11-04-2003, 12:01 AM
கனவுகள்!
இரவுகளின் தனிமையில்
எப்பொழுதும் நினைப்பது
;நாளை பேசவேண்டும்
என்பது.!.
பல பல விதமாய்
எப்படியெல்லாம் பேசலாம்
ஒரு ஒத்திகையே நடக்கும்!
தலையணை என்னை
பைத்தியக்காரனாய் எண்ணி சிரிக்கும்
முறைத்துப் பார்ப்பேன்.!
அது என்னவோ
உன்னைக் கண்டால் மட்டும்
என் கண்கள் இமைக்க மறுக்கின்றன
கால்கள் நடக்க மறுக்கின்றன
இதயம் துடிக்க மறுக்கிறது!
சாலையை கடக்கும் போது
ஒரு முறை திரும்பி பார்ப்பாய்
பேசமாட்டாயா மடையா என்பது போல்!
இறக்கைகள் பிய்த்து எறியப்பட்ட
பறவையால் மனம் துடிக்கிறது!
மறுபடியும் இரவுகளின் தனிமை
அவளுடன் பேசுவேன்
ஒத்திகை பார்ப்பேன்...
தலையணைக்கு மட்டும் புரிந்த
சைகை மொழியால்!
சினேகன்
UK
இரவுகளின் தனிமையில்
எப்பொழுதும் நினைப்பது
;நாளை பேசவேண்டும்
என்பது.!.
பல பல விதமாய்
எப்படியெல்லாம் பேசலாம்
ஒரு ஒத்திகையே நடக்கும்!
தலையணை என்னை
பைத்தியக்காரனாய் எண்ணி சிரிக்கும்
முறைத்துப் பார்ப்பேன்.!
அது என்னவோ
உன்னைக் கண்டால் மட்டும்
என் கண்கள் இமைக்க மறுக்கின்றன
கால்கள் நடக்க மறுக்கின்றன
இதயம் துடிக்க மறுக்கிறது!
சாலையை கடக்கும் போது
ஒரு முறை திரும்பி பார்ப்பாய்
பேசமாட்டாயா மடையா என்பது போல்!
இறக்கைகள் பிய்த்து எறியப்பட்ட
பறவையால் மனம் துடிக்கிறது!
மறுபடியும் இரவுகளின் தனிமை
அவளுடன் பேசுவேன்
ஒத்திகை பார்ப்பேன்...
தலையணைக்கு மட்டும் புரிந்த
சைகை மொழியால்!
சினேகன்
UK
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

