Posts: 45
Threads: 23
Joined: Jul 2005
Reputation:
0
கனடா நாட்டின் ஒன்ராறியோ மாநிலத்திலுள்ள வோட்டர்லு} பகுதியில் வாகனம் மோதியதில் ரொரண்ரோவைச் சேர்ந்த சகோதரர்களான இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன் வோட்டர்லு}வைச் சேர்ந்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சௌமியன் நகுலசிகாமணி (அகவை 19) மற்றும் சந்திரசேகர் நகுலசிகாமணி (அகவை 21) ஆகிய சகோதரர்களே கொல்லப்பட்டுள்ளனர். தமக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள வீதியொன்றிலிருந்து இவர்களது சடலங்களை தாம் மீட்டதாகவும் இவர்களை மோதிவிட்டு தப்பியோடிய வாகனத்தை தாங்கள் தேடிவருவதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் வோட்டர்லு} பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மலரவன்
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 38
Threads: 3
Joined: Sep 2005
Reputation:
0
இது விபத்தா அல்லது பழிவாங்கும் செயலாதெரியவில்லை
எதுஎப்படியிருப்பினும் எமது எதிர்கால தமிழீழததிற்கு கிடைக்கவிருந்த கல்விமான்களை இழந்துவிட்டது கவலைதான்
இருவருடையஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திப்பாதோடு
அவர்களுடை குடும்பதிதினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவித்துக்கொள்கிறோம்
selva
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வல்வை. ஆவணக் காப்பக நிறுவனரின் மகன்கள் கனடாவில் படுகொலை!
வல்வெட்டித்துறை வரலாற்று ஆவணக்காப்பகத்தை நடத்தி வரும் நகுலசிகாமணியின் இரு மகன்களும் கனடாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவ விவரம்:
நகுலசிகாமணியின் மூத்த மகன் சந்திரசேகர் (வயது 21)இ இளையவர் சௌமியன் (வயது 19).
வோட்டலூ கலைக்கழகத்தில் சந்திரசேகர்இ வேதியியல் பொறியியலில் மூன்றாவது ஆண்டு படித்து வருகின்றார். ரொரன்ரோவில் இருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் வோட்டலூ நகரம் உள்ளதால் அவர் அங்கேயே தங்கிப் படித்து வருகின்றார்.
<img src='http://www.eelampage.com/d/p/2005SEPT/20050925008.jpg' border='0' alt='user posted image'>
இளையவர் சௌமியன் பெற்றோருடன் தங்கி ரொறன்ரோவில் உள்ள சென்ரானியல் கல்லூரியில் கலைத்-தொழில் நுட்பம் படித்து வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற நாளுக்கு முதல்நாள் (வியாழக்கிழமை) இரவு 7:30 மணியளவில் சௌமியன்இ தனது அண்ணனின் தோழரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றுக்காகப் பெற்றோரின் அனுமதி பெற்று வோட்டலூ சென்றிருக்கின்றார்.
பிறந்த நாள் முடிந்து வெளியே வந்தபோது நான்கு தமிழ் இஞைர்கள் கொண்ட ஒரு வாகனம்இ நடந்து வந்துகொண்டிருந்த சந்திரசேகரை மோதியுள்ளது. நிலத்தில் வீழ்ந்த அண்ணனைத் தூக்க முயன்ற தம்பி சௌமியன் மீதும் மற்றொரு தோழர் மீதும் அந்த வாகனம் மீண்டும் வந்து மோதியுள்ளது.
சந்திரசேகர் சௌமியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு விட்டனர். மற்றொரு நபர் நெஞ்சு மற்றும் இடுப்புப்பகுதியில் வாகனம் ஏறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
<img src='http://www.eelampage.com/d/p/2005SEPT/20050925009.jpg' border='0' alt='user posted image'>
உடன்பிறப்புக்கள் இருவருமே பெற்றோரைப்போல தமிழின உணர்வு மிக்கவர்கள்.
ரொரன்ரோவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்' நிகழ்வுக்கு சந்திரசேகர்இ வெகுமக்கள் ஊடக இணைப்பாளராகப் பணியாற்றியவர். அத்தோடு கடந்த ஆண்டு வோட்டலூவில் நடைபெற்ற கலைநிகழ்வில் புலிகொடி ஏற்றுவதைச் சிலர் தடுக்க முயன்றனர். இதனை இலாவகமாகக் கையாண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏற்றச்செய்தவர் சந்திரசேகர்.
வோட்டலூ பகுதி தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவராக சந்திரசேகர் செயற்பட்டு வந்தார்.
வோட்டலூ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கலைஇ கலாச்சாரத்துறை ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தவர்.
இரண்டு பிள்ளைகளைப் பெற்றுஇ இரண்டையும் ஒன்றாகவே இழந்துவிட்டுத் துயருறும் பெற்றோருக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் வே.தங்கவேலு 'தமிழ் பார்வை' தொலைகாட்சி செய்தியாளர் க.நவம் 'முழக்கம்' ஏட்டின் பொறுப்பாசிரியர் வானதி மற்றும் நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் பெற்றோருடன் தமிழீழம் சென்றிருந்த சந்திரசேகர் சௌமியன் ஆகியோர் வல்வெட்டித்துறையில் ஒரு ஆவணக்கண்காட்சியையும் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து வோட்டலூ பகுதிக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
மிகவும் கவலையை தரும் விடயம்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஏன் எதற்காக இப்படி நடந்தது? இது குறித்து வேறு தகவல்கள் யாருக்காவது தெரியுமா ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
தெரியவில்லை. இன்று புதன்கிழமை அவர்களின் இறுதிநிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
இந்த இளைஞர்களை காரினால் இடித்துக் கொலை செய்ததாக கூறப்படும் நால்வரில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கே தமிழ் மக்களிடத்தில் பேச்சடிபடுகிறது.
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
இக் கொலையின் உள் நோக்கம் என்ன.....?
<b> </b>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Quote:இந்த இளைஞர்களை காரினால் இடித்துக் கொலை செய்ததாக கூறப்படும் நால்வரில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கே தமிழ் மக்களிடத்தில் பேச்சடிபடுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மோதியதாக உறுதியாக காவல்துறைக்கு தெரிந்த போதும் அவர்களால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம் அருகில் இருந்து காயமடைந்தவர் கோம நிலையில் இருக்கிறார்கள் மற்றவர்கள் எவரும் அவர்களை இனம் காட்ட தயாராய் இல்லை. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் அவர்கள் விடுதலையாகும் சுூழ்நிலையிருப்பதாய் அறிந்தேன்..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 128
Threads: 10
Joined: Jul 2005
Reputation:
0
Nitharsan Wrote:Quote:இந்த இளைஞர்களை காரினால் இடித்துக் கொலை செய்ததாக கூறப்படும் நால்வரில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இங்கே தமிழ் மக்களிடத்தில் பேச்சடிபடுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மோதியதாக உறுதியாக காவல்துறைக்கு தெரிந்த போதும் அவர்களால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. காரணம் அருகில் இருந்து காயமடைந்தவர் கோம நிலையில் இருக்கிறார்கள் மற்றவர்கள் எவரும் அவர்களை இனம் காட்ட தயாராய் இல்லை. இதனால் அடுத்தடுத்த வாரங்களில் அவர்கள் விடுதலையாகும் சுூழ்நிலையிருப்பதாய் அறிந்தேன்..
நிதர்சன் படுகாயமடைந்தவர்கள் கோமா நிலையில் உள்ளார் என்பது பொய்ச் செய்தி
கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்கள் பார்வைக்காக செவ்வாய்க் கிழமை இறுதிச் சடங்கு மண்டபத்தில் வைக்கப்பட்டபோது அவரும் அந்த மண்டபத்;திற்கு தனது தந்தையாருடன் வந்திருந்தார்.
- Cloud - Lighting - Thander - Rain -
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
அடப்பாவிங்களா...
நானும் அப்படி தான் சொன்னேன்.. ஆனால் எனது நண்பர் ஒருவர் தான் சொனனார். அவர் கோமா நிலையில் இருக்கிறார் அதனால் தான் அவரால் அடையாளம் காட்ட முடியவில்லை என்று....
தவறுக்கு வருந்துகின்றேன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.