Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிராமணர்கள் தமிழர்களை எதிர்க்கிறார்களா?
#61
ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள். காசோலைக்கு மதம் பரப்பும் கிறிஸ்தவர்களும், அந்த மதத்தை சேர்ந்த அடேல் பாலசிங்கமும், கிறிஸ்தவன் மாவீரன் சார்ள்ஸ் அன்ரனி நினைவாக தனது மகனுக்கு அதே கிறிஸ்தவ பெயரிட்டு மகிழ்ந்த தலைவர் தலைமையில், எமது மக்கள் வேளாளரும், பிராமணரும், மற்றும் எல்லாரும் ஒன்றாக ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள். பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை. அதை காப்பதும், வளர்ப்பதும் எமது மக்கள் மத்தியில் வேளாளர். அதற்காக அவர்கள் தமிழீழ போராட்டத்தின் எதிரிகள் அல்ல.

அதே வேளை எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல. எமது தமிழீழ போராட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், இந்தியாவிலும் பார்க்க நிறைந்த அளவில் மதிப்பும், ஆதரவும் உண்டு. இந்த ஆதரவு இந்திய எதிர்ப்பை சமப்படுத்த போதுமானது. இந்திய பிராமணரை எதிர்த்து, இந்திய ஆதரவு கிடைக்க போவதில்லை. இது எமக்கு தேவையும் இல்லை.
Reply
#62
ஈழத்தமிழர்களைச் சாதி மத அடிப்படையில் பிரிக்கும் எவராக இருந்தாலும் அவர்கள் ஈழத்தமிழர்களின் எதிரிகளாகக் கருதப்பட வேண்டியவர்கள். <b>"ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள்"</b> என்று அலறும் இதே JUDE தான் சற்று முன்பாக <b>"வேளாளத் தமிழர்கள் தான் ஈழத் தமிழருக்கு ஆபத்து'</b> என்று பிதற்றியவர். <b> "பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை" </b>என்று கூறும் JUDE எதற்காக இந்தியப் பிராமண எதிர்ப்பை மட்டும் தவிர்க்க விரும்புகிறார் என்பதே இவர் யார் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள் உலகத் தமிழர்கள் ஓன்று படுவதை என்றுமே விரும்புவதில்லை.

என்னுடைய பிராமண எதிர்ப்பு தமிழீழத்தை பிராமணர்கள் எதிர்ப்பதால் மட்டுமல்ல, எங்களுடைய சைவசமயம், நவீனமயப் படுத்தப் படவேண்டும், ஈழத்துசைவத்துக்கொரு புரட்சி தேவை, தமிழெதிரிப் பிராமணர்களின் பிடியிலிருந்து ஈழத்துச்சைவம் விடுவிக்கப் படவேண்டும், எங்களுடைய சமய நம்பிக்கையை துர்ப் பிரயோகம் செய்து, தமிழர்களின் வியர்வை சிந்தி உழைத்த பணத்தைத் தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்கள் சுரண்டுவதைத் தடுக்க, ஈழத் தமிழர்களிடையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பார்ப்பான்களின் பேராசையால் ஒரு முகூர்த்த நேரத்தில் ஒன்பது திருமணங்களுக்கு ஓமென்று சொல்லி விட்டுத் தான் தமிழரின் நல்ல நாள், முகூர்த்தம் பார்க்கும் நம்பிக்கையையே ஓவ்வொரு திருமணத்தையும் அவசரப் பட்டு முடித்து தமிழரின் நம்பிக்கையைச் சிதைத்து எங்களை முட்டாள்களாக்கும் பார்ப்பான்களின் திமிரை அடக்க வேண்டும்.

நல்ல நாள் இருக்கிறதோ இல்லையோ பார்ப்பான்களுக்கு நேரம் இருக்கும் போது "நல்ல நாள் இருக்குது, பரவாயில்லை, செய்யலாம்" என்று பொய் சொல்லும் பார்ப்பானகளை விரட்டி அடிக்க வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம், ஈழத் தமிழர்களின் அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கையும், ஒரு சாதியினரை மட்டும் அர்ச்சகராக இருக்கலாம் என்ற பழைய நம்பிக்கையும் தான் இதைப் போக்க வேண்டும்.

கிறிஸ்தவத் தமிழர்கள் தமிழில் யேசுவிடம் பிரார்த்தனை செய்கிறார்கள், யேசுநாதருக்குக் கூட தமிழ் விளங்குகிறது, ஆனால் முருகனுக்கும், சிவனுக்கும் மட்டும் தான் தமிழ் விளங்காதாம் பார்ப்பான்கள் சொல்கிறார்கள். அவர்கள் தமிழை எதிர்ப்பதன் காரணம்., எங்கே தங்களின் தொழில் போய் விடுமென்று தான்.

உம்முடைய <b>"எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல" </b>என்று சொல்வதில், பிராமணரை ஆதரித்து, உலகத் தமிழர்களை ஒன்று சேர்வதை எப்படியாவது எதிர்க்கும் பிராமண வாடை கொஞ்சம் அதிகமாகவே அடிக்கிறதையா JUDE, கொஞ்சம் அடக்கி வாசியும்.

<b>உம்முடைய Pep talk ஐ நம்புமளவிற்கு ஈழத்தமிழர்கள் ஓன்றும் முட்டாள்களல்ல. 25 வருடங்களாகியும் தமிழீழத்துக்கு ஒரு தீர்வு கிடைக்காததற்குக் காரணம் இந்தியா தான் என்பதிலோ அல்லது இந்தியாவின் எதிர்ப்புக்கு பார்ப்பான்கள் தான் முக்கிய காரணம் என்பதிலோ எந்த இலங்கைத் தமிழருக்கும் எள்ளளவு சந்தேகமும் கிடையாது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் மதிப்பும், ஆதரவால் நிதியுதவி கிடைக்கலாம் ஆனால் தமிழீழம் கிடைக்காது.</b>

நாங்கள் இலங்கைப் பார்ப்பான்களின் வயிற்றிலடித்து இந்தியாவிலுள்ள பார்ப்பான்களின் வாய்க் கொழுப்பை அடக்கினால் தான் அவர்களுக்கு ஈழத்தமிழர்கள் வெறும் அகதிகளல்ல, அவர்களை வீணாக எதிர்ப்பாதால் எங்களுடைய சகோதர பார்ப்பான்கள் பாதிக்கப் படுவார்கள் என்ற உணர்வு வரும்.
Reply
#63
stalin Wrote:பார்ப்பானியத்தையோ பாம்பையோ முதல் அடிக்கவேண்டுமென்றால் பார்ப்பனியத்தை அடிக்கவேண்டுமெனபார்... இந்தியன் அரசில் ஈழசார்பு கட்சிகள் இருந்தும் இந்திய பார்ப்பானியம் அரசஇயந்திரம் நிர்வாக த்தில் இருப்பதால் ஈழத்தின்போராட்டத்திற்க்கு எதிராக செயல் படுவதை அவதானிக்கலாம்... பிராமணியம் எவ்வளவு அடக்குமுறையை வைச்சிருந்தது என்பது பழைய இலக்கியகங்கள் வாசிததால் விளங்கும்.அடக்குவர்க்கு எதிராக ஒன்று சேருவது மனிதநேயம்..அதைவிட்டு பெண்ணியம் தொடக்கம் பிராமணியம் வரை அடக்குவர்களுக்காக வார்த்தைகளை கருத்துக்களை தேடு வாதிடும் குருவி போன்றவர்கள் சமூகத்திற்க்கு ஆபத்தானவர்கள் ...இவர்களுடன் சிறிதுகாலம் வாதி்டிருக்கிறேனென நினைக்க வெட்கமாய் இருக்கிறது....

வெட்கப்படுங்கள் குருவிக்காக அல்ல உங்களின் நிலைக்காக...! நாங்கள் எங்கள் நிலையில் இயன்றவரை தெளிவாகவும் சிறிய சிந்தனை என்றாலும் அதற்கு எங்களளவில் செயல் வடிவம் கொடுப்பவர்களாகவும் தான் இருக்கின்றோம்..வாய் வீரம் பேச வேண்டியது எங்கள் அவசியமல்ல...!

"பெண்ணியம்" பேசி அடக்குமுறை ஒழிப்பதாகச் சொல்லும் நீங்களும் பிரச்சனை தமிழர்களுக்கு உண்டு தீர்வைத் தருகிறேன் என்று காலத்தை வீணடிக்கும் சந்திரிக்காவும் ஒன்று...!

பிராமணியம் என்பதைக் கண்டு ஏமாந்து பின் பயந்து திட்டித்தீர்த்து இயலாமையைக் காட்டும் நீங்களும்... வெற்றுச் சிந்தனைகளை சமூகத்துக்குள் விதைத்து விட்டு தன்னை புரட்சிவாதியாகக் காட்டி நேரத்துக்கு கோலம் மாறும் பெரியார் போன்ற வெற்று வேட்டுகளும் ஒன்று...!

அதனால் தான் கருணாநிதி போன்ற எலிகள் ஜெயலலிதா போன்ற பிராமணிய வல்லூறுகளை வென்றவர்களாக...கேடிகளாக இன்னும் சமூகத்தைக் குடைந்து குட்டிச்சுவராக்கி வாழ்ந்து வருகின்றார்கள்.....! நாத்திகம் பேசுவன் பேச்சைச் சமூகத்துக்குள் செயற்படுத்த முடியவில்லை என்றால் நாத்திகம் என்பதை ஏன் மேடையில் புத்தகத்தில் பேசுவான்...! மெளனிகளாக இருப்பது மேல்...! கலப்படங்களை வெளிக்காட்டுதல் இயலாமை...!

எதையும் வித்தியாசமாக புதுமையாக நடைமுறைக்கு மாறுபட்டத்தாக எவரும் பேசலாம் எழுதலாம்...அதனால் உங்களை மற்றவர்கள் நோக்கவும் செய்யலாம்...ஆனால்...அதுவே சமூகத்தை மாற்ற அல்லது மாற்றியதாக கருத முடியாது...! அதற்கு நீங்கள் செயல்வீரராக இருக்க வேண்டும்...!

பிரபாகரன் சிந்தித்தான் செயல்படுத்தினான்...அவன் புரட்சியாளன்...! அதுதான் தேவை...சிந்தனையை புத்தமாக்கி.. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டவில்லை..புகழும் புகழ்ச்சியும் தேடவில்லை அவன்...! சிந்தனைக்கு தன்னைக் கொண்டே செயல்வடிவம் கொடுத்து மக்கள் புரட்சிக்கு வழி செய்தான்...அவன் புதுமை படைத்தான்...அதுதான் தேவை...! சிந்தனையாளன் புரட்சியாளன் புகழை விருப்பான் தற்பெருமை பேசான் தன் செயலால் மக்களுக்கு வழிகாட்டுவான்... அதற்காக நாங்கள் சிந்தனையாளர்கள் என்றோ புரட்சிவாதிகள் என்றோ சொல்லவில்லை...எங்கள் சிந்தனைகளால் முதலில் எங்களுக்குள் புரட்சியை உண்டு பண்ணவே விளைகின்றோம்...இப்போ நாம் எங்களுக்குள் மாற்றம் தேடுபவர்கள்...எங்களை மாற்றாமல் மற்றவனுக்குள் மாற்றத்தை நாம் வலியுறுத்தமாட்டோம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
இப்போ இங்கு பிரச்சனை பிராமணியமோ... பிராமண சகோதரர்களோ அல்ல... தங்கள் நிலையில் தெளிவில்லாதவர்களும்..பலவீனர்களும்... பலத்தைக் கண்டு அஞ்சுவதன் வெளிப்பாடே இது...! மற்றவர்கள் தம்மை ஆதிக்கம் செய்துவிடுவரோ என்றும் தங்கள் இயலாமை வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சுவதும்...இயலாமையை வெளிப்படுத்துவதும்...மற்றவர்களின் நடைமுறையைக் கண்டு ஏமாந்து விட்டு குய்யோமுறையோ என்று கத்துவதுமே இங்கு நிகழ்கிறது...!

அதற்குள் ஏன் ஈழப்போராட்டத்தையும் ஹிந்திய வல்லாதிக்க எதிர்ப்பையும் சிங்களப் பேரினவாதத்தையும் செருகி உங்கள் இயலாமையைக் காட்டுகிறீர்கள்..! ஈழப்போராட்டத்தை முன்னெடுத்தவனும் பிராமணிய நம்பிக்கைகளுக்குள் இருந்து வந்தவன் தான்...பிராமணிய ஆதரவில் வளர்ந்தவன் தான்...! இருந்தும் அவன் தனக்குள் எழுந்ததை... அனைவரையும் அரவணைத்து...சமூகத்துள் விதைத்து... புரட்சிக்கு வித்திட முடிந்தது... சாதித்தான்...! நீங்கள் வெற்று வேட்டுக்கள்.. உண்மையில் இப்படி சமூகத்துள் வளர்க்கப்படும் உள்ளக எதிர்ப்பால் சாதிக்கப் போவது எதுவுமல்ல..இதன் மூலம் பிராமணியத்தினை மறைமுகமாகப் புகழ்பாடிச் செல்வதையே செய்கின்றீர்கள்...அதற்காக பிராமணியம் உங்களுக்கு நன்றி சொல்கிறது...! தன்னை வாழ வைப்பதற்காக...! நன்றி வணக்கம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
narathar Wrote:பிராமணியம் சிறந்த ஒரு கோட்பாடு என்று இது வரை வாதிட்ட நீர் இப்போது இப்படிப் போராடுங்கள் அப்படிப் போராடுங்கள் என்று சொல்கிறீரே,உமக்கு என்ன நடந்தது.
உமது வாதங்கள் ஏன் எப்போதும் குழப்பமானவயாக இருக்கிறது?
ஆயிதப் போராலேயே அடக்குமுறயய் வெல்லலாம் என்பது நீர் சொல்லித் தெரிய வேண்டியதில்லய்,உமக்கு அப்படி உபதேசிப் பதற்கும் எந்தத் தகுதியும் இல்லை.
எமது போரட்டத்ததை கண்டு பிராமணர் இந்தியாவில் பயப்படுவது, அங்கேயும் அடக்கப் படுவோர் ஆயுதம் ஏந்துவர் என்பதாலேயே. நேற்று நடந்த கண்ணி வெடித் தாக்குதலில் வட இந்தியாவில் 25 பொலிசார் இறந்திருப்பதைக் கேட்டிருப்பீர்,அங்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயிதம் ஏந்திப் போராடுகின்றனர்.ஈழ விடுதலை ஒடுக்கப் பட்ட மக்களுக்கு உலகெங்கும் நம்பிக்கயைக் கொடுக்கும்.ஒடுக்கப் பட்ட மக்களாகிய நாமும் ஒடுக்கப் படுவோருடனேயே எமை அடயாளம் காட்டுவோம்.காலம் காலமாக ஒடுக்கிய பிராமணியத்தோடு அல்ல.

பிராமணியர்களும் அவர்களின் பிராமணியம்...ஒரு காலத்தில் சமூகத்தில் செல்சாக்குப் பெற்றிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை...! மேற்கில் கிறிஸ்தவம் எப்படி சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியதோ..அதேபோல்...இதுவும் இந்திய உபகண்டத்தில் செல்வாக்கு மிக்கதாக இருந்தது என்பது உண்மை..!

ஒரு காலத்தில் கிறிஸ்தவ மேலாதிக்கத்துக்குள் வாழ்ந்தாலும் பல மேற்குலக விஞ்ஞானிகள் கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு எதிரான விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை துணிந்து மேற்கொண்டனர்..தங்கள் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து சாதித்தனர்...! அவற்றைக் கொண்டு இன்று பெரும் விஞ்ஞான வளர்ச்சிகளையும் புரட்சிகளையும் கண்டுவிட்ட மேற்குலக சமூகத்திடை கிறிஸ்தவமும் அதன் கோட்பாடுகளும் இன்னும் வாழுகின்றதுதான்..இல்லை என்று கூறமுடியாது...! அதற்காக யாரும் அதை எதிர்த்து தங்கள் நேரத்தையும் திறமையையும் இப்படி உங்களைப் போல வீணடிப்பதில்லை...! சாதியம் வேண்டாம் என்பவர்கள்..பெரியாரின் பிராமணியன் என்ற சாதி உச்சரிப்பையும் எதிர்ப்பையும் தூக்கிப் பிடிப்பீர்கள்..அதை நவீன வடிவமாக சமூகத்துக்கு காட்டவும் செய்வீர்கள்..! உங்கள் வெற்றுக் கூச்சல்களை விட்டு நாலு தமிழ் குடும்பத்தை இரண்டு ஆண்டுகள் மேற்குலக மக்களோடு சேர்ந்து வாழ விடுங்கள்..அவர்களிடம் சாதியம் தன்பாட்டில் மறையும் அதிசயம் காண்பீர்கள்..! சாதியத்தை வளர்ப்பது பிராமணியமல்ல...அதை எதிர்ப்பதாகச் சொல்லும் நீங்களே..!

ஒரு காலத்தில் கிறிஸ்தவக் கோட்பாடுகள் முன்னேற்றத்துக்கு தடை போட்டது என்று கிறிஸ்தவத்தை எந்த மேற்குலக பகுத்தறிவாளனும் இன்று எதிர்க்கவில்லை..விரும்பியவர்கள் இன்னும் பின்பற்றுகிறார்கள்..தான்..! அதற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது..அவர்களை யாரும் தொந்தரவும் செய்வதில்லை..! அதேபோல் கிறிஸ்தவம் இப்படிச் சொல்கிறதே என்று அதை எதிர்த்து தங்கள் நேரத்தையும் திறமையையும் வீணடிக்காமல்..தங்கள் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதையும்.. தாங்கள் தெரிவு செய்த பாதையில்.. தங்கள் தனித்துவத்துடன்... வசதிகள் தேவைகளை பூர்த்தி செய்யப் பயணிப்பவர்களாகவே மேற்குலக மக்கள் இருக்கின்றனர்..!

ஆங்கிலேயர்கள் இந்திய உபகண்டத்தை ஆண்ட போதும்... அங்கு சிறப்பான சமூக விடயங்களை அவதானித்த போதும்..தங்கள் தனித்துவங்களை விட்டு புதுமை என்று இந்தியக்கலாசாரத்தை உள்வாங்கவில்லை...! உங்களைப் போல போன இடத்தில் கண்டதோடு தொற்றிக் கொள்ளவும் இல்லை..!

அதனால்தான் இன்றும் மேற்குலகம் உலகில் ஆதிக்கம் செய்யவல்ல தனக்கான தனித்துவத்துடன் புதிய நாகரிக நடைமுறைகளை தந்து கொண்டிருக்கிறது..அதைப் பின்பற்றுதலும் உட்செருகுவதும் உங்கள் புதுமையாகியும் உள்ளது..!

இன்று தமிழர்களின் அடையாளம் என்பது மேற்குல அடையாளங்கள் சார்ந்திருப்பது என்ற புதுமை படைக்கப்பட்டு வருகிறது..அதற்கு இளைய தலைமுறையின் இரண்டும் கெட்டான் தெளிவற்ற சிந்தனையை கனகச்சிதமாகப் பயன்படுத்தியும் வருகிறீர்கள்..! உண்மையில் அவை தமிழர்களது புரட்சியும் அல்ல தேடலின் மாற்றமும் அல்ல போன இடத்தில் தவிர்க்க முடியாமல் பொறுக்கிக் கொண்டவை..! தமிழர்கள் மேற்குலக்கத்தினரது கலாசார நடைமுறைகளை கொள்ளை அடித்ததால் தான் அது சாத்தியமானதே தவிர அவை தமிழர்களின் தனித்துவ சிந்தனையின் சிரிஷ்டிப்புக்கள் அல்ல..! அப்படி தமிழர்கள் குறிப்பாக நீங்கள் செய்யப் போவதும் இல்லை..!

தமிழர்களுக்கு என்றிருந்த அவர்களை தனித்துவமாக இனங்காட்டிய ஒரு சில கலாசார தனித்துவங்களையே தமிழர்களே இனங்கண்டு தற்காலிகமாகக் கூடப் பின்பற்ற வெளிப்படுத்த வெட்க்கப்படும் இன்றைய புதிய தமிழர்கள் உலகில்...பழைய பிராமணியம் உங்களை என்ன செய்துவிடப் போகிறது என்று பயந்து வெருண்டு பிதட்டித் திருகிறீர்கள்...என்பதுதான் இன்னும் புரியவில்லை...! உங்களிடம் உங்கள் தனித்துவத்தை பாதுகாக்க வல்ல சிரிஷ்டிப்புக்கு வழியில்லை...மற்றவர்களின் நடைமுறைகளில் மயங்கி அதை உங்களதாக்கி போலிப் பெருமை பேசிக்கொண்டு தமிழன் என்று சொல்லித் திருகிற நீங்கள் பிராமணியத்தை ஏன் கண்டு பயப்பிட வேண்டும்..அது உங்களை எனி எதுவும் செய்யப் போவதில்லை..!

அந்த வகையில் பிராமணியம் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையும் அல்ல... நிச்சயம் உங்களை நெகிழ்வுத்தன்மை கொண்ட மேற்குலக நாகரிகம் கைவிடாது...அதையே நாளை தமிழரின் அடையாளம் என்று சொல்லி... தமிழன் நானே என்றும் சொல்லத்தான் போகிறீர்கள்...அதுவே புதுமையாகவும் உங்களால் வரவேற்கப்படும்..! பிறகேன் பிராமணியத்தைக் கண்டு இன்னும் அஞ்சுகிறீர்கள்.....ஓ..நீங்கள் அந்த இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள் போல..கால வர உங்களுக்கும் பிராமணிய எதிர்ப்பு என்பது தேவையற்றது என்பது புரியும்..!

நன்றிங்கோ...தொடருங்கோ...உங்கள் போலிப் பின்பற்றல்களையும்...ஏமாத்து வித்தைகளையும்...தேவையற்ற எதிர்ப்புப் பிதட்டல்களையும்..! பிராமணியத்தை எதிர்க்க உங்களுக்கு எத்துணை தகுதி இருக்கென்று நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்..! தனித்துவம் காக்கும் பிராமணியமா புதுமை புரட்சி என்று அதைத் தொலைக்கும் நீங்களா உயர்ந்தவர்கள்...தீர்மானியுங்கள்..!

இப்படி வெற்றுக் கூச்சல் போட்டு தமிழன் என்று உரிய அடையாளங்களுடன் தமிழ் பேசி வாழும் சில உண்மைத் தமிழனை தலைகுனிய வைக்காமல் இருந்தீர்கள் என்றாலே அது பெரிய விசயம்...இத்தனை ஆதிக்கத்துக்குள்ளும் பிராமணன் பிராமணியம் காக்கிறான் என்றால் அவனே உங்களை விட உறுதியானவன்...! அதுதான் அவனின் வலிமை...உங்கள் பலவீனம்..! அதுதான் நீங்கள் அடக்கப்பட்டீர்கள்...அவன் ஆள்பவனானான்...! அதையேதான் இன்னும் தொடருறீர்கள்..! மேற்குலகப் பழமைக்குள் புதுமை தேடும் நீங்கள்... புரட்சியாளர்கள்...நன்றி வணக்கம்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#66
சமூக முன்னேற்றம் கதைப்பது போன்று சமூக எதிரான நச்சுக்களைக்கூறிக்கொண்டிருக்கும் பிரசார மூறை நாசி காலத்து கோயபல்ஸ் பிரச்சாரம் மாதிரி . என்ன கதைக்கிறதென்று தெரியாமால் முன்னுக்கு பின் முரணாக கதைத்துகொண்டிருக்கிறார் ஒரு சமூக உணர்வாளனக்க்குரிய உணர்வு இன்றி பிழையான தகவல் குப்பைகளை தன்னகத்தை வைத்துக்கொண்டு விடியலின் கருத்துகளுக்கு எதிராக கச்சைகட்டி நிற்பதை காணலாம்..நாரதர் சொன்ன மாதிரி மேலும் மேலும் கதைத்த்து தன்னை யாரென்று தோலிருத்தி காட்டடிக்கொண்டுருக்கிறார்......
Reply
#67
உங்களில் சிலர் இப்படித்தான் மற்றவர்களின் கருத்தை உள்வாங்கத் திராணியற்று...புரட்சிப் பிதட்டல் செய்து திரிகிறீர்கள்...உங்களை சமூகம் சரிவர இனங்கண்டுதான் இருக்கிறது...! உங்களால் எங்கள் கருத்துக்களில் வார்தை அளவில்தான் பிழை சொல்லமுடியுமே தவிர..அதில் உள்ள குறைந்தது ஒரு நியாயத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது...! அதுவே உங்கள் பலவீனம்...! இப்படியானவர்களால் சமூகத்தை எப்போதுமே வழிநடத்தக் கூடிய கருத்தை முன்வைக்க முடியாது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#68
என்ன கருத்தை சொல்லூறீர் உள் வாங்கிறதுக்கு... சும்மா பிதற்றி க்கொண்டிருக்கிறீர் ..உம்மை ப்பற்றி உமது நோக்கம் பற்றி தெரிந்தபின்.. நீரும் உம்முடைய கருத்தும்... நேரம் தான் வேஸ்ற்.
Reply
#69
குருவி ,
நீர் இலவசமாக உம்மைப் பற்றி வெகு நாட்களாக இங்கு சுய தம்பட்டம் அடித்து வருகுறீர்,அத்தோடு எதோ லட்சியம்,புதிய சிந்தனை அதன் படி வாழ்க்கை என்றெல்லம் பிதற்றுகிறீர்,இதற்குள் எமக்கெல்லாம் தெரிவது உமது சுய தம்பட்டமும்,காழ்ப்புணர்வும் மட்டுமே. நீர் அப்படி என்ன புதிய சிந்தனயைச் சொல்லி இருக்கிறீர் என்று ஒருத்தருக்கும் விளங்கேல்ல,அப்படி விளங்கின மாதிரி இதுவரை ஒருத்தரும் இங்க எழுதேல்ல,சில வேளை இதப் பாத்திட்டு மலரண்ணி வந்து ஒத்து ஊதினால் தான் உண்டு.
அப்படி நீர் சொல்வதுவும் செய்வதுவும் ஒன்றென்றால் நீர் யார் என்பதையும்,என்ன உமது இலட்சியம் செயற்பாடு என்பதையும் அதன் படி தான் செயற்படுகிறீர் என்பதையும் பகிரங்கப் படுத்தும்.சும்மா மூடு மந்திரம் போல் இணயத்திற்குள்ள ஒழிந்து கொன்டு இலவசமா வித்தை காட்ட வேன்டாம். இழஞ்ஞ்னைப் போல் பகிரங்கமாக உமது புதிய சிந்தனையய் முன் வய்யும் அப்போது தான் நீர் சொல்வது போல் நடை முறையிலும் செயற்படுகிறீரா என்று அறிவதற்கும்,உமது சொல்லுக்கும் செயலுக்கும் உண்மை இருக்குதா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஏதுவாக இருக்கும். நீர் இலவசமா இணயத்தில் பொறுக்கும் குப்பைகளை இங்கு விதைத்து , நச்சுக் கருத்துக்களையும் வரலாற்றுத் திரிபுகளையும் இங்கு வரும் இளயவர்களிடம் பரப் பாதீர். நீர் உமது தம்பட்டத்தாலும்,அறிவிலித் தனத்தாலும் இங்கே நன்ச்சை விதைக்கிறீர்.வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் இதை எழுதுவது ,உமது குப்பைகள் யாழ் களத்தை நிரப்புவதால். நேரம் உமக்கு இலவசமாகக் கிடைக்குது, ஆனல் எமக்கு நேரம் கிடப்பது அரிதாக இருக்கிறது உமது குப்பயைச் சுத்தம் செய்ய.
Reply
#70
சுயதம்பட்டம் என்றும் சொல்லுறீர்கள்..அப்புறம் உமது இலட்சியம் என்ன என்றும் சொல்லச் சொல்கிறீர்கள்..! சுயதம்பட்டம் வாசிச்சது என்றால் குருவிகளின் இலட்சியமும் தெரிந்தல்லோ இருக்க வேணும்..! வேடிக்கையாக இல்ல...! குப்பை என்கிறீர்கள்..அதற்கு விழுந்தடிச்சுப் பதிலும் எழுதுகிறீர்கள்..! ஏன் உங்கள் கருத்தையும் யாரும் இதுவரை சிறந்தது என்று சொல்லவில்லையே...வந்தது முதல் உங்கள் வேலை எங்கள் கருத்திற்கு எதிராக ஏதாவது உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்டுவது...! அதையே சிலரின் தேவைக்காகச் செய்கிறீர்கள்...! உங்களைப் போல மிணக்கட்டு ஒருவரின் கருத்துக்கு காழ்புணர்ச்சி கொட்ட நாங்கள் வரவில்லை...! என்பதையும் யார் குப்பைகளை விதைக்கிறீர்கள் என்பதையும்..யார் புதிய சிந்தனைகள் என்று குழப்பங்களை தருகின்றனர் என்பதையும்...இன்னும் புரியவில்லை என்றால்..உங்களுக்கு தமிழிலிலும் பிரிச்சனை என்பது பொருள்...! உங்களோடு எங்களைப் பற்றிக் கதைக்க வரவில்லை...தரப்பட்ட விடயத்துக்கு கருத்தெழுத எங்களுக்கு சுதந்திரம் இருக்கு..அதையே பாவிக்கின்றோம்..! அதற்குள் உங்கள் காழ்புணர்ச்சிகளைக் கொட்டிக் கொண்டு எங்களுக்கு காழ்புணர்ச்சி என்பது வேடிக்கை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#71
Jude Wrote:ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள். காசோலைக்கு மதம் பரப்பும் கிறிஸ்தவர்களும், அந்த மதத்தை சேர்ந்த அடேல் பாலசிங்கமும், கிறிஸ்தவன் மாவீரன் சார்ள்ஸ் அன்ரனி நினைவாக தனது மகனுக்கு அதே கிறிஸ்தவ பெயரிட்டு மகிழ்ந்த தலைவர் தலைமையில், எமது மக்கள் வேளாளரும், பிராமணரும், மற்றும் எல்லாரும் ஒன்றாக ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள். பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை. அதை காப்பதும், வளர்ப்பதும் எமது மக்கள் மத்தியில் வேளாளர். அதற்காக அவர்கள் தமிழீழ போராட்டத்தின் எதிரிகள் அல்ல.

அதே வேளை எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல. எமது தமிழீழ போராட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், இந்தியாவிலும் பார்க்க நிறைந்த அளவில் மதிப்பும், ஆதரவும் உண்டு. இந்த ஆதரவு இந்திய எதிர்ப்பை சமப்படுத்த போதுமானது. இந்திய பிராமணரை எதிர்த்து, இந்திய ஆதரவு கிடைக்க போவதில்லை. இது எமக்கு தேவையும் இல்லை.

வண்க்கம் ஜுட் அவர்களே!

நீங்கள் யார் என்பதனை இங்கிருக்கும் உண்மையான தமிழர்கள் அறிவார்கள். தங்களின் விதண்டாவத கருத்துக்களும். எதற்கெடுத்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் தமிழீழத்தேசியத்தலைவரிடமும் குறைகாண்பதிலேயே குறியாக இருக்கின்றீர்களே உங்களின் நோக்கம் புரியாத முட்டாள் தமிழரல்லர் நாம்.

சாள்ஸ் அன்ரனி என்னும் பெயரினை தனது மகனிற்கு தேசியத்தலைவர் வைத்து மகிழ்ந்தது, சாள்ஸ் அன்ரனி என்னும் ஓர் சிறந்த மனித நேயம் கொண்ட போர்வீரன் ஈழத்தமிழரின் இன்னைலைத் துடைக்க புறப்பட்டான் . அப்படிப்பட்ட ஒரு போர்வீரனை கௌரவித்து அவரை நினைவுகொள்ளும் முகமாக அப்பெயரினை தேசியத்தலைவர் தனது மகனிற்கு சூட்டியமையானது ஓர் சிறந்த செயலாகவே தமிழர்கள்ளால் பார்க்கப் படுகின்றது.

இவை அனைத்தும் இருக்க ஜுட் அவர்களே! இவ்வளவு பார்பானுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் ஏன் தமிழ் பெயரல்லாத ஜுடெ என்னும் புனைப்பெயரில் வந்துள்ளீர்கள்?

சாதிகள் இல்லையடி பாப்ப என பாரதியார் பாப்பான்களுக்குதானே சொல்லிச் சென்றார். தயவு செய்து பாரதியின் பாடல்களை ஜுட் போன்றவர்கள் படிப்பது நல்லது.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#72
[quote="kuruvikal"]சுயதம்பட்டம் என்றும் சொல்லுறீர்கள்..

நாங்கள் எங்கள் நிலையில் இயன்றவரை தெளிவாகவும் சிறிய சிந்தனை என்றாலும் அதற்கு எங்களளவில் செயல் வடிவம் கொடுப்பவர்களாகவும் தான் இருக்கின்றோம்..

எங்கள் சிந்தனைகளால் முதலில் எங்களுக்குள் புரட்சியை உண்டு பண்ணவே விளைகின்றோம்...இப்போ நாம் எங்களுக்குள் மாற்றம் தேடுபவர்கள்...

அப்புறம் உமது இலட்சியம் என்ன என்றும் சொல்லச் சொல்கிறீர்கள்..!

மேலுள்ளவை உமது சுய தம்பட்டம்,அதில் நீரே உம்மை 'செயல் வடிவம்','எங்களுக்குள் புரட்சி' என்று அடை மொழிகளில் புகழுகுறீர் ஒழிய,உமது செயல் என்ன என்றோ உமத்து புரட்ச்சி எது என்றோ கூறவில்லை.ஆகவே தான் கூறுகிறேன் நீர் என்ன செய்தீர்,செய்கிறீர் உமது லட்சியக் கோட்பாடு என்பது என்ன என்பதைச் சொல்லாமல், அடைமொழிகளில் உம்மை நீரே புகழ்ந்து தள்ளுகிறீர்.

வந்தது முதல் உங்கள் வேலை எங்கள் கருத்திற்கு எதிராக ஏதாவது உங்கள் காழ்புணர்ச்சியைக் கொட்டுவது...!

உம்மேல் எனக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்படுவதற்கு நீர் என்னத்தைச் செய்து கிழித்தீர்,எனக்குத் தெரிந்த்வரை இலவசமாக இங்கே உம்மைப் பற்றிய ஒரு அபரிதமான மதிப்புடன், நுனிப் புல் மேய்ந்து உமது அறிவிலித் தனமான கருத்தாடல்களினாலும் திரிபுகளினாலும் பலரது வெறுப்பைச் சம்பாதித்துளீர்.உம்மேல் எனக்கு ஏற்படுவது பரிதாபமே ஒழிய காழ்ப்புணர்ச்சி அல்ல.

அதையே சிலரின் தேவைக்காகச் செய்கிறீர்கள்...!

யாருடைய தேவைக்காகவும் நான் இங்கு கருத்து எழுதவில்லை, நீரும் உமது தம்பட்டமும்,அரவேக்காட்டு மேதாவித்தனமும் தான் உம்மை விமர்சிக்கத் தூண்டுகிறது.பலர் இதைச் செய்து பின்னர் உருப்படாதது என்று சென்று விட்டனர். நானும் அப்படி இருப்பம் என்று தான் நினைக்கிறது,ஆனால் சில சமயங்களில் ஆகவும் எரிச்சலாகவும் வெறுப்பாகவுமிருக்கிறது.உமது திரிபுகளைப் பார்த்து சகிக்க முடியாமலே எழுதுகிறேன். நீர் யார் என்று அறியாத நான் ஏன் இவ்வறு எழுதுகிறேன் என்று எண்ணிப் பாரும்.
Reply
#73
புற்றுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பு இரவில்தான் அதிகம் உலவும். இது இலத்திரன் வலைப்பின்னலுக்குள் ஒளிந்திருக்கும், வெளியே தலைகாட்டாது. வெளிச்சத்தையும், மக்கள் கூட்டத்தையும் பார்த்தால் பயப்படுகின்றதோ.

இளைஞனின் கவிதை வெளியீட்டு விழாவிற்கு தன்னால் வரமுடியாததற்கு முதலில் லண்டனில் வதியவில்லை என்றார். விழா முடிந்தபின் வேறோர் இடத்தில் பிரசன்னமாக இருக்க வேண்டியிருந்தது என்றார். நான் நினைக்கின்றேன் இவர் கணணிக்குப் பக்கத்தில் இருந்து தமிழ் சொல்லகராதியில் புதிய சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருந்திருப்பார். :wink:
<b> . .</b>
Reply
#74
<b>தலைப்போடு சம்பந்தப்படாத தனிநபர் பற்றிய அநாவசிய உரையாடல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவையோ அவசியமோ நமக்கில்லை...! தலைப்போடு தொடர்புடைய எங்கள் கருத்துக்களில் தவறுகள் இருந்தால் தெளிவாக வாசகர்களுக்கு சுட்டிக்காட்டலாம்..! வரவேற்போம்..!</b> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
பிராமணர், பார்பனர் என்று பொதுவாக கூறுகிறோம் ஆனால் இரு பிரிவுகள் ஜய்யர் ஜய்யிங்கர் என இருப்பதாக அறிந்தோன்.

இதில் ஜய்யிங்கர்கள் தான் இராமரை வழிபடுவர்கள் இந்துமதத்தவர்கள், அந்நியன் படத்தில் போல நாமம் போடுபவர்கள். ஜய்யிங்கர்கள் தம்மை உயர் இனத்தவர்கள் (சாதி அல்ல) எண்ணுபவர்கள் அதாவது தம்மை ஆரியராக (இந்திய ஆரியர்களாக Indo-aryans). இவர்கள் பிள்ளையாரை வழிபடுவதில்லை ஆனால் நாம் எல்லோருக்கும் பொதுவாக தெரிந்த பிள்ளையார் சுளியை மதச்சின்னமாக பயன்படுத்துகிறார்கள். ஜய்யிங்கர்கள் ஜய்யர்களையும் தம்மோடு சமனாக பார்ப்பதில்லை, அவர்களையும் திராவிடராகத்தான் பார்க்கிறார்கள். இந்தியாவில் அரசியலில் செல்வாக்குமிக்கவர்கள் மேலாண்மைவாத கொள்கை கொண்ட ஜய்யிங்கர்கள் (உயர் ஆரிய இனமாக தம்மை எண்ணுபவர்கள்). தீவிரவாத இந்துசமய கருத்துக்கள் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் இருப்பவர்களும் இவர்கள் தான்.

ஜய்யர் என்பவர்கள் சைவசமயத்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் நான் அறிந்தவரை ஈழத்தில், இலங்கையில் உள்ளவர்கள். இந்தியாவில் ஜய்யர்கள் தமிழ்நாட்டிலும் எனய திராவிட பகுதியையும் தான் புூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் தம்மை ஒரு ஆளும் வர்கமாக உயர் இனமாக எண்ணுவதாக தெரியவில்லை.

ஈழத்தமிழரின் கலாச்சாரத்தில் மதம் மதம்சார்பற்ற மூடநம்பிக்கைள் மனிதத்தன்மைக்கு எதிரான நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் பல உண்டு. இதற்குக் காரணம் அந்த சமுதாயத்தின் அங்கத்தவராகிய நாம் ஒவ்வொருவருமே. மதம் மதம்சார்பற்ற மூடநம்பிக்கைகளிற்கு அர்த்தம் கொடுத்து அங்கீகரிக்கும் நடைமுறைகளை முதலில் அன்றாட வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தவிர்கமுயலுங்கள். எம்மில் பலர் இன்று நம்பிக்கை இல்லாவிடினும் அது தான் வழமை என்றோ, ஏதே மற்றவர்களை திருப்த்திப்படுத்த அல்லது அவர்களின் விமர்சனங்களிற்கு பயந்தவர்களாக பல அர்த்தமற்றவற்றை செய்கிறோம். முதலில் இந்த கோழைத்தனத்திலிருந்து உங்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொள்ளுங்கள். உங்களிற்கு அந்த தன்நம்பிக்கையும் விடுதலையும் கிடைக்கும் போது உங்களை ஏமாற்றமுடியாது, உங்களின் கடின உளைப்பும் பால் பழம் போன்ற சத்துணவுகள் (ஓவ்வொரு 5 வினாடிகளிற்கும் பட்டினியால் 1 குழந்தை இறக்கும் இந்த உலகில்) அருச்சனை அபிசேகம் என விரையமாக்கப்படாது.

நாம் ஒவ்வொருவரும் நடைமுறையில் இந்த மாற்றங்களை எமது அன்றாட வாழ்வில் கொண்டுவந்தால் எம்மை ஏமாற்றி அடக்கியாண்டு சுரண்டிப்பிழைக்க மதத்தின் பெயரால் நிர்வாகமயப்படுத்தப்பட்ட மூடநம்பிக்கைள் என்னும் அடிமையிலிருந்து விடுதலை பெறலாம். இப்படிப்பட்ட ஒரு தெளிவு இந்தியாவில் வந்தால் பிரீத்தி கூறியது போன்று 3 வீதமானவர்கள் இந்தியாவின் ஆளும் வர்க்கமாக தொடர்வது கேள்விக்குறியாகும். ஈழத்து ஜய்யர் மாரின் வயிற்றில் அடித்து இந்திய மேலாண்மைவாதிகளின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரலாம் என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான வாதம்.
Reply
#76
[size=24]ஜய்யர் என்பவர்கள் சைவசமயத்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் நான் அறிந்தவரை ஈழத்தில், இலங்கையில் உள்ளவர்கள். இந்தியாவில் ஜய்யர்கள் தமிழ்நாட்டிலும் எனய திராவிட பகுதியையும் தான் புூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் தம்மை ஒரு ஆளும் வர்கமாக உயர் இனமாக எண்ணுவதாக தெரியவில்லை


நன்றி kurukaalapoovan
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#77
preethi Wrote:
KULAKADDAN Wrote:
kirubans Wrote:தமிழில் அர்ச்சனை செய்தால் எல்லாம் மாறிவிடுமா? அது சரி யாரை தமிழில் பூசை செய்ய விடுவது?
கடவுளை நம்புகிறவர் போகிறார்.ஏன் யாரும் பூசை செய்யலாம், அதில் என்ன தப்பு,நம்புபவர்களுக்கு கோயில் மனத்திருப்தி தருகிறதென்றால் அதை மற்றவர்கள் தடுப்பான் ஏன்?

யாரும் பூசை செய்யலாம் என்றிருந்தால் பரவாயில்லையே, பிராமணர்கள் மட்டும்தான் பூசை பண்ண முடியும் என்றல்லவா இருக்கிறது, நாங்கள் தமிழர்கள், எங்களின் உழைப்பில் கட்டிய கோயிலில் தீண்டத் தகாதவர்களாக அல்லவா நிற்கிறோம். அதை மாற்ற வேண்டுமென்பதைத் தானே நான் சொல்கிறேன்.

விடிய விடிய ராமர் கதை விடிந்த பிறகு ராமருக்குச் சீதை என்ன முறையென்று கேட்டவன் போல தான் இந்தக்
KULAKADDAN.
கோயிலுக்குப் போவதை ஒருவரும் எதிர்க்கவில்லை, கடவுளுக்கும் எங்களுக்குமிடையில், தமிழரை எதிர்க்கும் ஒரு சாதியினரின் ஆதிக்கம் தேவை தானா என்பது தான் என்னுடைய கேள்வி.

நான் யாருடைய கருத்துக்கு பதில் சொன்னன் என்பதை பார்த்தீர்களா. கிருபனுக்கு சொன்ன பதில்.

யாரும் பூசை செய்யலாம் என்று கிருபனது கேள்விக்கு சொன்னேன்.

ஏன் பிராமணரை வலிந்து அழைக்க்கிறீர்கள். அழைப்பது எம்மவர் தப்பு தானே.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#78
Mathuran Wrote:
Jude Wrote:ஈழத்தமிழ் போராட்டத்துக்கு சாதி மத வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்தமான ஈழத்தமிழரும் ஆதரவளிக்கிறார்கள். காசோலைக்கு மதம் பரப்பும் கிறிஸ்தவர்களும், அந்த மதத்தை சேர்ந்த அடேல் பாலசிங்கமும், கிறிஸ்தவன் மாவீரன் சார்ள்ஸ் அன்ரனி நினைவாக தனது மகனுக்கு அதே கிறிஸ்தவ பெயரிட்டு மகிழ்ந்த தலைவர் தலைமையில், எமது மக்கள் வேளாளரும், பிராமணரும், மற்றும் எல்லாரும் ஒன்றாக ஒரே கொள்கையுடன் இருக்கிறார்கள். பிராமணியம் எமது மக்களுக்குள்ள ஒரு பிரச்சினை. அதை காப்பதும், வளர்ப்பதும் எமது மக்கள் மத்தியில் வேளாளர். அதற்காக அவர்கள் தமிழீழ போராட்டத்தின் எதிரிகள் அல்ல.

அதே வேளை எமக்கு இந்திய ஆதரவு இனிமேலும் தேவையில்லை. இந்திய தமிழரின் பிராமண போர் எமது பிரச்சினையல்ல. எமது தமிழீழ போராட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், இந்தியாவிலும் பார்க்க நிறைந்த அளவில் மதிப்பும், ஆதரவும் உண்டு. இந்த ஆதரவு இந்திய எதிர்ப்பை சமப்படுத்த போதுமானது. இந்திய பிராமணரை எதிர்த்து, இந்திய ஆதரவு கிடைக்க போவதில்லை. இது எமக்கு தேவையும் இல்லை.

வண்க்கம் ஜுட் அவர்களே!

நீங்கள் யார் என்பதனை இங்கிருக்கும் உண்மையான தமிழர்கள் அறிவார்கள்.

[size=16] ஆகா! நல்லது. நான் எழுதும் கருத்துக்களை படித்து என்னை அறிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி.

Mathuran Wrote:எதற்கெடுத்தாலும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் தமிழீழத்தேசியத்தலைவரிடமும் குறைகாண்பதிலேயே குறியாக இருக்கின்றீர்களே உங்களின் நோக்கம் புரியாத முட்டாள் தமிழரல்லர் நாம்.

[size=16]
எங்கே தேசியத் தலைவர் மீதும் அரசியல் ஆலோசகர் மீதும் குறை எழுதியிருக்கிறேன்? எங்கே மீண்டும் ஒரு முறை நான் எழுதியதை படியுங்கள் மதுரன், தமிழ் புரிகிறதா என்று பார்க்கலாம்!.

Mathuran Wrote:சாள்ஸ் அன்ரனி என்னும் பெயரினை தனது மகனிற்கு தேசியத்தலைவர் வைத்து மகிழ்ந்தது, சாள்ஸ் அன்ரனி என்னும் ஓர் சிறந்த மனித நேயம் கொண்ட போர்வீரன் ஈழத்தமிழரின் இன்னைலைத் துடைக்க புறப்பட்டான் . அப்படிப்பட்ட ஒரு போர்வீரனை கௌரவித்து அவரை நினைவுகொள்ளும் முகமாக அப்பெயரினை தேசியத்தலைவர் தனது மகனிற்கு சூட்டியமையானது ஓர் சிறந்த செயலாகவே தமிழர்கள்ளால் பார்க்கப் படுகின்றது.

[size=16]
ஆகா! அருமை! அதைத்தான் நானும் எழுதியிருந்தேன். கருத்தொருமித்து எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சமாவது உங்களுக்கு தமிழ் அறிவு இருப்பது பற்றி மகிழ்ச்சி.

Mathuran Wrote:இவை அனைத்தும் இருக்க ஜுட் அவர்களே! இவ்வளவு பார்பானுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் ஏன் தமிழ் பெயரல்லாத ஜுடெ என்னும் புனைப்பெயரில் வந்துள்ளீர்கள்?

[size=16]
நீங்கள் மதுரன் என்ற தமிழ் புனை பெயரில் வருகிறீர்கள். களம் அனுமதிப்பதால் வருகிறீர்கள். உண்மைப்பெயர் என்றெல்லாம் பொய் எழுதாதீர்கள். என்ன பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடவுச்சீட்டெல்லாம் காட்டி நிருபிக்க போகிறீர்கள் அப்படித்தானே?

Mathuran Wrote:சாதிகள் இல்லையடி பாப்ப என பாரதியார் பாப்பான்களுக்குதானே சொல்லிச் சென்றார். தயவு செய்து பாரதியின் பாடல்களை ஜுட் போன்றவர்கள் படிப்பது நல்லது.

[size=16]
ஆக பாரதி உங்களுக்கும், வேளாளருக்கும், சாதி வேற்றுமை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை ஆகவே நீங்களும் ஆறுமுகநாவலர் வழியில் பள்ளர், பறையர் எல்லாம் எங்கள் வாசல்படி மிதிக்க விடமாட்டோம், எங்கள் கோவில்களில் அண்டவிட மாட்டோம் என்று சொல்கிறீர்கள் அப்படித்தானே?
இப்படித்தானா "உண்மையான தமிழர்களின்" தமிழீழம் அமையப்போகிறது?
Reply
#79
Quote:ஜய்யர் என்பவர்கள் சைவசமயத்தவர்கள் சிவனை வழிபடுபவர்கள். இவர்கள் தான் பெரும்பாலும் நான் அறிந்தவரை ஈழத்தில், இலங்கையில் உள்ளவர்கள். இந்தியாவில் ஜய்யர்கள் தமிழ்நாட்டிலும் எனய திராவிட பகுதியையும் தான் புூர்வீகமாக கொண்டவர்கள். இவர்கள் தம்மை ஒரு ஆளும் வர்கமாக உயர் இனமாக எண்ணுவதாக தெரியவில்லை.

இது சரியான குறுக்கால போன கதை. எந்தப் பிராமணரும் தங்களைத் தமிழராகவோ, திராவிடராகவோ எண்ணுவதில்லை. <b>Please see the Iyer heritage link for further details about Iyers.</b>சோழர் காலத்தில் தான் பெரும்பான்மையான பிராமணர்கள் தமிழர் தேசத்துக்குக் குடியேறினார்கள். சோழர்கள் கட்டிய கோயில்களில் வேலைக்கு வந்த பிராமணர்கள் கொஞ்சம், கொஞ்சமாக, கடவுள் நம்பிக்கை என்ற மாயயைக் காட்டி அதிகமான் அதிகாரத்தைத் தங்களிடம் எடுத்துக் கொண்டார்கள். சமய நம்பிக்கை என்ற அடைப்படையில், தமிழரிடம் இல்லாத சாதி வழக்கததையும் அறிமுகப் படுத்தினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் தங்கள் கைக்கு வந்ததும், சாதியைக் காட்டி, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதால், அவர்களின் ஆதிக்கத்தில் கலையும், தமிழ் நூல்களும் வந்தன. அவர்கள் அவற்றைத் திரித்து, தமிழர்களின் நூலகள், கலைகள், ஊர்ப்பெயர்கள், கோயில்கள் எல்லாவற்றுக்கும் ஒரு புராணக் கதையை இயற்றி சமஸ்கிருதப் படுத்தினார்கள். நாங்களும் இன்னும் இளிச்ச வாயன்களாக இந்தப் புராணக் கதைகளையும், பாவம் தீர்ப்பதற்குப் பிராமணருக்குத் தானம் கொடுத்தால் சரி, அம்மாவுக்கு மோட்சம் கிடைக்க இங்கு ராராவாய்க் கோப்பையடிச்சு வந்த காசைக் கொடுத்தால் சரி. இந்தக் கதையெல்லாம் கள்ளப் பிராமணர் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதி வைத்தவை. நாங்கள் அம்மாவுக்கு மோட்சம் கிடைக்க 51$ கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு அர்ச்சனையைச் செய்கிற அய்யருக்கே அதில் நம்பிக்கை இல்லையென்பது அவரின் முகத்திலுள்ள நமட்டுச் சிரிப்பிலேயே தெரியும், அவரும் ஏனோ தானோ என்று முணுமுணுத்து விட்டு, எங்களின் 51$ + $ 5 TIPS ஐயும் சுருட்டிக் கொண்டு போய் விடுவார். ஒரு பயபக்தியில்லாத, தங்களைத் தமிழராக நினைக்காத, தமிழை எதிர்க்கும், எங்களை விடத் தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் பார்ப்பான்களிடம் நாங்கள் எதற்காக எங்களின் வியர்வை சிந்தி உழைத்த காசை, அவர் அந்தக் குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக மட்டும் கொடுக்க வேண்டும். இந்தத் தொழிலை வேறு தமிழர்களும் செய்வதை ஊக்குவித்து, இந்தப் பிராமணருக்கு எங்களின் கோயில்களிலுள்ள ஆதிக்கத்தை ஏன் ஓழிக்கக் கூடாது?

http://www.bharatavarsha.com/iyer.html


"The Iyers constitute one of the last surviving pockets of ancient Indo-Aryan (Vedic) culture.<b> They have retained this Indo-Aryan legacy for over 5000 years. It is interesting that this is the case despite them having lived in the heart of Dravida country for over a thousand years!</b> Perhaps this is due in no small measure to the magnanimity of Dravidian rulers (and indeed the dravidian people themselves) century after century, who not only permitted, but even encouraged Iyers to settle in south India.
Reply
#80
குருவியார் தன்னுடைய பெயரை அறணையார் என்று மாற்றிக் கொண்டால் எவ்வளவோ பொருத்தமாக இருக்கும். இவர் சம்பந்தா சம்பந்தமில்லாமல் அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசி அரைத்த மாவையே திருப்பி அரைத்துக் கொண்டு, தன்னுடைய நீண்ட வசனங்களில் இந்த விடயத்தின் தலைப்பையும் தான் சொல்ல வந்ததையும், இடையில் மறந்து விடுகிறார் போலிருக்கிறது.

<b>இந்த விடயத்தை நான் தொடங்கியதன் காரணம், பிராமணியத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. பெரியார், அண்ணா போன்றவர்களாலேயே பிராமணியத்தை வெல்ல முடியவில்லை. என்னுடைய நோக்கம் எல்லாம், எங்கள் மத்தியில், எங்கள் தயவில் வாழும் பிராமணர்களின் தமிழ் வெறுப்புத் தன்மையையும், அவர்கள் தாங்கள் தமிழரல்ல, தமிழர்களை விட மேலானவர்கள் என்று நினைப்பதையும், இன்னும் அவர்கள் தமிழையும்., தமிழீழத்தையும், எங்களுடைய விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்களான் சங்கராச்சாரி, சோ ராமசாமி போன்றவர்களைத் தான் இன்னும் தங்கள் தலைவர்களாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுவதும் தான்.

இந்த 21ம் நூற்றாண்டில் நாங்கள் எதற்காக சாதிப் பாகுபாட்டை ஊக்குவிப்பது மாதிரி, ஒரு சாதியில் பிறந்தவர் என்ற ஓரே காரணத்துக்காக அவருக்குப் பயபக்தி உண்டோ இல்லையோ நாங்கள் மத குருவாக ஏற்றுக் கொள்கிறோம்.

எல்லா மதத்தவர்களும் தங்களுடைய சொந்த மொழியில் க்டவுளை வழிபடும் போது, தமிழ், தமிழர் என்று வாய் கிழியப் பேசும் நாங்கள் எதற்காக எங்களுக்கு எந்த வித தொடர்புமில்லாத வடமொழியை, எங்களுக்குக் கொஞ்சம் கூட விளங்காத யாரோ ஒருவர் முணு முணுக்க நாங்கள் "ஞே" என்று எருமை மாதிரி நின்று விட்டு விட்டு வருகிறோம் என்பது தான்.</b>

நாங்கள் தமிழர்களா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு குருவியாருக்கு என்ன தகுதியுண்டு. குருவியாரிடம் சான்றிதழ் வாங்கிக் கொண்டா நாம் தமிழைப் பற்றிப் பேச வேண்டும். மேற்குலகில் வாழ்கின்ற காரணத்தால் நாங்கள் தமிழைப் பற்றியோ தமிழரைப் பற்றியோ பேசும் தகுதியை இழந்து விட்டதாக குருவியார் கண்டபடி புலம்புகிறார். யாரோ ஒரு சில, தங்களைத் தமிழர் என்று சொல்ல வெட்கப் படும் தமிழர்களை மனதில் வைத்துக் கொண்டு எல்லா மேற்குத் தமிழர்களையும் ஒரு வாங்கு, வாங்கும் குருவியாருக்கு உண்மையிலேயே அறளை பெயர்ந்து விட்டதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

நான் இந்த இணையத் தளத்துக்கு மிகவும் புதிய ஒரு அங்கத்தினராக இருந்தாலும் கூட குருவியாரின் மெத்தப் படித்த மேதாவித் தனத்தால், பல விடயங்களில் தலைப்புக்கு சம்பந்தமில்லாதவற்றையெல்லாம் அவர் அழுது கொட்டுவதைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஐயா குருவியாரே, நாங்கள் ஒன்றும் சங்ககாலத்து அன்னப் பறவைகள் அல்ல பாலையும், தண்ணீரையும் வேறு படுத்திப் பருகுவதற்கு, அதனால் விடயத் தலைப்புக்கு சம்பந்தமுள்ளவற்றை மட்டும் எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)