஆனால் மனதுக்குள்
கவலைகொண்டிருப்பாள்

என் வயதே அவளுக்கு
என் கதை சொல்லியிருக்கும்
Reply
#87
<img src='http://www.angelfire.com/ct/jillslink/images/thinking.gif' border='0' alt='user posted image'>


தூக்கம் கலைந்தது
ஆனால்
துக்கம் மனதில் கசிந்தது

இரவில் சிந்தித்தது
மீண்டும் என்னை
இறுகப்பிடித்துக்கொண்டது..

எப்படி முடியும்...
ஒரு நாள்
பார்க்காவிட்டாலே
என் சுவாசமே நின்று போகிறது.
நீயில்லாத என்வாழ்வை
நினைத்துப்பார்க்;க முடியுமா?..

சொல்லாத காதலெல்லாம்
சொர்க்கத்தின் வாசல் வரைதானாம்

என் மௌனமே
எனக்கு எதிரியாகிவிடுமோ...
Reply
#88
<img src='http://www.majicat.com/articles/Articles_Image3_Folder/schol1.JPG' border='0' alt='user posted image'>

சொல்லிவிடலாமா ?
இல்லை சொல்லாமல்
கனவுடன் காத்திருக்கலாமா?..

சொல்லாத காதல்
நகராத தேர்போல
எங்கும் போய்ச்சேராது...

சரியான நேரத்தில்
சரியான முடிவு எடுக்கவேண்டும்
இல்லையேல்
வாழ்வே திசைமாறிப்போய்விடலாம்...

காதல் என்ற
ஒருவழிப்பாதையில்
யாரும் தானாக நுழைவதில்லை.
அதுதான்
எம்மை உள்வாங்கிக்கொள்ளும்.

உள்ளே வந்துவிட்டால்
திரும்பிப்பார்க்க மட்டும்தான் அனுமதி
திரும்பிப்போக அனுமதியில்லை.

ஏங்கே போய்முடியும்
போய்த்தான் பார்க்க வேண்டும்
அது
சொர்க்கத்திலும் சேரலாம்
சோகத்திலும் சேரலாம்..

ஆனால்
நடந்து தான் ஆகவேண்டும்
எல்லை வரை...

ஒவ்வொரு அடியும்
உறுதியாக இருக்கவேண்டும்
உண்மையாக இருக்கவேண்டும்

சும்மா
இருந்தால்
சோகம் முடிவாகிவிடும்

தூக்குத்தண்டனையேயானாலும்
உடனே கிடைத்தால்
வெதனை கொஞ்சம் தான்

காத்திருந்து சாவது
ஒவ்வொரு நாளும் சாவுதான்

சொல்லிவிட்டால்
விடை கிடைத்துவிடும்
விதியை அறிந்து கொள்ளலாம்
Reply
#89
ஒன்றுமட்டும் சொல்லுறன் நண்பா காதல் வரச்செய்துருவேன்க போல் உள்ளது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனால் யாவரும் காதல் கொண்டுதான் உள்ளோம் ஆனால் அது காதலா ...
அதுவும் எல்லாருக்கும் இருக்க வேண்டிய உணர்சிகளில் ஒன்று இல்லையா... :wink:
கூடுதலாக கண்டவுடன் காதல் அதிகம் மனதில் நினைப்பில்... (வயது வித்தியாசம் இல்லை) இதுக்கு என்ன பெயர்...!? காதலி இருக்கும் போதே காணும் இன்ணெரு அழகான பெண்ணை கண்டால் நீங்கள் மனதால் அவளையும் கொஞ்சமேனும் கற்பனையில் காதலிப்பதில்லையா ஒன்றா இரண்டா உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :| :mrgreen:
Reply
#90
Quote: நீங்கள்தானா அந்த காதல் சாமியார்.
எனக்குகொரு அண்ண இருக்கிறார்.அவருக்கு ஒரு பெண் பார்த்து கொடுங்கோ?
இப்படி கன தங்கைமார் தேடுகினம் தமையன்மாருக்கு...
இப்போ பெண்ணுக்கு மாப்பிளை தேடுவதில்லை ஆணுக்கு தான் பெண்தேடுவது கூடுதல் இல்லையா....
Reply
#91
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/08/nallur_12_250.jpg' border='0' alt='user posted image'>

ஏதோ ஒரு தைரியம்
காதல் கொடுத்த தைரியம்
எதைப்பற்றியும் கவலைப்படவில்லை...
வேகமாய் தாயாராகிவிட்டேன்

அம்மாவிற்கு ஆச்சரியம்
என் வேகம் பார்த்து
கேள்விகளோடு என்னை நோக்கினாள்

"ஒன்றும் இல்லை
கோயிலுக்குத்தான்
என் நன்பன் கூப்பிட்டிருந்தான்"
எனக்கூறி விடைபெற்றேன்
சாப்பிடவில்லை..
ஏற்கனவே நேரமாகிவிட்டது
நல்ல காலம் அம்மா வற்புறுத்தவில்லை..
ஆண்டவனைத்தரிசிக்க சாப்பிடாது சென்றால் தான்
பக்தி இருக்குமாம்...
அவள் நம்பிக்கை
என்னைக் காப்பாற்றியது...

சைக்கிளை வேகமாக மிதித்தேன்
எப்படியும் நீ நடந்துதான் போவாய்
உனக்கு முன்னால் நானங்கு இருந்தால் நல்லது
வழியில் உன்னைக்காணவில்லை....
நீ ஏற்கனவே சென்றுவிட்டிருப்பாயோ?...
அல்லது
வராமல்விட்டிருப்பாயோ?

வழக்கமாய் நீ செருப்பு வைக்கும்
கற்புூரப்பாட்டியிடமே
நானும் செருப்புவைத்தேன்...
உன்செருப்பு அங்கில்லை
ஒரளவு உறுதி..

தேங்காய் பழம் புூ வைத்த
அர்ச்சனைத்தட்டை நீட்டினாள் கற்புூரப்பாட்டி
வாங்கிக்கொண்டு கால் கழுவுமிடம் சென்றேன்

அருகே
கற்புூரம் வாங்கிக்கொள்ளச்சொல்லி
சிறுமி ஒருத்தி
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
ஒரு ருபாய் கொடுத்து ஒன்றைமட்டும் வாங்கிக்கொண்டு
திரும்பியபோதுதான் அந்த
இன்ப அதிர்ச்சி!
Reply
#92
<img src='http://www.theindianmasti.com/masti/kajol.jpg' border='0' alt='user posted image'>


இன்ப அதிர்ச்சி
மிக அருகில் நீ..

வெள்ளை நிறச்சுடிதாரும்
ஊதா நிறத் துப்பட்டாவும்
உன்னழகில் மேருகு பெற்றிருந்தன...
இன்னும் காயாது ஈரமாய் உன்கூந்தல்..
அதில்
மல்லிகைப்புூக்கள் பேறு பெற்றிருந்தன..

ஒரு நொடி
நான் உன்னைப்பார்க்க
நீ என்னைப்பார்க்க
கண்ணுக்குள் மின்னல் பாய்ந்தது

உன் கண்களின் பிரகாசம்
என்னை தலைகுனிய வைத்தது

ஆனாலும் என்மனம் இன்னும்
ஒரு தடவை அந்தப்பார்வை வேண்டுமென்று
அடம்பிடித்தது
மீண்டும் பார்த்தபோது நீயும்
தலைகுனிந்திருந்தாய்..

என்னை அங்கு எதிர்பார்த்திராததால்
எற்பட்ட உணர்ச்சிகள் உன்முகத்தில்

என் படபடப்பு
உன்னையும் தொற்றிக்கொண்டதோ?

நீ தலைநிமிர
மீண்டும் அதே மின்னல்...
குனிந்துகொண்டேன்

நீயும் நானும் மட்டும்
இப்போது தண்ணீர்குழாயருகில்
மூடி இருந்த குழாயை திறந்து
உனக்காக வழிவிட்டேன்...

நீர் உன்பாதங்களில் பரவி
வழிந்தோடியது...

நானும் கழுவி நிமிர்ந்தபோது
நீ நடந்துகொண்டிருந்தாய்...

நீ சென்ற பாதையில் ஈரமாக
காலடிகள்..
வேகமாகப்பின்பற்றினேன்
Reply
#93
<img src='http://bangladeshshowbiz.com/bolly/kajol2.jpg' border='0' alt='user posted image'>

எதிரேபழைய நன்பன் வர
கொஞ்சம் நின்று பேசினேன்....

நீ
கூட்டத்தில் கலந்துவிட்டாய்...

அர்ச்சனை முடித்து
ஆறுதடவை சுற்றிவந்தும்
உன்னை எங்கும் காணவில்லை....

தீர்த்தக்கேணியருகில் வந்துபோது

படிக்கட்டில் நீதான்..
அமைதியாக அமர்ந்திருந்தாய்...
சின்னக்குழந்தையாக
மீன்களுக்கு பொரியிட்டு
வேடிக்கை
பார்த்திருந்தாய்...

நான் அருகில் வரவும்
உன் விழிமீனில் கேள்விக்குறி...

அவசரமாய் எழுந்துவிட்டாய்
Reply
#94
<img src='http://www.jlhs.nhusd.k12.ca.us/student_groups/indian_pride/culture/movies/kajol/picts/kajol2b.jpg' border='0' alt='user posted image'>

"கொஞ்சம் பேசவேண்டும்"
கெஞ்சினேன்...

உனக்கும் எனக்கும் ஒரே படபடப்பு
வார்த்தைகள் உனக்குள்ளும்
காணாமல்ப்போயிருக்கவேண்டும்

அமர்ந்துகொண்டாய் ஆனாலும்
அமைதி...

மூன்று நிமிடம்
அதே அமைதி..
காற்றின் ஓசை மட்டுந்தான்

நான் வார்த்தை அடைத்து
மீண்டும் ஊமையாகிப்போயிருந்தேன்...

நீ தான் மௌனத்தைக்கலைத்து...

"என்ன?"

கேள்வி எழுப்பினாய்..
அதில் என்மேல்
உனக்கிருந்த இரக்கம்
கொஞ்சம் வெளித்தெரிந்தது...

அது எனக்கு
உயிர்தந்தது...

என்னுள் சுவாசம் மீண்டும்
ஆரம்பித்தது...

நின்றுபோயிருந்த இதயம்
உயிர்பெற்றது
Reply
#95
<img src='http://www.netguruindia.com/Entertain/starprofiles/kajol/images/Kajol154.jpg' border='0' alt='user posted image'>

"ஒன்றுமில்லை சும்மாதான்
எப்படி இருக்கிறீர்கள்"
முட்டாள்தனமாய்கேட்டுவைத்தேன்...

மௌனமாக சிரித்தாய்..
ஆனால் கேலியோ கிண்டலோ
இம்மியளவும் இல்லை

"நான் போகவேண்டும் .............."

என் பெயரை இரண்டாவது
தடவை உச்சரித்திருக்கிறாய்...

உன் பெயரை
இருபதாயிரம் தடவை
நான் செபித்ததின்
பலன் தானோ?

"இருங்கள் ஒரு நிமிசம்"
நான் கெஞ்சினேன்...

இரக்கங்கொண்டாய் என்மேல்...

நீயாகவே பேசினாய்
"இப்போது என்ன படிக்கிறீர்கள்?"
"ஏன் விஞ்ஞானம் எடுக்கவில்லை?'
"கணக்கியல் யாரிடம் கற்கிறீர்கள்?"

பின் ஏதேதோ கேட்டாய்
இடையிடையே
உன்னைப்பற்றியும்கூட சொன்னாய்..

பேசிக்கொண்டேஇருந்தோம்...
ஒவ்வொரு நிமிடங்களும்
சொர்க்கத்தில் களிந்தது...

திடீரென நேரம் பார்த்ததுதான்
படபடப்பானாய்
"நேரமாகிவிட்டதுபோகவேண்டும்"

"இன்னும் ஒரு நிமிடம்"
நான் கெஞ்சினேன்..

"வேறொரு நாள் பார்க்கலாம்.
நேரமாகிவிட்டது"

"எப்போது?"

"அடுத்தவெள்ளி"

நீயாகவே நாள் குறித்தாய்
என் இரண்டாவது
சொர்க்கத்திற்கு..

நன்றிகள் கோடி உனக்கு
Reply
#96
<img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/kajol198.jpg' border='0' alt='user posted image'>

நீ விடைபெற்றுச்செல்ல
என்னுள் ஏதோ உன்னுடன் சென்றது...

உன் மல்லிகை வாசம் இன்னும்
அங்கேயே என்னைச்சுற்றி..

சன்னிதியைக்கடக்கும் முன்
ஒரு தடவை திரும்பிப்பார்த்து
கையசைத்தாய்...

நான் நன்றியோடு எழுந்த நின்றேன்...

நீ என் பார்வையில்
மறைந்ததுதான் அடுத்தநொடியே
சொர்க்கத்தில் இருந்த நான்
பூமிக்கு தள்ளிவிடப்பட்டேன்....

பழையபடி கோவில் மணியும்
மேளதாளங்களும் காதில் ஒலித்தன...

மீண்டும் அமர்ந்துகொண்டேன்..

நீ அமர்ந்த படிக்கட்டை
பாசத்துடன் பார்த்தேன்..

மல்லிகைப்புூ ஒன்று..

உன் கூந்தலில் இருந்துதான்
வீழ்ந்திருக்க வேண்டும்..

கொடுத்துவைத்த புூ
பொறாமை கொண்டேன்
அந்தச்சின்னப்புூவிடம் கூட

என்னுடனேயே வந்துவிடு
எனக்கும் கொஞ்சம்
அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்

என் சட்டைப்பையில் அதை
பத்திரப்படுத்திக்கொண்டேன்..
Reply
#97
ஆதிபன் இவற்றை ஒருதொகுப்பாக்கி வைத்து புத்தகமாக்கிவிடுங்களேன் !

காதலை காதலாகத்தான் சொல்கின்றீர்கள்
வாழ்த்துக்கள்
[b] ?
Reply
#98
நன்றி நன்பா பரணி. முயற்சிப்போம்.
Reply
#99
<img src='http://www.atnconference.com/atn2001/images/Flying%20Man.gif' border='0' alt='user posted image'>

என்றும் இல்லாது
எனக்குள் புதிதாய்
புத்துணர்ச்சி..
காதல் கொடுத்த
புத்துணர்ச்சி!!!!!

இரண்டு
இதயம் பெற்ற
புது வேகம்..

கவலைகள் என்று
நினைத்தது
எல்லாம்
கரைந்து போனது...

பறப்பது போல
ஒரு உணர்வு

வாழ்வில் பெரிது என்று
நினைத்தது
எல்லாம்
சிறிதாய் தெரிந்தது..

என்னால் முடியும்
என்னால் முடியும்
வாழ்வில் வெல்ல
என்னால் முடியும்..

நம்பிக்கை பிறந்தது..
காதல் கொடுத்த நம்பிக்கை..

நீ என் கூட வந்தால்
எதுவும் முடியும்
Reply
<img src='http://www.turkmenistanembassy.org/turkmen/history/horse.gif' border='0' alt='user posted image'>

புது உத்வேகத்துடன்
எழுந்தேன்..

அன்று முழுவதும்
இன்பமாய் களிந்தது

இரவானதும் மீண்டும் ஏதோ
என்னை வாட்ட ஆரம்பித்தது...

என்னதான் நீ பேசினாலும்
இன்னும்
நான் காதல் சொல்லவில்லையே
என் இதயம் காட்டவில்லையே..

என்னை நீ
ஏற்றுக்கொள்வாயோ மாட்டாயோ..
ஏக்கமாய் இருந்தது...

தூக்கம் கொஞ்சம்
தொலைந்தது..

தூக்கம் வேண்டி
புத்தகத்தில்
கண்பரப்பினேன்..

"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"

இந்தவரிகள்
ஏதோ எனக்கு
எடுத்துச்சொன்னது....

மீண்டும் மீண்டும்
படித்தேன்.

"காதலில் வெல்ல
வெறும் காதலித்தால்
மட்டும் போதாது
வாழவும் தெரிய வேண்டும்"

என் தினக்குறிப்பேட்டில்
எழுதிவைத்துக்கொண்டேன்...

வாழ
கற்றுக்கொள்வோம்
கூடவே
காதலும் செய்வோம்...

தீர்மானித்துக்கொண்டேன்...
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)