09-09-2005, 12:55 AM
திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு
-நக்கீரன் (கனடா)-
திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை வழிபாடு நடைபெற வேண்டும் என்று குரல் இன்று தமிழகத்திலும் கனடாவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
இங்குள்ள கீதவாணி வானொலியில் திருக்கோயில் வழிபாடு செந்தமிழில் நடைபெற வேண்டுமா இல்லையா? என்ற வாதம் நடைபெறுவதாக அறிகிறேன்.
திருக்கோயில் வழிபாட்டில் தமிழில் அர்ச்சனை என்பது வாதத்துக்கு அப்பால்பட்டது. அது மனிதவுரிமை பற்றியது ஆகும். தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பது மனிதவுரிமை மீறலாகும்!
திருக்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்வதற்கு இறைவனுக்குச் சிக்கல் இல்லை. இடையில் உள்ளவர்களுக்குத்தான் சிக்கல். சிவபெருமானே தமிழை அகத்தியருக்குக் கற்பித்தார் என்பது ஐதீகம். எனவே தமிழ் கடவுள் மொழிதான். அது அர்ச்சனைக்கு உகந்த மொழிதான்.
தமிழில் அர்ச்சனை, தமிழ்முறைப்படி குடமுழுக்கு, வேதம் படித்த அனைத்துச் சாதியினரும் புூசகர்களாக ஆகலாம் என்ற கோட்பாடுகளை அர்ச்சகர்கள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். அர்ச்சனை செய்வது அர்ச்சகர்களின் பிறப்புரிமை என்று கூறி அவர்கள் நீதிமன்றம் சென்று வாதாடினார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். இப்படி இவர்கள் தமிழ்மொழிப் பயன்பாட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?
தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதற்காகவே அர்ச்சகர்களில் ஒரு சாரார் தமிழ் அர்ச்சனையை எதிர்க்கிறார்கள்.
இந்து மதத்தில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட சாதியினர் வேதாகமம் படிக்கும் உரிமையையும், திருக்கோயில்களில் அர்ச்சனை செய்யும் உரிமையையும் பெற்றிருக்கிறார்கள். மற்றவர்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஒரு பிராமணன் எவ்வளவு ஒழுக்கக் கேடனாக இருந்தாலும், கல்வி கேள்வியில் எவ்வளவு தாழ்ந்தவனாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த ஒரே காரணத்துக்காக வேதாகமம் படிக்கும் உரிமையையும், அர்ச்சனை செய்யும் உரிமையையும் பிறப்பின் அடிப்படையில் பெற்றுவிடுகிறான்.
கனடாவில் உள்ள எந்த சைவாலயமும் சிற்ப, சாத்திர, ஆகம விதிகளுக்கு அமையக் கட்டப்படவில்லை! கோவிலின் அமைப்பு மனித உடம்பை ஒத்ததாக அமைக்கப்பட வேண்டும். இங்குள்ள பல கோயில்கள் முன்னைய பண்டகசாலைகள். அங்கு கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நாந மண்டபம், அலங்கார மண்டபம், சபாமண்டபம், கொடிமரம். பலிபீடம், நந்தி எதுவுமே இல்லை. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றில் தீர்த்தம் இல்லை.
மேலும் பிராமணர்கள் கடல் கடக்கப்படாது என்பது விதி. அந்த விதியும் மீறப்பட்டுள்ளது.
கோயில்களில் தெய்வத்தின் பெயரால் நடைபெற்ற உயிர்ப் பலிகள், தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், தலித் ஆலயப் பிரவேசம் வேதாகம விதிகளுக்கு ஒப்ப இருந்தபோதிலும் கூட இன்று சட்ட புூர்வமாக அவை தடைசெய்யப்பட்டு விட்டன.
இவ்வாறு சாத்திரங்களும் சம்பிரதாயங்களும் மீறப்படும்போது ஆலயங்களில் தமிழில் போற்றி செய்தால் அது சைவாகம விரோதம் எனக் கூச்சல் இடுவதில் பொருள் இல்லை.
மேலும் சமஸ்கிருத மொழியில் செய்யப்படும் வேதாகம சம்மேளனக் கிரிகைகளுக்கு மட்டுமே மந்திர சக்தி உண்டென்றும் காஞ்சி காமகோடிபீட ஜெயேந்திர சங்கராச்சாரியார் வாதிடுவதிலும் பொருள் இல்லை. அது தமிழ் மீது அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வெறுப்பையும் காழ்ப்பையும் வெளிப்படுத்துகிறதேயொழிய மெய்யறிவை வெளிப்படுத்தவில்லை.
தி.மு.க ஆட்சியின்போது தமிழக அறநிலையத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன் 1998 ஆம் ஆண்டு தமிழகக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற அரசாணை ஒன்றை வெளியிட்டார். அப்போது அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் தமிழகம் முழுக்கக் குரல்கள் கிளம்பின.
'தாய்மொழி தமிழைப் புறக்கணிக்கச் சொல்பவர்கள் மீண்டும் புதுவேகம் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். இது வேதனைக்குரிய விடயம். உலகம் முழுக்க உள்ள பசுக்கள் அந்தந்த மொழிகளில் பேசுவதில்லை. ~அம்மா| என்றுதான் தமிழில் கத்துகின்றன. பெருமைவாய்ந்த தமிழ் மொழியைப் புறக்கணிக்கச் சொல்வது, தாயைப் புறந்தள்ளி விட்டு வேறொருத்தியைத் தாய் என்று சொல்வது போன்றது" என மதுரை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் சொல்லி இருக்கிறார்.
அர்ச்சனை மட்டுமல்ல குடமுழுக்கும் தமிழில்தான் நடைபெற வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வரும் பேரூராதீனம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் 'ஆகம விதிகள் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். ஆகமம் எந்த சாதிக்கும் சொந்தமானதல்ல. எல்லா இனத்துக்கும் பொதுவானது.
ஒரு குறுகிய எல்லைக்குள் இருந்துகொண்டு, எல்லாமே நாங்கள்தான் என்று சிலர் சொல்வதை ஏற்க முடியாது. தமிழைத் தீண்டத்தகாத மொழி என்று சொல்லும் அளவுக்கு சிலருக்கு உள்ளத்துணிவு வந்திருப்பதே இந்த நாட்டுக்கு கேவலம். தமிழா, வடமொழியா என்பதல்ல இப்போதைய சிக்கல். எங்கள் மொழியில் எங்களை வழிபட விடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
கடவுளை நேருக்கு நேர் காண வழிவகுத்த மொழி தமிழ், முதலை விழுங்கிய பாலகனை மீட்க உதவிய மொழி தமிழ். இம்மொழியில் குடமுழுக்கு நடத்துவதைத் தவறு என்று சொல்கிற சிக்கலான இன்றைய சூழ்நிலையை ஒன்றுபட்டு நின்று சமாளித்தாக வேண்டும். இனி நடக்கும் எந்தக் குடமுழுக்கும் தமிழில்தான் நடக்க வேண்டும். நடந்தே தீரும். சம்ஸ்கிருதம் வேண்டுவோர் அந்த மொழியில் செய்துகொள்ளட்டும். தமிழில் செய்வதை அவர்கள் தடுக்கக்கூடாது" என்று எச்சரிக்கும் தொனியில் தெரிவித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து ஆராயக் குழு அமைத்து, அதன் பரிந்துரையைப் பெற்று தமிழில் அர்ச்சனை செய்ய உத்தரவும் வந்துவிட்டது. அப்போதும் சிலர் அதை எதிர்த்தார்கள் என்பது வேறு விடயம்.
இன்றைய முதல்வர் ஜெயலலிதா தமிழுக்கு எதிரியல்ல. எல்லா இனத்தவரும் அர்ச்சகராகலாம் எனச் சொல்லி அவர்களுக்கு மந்திரம் சொல்லிக் கொடுக்க வேத பாடசாலை நிறுவியவர். அவர் நாத்திகர் அல்ல. மாறாக நல்ல ஆத்தீகர். அடிப்படைவாத இந்து.
'தமிழை வலியுறுத்துவது கோயில் அர்ச்சகர்களுக்கு எதிரானது அல்ல. எனவே, யாருடைய து}ண்டுதலுக்கும் ஆளாகி அர்ச்சகர்கள் தமிழை எதிர்க்க வேண்டாம். ஜெயேந்திரர் ஏன் இதை எதிர்க்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. தமிழைத் தடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்தவர் முன்னாள் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.
'பொதுமக்கள் மனது வைத்தால், அவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் எந்தத் தடைகளையும், சட்டங்களையும் தூள் தூளாக்கலாம். தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று மக்கள் அர்ச்சகர்களிடம் வலியுறுத்தி கேட்க வேண்டும். எனக்குத் தமிழ் அர்ச்சனை தெரியாதே என்று எந்த அர்ச்சகரும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நான் அமைச்சராக இருந்தபோது இதற்காகவே போற்றி நு}ல்களைத் தயாரித்துத் தந்துள்ளோம்.
எல்லா சாமிகளுக்கும் நவக்கிரகங்களுக்கும் போற்றி நு}ல்கள் உள்ளன. அதிலும் தற்போது அம்மன் வழிபாடு அதிகம் என்பதால் காளி, துர்க்கை மற்றும் மாரியம்மன்களுக்கும் கூடப் போற்றிப் பாடல்களைத் தமிழில் வழங்கியுள்ளோம். ஆகம விதிகளைச் சொல்லி நீண்ட நாள் ஏமாற்ற முடியாது. ஏழாம் நு}ற்றாண்டுக்கு முன்பு எந்த ஆகம விதி இருந்தது? தமிழைத் தடுப்பவர்களிடம் இருந்து தமிழைக் காக்க, விழிப்புடன் இருக்க வேண்டியது உங்கள் கடமை." இப்படிச் சொன்னவர் முன்னாள் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன்.
முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் காலத்திலேயே தமிழ் அர்ச்சனை தொடங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1971ம் ஆண்டு அதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சைவ, வைணவ அறிஞர்களால் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்த நு}ல்களிலிருந்து போற்றி வரிகள் தொகுக்கப்பட்டு, தமிழ் நாடெங்கிலும் உள்ள ஆதீனகர்த்தர்களின் பார்வைக்கு அனுப்பி அவர்களது ஒப்புதலின் பின் அர்ச்சனை நூல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை (1997) தமிழில் அர்ச்சனை நடைமுறைப்படுதப்படும் கோவில்கள் 3127. தமிழில் லட்சார்ச்சனை நடத்தப்பட்ட கோயில்கள் 1082. தமிழில் கோடி அர்ச்சனை நடத்தப்பட்ட கோயில்கள் 11. ஒலிபெருக்கி மூலம் பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படும் கோயில்கள் 1068.
ஆனால் தமிழ் அர்ச்சனையை எதிர்த்து அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 'தேவநாகரி மொழி" (வடமொழி) மட்டுமே இறைவனுக்கு உகந்தது என்பது அவர்களது வாதமாகும்.
தமிழில் அர்ச்சனை செய்யத் தொடங்கினால் இதுவரை காலமும் தாங்கள் அனுபவித்து வந்த ஏகபோக தொழில் உரிமைக்கு (ஆழnழிழடல) எங்கே ஆபத்து வந்து விடுமோ என்ற சுயநலம் காரணமாகவே ஒரு சில அர்ச்சகர்கள் அப்படி நினைக்கிறார்கள். எல்லோரும் அல்ல. எடுத்துக்காட்டாக கனடா சிறீ துர்க்கையம்மன் கோயில் பிரதம குருக்கள் தமிழ் அர்ச்சனையை ஆதரிக்கிறார். ஏற்கனவே தமிழில் அர்ச்சனை வழிபாடு செய்கிறார். அண்மையில் தமிழில் அர்ச்சனை வழிபாடுபற்றி அவரிடம் நான் கேட்ட போது வடமொழி அர்ச்சனை மந்திரம் ஒன்றை எனக்குச் சொல்லிக் காட்டி அதன்; பொருளைத் தமிழில் சொல்லி, அவ்வாறு அந்த மந்திரத்தை தமிழில் சொல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றார்.
அர்ச்சனை செய்வதற்கு தமிழுக்குத் தகுதி இல்லை என்று கூறுவது உலகிலுள்ள ஏழு கோடி தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலாகும். வடமொழிதான் கடவுளுக்குப் புரியும் என்பது கடவுளையும் அவன் சக்தியையும் குறைத்து மதிப்பிடுவதாகும். உலகில் உள்ள மொழிகள் எல்லாமே இறைவன் தந்த மொழிகள்தான். அதை பேதப்படுத்திப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.
தமிழில் போற்றி (அர்ச்சனை) மற்றும் குடமுழுக்குச் செய்வதை சாதாரண அர்ச்சகர்கள் தொடங்கி காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வரை எதிர்க்கிறார்கள். அவை சமஸ்கிருதத்தில்தான் செய்யப்பட வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் எவை?
(அ) கடவுளுக்கு தமிழ் உகந்த மொழி அல்ல. பாரம்பரியமாக சமஸ்கிருதத்திலேயே மந்திரங்கள் சொல்லி அபிசேகம், ஆராதனையெல்லாம் நடத்தப்பட்டு வருகின்றன.
(ஆ) ஆகம விதிகளின்படி சமஸ்கிருதத்திலே மட்டும்தான் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடத்தலாம். தமிழில் செய்ய ஆகம விதிகளில் இடமில்லை.
(இ) மீறித்தமிழில் நடத்தினால் அது கடவுளின் கோபத்திற்கு உள்ளாக்கும் செயலாகிவிடும். அதனால் நாட்டில் இயற்கை உற்பாதங்கள் நேரிடும், நாட்டு மக்களுக்கு பெரும் தீங்குகள் விளையும்.
தமிழ் அர்ச்சனையை எதிர்ப்பவர்கள் தங்கள் நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்க சைவாகமத்தைக் கேடயமாகத் து}க்கிப் பிடிக்கிறார்கள்.
'ஆகம விதிப்படி கட்டிய கோயிலில் ஆகம விதிப்படிதான் கும்பாவிஷேகம் (குடமுழுக்கு) நடத்த வேண்டும். யாகசாலைகளில் வேத மந்திரங்கள்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆகமவிதி. தமிழில் மந்திரங்களுக்குரிய பதங்கள் கிடையாது. மந்திரங்களை விட்டு திருமுறைகளை ஓதலாம். ஆனால் அதனால் பலன் கிட்டாது. தமிழ்த் தோத்திரங்களுக்கு மரியாதை இருந்தாலும் அவற்றுக்கு மந்திர சக்தி கிடையாது. ஆன்மீக பலனும் கிடைக்காது" என வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலையில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டருவம் இப்போது சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துவிட்ட காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் கூறுகிறார்.
இதன் பொருள் என்னவென்றால் இந்துக் கடவுளர்க்குத் சமஸ்கிருதம் மட்டுமே புரியும். இந்துக் கடவுளர்க்குத் தமிழ் புரியாது. சமஸ்கிருதம் மட்டுமே மந்திர சக்தி உள்ள மொழி. சமஸ்கிருதமொழிக்கு உள்ள மந்திரசக்தி தமிழுக்குக் கிடையாது என்பதாகும்.
ஆகம விதிகளின்படி இன்று கோயில் வழிபாடு புூசை இடம்பெறுவது குறைந்து வருகிறது. மேலே கூறியவாறு ஆகமம் தமிழர்களில் ஒரு சாராரை தீண்டப்படாதவர் என முத்திரை குத்தி அவர்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதைத் தடை செய்;கிறது. வழிபட்டால் சாமிக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று சொல்கிறது. ஆனால் இன்று தீண்டாமை அனுட்டிப்பது சட்டப்படி குற்றம் ஆகும். இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இரண்டிலும் இதற்கான தடைச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.
ஆகமத்தில் அய்யப்பன்சாமி என்ற ஒரு சாமியே இல்லை. ஆனால் இன்று ஆகமத்துக்கு விரோதமாக அய்யயப்பன் வழிபாடு நடக்கிறது. எனவே ஆகமத்தைக் காரணம் காட்டி தமிழ் அர்ச்சனையையோ தமிழ்முறை குடமுழுக்கையோ எதிர்க்க முடியாது!
ஆகமத்தில் இடமில்லை அல்லது ஆகம விரோதம் என்று சொல்லி ஆகமத்தை ஒரு ஆயுதமாக தமிழுக்கு எதிராக எப்போதும் தூக்குகிறார்களே? ஆகமம் என்றால் என்ன? ஆகமம் தமிழ்மொழி வழிபாடு பற்றி என்ன சொல்கிறது?
நீதிபதி டாக்டர் எஸ்;. மகராசன் தலைமையில் கோயில்களில் தமிழில் வழிபாடு செய்யலாமா என ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி மகராசன் குழு அதையிட்டுப் படித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தது.
கோயில்களில் யார் அர்ச்சகர் ஆகலாம் என ஆகமங்களில் வரையறை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த ஆகமங்கள் பற்றியும் அதில் காலத்துக்குக் காலம் இடம் பெற்றுள்ள இடைச்செருகல் பற்றியும் நீதிபதி மகராசன் குழு விளக்குகிறது.