Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச தேர்தல் முடிவு எதுவாயினும் தமிழர் பிரச்சனைக்கு முடிவில
#1
சிறிலங்கா அரச தேர்தல் முடிவு எதுவாயினும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு முடிவில்லை:'தினமணி' தலையங்கம்
[வியாழக்கிழமை, 1 செப்ரெம்பர் 2005, 22:15 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் முடிவு எப்படி இருந்தபோதிலும் ஈழப்பிரச்சினையின் முடிவுக்கான அடையாளங்கள் தென்படவில்லை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது.


தினமணி நாளேட்டில் 'திடீர் திருப்பம்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இன்றைய (01.09.05) தலையங்கம்:

கடந்த ஒரு வார காலத்துக்குள் இலங்கையில் அரசியல் நிலவரம் அடியோடு மாறிவிட்டது.

இதற்கு முதன்மையான காரணம் - அதிபர் சந்திரிகாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதியுடன் முடிந்துவிடுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பே ஆகும்.

அதோடு, அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தேர்தல் ஆணையருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுவிட்டது. 1999 இறுதியில் நடந்த தேர்தலில் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டபோதிலும், 2000 டிசம்பரிலேயே இப்பதவிக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டதாகவும், அதனால் இப் பதவிக்குரிய ஆறாண்டுக்காலம் 2006 டிசம்பரிலேயே முடிவதாகவும் சந்திரிகா எழுப்பிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்நிலையில் தீர்ப்பு வெளியான நாளிலிருந்தே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சந்திரிகாவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகத் தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவும்- எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வந்த லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகிற அதிபர் தேர்தலில் - அச்சம்பவத்தின் பாதிப்பு எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை இப்போதைக்குத் திட்டவட்டமாகக் கணிப்பதற்கில்லை.

இது ஒருபுறமிருக்க திடீரென வரவிருக்கும் இத் தேர்தல் - இலங்கை இனப்பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமர் படுகொலைச் சம்பவத்திற்குப் பிறகும் - தற்பொழுது நடைமுறையில் இருந்து வரும் போர் நிறுத்த உடன்படிக்கை நீடிக்கும் என்று சந்திரிகா அரசு அறிவித்துள்ளது.

ஆனால்

தேர்தல் ஆதாயத்துக்காகப்

பேரினவாதக் கட்சியான, சிங்கள வெறி அரசியல் சக்தியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் சந்திரிகாவின் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

"சில நிபந்தனைகளுடன்'' பக்சவுக்கு ஆதரவு அளிக்க ஜேவிபி முன்வந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இக் கட்சியுடன் கூட்டணி அமைத்து சந்திரிகாவின் கட்சி போட்டியிட்டு நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி, கூட்டாட்சியை அமைத்தது. ஆயினும் ஈழப் பிரச்சினையில் ஜே.வி.பி. விதித்த பல்வேறு "முட்டுக்கட்டைகளை' சந்திரிகா ஏற்க மறுத்ததால் - கூட்டணியிலிருந்து ஜேவிபி வெளியேறியதையொட்டி - அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

இத்தகைய இக்கட்டான சூழலில் - திடீரென வருகிற அதிபர் தேர்தலில் ஜேவிபியின் ஆதரவை நாட வேண்டிய கட்டாயம் சந்திரிகாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ரணில் விக்கிரம சிங்க பலமான முதிர்ந்த அரசியல்வாதி. இத் தேர்தலில் யாருக்கு வெற்றி பெற வாய்ப்புண்டு என்பதைக் கணிப்பது சிரமமே.

தேர்தலில் போட்டியிடும் இருவரில் யார் வெற்றி பெற்ற போதிலும் ஈழப் பிரச்சினை தீர்வுக்கான வழிவகைக்கு சாத்தியக்கூறுகள் சொற்பமே.

சந்திரிகாவின் வேட்பாளரான ராஜபக்ச வெற்றி பெற்று அதிபரானால் - ஜே.வி.பி.யை மீறி இப் பிரச்சினையில் சுதந்திரமாக நடந்து கொள்ளத் துணிவாரா என்பது சந்தேகத்துக்குரியதே.

கூட்டாட்சி முறை அடிப்படையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே எதிர்ப்பது ஜேவிபி.

இலங்கையை - இரு இனங்களும் இரு கலாசாரங்களும் கொண்ட நாடாகவே ஏற்க மறுப்பது அக் கட்சி.

அதோடு பேரினவாத ஆட்சிக்கு உட்பட்டுத்தான் தமிழர்கள் வாழ வேண்டும் என்ற மூர்க்கம் கொண்ட கட்சியும்கூட. அப்படியிருக்க அதன் ஆதரவுடன் அதிபர் பதவிக்கு வருபவரால் எப்படி சுயேச்சையாக நடந்து கொள்ள முடியும்?

ரணில் விக்கிரம சிங்க வெற்றி பெற்றபோதிலும் - சந்திரிகா கட்சியினுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஈழப் பிரச்சினையில் அரசியல் சட்டபூர்வமான தீர்வைக் காண்பது கடினமே.

எனவே இத் தேர்தல் முடிவு எப்படி இருந்தபோதிலும் ஈழப்பிரச்சினையின் முடிவுக்கான அடையாளங்கள் தென்படவில்லை.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
யார் பதவிக்கு வந்தாலும் பிரைச்சனை தீர்வதற்கான அறிகுறிகள் இல்லை, யாருக்கு தான் தாயக மக்கள் ஒட்டு போடுவது? இம்முறையும் ரணிலுக்கு ஓட்டை போடுவதில் பயனேதும் உண்டா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)