Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
<b>''வேத நான்கிலும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நமச்சிவாயவே"</b>
சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை. தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் அவற்றுக்கேயுரித்தான கலாசார பண்பாட்டு இயல்புகள் குன்றாத வகையில் வளர்த்த பெருமைக்குரிய மண் தமிழீழ மண் ஆகும்.
அந்நியராட்சிக்காலத்தில் சைவாலயங்கள் இடிக்கப்பட்டு சைவாலயம் அடிமைத்தளையினுள் சிக்கிக் கொண்டிருந்த காலத்தில், நல்லை நகர் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி மீண்டும் மேன்மையுறச் செய்தார்.அத்துடன், கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது யாழ். குடாநாட்டுக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வறுமை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அரைக்கிலோ அரிசிக்கும் கால்கிலோ பருப்புக்கும் எமது சைவசமயம்பேரம் பேசப்பட்ட நிலையும் யாழ் மண்ணில் நடைபெற்றிருக்கின்றது
"பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் இறக்கும்போது சைவசமயத்தவர்களாகவே இறப்போம் என்ற உறுதியுடன் செயற்பட்ட குடாநாட்டுக் கிராமங்களில் வாழும் ஏழைச் சைவமக்களை தமிழீழ மண்ணில் சைவசமய வரலாறு என்றும் மறந்துவிட முடியாது.ஆகவே, ஈழ மண்ணுடன் இரண்டறக்கலந்துவிட்ட சைவசமயத்தை ஒருபோதும் பிரிக்கமுடியாது என்பதை வரலாறு நன்கு உணர்த்தியுள்ளது. ஆனால், இவ்வாறு பல முனைப் போராட்டங்களின் உடாக எழுச்சியுற்ற சைவசமயத்தின்மேன்மையானது தற்காலத்தில் கனடாவில் பேணிக்காக்கப்படுகின்றதா என்பது கேள்விக்குரிய விடயமே என்பதை நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஈழ்த்தில் ஆறுமுகநாவலர் சைவ ஆகமங்கள் ஒப்பாத வழிபாட்டு முறைகளைக் கண்டித்தார். சிவனே முழுமுதற் கடவுள் என்றும் பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது என்பதும் அவரது வாதமாகும்.
கோயில்கள் ஆகம முறைப்படி அமைய வேண்டுமென்றும் அங்கு வேத பாராணமும் தேவார திருவாசகங்களும் படிக்கப்பட வேண்டும் என்றும் நாவலர் வற்புறுத்தினார்.சைவ சமயத்தில் நிலவிய சிறு தெய்வ வழிபாடு, வாண வேடிக்கை, பிறர் கவனத்தைக் கவர நகையலங்காரம், வர்ணப்பட்டாடை உடுத்தல், மாமிச போசனம், கள் குடித்தல் போன்ற ஆசாரக் குறைவுகளை ஆறுமுகநாவலர் கடுமையாகக் கண்டித்தார்.
<b>கடவுள் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் தனிப்பட்டவர்களால் கையாடப் படுவதை, பணம் பிடுங்கும் மோசடிகளை நாவலர் அம்பலப்படுத்தினார். கோயில் ஊழல்களை நாவலர் அம்பலப்படுத்திய விதம் 'கோயில் பூசாரியைத் தாக்கினேன் கோயில் கூடாது என்பதற்காகவல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகவிடக் கூடாது என்பதற்காவே" என்ற கலைஞர் கருணாநிதியின் பராசக்தி வசனத்தை நினைவு படுத்துவதாக இருந்தது என ஒரு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.</b>
<b>தூய சைவ சமயத்தை உயிரைப் பணயம் வைத்துக் காத்த எங்கள் முன்னோர்கள் கனடாவில் இன்றிருந்தால் ஆகமவிதிகளை முற்றாகப் புறந்தள்ளி, மூர்த்தி, தலம் தீர்த்தத்தைக் குழிதோண்டிப் புதைத்து சாராயக் குதங்கள், கிட்டங்கிகள், அங்காடிகள் வணிக நோக்கோடு, சீனர்களின் சமையலறை, பழைய மலகூடம் தனியார் கோயிலாக உருமாறி பணம் பறிப்பதைப் பார்த்து எந்தச் சுவரில் போய் முட்டுவது என்பது தெரியாமல் திண்டாடி இருப்பார்கள்!</b>
<b>யார் ஆறுமுக நாவலரைத் தூற்றினாலும், அவர் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்த தொண்டு அளப்பரியது, ஆறுமுகநாவலரின் கோபம் முதலில் சைவக் கோயில்களில் ஆகமவிதிப்படி பூசை செய்யத் தெரியாத பிராமணர்கள் மீது திரும்பியது. சைவசமயக் குருமாரிடம் சைவாகம அறிவும், நல்லொழுக்கமும், சிவதீட்சையும், சிவபக்தியும் அருகிக் காணப்பட்டமை சைவத்தின் அலங்கோலத்திற்கும் சீரழிவுக்கும் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.</b>
சைவக் குருமார் போலல்லாது கிறித்த மதத்தைப் பரப்ப வந்த பாதிரிமார்கள் வேதத்தை நன்கு கற்றவர்களாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும், தொண்டுள்ளம் படைத்தவர்களாகவும் இருப்பதை நாவலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
<b>நாவலர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்</b>
"சைவசமயிகளே! கிறித்து சமய குருமாராகிய பாதிரிமார்கள் தங்கள் பாஷைகளையும் அதற்கு மூல பாஷைகளையும் இலக்கண இலக்கிய கணித தருக்க பூகோள காகோளாதிகளையும் தங்கள் சமய நு}ல்களையும் படித்துத் தெர்ந்து பரீட்சையிற் சித்திபெற்ற நெடுந்து}ரத்தினின்றும் இங்குவந்து, நம்முடைய தேச பாஷைகளையும் நீதி நு}ல்களையும் சிறிதாயினும் கற்றுப் பிரசங்கிக்கிறார்களே!
<b>உங்கள் சமய குருமாருள்ளே சிலரொழிய, மற்றவர்கள் அந்தியேட்டிப் பட்டோலைதானும், இன்னுஞ் சொல்லின் அந்தியேட்டியென்னும் பெயர்தானும் பிழையற எழுத அறியார்களே! கெட்டி! கெட்டி!! </b>
சிவாகமத்தில் ஒரு சுலோகமாயினுந் தேவார திருவாசகங்களில் ஒரு பாட்டாயினுந் திருவள்ளுவரில் ஒரு குறளாயினும் அறியாத<b> மனிதப் பதர்களுஞ் சைவசமய குருமாராம்! </b>
கண்ட இடங்களிலும் காசுக்காக விநாயகக் கடவுள் விக்கிரமமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரமுஞ் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவ முதலியன செய்கின்ற அதிபாதகர்களுஞ் குருமாராம்! (இன்று கனடாவில் நடப்பதை ஆறுமுகநாவலர் காண நேர்ந்தால் தலையில் அடி அடி என்று அடித்துக் கொள்வார் என நிச்சயம் நம்பலாம்!)
சமண சமயக் கடவுளாகிய அருகன் மேலே பாடப்பட்ட திருநு}றென்பதற்கும் நிருநீறென்பதற்கும் பேதம் தெரியாமலும் திருநு}ற்றந்தாதியிலே விபூதியின் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் ஒரு புத்தகம் வாங்கித் தரமாட்டீரா என்கின்ற <b>அசேதனதிலகர்களுஞ் சைவசமய குருமாராம்!</b>
'மாணிக்கவாசகர் பாடின திருவாசம் ஒன்று வாங்கினேன், அவர் பாடிய தேவாரம் ஒன்று வாங்கித் தரமாட்டீரா" என்கின்ற <b>மூடசனேந்திரர்களுஞ் சைவசமய குருமாராம்!</b>
'பரமசிவனுடைய ஐந்து முகங்களுள்ளே ஈசான முகம் ஊர்த்துவ முகமென்று சொல்லியிருக்கின்றதே! ஊர்த்துவ முகமாவது அண்ணாந்து கிடக்கின்ற முகமாமே! அப்படியானால் அபிசேகம் பண்ணும் பொழுது தீர்த்தம் மூக்கினுள்ளே போமே! போனால் சுவாமிக்குச் சலதோஷம் கொள்ளுமே! யாது பண்ணலாம்" என்கின்ற <b>அஞ்ஞான சிரோண்மணிகளுஞ் சைவமய குருமாராம்!"</b>
<b>நீங்கள் வருத்திச் சம்பாதித்துக் கொடுக்க அவர்கள் எளிதில் வாங்கி உண்டுடுத்துக்கொண்டு வெட்கம் சிறிதுமில்லாமல் மாப்பிள்ளை மாடுகள் போலத் திரிகின்றார்களே" (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு - யாழ்ப்பாணச் சமயநிலை) </b>
கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு இதனை வேறு யாரோ படிக்கக் கேட்டால் ஈ.வே.ரா. பெரியார்தான் இப்படி இந்து குருமார்களைத் திட்டுகிறாரோ என்ற ஐயம் மனதில் எழும்!
இது சைவத்தையும், தமிழையும் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வளர்த்த ஆறுமுக நாவலர் கூறியது.<b> புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் இப்படியான ஆகமவிதிக்கு அமையாத இடங்களைக் கோயிலென்று போய், சைவாகமங்களை மதிக்காத போலிக்குருமாரை ஆதரித்துப் பாவத்தைத் தேடி சிவநிந்தனை செய்கின்றோம் சிந்தியுங்கள்.........</b>
நன்றி: தமிழ்நாதம்- கனடா
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
உந்த ஆறுமுகநாவலர் காலத்து நிலமையை விட எங்கட கோயில்கள் இப்ப கேவலம். வேறு எந்த மதத்தின் புனித வழிபாட்டுத்தலங்களில் banner கட்டி plasma tv வைச்சு விளம்பரம் போடீனம்?
கேயிலுக்கு வந்திருக்கிற பெரும்பான்மையான பக்த்தர்களின் கதைகளையும் அவை போட்டிருக்கிற உடுப்புகளையும் பாத்தா அவை வழிபட வந்தவை மாதிரியே இருக்கு.
வழிபாட்டுத்தலத்தில கைய்யடக்க தொலைபேசி பாக்கிறவை என்ன செய்யிறது? :evil:
எல்லாத்துக்கும் முதல் உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் 5$ அருச்சனை 500$ அபிசேகம் எண்டு செய்வினமோ? என்ன appointment வைச்சு fees கட்டி ஜய்யர்மாருக்கால கடவுளோட கதைக்கிறயள் எண்டு நினைப்பா? :roll:
காணிக்கை நேர்த்திக்கடன் எண்டு கொண்டுவந்து கண்மண் தெரியாமல் குடுக்கிறயள். கடின உழைப்பால் நீங்கள் நேர்மையாக பெற்ற காசில் கடவுள் என நீங்கள் நம்பும் ஒருவர் பங்கு கேப்பாரா? ஊரில சனம் ஒழுங்கான சாப்பாடு வீடு இல்லாமால் ஒழுக்கு கெட்டில்களில் அவதிப்படுது. நீங்கள் இஞ்சை imported தேர் இழுக்குறியள். கருங்கல்லுகளை கடவுள் எண்டு import பண்ணி பால் பழம் கொட்டி அபிசேகம் எண்டு விரயமாக்கிறயள்.
சும்மா குருக்கள்மாரை மாத்திரம் குறை சொல்லாதேங்கோ உங்கட முதுகில இருக்கிற அழுக்கை பாத்து எடுங்கோ. குருக்கள் மாருக்கு வேறு வழியில்லாமல் மற்றவை மாதிரி உழைச்சு வாழவேண்டியது தான்.
உண்மையாக மக்களின் நலன்களில் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் தனி ஒரு தரப்பினரை மாத்திரம் ஓரம் கட்டி குறைபிடித்து குற்றஞ்சாட்டமாட்டார்கள். உவையளுக்கு தாங்கள் குருக்கள் மாதிரி உழைக்கமுடியேல்லை எண்ட கவலை தான். உவைமாத்திர குருக்கள்மாரின்ரை நிலமையில இருந்தால் மக்களை இன்னும் நல்லா கொள்ளையடிப்பினம்.
இனவாதிகளாக முதலைக்கண்ணீர் விடுவதை நிறுத்திவிட்டு சமுதாய சீர்திருத்தக்கு வேண்டிய நாம் ஒவ்வெருவரும் உள்நோக்கி (எம்மை நோக்கி) கேக்க வேண்டிய கேள்விகளிற்கு உதவுங்கள்.
தாயகத்தின் நிலமைகளை கருத்தில் கொண்டு புலத்தில் million dollars செலவில் ஆடம்பரமான கோயில்களும் தேர்களும் எமக்கு தேவை தானா?
மன ஆறுதலுக்கு எமது கலாச்சாரம் பண்பாட்டை பேண ஒரு எழிமையான வழிபாட்டுத்தலம் போதாதா?
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
நன்றே சொன்னீர் குருக்கல...
ஐந்து லட்ச அர்சனை ஆறு லட்ச அர்சனை என்று தேவையா? அத்துடன் ஒரு கோயிலில் ஒரு தேரா இழுக்கினம். ஒரு மாதத்துக்கு ஒரு தேர் எல்லோ. முருகனுக்கு ஒரு மாதம் சிவனுக்கு ஒரு மாதம் அம்மனுக்கு ஒரு மாதம்.
அன்று ஒரு நாள் ஒரு சிறு ஒழுங்கைக்குள் காரை திருப்பும்போது அங்கே செல்வச் சந்நதி கோவில் என்று ஒரு போர்ட். தாயகத்தில் உள்ள பிரசித்தம் பெற்ற கோயில்கள் எல்லாம் இங்கு சிறுசிறு ஒழுங்கைக்குள். அங்கலை கொஞ்ச தூரம் போய் பார்த்தால நல்லூர் முருகனாம். அந்தக் கோவில்கள் எல்லாம் ஒரே விசேட புiஐ தான். அதுவும் சமர் காலங்களில் தான் கூடுதலான விசேட புiஐ வருமாம்.
அந்த கோவில்களையோ விசேட புiஐகளையோ ஒழுங்கு செய்வது ஐய்யர் மார்கள் இல்லை. அந்த நிர்வாகத்தில் உள்ள சாதரண மனிதர்கள் தான். அவர்களின் இஷ்டப்படி நடந்தால் தானே குருக்களுக்கு காசு.
குருக்கள் என்ன உங்கள் வீட்டில் வந்து கதவு தட்டியா கேட்கின்றார் கோயிலுக்கு வாருங்கள் இந்தப் புiஐயை செய்யுங்கள் என்று. கோயிலுக்குப் போனால் அர்சனை செய்யவேண்டும் என்று அவசியமா? நீங்கள் அர்சனை செய்யவிட்டால் கோயிலுக்குள் உள்ளே அனுமதிக்க மாட்டார்களா?
குருக்கால.... சொன்னமாதிரி உங்களை நீங்கள் திருத்துங்கள். அவர்கள் தானகவே திருந்துவார்கள்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
எனக்குத் தெரிந்து புலத்தில காசு உழைக்க நல்ல பிஸினஸ் கோவில் ஒண்டுதான். நோகாம காசு வரும்.சும்மா குந்தி இருக்க உண்டியல் நிறையும். நல்லூர் கந்தன் வந்து என்ர பேரப் பாவிக்கிறா எனக்கும் பங்கு தா எண்டா கேக்கப் போறார்.இப்ப பிஸினஸில போட்டியில இங்க வந்து குழறுகினம் சைவத் தமிழரே எண்டு, உந்த சாதி வெறியரெல்லாம் சமூகத் தொண்டு செய்யினமாம்.புலத் தமிழரே எப்போது விழிப்பீர்.உமக்காக உதிரத்தால் வரலாறு எழுதும் உங்கள் உண்மை மனித தெய்வங்களுக்கு வழங்கிடுங்கள் உங்கள் நிதியைய்.தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை நீங்கள் இந்த வியாபாரத் தலங்களுக்குச் சென்றா வழிபட வேண்டும்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
என்ன நாரதரே.. நல்லூரிலயா கனடா கோயில்களிலா சாதிவெறி? தொண்டர் சபையினர்தான் சாமி தூக்கலாம் என்று சாதிய பவுத்திரப்படுத்துவது அங்கா அல்லது கனடாவிலா?!
.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
யார் குத்தினாலும் அரிசியாகினால் சரி. பார்ப்பான்களை மட்டும் குறை சொல்ல முடியாது. அவர்களுக்குப் பந்தம் பிடித்து அவர்களுடன் கூட்டுக் கொள்ளியடிக்கிற தமிழர்கள் நிறைய உண்டு. சாதாரண தமிழர்கள் இதையெல்லாம் சிந்திக்கக் கூடாது. ஓவ்வொரு பழைய கடையிலும், மலகூடங்களிலும் கோயிலகள் தேவையா? வட இந்தியர் ஒன்றிரண்டு கோயில்களை மட்டும், ஆன்மீகத்துக்காக மட்டுமல்லாமல், தமிழரின் கலாச்சார நிலையங்களாக, தமிழரின் கட்டடக் கலையைக் காட்டும் எடுத்துக் காட்டாக வைத்திருக்கக் கூடாது. இங்கு ஆளுக்கொரு பெட்டிக்கடை மாதிரி, ஆளுக்கொரு கோயில், அதை விட சுத்துமாத்தும் கூட.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இதைத் தான் நாழும் சொல்கின்றோம் ப்ரிதி. இந்த குறைகளை முதலில் தீர்த்து விட்டு பிறகு குருக்களின் விசயத்துக்குப் போங்கள். முதலில் தேவையில்லா இடங்களில் கோயில் கட்டுவதை தடுக்க முயற்சி செய்யுங்கள்.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
sOliyAn Wrote:என்ன நாரதரே.. நல்லூரிலயா கனடா கோயில்களிலா சாதிவெறி? தொண்டர் சபையினர்தான் சாமி தூக்கலாம் என்று சாதிய பவுத்திரப்படுத்துவது அங்கா அல்லது கனடாவிலா?!
எல்லா இடமும் தான் சோழியன், நான் அங்கு மட்டும் என்று கூறவில்லை,இங்கே களத்திலிம் தானே நீங்கள் படிக்கவில்லயோ?எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது. :wink:
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
புலத்தில் நான் சாதிவெறியைக் காணவில்லை.. இங்கே ஐயாவைத் தவிர ஏனையவர்கள் யாபேரும் சமமாகத்தான் நடாத்தப்படுகிறார்கள். ஐயாமாரும் இங்கே சாதிப் பாகுபாடு காட்டுவதைக் காணமுடியவில்லை.. தாயகத்தில் ஐயாமார் திவசம் போன்றவைகளுக்காக சிலரது வீடுகளுக்குச் செல்ல மறுக்கும் நிலை இங்கே இல்லை.
ஆனால் புலத்திலுள்ள ஆலயங்களில் சாதி வெறிக்குப் பதிலாக படாடோப வெறியைத்தான் பார்க்க முடிகிறது. அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பானாம். அதைத்தான் பலர் ஆலயங்களில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் பல ஆலயங்களுக்கு பணமுழுக்கு நிகழ்ந்து, நூறு டொலருடன் அகதியாக வந்தவனெலஈ்லாம் இன்று கோடீஸ்வரர்களாக மாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது்
புலத்தில் வெற்று மேலுடன் செல்லும் பக்த கோடிகள்தான் எத்தனை ஆயிரம்.. ஆகா.. இவன்களெல்லாம் கழுத்தில் எத்தனை வளையங்களை பவுணால் போட்டிருக்கிறோம் என்று காட்டி மனம்மகிழ பக்தி ஒரு போர்வை. அவங்க பெண்டாட்டிகளோ.. கழுத்தில் இடைவெளி இல்லாதவாறு பவுண் அடுக்கல்கள்... உண்டியலில் காணிக்கை செலுத்தும்போதும் தேர் போன்ற பெரும் எண்ணிக்கையானவர்கள் உள்ளபோது தாராளச் செலுத்துதல்கள்.. ஆக, இங்கே படாடோப வெறிதான் ஆலய வளர்ச்சிக்கும் புதிய வருகைக்கும் உதவுகிறதே தவிர, சாதிவெறி அல்ல.
ஊரில்கூட, வேளாளன் எனப்படுபவன் பிராமணனுக்கு உதவியாக நின்றானே ஒழிய, வேளாளன் ஆலயத்தில் சாதியை தூண்டவில்லை. அவ்வாறு பார்த்தாலும், ஆலயப் பிரவேசங்கள் கூட்டணியின் தேர்தல் காலங்களில் நிகழ்ந்தபோதெல்லாம் முன்னின்று போராடியவர்களில் பெரும்பகுதியினர் வெள்ளாள இளைஞர்கள்தான்.. நடந்தது என்ன? ஆலயப்பிரவேசம் நிகழ்ந்தது.. ஆனால் ஐயாமார் கொடிக்கம்பத்திலிருந்து மூலஸ்தானம்வரை கம்பி வேலிபோட்டு, வெள்ளாளனையும் வெளியேவிட்டு, அதற்குள் நின்றுகொண்டார்கள்.
இத்தனைக்கும், தாயகத்தில் ஆலய வருமானத்துக்கென வயல், தோட்ட காணிகளை ஆலயத்துக்காக தானமாக ஈந்துள்ளவர்களும் வெள்ளாளர்கள்தான்.
.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
Quote:<b>எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது.
</b>
என்ன நாரதரே, சாதி வெறியைப் பற்றி இங்கு கதைத்துக் கொண்டே, இன்னொரு சாதிக்கு மட்டும் வக்காலத்து வாங்கினீர்கள். இந்த இணையத் தளத்திலுள்ள பலருக்குத் தங்களின் கொள்கையை விட, இங்குள்ள Chat Friends உடன் கோபமில்லாமல் இருப்பது தான் முக்கியம். இந்தப் பந்தம் பிடிக்கிற குணத்தால் தான் தமிழன் இந்த நிலையில் உள்ளான்.
<b>பார்ப்பன சாதியொன்று தான் கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காது, சாதி அடையாளங்களை மிகவும் பத்திரமாக, எந்தச் சாதியையும் விடத் தங்களின் சாதி அடையாளங்களைப் பேணிபாதுகாத்துக் கொண்டு வருகிறது, அதுவும் எங்களின் செலவில்.</b> இங்குள்ள சிலர் நான் இப்படிக் கதைப்பதால், நான் குறைந்த சாதிக்காரர் என்பது போலவும் நக்கல் விட்டார்கள். FYI, எனக்குச் சாதியில் நம்பிக்கை இல்லாது விட்டாலும் கூட, பிறப்பினால், நான் ஒரு கலப்பில்லாத, யாழ்ப்பாணச் சைவ வேளாளத் தமிழன். பார்ப்பானெல்லாம், தன்னுடைய சாதியைப் பற்றி " நான் பிராமணன் " என்று பெருமையாகப் பேசும் போது, வெட்கமில்லாமல், அவனுக்குப் பலர் இங்கு ஜால்ரா போட்டார்கள்.
சிலர் ஏதோ சைவம் மட்டும் தான் இலங்கையில் சாதியைக் கடைபிடிப்பது போல் கதைக்கிறார்கள், உதாரணமாக கரம்பொன் அல்லது பணடத்தரிப்புக் கத்தோலிக்க வெள்ளாளரும், பாசையூர்க் கத்தோலிக்கத் தமிழரை மணம் செய்யப் போவதில்லை. அதனால் சாதி எல்லாச் சமயத்தினரிடமுண்டு. சைவம் மட்டும் விதிவிலக்கல்ல. ஒரு சாதியை மட்டும் அடிப்படையாக, சாதியை மட்டும் அத்திவாரமாகக் கொண்ட, தங்களைத் தமிழர் என்றே கருதாத ஒரு ஒட்டுண்ணிக் கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் எவருக்கும், சாதியைக் குறை கூற அருகதை கிடையாது.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
என்ன இது... கோயில்களில் தொடங்கி இப்போ சாதியில் வந்து நிற்கின்றது உங்கள் கருத்துக்கள். சாதியைப் பற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு கதைப்பது அர்த்தமற்றது.
Posts: 115
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
RaMa Wrote:என்ன இது... கோயில்களில் தொடங்கி இப்போ சாதியில் வந்து நிற்கின்றது உங்கள் கருத்துக்கள். சாதியைப் பற்றி புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து கொண்டு கதைப்பது அர்த்தமற்றது.
<b>எங்கெங்கு சைவம்,இந்துத்துவா வெறி உள்ளதோ அங்கெல்லாம் சாதிய வெறி தானே தழைத்து ஓங்குகிறது</b>
அது நாரதரின் மேற்குறிப்பிடுள்ள செய்திக்கு என்னுடையபதில்,
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
preethi Wrote:சிலர் ஏதோ சைவம் மட்டும் தான் இலங்கையில் சாதியைக் கடைபிடிப்பது போல் கதைக்கிறார்கள், உதாரணமாக கரம்பொன் அல்லது பணடத்தரிப்புக் கத்தோலிக்க வெள்ளாளரும், பாசையூர்க் கத்தோலிக்கத் தமிழரை மணம் செய்யப் போவதில்லை. அதனால் சாதி எல்லாச் சமயத்தினரிடமுண்டு. சைவம் மட்டும் விதிவிலக்கல்ல.
தமிழ் கத்தோலிக்கர் சாதிவெறி பிடித்தவர்களாக இருப்பது உண்மை. ஆனால் கத்தோலிக்க சமயமோ, அல்லது எந்த கிறிஸ்தவ சமயமோ, சாதியை சமயத்தின் வழியாக வளர்க்கவில்லை. மாறாக சைவசமயம் (ஆறுமுகநாவலரின் சைவசமய வழிமுறைகளை பாருங்கள்) சாதியை சமயத்தின் பகுதியாக வளர்க்கிறது. கிறிஸ்தவ சமயங்கள், சமய போதனையின்படியும், அதை வளர்த்தவர்களின்படியும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமயங்கள்.
கிறிஸ்தவர்கள் சாதிப்பாகுபாடு காட்டும் ஒவ்வொரு முறையும், தமது சமயத்துக்கு மாறாக நடக்கிறார்கள். அதை தெரிந்தே செய்கிறார்கள். தாம் செய்வது தவறு என்பது அவர்களுக்கு உறுத்திக்கொண்டே இருக்கும். மாறாக சைவசமயிகளுக்கோ ஆறுமுகநாவலர் சொல்லிக்கொடுத்தது போல சாதிப்பாகுபாடு காட்டுவது சமயத்தை பின்பற்றும் சிறந்த வழிமுறைகளுள் ஒன்றாகும்.
<img src='http://www.wischik.com/irene/cross/12-small.jpg' border='0' alt='user posted image'>
<b>புரட்சிக்காரனாக கொல்லப்பட்ட கிறிஸ்து.</b>
<img src='http://www.jaffnacentral.com/images/navalar.gif' border='0' alt='user posted image'>
<b>சாதியை வளர்த்த சைவசமய தலைவர்</b>
இந்த சாதிவெறியை வளர்க்கும் சமயக்கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் விட்டுவிட்டு ஏன் ஈழத்தமிழ்மக்கள், ஈழத்தமிழ் மக்களின் வாழும் தெய்வத்துக்கு கோவில் கட்டி வழிபடக்கூடாது? உண்டியல் பணத்தை போர்க்களத்தில் வாடும் அகதிகளுக்கு கொடுக்கலாமே?.
<img src='http://www.eelavision.com/gallery/5001-8468.jpg' border='0' alt='user posted image'>
<b> ஈழத்தமிழ்மக்களின் வாழும் தெய்வம்</b>
<img src='http://www.karthikai27.com/image/child.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு தலைப்பில் உரையாடும்போது.. தாயகத்தையும் போராட்டத்தையும் அதற்குள் புகுத்துவது கேலிக்குரியது. இதைப் பல புகலிட ஊடகங்களும் செய்தன, செய்துவருகின்றன தமது கபடங்களை மறைப்பதற்காக.
கத்தோலிக்கத்திலும் தசமபாகம் எனும் முறையில் மக்களிடம் பணம் பெறுவது நிகழ்கிறதுதான். மேற்குலக நாடுகளில் அவர்களது சம்பளப் பணத்திலிருந்து 'தேவாலய வரி'யாக அறவிடப்படுகிறது.
ஆனால்.. சைவமானது நீ ஆலயத்துக்கு வா.. உண்டியலில் பணம்போடு.. கட்டாயம் அர்ச்சனை செய்.. என்று எங்கு வற்புறுத்துகிறது?
சுத்தமாக வா.. கந்தையானாலும் கசக்கிக் கட்டிக்கொண்டு வா என்றுதான் கூறுகிறது.
ஆறுமுகநாவலர் சைவம் அந்நிய சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டபோது சில நூல்களை எழுதி சைவத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாரே ஒழிய, அவரை சமய குரவராக சமயம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அல்லவே! சமயம் சாதியை வளர்த்தது என்றால், நந்தனார் கதையும், கண்ணப்பநாயனார் கதையும் அதற்குள் ஏன் புகுந்துகொண்டன?
ஈழத்தில் குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட தேவாலயங்கள் இயங்கியதை யூட் அறியவில்லைப்போலும்.. தெல்லிப்பளை இளவாலைவாசிகளைக்கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!
.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
sOliyAn Wrote:ஒரு தலைப்பில் உரையாடும்போது.. தாயகத்தையும் போராட்டத்தையும் அதற்குள் புகுத்துவது கேலிக்குரியது. இதைப் பல புகலிட ஊடகங்களும் செய்தன, செய்துவருகின்றன.
தலைப்புக்கு சம்பந்தமானதாக இருக்கும் வரை போராட்டங்களை பற்றி எழுதுவது சரியானதே. கிறிஸ்து அந்த நாட்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சிக்காரன். ரோமருடைய ஆதிக்கத்துக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கு துணைபோன யுூத மேல்சாதியினருக்கும் எதிராக புரட்சி செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு புரட்சிக்காரன் கிறிஸ்து. இன்று கிறிஸ்துவின் பெயரால் ஒரு சமயம் இருக்கிறது. கிறிஸ்துவை மக்கள் வழிபடுகிறார்கள்.
ஈழத்தமிழ் மக்களுக்கு வாழும் தெய்வங்களாகவும் உயிர் கொடுத்த தெய்வங்களாகவும் இருப்பவர்களை வழிபடுங்கள் என்று ஈழத்தமிழ்மக்களின் சமயம் பற்றிய தலைப்பின் கீழ் எழுதுவது மிகப்பொருத்தமானது.
sOliyAn Wrote:தமது கபடங்களை மறைப்பதற்காக.
கத்தோலிக்கத்திலும் தசமபாகம் எனும் முறையில் மக்களிடம் பணம் பெறுவது நிகழ்கிறதுதான். மேற்குலக நாடுகளில் அவர்களது சம்பளப் பணத்திலிருந்து 'தேவாலய வரி'யாக அறவிடப்படுகிறது.
ஆனால்.. சைவமானது நீ ஆலயத்துக்கு வா.. உண்டியலில் பணம்போடு.. கட்டாயம் அர்ச்சனை செய்.. என்று எங்கு வற்புறுத்துகிறது?
சுத்தமாக வா.. கந்தையானாலும் கசக்கிக் கட்டிக்கொண்டு வா என்றுதான் கூறுகிறது.
இதோடு சாதி இத்தனை வகை. இந்த சாதி தான் உயர்வானது. இந்த சாதிதான் கர்ப்பகிரகத்துள் வரலாம். இந்த சாதி கோவிலுக்குள்ளேயே வரக்கூடாது என்றும் சொல்கிறது.
sOliyAn Wrote:ஆறுமுகநாவலர் சைவம் அந்நிய சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டபோது சில நூல்களை எழுதி சைவத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாரே ஒழிய, அவரை சமய குரவராக சமயம் ஏற்றுக் கொண்டிருக்கிறதா? அல்லவே! சமயம் சாதியை வளர்த்தது என்றால், நந்தனார் கதையும், கண்ணப்பநாயனார் கதையும் அதற்குள் ஏன் புகுந்துகொண்டன?
நல்ல கேள்வி. தாம் தாழ்த்தி வைத்த சாதியில் உள்ளவர்களும் நிறையவே சமய நம்பிக்கையுடன் செயற்பட்டால் அவர்கள் தாழ்ந்த பிறப்பென்றாலும் ஒரு வேளை விமோசனம் கிட்டலாம் என்று காட்டத்தான் இந்த கதைகள். இல்லாவிட்டால் தாழ்த்தப்பட்ட எல்லாமக்களும் சைவசமயத்தை கைவிட்டுவிடுவார்கள் அல்லவா? இந்த கதைகள் சங்கராச்சாரியார் தலித் மக்களை ஆசீர்வதிப்பது போன்றது.
sOliyAn Wrote:ஈழத்தில் குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட தேவாலயங்கள் இயங்கியதை யூட் அறியவில்லைப்போலும்.. தெல்லிப்பளை இளவாலைவாசிகளைக்கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!
கத்தோலிக்கர் மத்தியில் சாதிவெறி உள்ளது உண்மை. நான் ஏற்கனவே அதை எழுதியிருக்கிறேன். படித்துப்பார்க்காமல் பதில் எழுதலாமா?
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
என்ன நாரதர் நாங்கள் பிழைக்கிறதுக்கு ஒரு வழி வைச்சிருந்தால் அதைக்கெடுக்கிறதுக்கு நீங்கள் ஏன் முயற்சி செய்கின்றீர்கள்?
தெரியாமல் கேட்கிறன் நாங்கள் இந்த மோட்டுச்சனத்தை( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) சமயம் அது இது பேய் பிசாசு எண்டு மோத்தி பிழைக்க முயற்சி செய்தால் ஏன் எங்கடை வாயிலை மண்ணை போடுறியள்?
இப் ஐரோப்பாவிலை தொழிற்சாலையளை புூட்டுகினம். நல்ல வசதியாப்போச்சு எங்களுக்கு அதை வருசக்கணக்கிலை குத்தகைக்கு எடுத்து நாங்கள் கோவிலாக்கி புனிதப்படுத்துகிறம்
நம்மடை மாக்களும் அதை கோவில் என்று நம்பிக்கொண்டு உண்டியலிலை யோசிக்காமல் காசை போடுகினம்
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
ம்...
புலத்தில் சாதியம் கோவில்களில் இல்லை ஏனென்றால்,எல்லார்ட்ட காசும் வேணும் அல்லோ.பிறகு மாக்கற்றப் பிடிக்க எலாது அல்லோ.
அதுக்காக சாதியமே இல்லை என்று சொல்ல ஏலுமே?கலியாணங்கள் பேசுறதும், காதல்கள் பெற்றோர்களினால எதிர்க்கப் படுவதற்கும் சாதிய அடிப்படைகள் இல்லயோ?
சாதியம் எங்க இருந்து வந்தது வர்ணாச்சிரமத்தில இருந்து அல்லோ? வர்ணாச்சிரமம் எந்த சமயத்தில இருக்கு?
கிரித்துவர்களும்,பொவுத்தர்களும் தமது சமய அடிப்படைகளுக்கு முரணாகவே சாதியத்தை அமுல் படுத்துகின்றனர்.இது எந்த அளவுக்கு சாதியம் தமிழ்/சிங்கள சமூகங்களுக்குள் ஊடுருவி உள்ளது என்பதைக் காட்டுகிறது.
வேளாளர் தான் சாதியத்தை யாழ்ப்பாணச் சமுகத்தில் அமுல்படுத்தியவர்கள் என்பதை மறைப் பது ,எதனால்?சாதீய அபிமானத்தால் இல்லயோ? ஒரு சிலர் எதிராக இருந்தனர் அதற்காக சாதியம் அமுல்படுத்தப் படவில்லை என்பது,ஒரு சில சிங்களவர் பொவுத்த பேரினவாதத்திற்கு எதிராக இருந்தனர் ஆகவே சிங்களவர் பொவுத்த பேரின வாதிகள் இல்லை என்று வாதிடுவதற்குச் சமன்.
எனக்கு சரி என்பதை சரி என்கிறேன்,பிழை என்பதை பிழை என்கிறேன் இங்கு எவருக்கும் வக்காலத்து வாங்குவதற்கோ அல்லது எது எனது சமயம் ,சாதி என்கின்ற நிலைகளுக்குள் நின்று கொன்டு நான் கருத்து எழுதவில்லை.அப்படி எழுதுவதானால் நான் வேறு விதமாகத் தான் எழுத வேண்டும்.ஆகவே வரலாற்று உண்மைகளை மறைக்காமல் உண்மை பேசுவோம்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
Quote:தலைப்புக்கு சம்பந்தமானதாக இருக்கும் வரை போராட்டங்களை பற்றி எழுதுவது சரியானதே. கிறிஸ்து அந்த நாட்களில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சிக்காரன். ரோமருடைய ஆதிக்கத்துக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கு துணைபோன யுூத மேல்சாதியினருக்கும் எதிராக புரட்சி செய்ததற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு புரட்சிக்காரன் கிறிஸ்து. இன்று கிறிஸ்துவின் பெயரால் ஒரு சமயம் இருக்கிறது. கிறிஸ்துவை மக்கள் வழிபடுகிறார்கள்.
ஈழத்தமிழ் மக்களுக்கு வாழும் தெய்வங்களாகவும் உயிர் கொடுத்த தெய்வங்களாகவும் இருப்பவர்களை வழிபடுங்கள் என்று ஈழத்தமிழ்மக்களின் சமயம் பற்றிய தலைப்பின் கீழ் எழுதுவது மிகப்பொருத்தமானது.
தாயகப் போராட்டத்தை புகுத்துவதனால் சிலவற்றுக்கு விளக்கமளிக்கவென கருத்துகளை முன்வைக்கும்போது, அது போராட்டத்தையே கொச்சைப்படுத்தலுக்கு உள்ளாக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது. ஆகவே, பலர் தமது கருத்தை நிலைநாட்டும் நோக்கில் ஏனையவர்களை மெளனிகளாக்கும் விதத்தில் தாயகம், போராட்டம், மாவீரர்கள் என்று இழுப்பது இங்கு சர்வ சாதாரணம். அதுதான் சமயத்துள் போராட்டம் வேண்டாம் என்றேன்.
யேசு புரட்சிக்காரனா என்பது வேறுவிடயம்.. ஆனால் அவரும் அப்பத்தின் பகிர்வு, நீரின்மேல் நடப்பு, இறந்தவனது உயிர் மீட்பு போன்ற ஜாலங்களால்தான் மனிதரை ஈர்த்தார்.
வேதாகமத்தில் உள்ள வசனங்களை பகுதியாகவோ முழுமையாகவோ மாற்றக்கூடாது எனக் கூறப்படும்போது, இன்றைய வேதாகமத்தில் சில அத்தியாயங்களே மறைக்கப்பட்டுள்ளன. முடிந்தால் அவைகளை எடுத்து இங்கே போடுங்கள். கருத்தாடல் முழுமையாக இருக்கும்.
Quote:இதோடு சாதி இத்தனை வகை. இந்த சாதி தான் உயர்வானது. இந்த சாதிதான் கர்ப்பகிரகத்துள் வரலாம். இந்த சாதி கோவிலுக்குள்ளேயே வரக்கூடாது என்றும் சொல்கிறது
எங்கும் இப்படிக் கூறப்படவில்லை. கிறீஸ்தவத்தை வேதாகமத்துள் தேடுவதுபோல, இந்தவரிகள் எங்காவது உள்ளதா என இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் போன்ற நான்னு வேதங்களிலும் தேடிக் காட்டுங்கள்... அப்போது உங்கள் புலுடாவை உண்மை என மற்றவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
சைவ சமயமானது ஒரு மனிதனது வாழ்வை நெறிப்படுத்தும் மதம். வாழ்வு நெறியை கதைகளின் மூலம் அவ்வப்போது அடியார்கள் விளங்கப்படுத்தினார்கள். செவி வழிவந்தவை கூட்டியோ குறைத்தோ பரப்பப்பட்டிருந்தாலும், அடிப்படையான வேதங்கள்தான் சமயத்தின் உண்மையை வெளிப்படுத்துபவை. ஆகவே அவற்றை கற்றறிந்துவிட்டு சமயத்தை விமர்சிக்க ஆரம்பியுங்கள்.
"வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே!!!"
.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'>என்னது யுட் ஆறுமுக நாவலர் சாதியை வளர்த்தாரா??? </span>விட்டா வரலாற்றையே மாத்திபோடுவீர் போலை கிடக்கு அது சரி சாதி மதத்தை பற்றி கதைக்கேக்கை அதுக்கை ஏன் ஈழ போராட்டத்தை இழுக்கிறீர் அதுக்கை ஈ;ழபோராட்டத்தை இழுத்தா நீர் சொல்லுறதெல்லாம் சரியெண்டாகி விடாது. முதலில் ஆறுமுக நாவலர் சாதியை வளர்தார் எண்டுறத்திறகு ஆதாரங்களை தாரும். நான் அவர் சைவத்தையும் தமிழையும் தான் வழர்த்தார் எண்டிறத்திற்கு ஆதாரங்களைத்தாறன்
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
[quote=sathiri]<span style='font-size:30pt;line-height:100%'>என்னது யுட் ஆறுமுக நாவலர் சாதியை வளர்த்தாரா??? </span>
நீங்கள் எந்த ஆதாரத்தையும் தரத்தேவையில்லை. காரணம் நீங்கள் தாம் வரலாற்றை மாற்ற முற்படுகின்றீர்கள். சாதி தமிழ் மக்கள் மத்தியில் எப்படி வந்தது, எப்படி வளர்கிறது என்பது நன்கு அறியப்பட்ட விடயம். இதில் ஆறுமுகநாவலரின் பங்கு தங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆகவே அவர்பற்றிய கட்டுரை பகுதியும், இணைப்பும் கீழே தரப்படுகின்றது.
"சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினர் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். 'முதலாம் சைவ வினாவிடை' எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு "யோக்கியர்களல்லாத சாதியர்கள்" என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக்கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் "உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்" என்றும் "நான்காம் பால பாடம்" எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்."
ஈழத்தின் சைவ எழு ஞர்யிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) - பெ. சு. மணி -
http://members.tripod.com/kanaga_sritharan...alar_manips.htm
முழக்கம் பத்திரிகையில் கடந்தவாரம் ஆறுமுகநாவலர் பற்றி வாழ்வும் வடுவும் என்ற தலைப்பில் வந்த கட்டுரையும் அவரது சாதிவாதத்தை பற்றியதாக அமைந்திருக்கிறது. அதன் இணைப்பு இதோ:
"ஆறுமுகநாவலர் தான் கட்டிய தமிழ்ப் பள்ளிக்கூடக்
கதவுகளை தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதி
யினருக்கு அடைத்து வைத்தார். அதே போல் சைவக்
கோயில்களின் கதவுகளை பஞ்சமர் என இந்து மதம்
முத்திரை குத்தித்தள்ளி வைத்த மக்களுக்குக்
கெட்டியாகப் புூட்டி வைத்தார்.
தமிழ்ச் சமுதாயத்தில் காணப்பட்ட தீண்டாமையைக்
காரணம் காட்டியே கிறித்துவ பாதிரிமார் இந்துத்
தமிழர்களை சமயம் மாற்றினார்கள். அப்படிச் சமயம்
மாறியவர்களை அவர்கள் பள்ளிக்கூடங்களில் சேர்த்
தார்கள். தேவாலயக் கதவுகளையும் திறந்து
வைத்தார்கள்.
ஆறுமுகநாவலருக்கு தமிழ் மக்களில் ஒரு சாரார் மதம்
மாறுவதற்கான காரணிகள் தெரிந்திருந்தும் தீண்
டாமையை என்ற நோயை ஒழித்து சைவத்தைக்
காப்பாற்ற முன்வரவில்லை. கல்விக் கூடங்களை
தீண்டாதாருக்குத் திறந்து விட்டுத் தமிழை வளர்க்க
நினைக்கவில்லை.
சைவத்தின் வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்
துக்கும் சாதி அமைப்புப் பெரிய முட்டுக் கட்டையாக,
தடையாக, தடங்கலாக இருந்ததை வைதீக சைவரான
ஆறுமுகநாவலரால் கண்டுகொள்ள முடியவில்லை."
http://www.muzhakkam.com/sep9/articles.pdf
|