Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழில் திருமணம்?
#1
அண்மையில் ஒரு திருமண வீடு;. மிகவும் பிரமண்டமான மண்டபம் அது. நல்ல காசு செலவழித்திருப்பினம் என்று அதன் அலங்காரத்திலே தெரிந்தது. உள்ளே சென்றவுடன் அங்கு இருப்பவர்களுக்குள் ஒரு சலசலப்பு. என்னவென்று பார்த்தால் மணமகன் மணவறையில் இருக்கின்றார் ஆனால் ஐயாரை காணவில்லை. பின்னார் சற்று நேரத்தில் பெண்ணெருவர் பிரமாணரை வைத்து நடத்தும் திருமணம் தமிழ் திருமணமா என்று கேள்வி ஒன்றை முன் வைத்து அதற்கு பல விளக்கங்கள் கொடுத்து கொண்டு இருந்தார். அதில் வள்ளுவர் கூறிய கருத்துக்களை முன் வைத்து அவருடைய பேச்சுக்கள் தொடர்ந்தன. அதாவது ஐயார்கள் மந்திரம் சொல்வது விளங்கமால் மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பார்களாம் என்றும் ஐயார் கூறும் மந்திரங்களுக்கு விளக்கங்களும் அளித்தார். இடையில் ஒரு அறிவித்தல் அதாவது மணமகள் மேடையை நோக்கி வருவதாக. அப்போது "மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்களச் செல்வி மணக்கோலம்" என்னும் பாடல் இசைக்க மணமகள் மேடையை நோக்கி வந்தார்.
பின்னார் ஒரு பெரியாவர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் அணிவித்தார். அதற்கு அடுத்து எல்லாமே தமிழ் முறைப்படி நடந்தன. ஐயார் இல்லமால் முதல் கலியாணத்தை நடத்தி இருவரும் ஒரு வரலாற்றை புரிந்து விட்டதாக எல்லோரும் கதைத்தார்கள்.
இனி அங்கு நடந்த விசயங்களை சற்று உற்று நோக்குவோம்..
1) ஐயார் இல்லமால் தமிழ் முறையில் திருமணம் நடத்தப்பட்டிருந்தது வரவேற்கத் தக்கது. இடை இடையில் சினிமாப் பாடலையும் தாயகப் பாடலையும் குழப்பி ஒலிக்கச் செய்தது மிகவும் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.
2) தமிழ் முறையில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்துக் கூறிய பல தமிழ் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலே வாழ்த்துக் கூறினார்கள்
3) தமிழ் முறைப்படி நடந்த கலியாணம் என்றால் மஞ்சள் கயிறு எங்கே?
4) கலியாணம் முடிந்தவுடன் நடந்த கேக் வெட்டும் வைபவம் எந்த தமிழ் மரபில் உண்டு

நாம் புதுமை என்றா பெயரில் எமது பழமையான காலச்சாரத்தை நாறடிக்கின்றோமா? இது போன்ற சம்பவங்கள் எமது இளைய தலைமுறையினாரை தடுமாறக் கூடிய சந்தர்ப்பங்களை அளிக்கும் அல்லவா? அதாவது தமிழ் முறைக் கலியாணம் என்பது என்ன என்பதை அவர்கள் அறியமால் போகப் போகின்றார்கள் என்ற ஆதங்கம் சபையில் இருந்த பலரை சிந்திக்க வைத்தது

Reply
#2
அப்படியும் வேண்டாம் இப்படியும் வேண்டாம் பின்ன எப்படித்தானப்பா நாங்கள் கண்ணாலம் கட்டுறது
:evil: :evil: :evil: :evil: :evil:

சரி சரி எல்லாம் இருக்கட்டும் நீர் கண்ணாலத்துக்கு போனீரா நன்னா வடை பாயாசத்தோடை சாப்பிட்டீரா மொய் வச்சீரா
அப்புறமென்ன ??
8) 8) 8) 8) 8) 8) 8)
[b]
Reply
#3
1) ஐயார் இல்லமால் தமிழ் முறையில் திருமணம் நடத்தப்பட்டிருந்தது வரவேற்கத் தக்கது. ரொம்ப நல்ல விடயம்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இடை இடையில் சினிமாப் பாடலையும் தாயகப் பாடலையும் குழப்பி ஒலிக்கச் செய்தது மிகவும் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது. திருமண வீட்டிற்கு வந்தவர்கள் என்ன என்ன கதைக்கிறர்கள் என மற்றோருக்கு கேட்ககூடாதென பாட்டுக்களை ஒலிபரப்பு செய்திருப்பார்கள். அல்லது சனம் கதைக்கிற கதை தான் கேட்டிருக்குமே. அதை எப்படி சகிக்க முடியும்?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

2) தமிழ் முறையில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்துக் கூறிய பல தமிழ் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலே வாழ்த்துக் கூறினார்கள் நீங்கள் எந்த மொழியில் வாழ்த்துக்கூறினீர்கள்? தமிழில் தானே. அப்படியாயின் சந்தோசப்படுங்க. ஏன் மற்றவர்கள் பற்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

3) தமிழ் முறைப்படி நடந்த கலியாணம் என்றால் மஞ்சள் கயிறு எங்கே?
மணமகன் தாலி கட்டினார்தானே. பின்பேன் மஞ்சள்கயிறு :?: :roll:
4) கலியாணம் முடிந்தவுடன் நடந்த கேக் வெட்டும் வைபவம் எந்த தமிழ் மரபில் உண்டு?
இல்லையோ இருக்கோ தெரியா. ஆனால் பல வைபவங்களில் கேக் வெட்டுகிறார்கள் போத்தல் உடைக்கிறார்கள்.
உங்களது திருமண வைபவத்திற்கு கேக் வெட்ட மாட்டீங்களா?
:roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#4
ம்..ம்,
அது சரி நீங்கள் தமிழ் முறை என்று சொல்லிற கலியாண வீட்டில ஐயர் சமஸ்கிரதத்தில என்ன செய்யிறவர் தெரியுமோ?
முதலில் கலியாணம் செய்யப் போகிற பெண் ஒரு பிராமணருக்கு கட்டி வைக்கப் படுகிறார் என்று தெரியுமோ?இது ஒரு புதிய விடயம் அல்ல, சுய மரியாதை மண ஒப்பந்தங்கள் பெரியாரால் தொடக்கி வைக்கப் பட்டு இன்று தமிழ் நாடெங்கும் நடக்கின்றன, சில புலிகளின் உறுப்பினரும் இவ்வாறான தமிழர் மண ஒப்பந்த விழாக்களை நடத்துவதாகக் கேள்வி?மேலும் தகவல்கள் தெரிந்தால், தெரிந்தவர்கள் எழுதுங்களேன்?
Reply
#5
சிங்கையில் 1983களில் தமிழில் ஒரு திருமணம் நடந்தது.
அக் காலத்தில் எனக்கு அதில் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.
அதைப் புரிந்து கொள்ளும் வயதோ பக்குவமோ எனக்கு அன்று இருக்கவில்லை.

நிச்சயதார்த்தம் ஒரு பெரியவரால் வீட்டில் நடத்தப்பட்டது.
அவர் தமிழைத் தவிர வேறு எந்த மொழியையும் கலக்கவில்லை.

சில தினங்களுக்குப் பிறகு
செரங்கூன் கோயிலில் திருமணம் அன்றைய சிங்கப்புூர் ஒலிபரப்புக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்க தமிழிலேயே திருமணம் நடந்தது.

இச் செய்தியை பார்த்த பிறகு
அது என் மனக் கண் முன் வந்து நின்றது....................

இது போல எத்தனையோ நடக்கிறது.
அதை அவர்கள் பெரிது படுத்தியதாக எனக்கு ஞாபகமில்லை.
அப்படியான விழாக்களின் ஆரம்பமாக அது இருந்திருக்காது.
அதற்கு முன்னமே அப்படியானவை நடந்து இருக்கும்?

இன்றைய நிலை தெரியவில்லை?
Reply
#6
அஜீவன் அண்ணா சொல்வது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களது திருமண நிகழ்வாக இருக்கலாம் என நம்புகிறேன்.

சுயமரியாதை இயக்கம் இந்தியாவில் தரம்புரண்டாலும் இன்றும் சிங்கையில் அதனைப் பின்பற்றும் தோழர்கள் இருக்கிறார்கள்.அதிலிருக்கும் தோழர்கள் தமிழ் முறைப்படித் திருமணம் செய்து கொண்டவர்கள்.
\" \"
Reply
#7
எனக்கு ஒரு சந்தேகம் சும்மா விதண்டா வாதம் தான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

கொசுறு கேள்வி. ஏன் சில இறை தூதர்கள் ஒருவனுக்கு ஒரு மனைவி தான் என்று சொன்னார்கள்.?
சில தூதர்கள்:. நாலு மனைவிகள் அனுமதிக்கச் சொன்னார்கள்? தூதர்களிடம் (முஸ்லீம்ஸ்)
கடவுள் ஏன் ஒவ்வொரு மாதிரி சொல்லி அனுப்பினார்?


நான் கேட்கிறேன். மூன்றாம் வகுப்பிலிருந்தே ஒரு பக்கம் கடவுள்தான் மனிதனைப்படைத்தார், அதுவும் இப்போதுள்ள உடலமைப்புடன் என்ற மாதிரிப் படித்துக்கொண்டு, அதே நேரம் இன்னொரு பாடத்தில்(விஞ்ஞானம்) மனித தோற்றம் பற்றி விஞ்ஞான ரீதியில் படித்துக்கொண்டும் வருகிறோமே, யாராது சிந்திக்கவில்லையா எது உண்மையென்று????
Reply
#8
<!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->ம்..ம்,
அது சரி  நீங்கள் தமிழ் முறை என்று சொல்லிற கலியாண வீட்டில ஐயர் சமஸ்கிரதத்தில என்ன செய்யிறவர் தெரியுமோ?
முதலில் கலியாணம் செய்யப் போகிற பெண் ஒரு பிராமணருக்கு கட்டி வைக்கப் படுகிறார் என்று தெரியுமோ?இது ஒரு புதிய விடயம் அல்ல, சுய மரியாதை மண ஒப்பந்தங்கள் பெரியாரால் தொடக்கி வைக்கப் பட்டு இன்று தமிழ்  நாடெங்கும்  நடக்கின்றன, சில புலிகளின் உறுப்பினரும் இவ்வாறான தமிழர் மண ஒப்பந்த விழாக்களை  நடத்துவதாகக் கேள்வி?மேலும் தகவல்கள் தெரிந்தால், தெரிந்தவர்கள் எழுதுங்களேன்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நீங்க சொல்வது சரியானது தான்...
Reply
#9
அகிலனின் பதிலைப்போல இன்னொருவரும் யோசித்திருக்கிறார்
http://vasanthanin.blogspot.com/2005/05/bl...og-post_08.html
Reply
#10
இந்தியாவில் சுயமரியாதை திருமணங்கள் இப்போதும் நடக்கின்றன, நான் நிறைய பார்த்திருக்கிறேன். தாலிகூட ஒரு அடிமை சின்னம்தானே.
.

.
Reply
#11
தாலியே கட்டாமல் கலியாணங்கள் நடக்குது. இதுக்க மஞ்சள்தாலி எங்கே எண்டு கேக்கிறியள்?
தாலிகட்டிற வழக்கம் பிற்பட்ட காலத்திலதான் தமிழருக்குள்ள வந்தது.
மேலும் தாலி எண்டதின்ர விளக்கம், கழுத்தில அணியிற அணிகலன் தானேயொழிய திருமணத்தில பெண்ணின் கழுத்தில கட்டுறதெண்டதுக்கு மட்டும் பொருந்தாது.
முந்தி ஆண்கள் கழுத்தில அணிஞ்ச ஆபரணங்களையும் தாலி எண்டுதான் இலக்கியங்கள் சொல்லுது.

எடுத்துக்காட்டு: ஐம்படைத்தாலி.
Reply
#12
சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்களில் ஒன்று..
அதன் விளக்கங்கமும் கீழே இடம் பெறும்

<b>"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?"

இதன் விளக்கம்</b>
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம் அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது, வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்

இது பெண்ணடிமைத் தனத்தைப் போற்றுவது இல்லையா??....

இதவிட கேவலமாய் இருக்கு போட்டால் அடிக்க வருவியள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#13
இல்லப் போடுங்கோ அகிலன் அப்ப தான் சிலபேருக்கு புத்தி வரும்....ஏன் எதுக்கு என்று சிந்திக்காம ,கண்ணை மூடிக் கொண்டு கருத்து எழுதுறவைக்கும்,கன்ணை வடிவாத் திறந்து கொன்டு விசமத்தனமாகக் கருத்து எழுதுறவைக்கும் விளங்கும்.
Reply
#14
நாரதா வேலக்கு நேரமாச்சு வந்து போடுறன் (அண்ணா)
:::::::::::::: :::::::::::::::
Reply
#15
போடுங்க அகிலன்
Reply
#16
மனித நாகரிக வளர்ச்சியில்...நுழைந்து கொண்ட சடங்குகள் சம்பிரதாயங்கள் தான் இவை... காலத்துக்கு காலம் அவை பரிமாற்றம் பெறுவது தவிர்க்க முடியாதவை என்றாகும் போதும்.. நடைமுறைச் சமூகத்துக்கு பாதிப்பில்லா சில பாரம்பரிய அம்சங்களை தொடர்ந்து காவிச் செல்லுதல்...எமக்கென்றான தனித்துவத்தூடான நாகரிக வளர்ச்சியை குறைந்தது அடையாளம் காட்டவாவது உதவும்...!

கிறிஸ்தவர்கள் சரி... பெளத்தர்கள் சரி... தமிழர்கள் சரி தமிழர் அல்லாத இந்துக்கள் சரி... சில பாரம்பரிய அம்சங்களை திருமணச் சடங்குக்குள் வைத்துக் கொள்கின்றனர்..! ஒரு அடையாளமாக.. பாரம்பரியத்தின் நினைவாக...சிலவற்றைச் செய்கிறார்கள்..!

தாலி கட்டுவதால் ஒரு பெண் அடிமை ஆகிவிடுகிறாள் என்பதும்...ஐயர் ஓதும் மந்திரத்தால் அவனோ அவளோ தாழ்ந்துவிடுகிறாள் என்பதும் சுத்த போலித்தனமான வாதம்..! தாலி கட்டாமலும் ஐயர் வைக்காமலும் மேடையில் புதுமை செய்வதாகச் சொல்லுபவர் வீட்டுக்குள் மனைவியை மொத்தினால் எவருக்கும் தெரியாது...மேற்கில் அதுதான் நடக்குது...பிரித்தானியாவில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு குறைந்தது 10 வரையான தொலைபேசி அழைப்புக்கள் வீட்டுக்குள் பெண்கள் மீதான வன்முறை தொடர்பில் உதவி வேண்டி வருகின்றதாம்...!

எங்களைப் பொறுத்தவரை தனிமனித பாதிப்புக்கு சமூகப்பாதிப்புக்கு இடமளிக்காத பாரம்பரிய அம்சங்களை தேர்வு செய்து பாதுகாத்தல்...எமது சமூக நாகரிக வளர்ச்சி என்பது எமது பாரம்பரியம் சார்ந்து வந்தது என்பதையும் எங்கள் தனித்துவத்தையும் அடையாளம் காட்டவும் உதவும்...! போலித்தனமான குருட்டுத்தனமான வாதங்கள் மூலம் இவற்றைக் களைவது சமூகத்துக்கு உதவாது..! ஆண் பெண் சமூகவியல் சமுத்துவம் என்பது மனதில் எழ வேண்டும்..சடங்கு சம்பிரதாயங்களில் சிலவற்றைத் தவிர்ப்பதால் அல்ல..! புரோகிதரை தமிழில் ஓதச் சொல்லுவது நியாயம்...மொழிக்கலப்பு அவசியமில்லை..என்று சொல்லலாம்..புரோகிதரே வேண்டாம் என்பதில் என்ன அர்த்தம்...ஒரு பெரியவரை நடுநிலை வைத்து திருமணம் செய்வதாகவும் அவருக்கு இளம் தம்பதிகள் மதிப்பளிப்பதாக வைத்துக்கொள்ளுங்களேன்...! அவரை ஏன் விலக்கி வைக்கிறீர்கள்..! அப்படி விலக்கி விடுவதால்..தம்பதியர் உங்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடுகிறது..???! பாவம் ஒரு நேசமுள்ள மனிதனை விலக்கி வைப்பதுதான் மிஞ்சும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
நானும் படித்திருக்கிறேன் முதலில் மனப்பெண்னை முப்பதுகோடி தேவர்களும் மணந்து, பின்னர் மந்திரம் ஓதும் பிராமணரும் மணந்து இறுதியாகத்தான் மணமகன் மணக்க அனுமதிக்கப்படுகிறது. எமக்கு சமஸ்கிருதம் தெரியாததால் ஜயர்கூறுவது புரிவதில்லை. எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுகிண்றோம். இதைசொன்னால் எமது சமுதாயம் ஏற்றுக்கொள்ளுமா? "முடங்க பாய் கிடைக்காத நிலையிலும் சடங்கை நிறுத்தாத" சனமல்லோ எம்சனம்.
.

.
Reply
#18
பெரியவர் ஒருவர் முன் நிலையில் மண விழா நடக்கலாம்,அதற்காக ஒரு சாதியில் பிறந்தவர் என்பதற்காக அவரைப் பெரியவர் என்பதா?இது சாதியம் ஆகாதோ?எதைக் கழிப்பது எதை விடுவது என்று தீர்மானிக்க என்ன நடக்குது என்று முதலில் தெரிய வேண்டாமா?எதோ எல்லாரும் செய்கினம் நாங்களும் செய்வம் எண்டா எப்படி தேவயில்லாததை விடுகிறது?
சமூக விழிப் புணர்வை உண்டாக்காமல் தனித்து எவ்வாறு ஒரு சமூக நிகழ்வைச் செய்வது?
நேற்று யாழில் ஒரு 'பெரியவருக்கு' எல்லாளன் படையால் ஏன் சூடு விழுந்தது தெரியுமோ? அது தெரின்ச்சால் ஒரு வரும் பிறப்பால் பெரியவர் இல்லை என்பது விளங்கும்.
Reply
#19
அகிலன் Wrote:சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சமஸ்கிருத மந்திரங்களில் ஒன்று..
அதன் விளக்கங்கமும் கீழே இடம் பெறும்

<b>\"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?\"

இதன் விளக்கம்</b>
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம் அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது, வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்

இது பெண்ணடிமைத் தனத்தைப் போற்றுவது இல்லையா??....

இதவிட கேவலமாய் இருக்கு போட்டால் அடிக்க வருவியள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கரக்ட்டா சொன்னாய் சாரு....புரியாத பாசையில் இன்னும் என்னென்ன சொல்லிக்கான் எல்லாம் அவிழ்த்துவிடு சாமி .....இவங்க நூற்றண்டுகாலமாக ஆடிய ஆட்டமென்ன.... ஏங்க சில பேரு இன்னும உவங்களுக்கு கொடி பிடிக்கிறாங்கோ..



Reply
#20
narathar Wrote:பெரியவர் ஒருவர் முன் நிலையில் மண விழா நடக்கலாம்,அதற்காக ஒரு சாதியில் பிறந்தவர் என்பதற்காக அவரைப் பெரியவர் என்பதா?இது சாதியம் ஆகாதோ?எதைக் கழிப்பது எதை விடுவது என்று தீர்மானிக்க என்ன நடக்குது என்று முதலில் தெரிய வேண்டாமா?எதோ எல்லாரும் செய்கினம் நாங்களும் செய்வம் எண்டா எப்படி தேவயில்லாததை விடுகிறது?
சமூக விழிப் புணர்வை உண்டாக்காமல் தனித்து எவ்வாறு ஒரு சமூக நிகழ்வைச் செய்வது?

நேற்று யாழில் ஒரு 'பெரியவருக்கு' எல்லாளன் படையால் ஏன் சூடு விழுந்தது தெரியுமோ? அது தெரின்ச்சால் ஒரு வரும் பிறப்பால் பெரியவர் இல்லை என்பது விளங்கும்.

சுடுவது சம்பந்தப்பட்டவர்களுக்கே பிடிக்காத விடயம்... அவர்களே இதைச் சொல்லி இருக்கிறார்கள்..இதனால் தாங்கள் பகைத்துக்கொண்ட மக்களின் எண்ணிக்கையையும் அவர்கள் கணக்கு வைத்துத்தான் இருக்கிறார்கள்...! சுடுவது இலகு...அதுதரும் பாதிப்பு என்பது மிகக் கடினமானதாகவும் மாறிவிடும்...!

மற்றையது சுடப்பட்டவர் இன்ன பிரிவினன் என்பதற்கானதாக இருக்காது...இன்ன குற்றத்துக்கானதாகத்தான் இருக்கும்...! இதற்குள் சமூகப்பிரிவினை வளர்த்தல் நல்லது அல்ல...! பிறகு அதே துப்பாக்கிகள் உங்களையும் குறி வைக்கலாம்..எதற்கும் இறுதியாக வந்த எல்லாளன் படை எச்சரிக்கையை வாசிங்கோ...!

ஒரு புரோகிதரை... ஒரு சமய நெறியாளனை...சபைக்கு நடுநிலையாளனாக எடுத்துக் கொள்வதால் உங்களுக்குள் என்ன தீமை நிகழ்ந்துவிடப் போகிறது...அதுவும் திருமணச் சபையில்...??!
அதை வருகை தரும் அத்தனை மனிதருக்குள் ஒரு சக மனிதனுக்கு வழங்கும் கெளரவப்படுத்தலாக நோக்குங்களன்..ஏன் அதற்குள் பிரிவினை வைக்கிறீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)