Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தேர்தல் திருவிழாவில் அருளர்.
#1
தேர்தல் திருவிழாவில் அருளர் வருகிறார். இவர் ஆரம்பகால ஈரோஸ் உறுப்பினர். ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். ஒரு பொறியியலாளர். ஈரோஸ் அமைப்பைக் கலைத்த பிறகு விடுதலைப் புலிகளின் கீழ் நிர்வகிக்கப்பட்ட தமீழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தில் கடமையாறிறியவர். யாழ் குடாநாட்டு இடப்பெயர்வு ஏற்படும் வரைக்கும்; தொடர்ந்து வேலை செய்தவர். அதற்குப் பின்னர் கொழும்புக்குச் சென்றவர். கொழும்பிலிருந்து சிங்களத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்தவர். ஆரம்பகாலம் தொடக்கம் எல்லாத் தமிழ்த் தேசியத்திற்கு முரணான குழுக்களுடனும் தொடர்பு இருந்து வந்தது. 1980 காலப்பகுதியில் தமிழ்க் குழுக்களுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்தது. எல்லா இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்பதில் எல்லா இயக்ங்களுடனும் கைகோர்த்து ஒத்துப் போகக் கூடிய ஒரு பேச்சுக்களில் ஈடுபட்டு வந்தவர். புலிகளின் தலைவரின் மதிப்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தவர் இந்த அருளர். பிற்காலத்திலும் இந்த நன்மதிப்பானது இருந்து வந்தது.

அருளரின் காலப்பிழையினால் கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இவருக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. ஈ.பி.டி.பி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிட இருந்தவர். அதன் அடிப்படையில் அது தொடர்பாகக் கதைப்பதற்கு விடுதலைப் புலிகளிடம் வன்னிக்கும் சென்றிருந்தவர். விடுதலைப் புலிகளின் தரப்பு நியாயத்தைக் கேட்டுக்கொண்டு இவருடைய ஈ.பி.டி.பி தொடர்பான தேர்தல் நிலைப்பாடு விடுதலைப் புலிகளால் நிராகரிகப்பட்ட நிலையில் வன்னியிலிருந்து மீண்டும் பாதுகாப்பாகக் கொழும்புக்கு வந்து சேர்ந்தவர்.

தற்போது புளொட் அமைப்பின் சின்னத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் ஆதரவுடன் போட்டியிடப் போகின்றார். இவர் ஒரு பட்டம் பதவி என்றால் எந்த விசப்பரீட்சையிலும் குதிப்பார். இவரை வைத்து ஈ.பி.டி.பியும் புளொட்டும் சவாரி செய்ய முற்படுகிறது. இவர் ஒரு அரசியல் கற்றுக்குட்டி போராட்டத்தின் ஆரம்பகால விடயங்கள் சிலவற்றை அறிந்திருந்தாலும் அரசியல் தொடர்பாக இவருக்கு அறவே அறிவு கிடையாது.

அப்படி ஒரு அறிவு எங்காவது ஒரு மூலையில் இருந்திருந்தால் இத்தகைய விசப்பரீட்சையில் இறங்கமாட்டார் என்று கருதலாம். அவர் தான் படித்த தொழிற்துறையில் ஒரு நிபுணத்துவம் உடையவராக இருக்கலாம். ஆனால் இத்தகைய ஒரு அரசியல் கற்றுக்குட்டி விடுதலைப் புலிகளின் தலைவருக்குக் கடிதம் எழுதி அதனைத் தினகரனில் பிரசுரிக்க எந்தத் தகுதியும் இல்லை.

பொதுவாக நல்ல ஒரு மனிதன். நல்ல பண்புள்ள மனிதன். ஆனால் அரசியல் அறிவு இல்லை. யாருடன் சேரவேண்டும் யாருடைய அரசியல் நுணுக்கங்கள் இராஜதந்திரங்கள் நல்லவை கெட்டவை என்பது தொடர்பான தெளிவு இல்லாததால் இந்தத் தேசவிரோத சக்திகளுக்குப் பின்னால் இவரும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்.

சிவாரம் புளொட் அமைப்பினரால் கொலை செய்யபட்ட பிறகு இதுவரைக்கும் சித்தார்த்தன் எங்கே என்றே தெரியாது. இடைக்கிடை டக்ளஸ் தேவானந்தாவின் வேட்டிக்குப் பின்னால் நின்று புகைப்படத்துக்கு மட்டும் போஸ் கொடுக்கிறார்.

புளொட் குழு என்பது இலங்கையில் பதிவு செய்யபட்ட ஒரு அரசியல் குழு இல்லை. அதன் அரசியல் குழு என்று டி.பி.எல்.எவ் என்ற ஒன்று இருக்கிறது. இதன் தலைவர்தான் சித்தார்த்தன். ஆகவே அருளர் போட்டியிடுவதாக இருந்தால் சித்தார்த்தன் முதல் இதனை அறிவிக்க வேண்டும்.

மொத்தத்தில் காலப்பிழைக்கு அருளர் காவடியைத் து}க்கித் தோழில் வைத்திருக் முற்படுகின்றார். அருளர் தீண்டத்தக்கதாக தமிழ் விரோதத் துரோக சக்திகளுடன் சேர்ந்தது. தமிழ் மக்களுக்கு அரசியல் கோமாளித்தனத்தைக் காட்ட முற்படுகின்றார். இந்தியாவிலிருக்கும் சுப்பிரமணிய சுவாமியின் பாதையில் இவரும் கொழும்பில் வலம்வர முற்படுகின்றார். இலங்கையின் கேடுகெட்ட அரசியலில் ஒரு பௌத்த மதத்தைத் தழுவியவர் தான் ஜனாதிபதியாக வரமுடியும் என்று அழுத்தம் திருத்தமாக எழுதி இருக்கிறது.
1977 ம் ஆண்டு தமிழ் மக்கள் சிங்களவர்களால் துரத்தப்பட்ட போது லங்காராணி கப்பலில் யாழ் வந்த விடயத்துடன் கூடவே தமிழர் தாயகப் போராட்டம் தொடர்பாக ஒரு நு}லையும் எழுதியவர். இவருடைய மகள் தான் மீயா என்கின்ற மாயா. அவருடைய தகப்பனார்தான் இந்த அருளர். மீயா ஒரு பொப்பிசைப் பாடகியாகவும் வெளிநாட்டு மேற்கத்தைய பாணியிலை வளர்த்து வைத்திருக்கிறார். தாயகப் போராட்டம் என்று சொல்லி அதனைக் கொச்சைப்படுத்தும் முகமாக பல செயல்களை இணையத்திலும் நடைமுறையிலும் செய்துள்ளளர்.




வாறார் வாறார் புள்ளடியார் வாறார் வாறார் புள்ளடியார்

எனக்குப் புள்ளடி போடுங்கோ எனக்குப் புள்ளடி போடுங்கோ என்று சந்திகளில் நின்று கத்துவார்.

எல்லோர் முன்னாலும் பல்லைக் காட்டுவார்.

தங்களின் வால்களில் தொங்கிடச் சொன்னார் என்று எங்கள் தலைவர்கள் உரைத்தனர்.

பொய்யும் புழுகும் புரட்டும்

சீ

புழுத்துப்போன அரசியலே.

பெரிய தேர்தல் சிறிய தேர்தல்.

குட்டித் தேர்தல் குஞ்சித் தேர்தல்

ஒன்று முடிய இன்னொன்று எந்த நாளும் திருவிழாத்தான்.

வாறார் வாறார் புள்ளடியார்

திரும்பி வாறார் புள்ளடியார்.

ஆடி வாறார் புள்ளடியார்.

தேடி வாறார் புள்ளடியார்.

குட்டித் தேர்தல் வைக்கவும் கெட்டித்தனத்தைக் கணிக்கவும்

பட்டம் பதவி கொடுக்கவும்

திட்டம் கொண்டு வருகிறார்.

வாறார் வாறார் புள்ளடியார் வாறார் வாறார் புள்ளடியார்

நன்றி மாவை நித்தி

http://www.nitharsanam.com/?art=11854
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)