Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம்
#1
கனடா முழக்கம் வார இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம்!

தமிழினத்திற்கு எதிராகக் கனடாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத அமைப்பொன்றின் அழைப்பில் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவுக்கு வந்திருக்கின்றார்.

அந்த இனவாத அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்திற்குக் கனடிய அரசியலாளர்கள் சிலரும், சிறீலங்காத் தூதரகப் பிரதிநிதியும் அழைக்கப்படிருந்தனர்.

அந்தக் கூட்டம் என்ன கூட்டம்? எதற்காக நடைபெறுகிறது என்று விவரம் சொல்லாமல் 'தமிழ்க் கூட்டம்" நடக்கிறது என்று அழைப்பு விடுத்து, ஆள் எண்ணிக்கைக்காக சில தமிழின உணர்வாளர்களும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கு போன பின்னர்தான் அக்கூட்டம் கதிர்காமருடைய நினைவு வணக்கக் கூட்டம் என்று தெரிந்திருக்கிறது பலருக்கு.

அக்கூட்டத்தில் ஆனந்தசங்கரி அவர்கள் கதிகாமரின் உயிர் 100,000 விடுதலைப் புலிகளின் உயிருக்குக் கூட சமனானது கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரைக்கொன்ற புலிகளை ஏன் இன்னும் இக்கனேடிய மண்ணில் தடை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று கனடிய அரசியலாளர்களை நோக்கிக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஆனந்தசங்கரி அவர்களை சிங்கள இனவாத அமைப்பு கனடாவுக்கு அழைத்து இருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடைபெறுகின்றது என்று மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் பெரியவர் தந்தை செல்வா அவர்களுடன் இருந்து அரசியலில் முனைப்புடன் ஈடுபட்ட பலர் தற்போது அவர் கொள்கையை துரிதப்படுத்தும் பாதையைக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

சிலர் இளைய அரசியல் தலைமுறைக்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கியும் இருக்கின்றனர். ஆனால் இங்கு சிலர் சிறீலங்காப் பேரினவாத அரசினால் தூண்டப்பட்டு தமிழினத்திற்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் நாசகாரப் பணியாற்றி வருகின்றனர்.

கனடாவில் இயங்கும் சிறீலங்கா தூதரகத்தின் அதிகாரியாக திரு. பூலோகசிங்கம் அவர்கள் இருக்கின்றார். அவர் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் என்பதால் சில யாழ். இந்துக்கல்லூரி நிகழ்வுகளிலும் இதர நிகழ்வுகளிலும் பங்குபற்றி வருகின்றார். அவர் அந்தப் பணியில் இருந்து ஒதுங்கி ஒரு சாதாரண தமிழனாக விழாக்களில் பங்குகொண்டால் யாருக்கும் பிரச்சினை இருக்காது.

ஆனால் தற்போது அவர் விழாக்களுக்கு அழைக்கப்பட்டு பெருமைப்படுத்தப்படும் போது தமிழர்களைக் கொன்றொழித்து வரும் சிறீலங்கா அரசுக்குக் கொடுத்த பெருமையாகவே இருக்கும்.

ரொரன்ரோ கனடாவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்" நிகழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்றால் தமிழர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. ஆக ஒரு சில வேடதாரிகளும் கைக்கூலிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களின் விருப்புகளையும் இலட்சியங்களையும் அழிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றார்கள்.

தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் கொள்கையால் இணைந்த தமிழர்களைப் பிரிக்க முடியாது என்பதைக் கனடாவாழ் தமிழர்கள் செயலில் காட்டுவோம். மாவீரர்களுக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கும் என்றும் உண்மையாய் இருப்போம்.

நன்றி: முழக்கம் வார இதழ் (16.09.05)
http://www.tamilnaatham.com/editorial/muzh...am/20050919.htm
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
எப்படி கூப்பிட்டால் சனம் வருமென்று உவருக்கு தெரிஞ்சிருக்கு பழம்பெருச்சாளி எல்லோ. <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
.

.
Reply
#3
பூலோகசிங்கம் அரசாங்கத்தின் ஆயுதக் கொள்வனவில் உதவிபுரிந்தவர் என எங்கையோ வாசிச்ச ஞபகம், குறிப்பாக ஓயாத அலைகள் 4 முறையடிப்பதில் பல்குழல் எறிகணை செலுத்திகளை இராணுவும் பெற்றுக் கொள்ள முகவராக - தரகரா இருந்தவராம். உண்மை பொய் தெரியாது. வேறையாரும் உப்படி கேள்விப்பட்டனீங்களே?

கனடா இந்துக் கல்லூரி சங்கத்தில இருக்கிறவைக்கு உவரைப்பற்றி தெரியாதாமோ?
Reply
#4
அடப்பாவமே!
நான் ஆனந்த சங்கரியை போற்றுகின்றேன் ஏனெனில் அவர் நேரடியாக தமிழருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இவரை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். ஆனால் மறைந்திருந்து சில துரொகிகள் செய்யும் கபடத்தை என்னவென்று சொல்ல போகின்றீர்கள்? விடுதலைப்Nபுhருக்கு உரமூட்டிகளாக இருக்கும் பத்திரிகைகளும் இணையங்களும் வெறும் வெற்று வேட்டுக்களுக்கு கட்டுரையும் கடிதமும் எழுதுவது ஏனோ? மேற்குலக ஊடககங்கள் பொல் ஆராய்ந்து யார் துரொகள் எங்கே அவர்கள் இருக்கிறார்கள் எப்படி மக்களுக்குள் ஊடுருவுகின்றார்கள்! என ஆதாரத்தோடு எந்த தமிழ் இணையமோ அல்லது பத்திரிகையோ எழுதவில்லை ( சண்டே லீடர் பத்திரிகை கருணாவின் முகாமை படத்துடன் ஆதாரப்படுத்தியது போல என்றாலும்)ஏனெனில் அந்த துணிகரமான கஸ்டமான ஆபத்தான செயலைச் செய்ய இங்கிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு இன்னும் துணிவு வரவில்லை. இதை செய்யம் பட்சத்தில் தமிழ் மக்களும் அவர்களோடு சர்வதேச சமூகமும் தமிழரின் உண்மையான நிலையை இலகுவில் புரிந்து கொளு;ளும்.

கு+பு: இப்படி சொன்னதற்காய் நிதர்சனம் போல் கிராபிக் வேலைகளை காட்ட வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்...

Nilavn

[size=18][b]" "
Reply
#5
நிலவன், நிதர்சனம் முதல் விட்ட கிரபிக்ஸ் (தயா சந்தகிரி நிக்கிற படத்தில்) செய்திக்கு சங்கரியார் சட்ட நடவடிக்கை எடுப்பன் எண்டு எல்லாம் அறிக்கை விட்டார். அதைவிட வேற கனக்க தமிழ் மக்களுக்கு அந்த அறிக்கையில இருந்து. அதன் பின்னர் நிதர்சனம் கொஞ்சப்படங்கள் விட்டுது லண்டனில் ஆனந்தசங்கரி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரும்பாடு படுவதை ஆவணப்படுத்தி. அதுக்கு சங்கரி என்ன சொன்னவர்? அதையும் கிரபிக்ஸ் எண்டோ சொன்னவரோ உங்களுக்கு?
Reply
#6
மன்னிக்கனும் குறுக்கால போனவன். நீங்கள் பெயருக்கு ஏற்றவகையில் குறுக்காலதான் பொறீங்கள். நான் நிதர்சனம் என்று சொன்னது உதாரணத்துக்காகவேயன்றி. அதில் வெளி வரும் படம் எல்லாம் கிராபிக்ஸ் என்று சொல்லவில்லை. நிதர்சனம் நிதர்சனம் செய்யும் திருகுதாளங்கள் நிதர்சன இயக்குனர்க்கு மட்டுமே தெரியும். அவர் தான் வாழும் நாடுகளையே மணிக்கொருமுறை மாற்றி மாற்றி சொல்லுபவர் அதனால் படங்களை அவர் கிறாபிக்ஸ் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லை தானே!

[size=18][b]" "
Reply
#7
நன்றி நிலவன். எனக்கு நிதர்சன இயக்குனர் எந்த நாட்டில இருக்கிறார் எண்டது தேவையில்லை.

நிதர்சனம் விட்ட முதல் கிரபிக்ஸ்க்கு எதிர்பார்த்த மாதிரி சங்கரி அறிக்கைவிட்டு மாட்டுப்பட்டவர் எல்லோ?

உந்த மேல இணைப்பில இருக்கிற கிரபிக்ஸ் கேலிச்சித்திரம் மாதிரி தானே. கேலிச்சித்திரம் எல்லா ஊடகங்களிலும் தானே வருது. :?
Reply
#8
கணொன் முன்பொரு செய்திக்காக ......

குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!!</span>
" "
Reply
#9
[quote=cannon]கணொன் முன்பொரு செய்திக்காக ......

குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! <span style='font-size:16pt;line-height:100%'>ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!!</span>

<b>100% உண்மை. சரியான கருத்து </b>:wink:
Reply
#10
நிலவன். ஏன் நிதர்சன இயக்குனர் எந்த நாட்டில இருக்கிறார் எண்டு தேடுரார்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
[quote=cannon]கணொன் முன்பொரு செய்திக்காக ......

குறிப்பு: ஊடகத்துறையைப் பொறுத்த மட்டில் புதினமோ, சங்கதியோ, தமிழ்நெற்றோ செய்யாத சிலவற்றை நிதர்சனம் செய்திருக்கிறது!!! முட்கள் சிலவற்றை முட்களால்தான் எடுக்க வேண்டும்!! நிதர்சனத்தின் பின்புலம் எப்படியென்று நானறியேன்! <span style='font-size:25pt;line-height:100%'>ஆனால் எதிரியோ அல்லது துரோகிகளோ ஊடகத்தர்மம், நாகரீகம் என்பவற்றிற்கு மாறாக குப்பைகளைக் கிளறும்போது, எமக்கும் அதுவிட மேலாக குட்டையையே கலக்கி சேறாக்கி நாறடிக்க முடியும் என்று, அவனது பாஸையிலேயே புரிய வைக்க வேண்டும். அதை மிகச் சிறப்பாக நிதர்சனம் செய்து வருகின்றது!!!!</span>

கனன் அவர்களே

புதினமோ - சங்கதியோ அல்லது தமிழ்நெற்ரோ செல்லாக் காசுகளை (சங்கரி, கருணா) மீண்டும் மீண்டும் தமது ஊடகத்திலை போட்டு அவர்களை பிரபலமாக்கும் மடத்தமான ஊடகப்பணிசை; செய்யவில்லை. சங்கரியின் திருகுதாளங்கள் பற்றி தமிழ் மக்கள் எப்பவோ விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள். சங்கரியும் கருணாவும் தமிழ் மக்களினால் எப்பவோ து}க்கி எறியப்பட்டு விட்டார்கள். இவர்களைப் பற்றி தமது ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு அவர்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதை எப்பவோ தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் ஊடகங்கள்(இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில்) கைவிட்டு விட்டன.

ஆனால்... துரோகிகளின் துரோகத் தனங்களை அம்பலப்படுத்துவதாக தெரிவித்து அவர்களை மீண்டும் மீண்டும் தாக்குவது போன்று வெளிவேசம் போட்டு அத் துரோகிகளை பிரபலப்படுத்தும் நடவடிக்கையிலேயே நிதர்சனம் ஈடுபடுகின்றது.

அத்துடன் தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரச்சாரங்கைளச் செய்வதற்காக சில தனிப்பட்ட நபர்கள் ஆரம்பித்த இணையத் தளங்களை துரோகிகளின் தளங்கள் என அடையாளம் காட்டுவதாக காண்பித்து ஆயிரக்கணக்கான வாசகர்களிற்கு அவற்றை அறிமுகப்படுத்தி வைத்த பெருமையும் நிதர்சனம் இணையத்திற்கும் அதன் இயக்குனருக்குமே சேரும். குறிப்பிட்ட தளங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும்போது வாசகர்கள் அந்தத் தளத்திற்குச் செல்லவேண்டும் எனபதற்காக அத்தளங்களிற்கான இணைப்பையும் வழங்கி தேசியத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களைப் படிக்க வைத்த செயலையும் நிதர்சனம் கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#12
Tamilnet mainstream தரத்தை அடைந்தவர்கள், செல்லாக்காசுகளைப்பற்றி பிரசுரிக்கமாட்டார்கள் அவர்களுடைய பணி அதுவும் அல்ல.

செல்லாக்காசுகளின் சில்லறை பிரச்சாரங்களுக்கு எதிர்ப்பிரச்சாரம் செய்ய 2tier media தேவை தானே. அதைத்தான் நிதர்சனம் செய்கிறது.

நிதர்சனம் தூரேகிகளின் இணையத்தளத்திற்கு இணைப்பு வழங்காவிடில் அந்த தளங்களைப்பைற்றி வேறு வழியில் தமிழ் மக்கள் அறிந்திருக்க மாட்டார்களா? தேசியத்தை கொச்சைப்படுத்தும் செய்திகளை விழிப்புணர்வு அடைந்த தமிழர் வாசித்து என் மாற்றம் வரப்போகிறது? நல்லதொரு நகச்சுவை என்று சிரித்துவிட்டுப்போவார்கள். அதைவிட தேசியத்தில் பற்று அதிகரிக்கவல்லே செய்யும்.

எல்லோரும் புதினம் சங்கதி Tamilnet, Tamiguardian Sangam ஆக இருக்க முயல்வது சரியா? அது தான் தேவையுமா?

விசமப்பிரச்சாரங்களை அவர்களுடைய மொழியில் நடையில் பாவனையில் எதிர்கொள்ள தேவையில்லை என நினைக்கிறீர்களா?
Reply
#13
* சிறுமிகளைத் தேடியலையும் ஆசங்கரி!!
* பிரபல தூள் கடத்தல் மன்னன் முஸ்தப்பா!!
* மகேஸ்வரியுடையான்!!
* உண்டியலுடையான் மாற்றுக்கருத்தாளனாகினான்!!
* கட்டைவேலி ப.நோ.கூ.சங்க மாமூட்டையான் கே.ரி.ராஜசிங்கம்!!
* ....

இப்படியான தலைப்புக்களில் செய்திகளைப் பிரசுடித்தவுடனேயே! கொய்யோ? முறையோ? நீங்கள் பிரபலப்படுத்துகிறீர்கள்!!!!!!!!!!! யோசிக்கிறேன்! யோசிக்கிறேன்!! தலைகீழாகவும் யோசித்துப் பார்த்து விட்டேன்!! இந்த மரமண்டைக்கு ஏறுதேயில்லை!! ...... ஒருவேளை சிலர் சிறுமிகளை ஆசங்கரிக்கு கொண்டுவந்து மனமிரங்கிக் கொடுத்து விடுவார்களோ? இல்லை தூள்கிங் முஸ்தப்பனின் தூள் பிஸ்னெஸ் அமோகமாகிவிடுமோ?? ......... பிரபலமாகிறார்களாம்!!!!!!!!

புரியுதேயில்லை!!!!!!!
" "
Reply
#14
http://www.nitharsanam.com/?art=11817

<img src='http://www.nitharsanam.com/public/hello/1dbe0.JPG' border='0' alt='user posted image'>
Reply
#15
அதை விட பல சாதனைகளை நிதர்சனம் செய்திருக்கு அதைNயுல்லாம் சொல்லமல் இதை மட்டும் செல்லுறீங்கள்... துரொக இணையங்களை அறிமுகப்படுத்தியது.... சைபர் தமிழ் இணையத்தை நடாத்துபது. நெருப்பு.ஓர்காவை நடாத்துவத சிபர் நியுூஸ் இணையத்தை நடாத்துவது தற்போது இன்னோன்று அதன் பெயரை மறந்திட்டன். இதை விட ஊர்ஜீதத்தில் செய்தி பொடுவது எல்லாம் அது தானே செய்யுது. அதை விடுங்க தமிழ்நாதம் புதினம் இணையங்களின் மாற்றைய டொமெய்ன்களில் நிதர்சத்திற்க்கு போவேட் செய்வது.. வேறு என் பழையவன் புதியவன் என்று ஒருவனே கருத்தெழுதுவது. போததற்க்கு மறைந்த ஊடக வியலாளர் சிவராம் அவர்கள் தமது சிறப்பு ஆசிரிhயர் என்று அறிக்கை விடுவது. திருவிட்டார்கள் என்று தங்கது பெயரிலே மாற்றுக்கருத்து பேசுவது? இதெல்லாம் நிதர்சனத்தின் சாதனை தானே!

கனோன் அவர்களே!
நாய் குரைக்கிறது என்பதற்க்காக நாமும் திருப்பி குரைக்க ஆரம்பித்தால்? அந்த நாய்க்கும் எமக்கும் என்ன வெறு பாடு? இதை ஏன் நிதர்சனமும் உங்களைப்போன்றவர்களும் உணர மறுக்கின்றீர்கள்? ஈராக்கிலேர பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இளைஞனுக்காக இணையத்தை உருவாக்கியது நிதர்சனம். பின் அதை துரொகிகளது என்று சொன்னதும் நிதர்சனம். ஏன் அது என்று யாருக்காவது தெரியுமா? முன்னர் வேறு ஒருவரின் மின்னஞ்சலில் பதியப்பட்ட இணையம் பின்னர் எப்படி குமாரின் மின்னஞ்சலுக்கு மாறியது? அப்படியாயின் நிதர்சனத்தின் உண்மையாக நிர்வாகி யார்? அந்த நேரத்தில் தமிழ் நாதம் மீது சிறிலங்கா என்ற பெயரில் வந்த நிதர்சன நிர்வாகி என்ன கூறினார்? அவருக்கு தமிழ் நாதத்தை விட தான் பெரியவர் ஆக Nவுண்டும் என்ற ஆசை. அதனால் தான் புதினத்தில் பிரதி செய்த செய்திகளை தமது இணையத்தில் இட்டு சர்வதேச ஊடககங்களுக்கு தாம் விடுதலைப்புலிகளின் செய்திப்பிரிவு என்று சொல்லி. அந்த செய்திகளை மொழிபெயர்ப்பு செய்து சர்வதேச ஊடககங்களுக்கு அனுப்பி பிரசுரிpக்க வைத்து விட்டு. இதே யாழ் களத்தில் என்ன எழுதினார்கள்?
சிந்தித்து பாருங்கள்.
நிலவன்

[size=18][b]" "
Reply
#16
விது நான் அவர்களைப்பற்றி அறிய நினைக்கவில்லை அவர்கள் என்னுடன் ஒரு முறை கதைத்தார்கள் அப்பொது தாம் கிளிநொச்சியில் இருப்பதாக சொன்னார்கள். பின் நான் சிலரை இது தொடர்பாக விசாரித்த போது அவர்கள் கிளிநொச்சியில் இல்லை என்பதை அறிந்தென் பின் அவர்கள் பிரித்தானியா என்றார்கள் அதன் பின்னர் அண்மையில் ஒரு அறிக்கையில் தங்கள் தலைமையகம் கனடாவில் இருக்கிறது என்கிறார்கள்.

[size=18][b]" "
Reply
#17
Quote:கனோன் அவர்களே!
நாய் குரைக்கிறது என்பதற்க்காக நாமும் திருப்பி குரைக்க ஆரம்பித்தால்? அந்த நாய்க்கும் எமக்கும் என்ன வெறு பாடு? இதை ஏன் நிதர்சனமும் உங்களைப்போன்றவர்களும் உணர மறுக்கின்றீர்கள்?

<b>நன்றி நிலவன் ...... நிலவன் நீங்களெல்லோரும் ஒன்றை மறந்து விட்டீர்கள்? இப்போ நாங்கள் எல்லோரும் எழுதும் இந்த தலைப்பிலுள்ள கட்டுரையே, முழக்கம் இதழில் வெளியாகி தமிழ்நாதத்திலும் பிரசுக்கப்பட்டிருந்தது!!! அவர்களும் ஆசங்கரியை பிரபலப்படுத்த முற்படுகிறார்களோ???</b>
" "
Reply
#18
கனோன் நீங்கள் அந்த கட்டுரையை படித்து பாருங்கள் அதில் சங்கரியைப்பற்றி கதைத்ததை விட வேறு விடையங்களை கதைத்தது தான் அதிகம் அந்த கட்டுரையில் அவை தான் சங்கரியாரைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

Quote:சிங்கள இனவாத அமைப்பொன்றின் அழைப்பில் திரு. ஆனந்தசங்கரி அவர்கள் கனடாவுக்கு வந்திருக்கின்றார்.
அக்கூட்டத்தில் ஆனந்தசங்கரி அவர்கள் கதிகாமரின் உயிர் 100,000 விடுதலைப் புலிகளின் உயிருக்குக் கூட சமனானது கிடையாது. அப்படிப்பட்ட ஒருவரைக்கொன்ற புலிகளை ஏன் இன்னும் இக்கனேடிய மண்ணில் தடை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று கனடிய அரசியலாளர்களை நோக்கிக் கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஆனந்தசங்கரி அவர்களை சிங்கள இனவாத அமைப்பு கனடாவுக்கு அழைத்து இருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் என்னவெல்லாம் நடைபெறுகின்றது என்று மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

கட்டுரையின் இறுதியில் படித்து பாருங்கள்..

Quote:ரொரன்ரோ கனடாவில் நடைபெற்ற 'பொங்குதமிழ்" நிகழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்றால் தமிழர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. ஆக ஒரு சில வேடதாரிகளும் கைக்கூலிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களின் விருப்புகளையும் இலட்சியங்களையும் அழிக்கும் பணியில் இறங்கியிருக்கின்றார்கள்.

[b]தலைவர் பிரபாகரன் அவர்களின் காலத்தில் கொள்கையால் இணைந்த தமிழர்களைப் பிரிக்க முடியாது என்பதைக் கனடாவாழ் தமிழர்கள் செயலில் காட்டுவோம். மாவீரர்களுக்கும் தமிழ்த்தேசியத் தலைமைக்கும் என்றும் உண்மையாய் இருப்போம்.
இதை சொல்லவே அவர் பற்றிய சில கருத்துக்களும் அக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

[size=18][b]" "
Reply
#19
நான் இங்கு தேசியத்திற்கான ஊடகங்களை கொச்சைப்படுத்தவும் முற்படவுமில்லை அன்றி அதனை எப்பேற்பட்ட பிரட்சனைகளுக்கு மத்தியில் கொண்டு செல்கிறார்கள் என்பதை மறந்து சேறள்ளிக் கொட்டவும் முற்படவில்லை!!

மாறாக, எதிரி/துரோகிகளுக்கு புரியும் மொழியில் எழுதுபவர்களை/பேசுகின்றவர்களை எல்லாம் தேவையற்ற சந்தேகப்பார்வை பார்க்க வேண்டாம் என்றே கூற வந்தேன்!! குப்பைகளை கிளறி எறிந்து அதில் இன்பம் கானும் எச்சிலிலை கூட்டங்கள் மேது சேற்றையல்ல, மலத்தை நாம் வாரி எறியத்தான், அவனுக்கு தான் செய்ததின் தார்பரியம் புரியும்!!!

பி.கு: எமது போராட்ட சரித்திரத்தில் துரோகிகளாக சகோதரங்களோ, குடும்ப உறவுகளோ இல்லை அதற்கு மேல் பெற்றார்களே இருந்த வரலாறுகள் பல பல!! பணம்/பதவி/பெண்களுக்காக துரோகிகளாக மாறிய சொந்த சகோதரனை, தந்தையை அழித்த சம்பவங்களும் பல நிகழ்ந்துள்ளன!! ஆகவே சில குடும்ப உறவுகள் எச்சிலிலை கும்பல்களில் இருக்கிறார்கள் என்பதற்காக கீழ்தரமான விமர்சனங்களை கை விடுவோம்!!!
" "
Reply
#20
எல்லாம் இருக்கட்டும்நிலவன் ஏன் உம்மடை பழைய தளம் இன்னமும் இயங்க தொடங்கேல்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)