Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>புலிகள் இயக்கப் போராளி கோபி
கடத்தப்பட்டதாக புலிகள் கண்டனம்
விடுவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை! </b>
இணுவில் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகிய கோபி என்பவரை பொலீஸார் கைதுசெய்திருப்பதற்குப் புலிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக் கின்றனர். யாழ்ப்பாணம், கலட்டிப் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் தங்கியிருந்த சமயம் நேற்றுக் காலை திடீரென வந்து வீட்டை முற்றுகையிட்ட பொலீஸாரும் படையினரும் அவரைக் கடத்திச் சென்றிருக்கின்றனர் என்று விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறையினர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். போராளி கோபியை உடனடியாக விடுக்காவிட்டால் கடும் நட வடிக்கை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் புலிகள் எச்சரித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல்துறையினர் விடுத் திருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
போராளி கோபி கடத்தப்பட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறையினர் போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழுவினரிடம் முறைப்பாடு செய் திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பட்டமான ஒரு போர் நிறுத்தமீறல் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இன்று புதன்கிழமை 17.08.2005 காலை 08.30 மணியளவில் ஒரு கையை ஏற்கனவே இழந்து சுகவீனமுற்றிருந்த எமது இயக்க உறுப்பினராகிய கோபி எனப்படுபவர் விடு முறையில் தனது பெற்றோருடன் யாழ்ப் பாணம், கலட்டியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளையில் ஸ்ரீலங்கா படையின ராலும் பொலீஸாரினாலும் கடத்தப்பட்டுள் ளார். புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா படை யினராலும், பொலீஸாரினாலும் இவரது வீடு சுற்றிவளைக்கப்பட்டு, துப்பாக்கிப் பிரயோ கம் மேற்கொள்ளப்பட்டு இவரது குடும்பத்த வர், அயலவர் முன்னிலையில் கோபி அவ ரது வீட் டில் இருந்து கடத்தப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்காப் படைபினராலும், பொலீஸா ரினாலும் மேற்கொள்ளப்பட்ட இக்கடத் தலை யாழ்.மாவட்ட அரசியல்துறையினர் வன்மையாகக் கண்டிப்பதோடு, இது அப் பட்டமான போர்நிறுத்த உடன்படிக்கை மீற லாகவும் உள்ளது என போர்நிறுத்த கண் காணிப்பு குழுவினரிடம் கையளிக்கப்பட்ட தமது கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகப் படையினரும், பொலீஸாரும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது உள் நோக்கத்துடன் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் கவனத் திற்கு ஏற்கனவே யாழ்.மாவட்ட அரசியல் துறையினர் கொண்டு வந்திருந்தனர். வேண்டு மென்றே, திட்டமிட்ட வகையில் போர்நிறுத்த உடன்படிக்கையை வலுவற்றதாக்கும் உள் நோக்குடனேயே ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கோபியைக் கடத்திய சம்பவம் அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப் பினராகிய கோபி அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படாது விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு விடு தலைப் புலிகள் தள்ளப்படுவார்கள் என்பதை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: உதயன்
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>படையினரால் கடத்தப்பட்ட போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
</b>
யாழ்ப்பாணம் கலட்டிப் பகுதியில் வைத்து சிங்களப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட போராளி கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். காவல்துறை பொறுப்பதிகாரி சாள்ஸ் விஜயவர்த்தனவின் கொலையில் தொடர்பிருப்பதாக சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட மேற்படி போராளி நேற்று மாலையே கொழும்பிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
யாழ். நகரில் தனது வீட்டில் பெற்றொருடன் தங்கியிருந்த எமது அரசியல் துறைப் போராளியான கோபி என்பவரை படையினர் நேற்று புதன்கிழமை காலை வீட்டிலிருந்து கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை படையினர் உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவோம் எனவும் விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக தங்கள் கடும் கண்டனத்தை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடமும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறையினர் விடுத்துள்ள ஊடகச்; செய்தியில்,
ஒரு கையை ஏற்கனவே இழந்து சுகவீனமுற்றிருந்த எமது இயக்க உறுப்பினராகிய கோபி எனப்படுபவர் விடுமுறையில் தனது பெற்றோருடன் யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளையில் சிறிலங்கா படையினராலும், காவல்துறையினராலும் கடத்தப்பட்டு;ள்ளார்.
நேற்றுக் காலை 8.30 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு அயலவர் முன்னிலையில் கடத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை யாழ். மாவட்ட அரசியல் துறையினர் வன்மையாக கண்டிப்பதோடு, இது அப்பட்டமான போர்நிறுத்த மீறல் எனவும் கண்காணிப்புக் குழுவினரிடம் கையளிக்கப்பட்ட கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.
நன்றி:சங்கதி
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
வியேவர்த்தன கொலை தொடர்பில் புலிகள் அமைப்பு உறுப்பினர் ஒருவர் கைது
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804160235ssp203.jpg' border='0' alt='user posted image'>
<b>சார்லஸ் விஜேவர்த்தன</b>
விடுதலைப்புலிகள் தான் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்திவருகிறார்கள் என்றும், கடந்த 24 மணி நேரத்தில்
மூன்று முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.
முதல் சம்பவமாக, நேற்று இரவு ஒன்றேகால் மணி அளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டது; அக்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது; இரண்டாவது சம்பவத்தில் கடந்த இரவு எட்டரை மணிக்கு மட்டக்களப்பில், ரோந்து சென்ற பொலிசார் மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் கைக்குண்டுவீச்சு நடத்தினார்கள்; இதில் இரு பொலீசார் காயம் பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்றாவது சம்பவத்தில், இன்று காலை பத்தரை மணி அளவில் யாழ் நகர் கல்லடி பகுதியில் யாழ் தலைமை பொலிஸ் அதிகாரி சார்ல்ஸ் விஜேவர்த்தனவின் படுகொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற மூன்று பொலீசார், ஒருவீட்டுக்குள் சென்ற போது, அந்த சந்தேக நபர் தம்மிடமிருந்த பிஸ்டலை வைத்து சுட்டதாகவும், அதில் இரு பொலிசார் காயம்டைந்தனர்என்றும், ஆனால் அந்த சந்தேக நபர் யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி ஓட முயன்ற போது பிடிபட்டார் என்றும், அவர் இப்போது விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் சிறுகாயம் பட்ட பொலிஸ்காரர் ஒருவருக்கு யாழ் நகரிலும், மோசமாகக் காயம் பட்ட இன்னொரு பொலிஸ்காரருக்கு கொழும்பிலும் வைத்து சிகிச்சை தரப்படுகிறது என்றும் இராணுவத்தின் சார்பில் பேச வல்ல அதிகாரி பிரிகேடியர் தயா ரத்னாயகே கூறினார்.
இதற்கிடையில் மன்னார் உள்ளிட்ட வட மாகாணப் பகுதிகளில் வெடிப்பொருட்கள் கடத்தப்பட்டதாக அண்மையில் சில செய்திகள் வந்துள்ளன. இவை அண்மையில்தான் நடக்கின்றனவா, அல்லது முன்பிருந்தே நடப்பவையா? என்று கேட்ட போது, பதிலளித்த பிரிகேடியர், இத்தகைய சம்பவங்கள் நடந்து வருவது உண்மைதான் என்றும், விடுதலைப்புலிகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு யுத்தப் பொருட்களை எடுத்துவருகிறார்கள் என்றும், கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இத்தகைய செய்திகள் வருகின்றன என்றும், அதே வேளை அண்மையில் இத்தகைய சம்ப்வங்கள் – அதாவது விடுதலைப்புலிகள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவற்றைக் கடத்துவது அதிகமாகி உள்ளது என்றும், இதே போல, மாற்று இயக்கத்தினரைத் தேடி அழிப்பது போன்ற பல்வேறு செயல்களிலும் தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் கூறினார்.
இதேவேளை யாழ் நகரச் சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பொலிசார் மீதான துப்பாக்கிப்பிரயோகம், ஈபிடிபி அலுவலகத்தின் மீதான கைக்குண்டுத் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்கும் தமக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென அந்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் மறுத்துரைத்தார்.
சுகவீனமடைந்து வீட்டிற்குச் சென்றிருந்த தமது இயக்க உறுப்பினரான கோபி என்பவரது வீட்டை இராணுவத்தினரும் பொலிசாரும் சுற்றி வளைத்து, அவரைக் கடத்திச் சென்றுள்ளதாகவும், இவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் தாங்கள் மாற்று நடவடிக்கையில் இறங்க நேரிடும் என்றும் போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவிற்கு இந்தச் சம்பவம் தொடர்பாக முறையிட்டு எழுதியுள்ள கடிதத்தில் விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாகவும் அந்தப் பேச்சாளர் கூறினார்.
BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
மீண்டும் புலிகளுமும் அரசும் டோக்ஸ்க்கு போக சம்மதித்தாக பிபிசி பிறேக்க்ங் நியூஸி கூறுகிறது
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
நோர்வேயில அரசாங்கம மாறப் போகுது. மாறினதோடை விதார் கெல்சிங் வீட்ட போகப் போறார் அதுக்குள்ள ஒரு குளப்பம் காட்டிப்போட்டுப் போறார். யாருடைய பின்னணி ஆதரவோ தெரியவில்லை. ஏற்கனவே விடர் கெல்சிங்க்கும் எறிக் சொல்கையும் இக்கும் இடையில் கொஞ்சம் அப்படி இப்படி இந்த விவகாரத்தில்.
ஒரு வேளை நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் பொறுப்பிலிருந்து யுத்தம் வெடித்து வெளியேறும் போது ஒரு தோல்வி கண்ட முயற்சி என்ற முத்திரையோடு விலகுவதை தவிர்த்துக் கொள்ள இப்படி ஒரு சதி நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
kurukaalapoovan Wrote:நோர்வேயில அரசாங்கம மாறப் போகுது. மாறினதோடை விதார் கெல்சிங் வீட்ட போகப் போறார் அதுக்குள்ள ஒரு குளப்பம் காட்டிப்போட்டுப் போறார். யாருடைய பின்னணி ஆதரவோ தெரியவில்லை. ஏற்கனவே விடர் கெல்சிங்க்கும் எறிக் சொல்கையும் இக்கும் இடையில் கொஞ்சம் அப்படி இப்படி இந்த விவகாரத்தில்.
ஒரு வேளை நோர்வேயும் கண்காணிப்புக்குழுவும் பொறுப்பிலிருந்து யுத்தம் வெடித்து வெளியேறும் போது ஒரு தோல்வி கண்ட முயற்சி என்ற முத்திரையோடு விலகுவதை தவிர்த்துக் கொள்ள இப்படி ஒரு சதி நிறைவேற்றப்பட்டிருக்கலாம். இப்படி அரசியல் திருப்பம் ஒரு ஆச்சரியம்...குறுக்ஸ் மோனை உன்னுடைய சந்தேகம் சரியாயிருக்குமென்று நினைக்கிறன்
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
குறுக்கால போவன் ஏன் விதார் வீட்ட போவான்,
எரிக் சோல்காம் எதிர்க் கட்சி அல்லோ,அரசாங்கம் மாறுவதால் நோர்வேயின் நிலைப் பாடுகள் மாறு படுமா.
இப்போது சந்திரிகா தான் அவசரமாக பேச வரச் சொல்லி தலைவருக்குச் செய்தி அனுப்பியிருக்கிறா, நல்லா இடின்ச்சு போனா போல.என்ன இப்ப போர் நிறுத்தச் சரத்துக்கள ஒழுங்கா அமுல்படுத்துங்கோ எண்டு கேக்கப் போறம்,அப்படி ஒரு திருப்பமும் வாற மாதிரித் தெரியேல்ல.இந்தியா தான் இதில ஒரு பொம்மைய இளந்துட்டம் எண்டு யோசிப்பினம்.மனிசிக்கென்ன இன்னும் கொன்ச்ச மாசந்தான் பதவியில அதுக்கப்புறம் லண்டனில இளப்பாறிருவா அதுக் குள்ள ஒரு சின்ன சமாதானம்....
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
ஆட்சி மாறினால் வீட்ட போவர் எண்டு சொன்னான். யார் சொன்னது நோர்வேயின் நிலைப்பாடு சுயமாகத்தான் எடுக்கப்படுது எண்டு.
இந்தியா தனது மாற்று நடவடிக்கையில ஏற்கனவே இறங்கி விட்டுது போல கிடக்கு. அது தான் சமாதான தேவன் ரணில் சப்பாத்தி சாப்பிடப்போட்டார். கையோட கொஞ்சம் கவனியுங்கோ எதிர்வரும் காலங்களில் இந்தியப்பிரச்சார ஊடகங்கள் கொஞ்சம் JVP, பிக்குகள், தேசப்பற்றுள்ள இயக்கத்திற்கு எதிர்புப்பிரச்சாரங்கள் என நாசுக்காக ஊதத்தொடங்குவினம்.
தென் இலங்கையில சேது சமுத்திரத்திற்கு எதிர்ப்புக்கள் கூட வெளிப்படையாக காட்டப்படும்... அம்மையாரும் ஏதாவது அப்படி இப்படி செல்லுவா கடலைப்பருப்பு தனக்கு ஒத்துவரேல எண்டு.
இவ்வளவு காலம் யுத்த நிறுத்தம் இழுபட்டது இரு தரப்பாரும் (புலிகளும் அரசும்) தாம் தான் யுத்தப்பிரகடனம் செய்தவர்கள் என்ற குற்றத்தை சர்வதேச சமுhகத்திடம் பெறக்கூடது என்று கொஞ்சம் பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்த படியாலை.
யாரக்காவது கனவிலாவது ஒரு எண்ணம் இருக்கா அரசாங்கம் எத்தனை யுத்த நிறுத்த மீறல்களை எப்படி அப்பட்டமாக செய்தது என்று தாராளமான ஆதாரத்தோடு புலிகள் தோலுருச்சுக் காட்டினாலும் கண்காணிப்பு குழுவோ நோர்வேயோ அல்லது சர்வதேசமோ அரசு தான் குற்றவாளி யுத்த நிறுத்த உடைந்ததுக்கு அரசு தான் பொறுப்பு என்று தீர்ப்பு வழங்குவார்கள் என்று?? :roll: :?
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
நீங்கள் சொல்லுறது சரி ,
ஆனால் நான் இதைப் பார்ப்பது,கிழக்கில் அரங்கேறிக் கொண்டிருந்த ஒரு வகை சதி நாடகத்தை ,அண்மய நிகழ்வு தற்காலிகமாகவேனும் முடிவுக்குக் கொண்டு வரும் எண்டு.புலிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசாங்கத்தையும்,அதற்குப் பின்னால் முண்டு கொடுத்துக் கொண்டு இருக்கும் சக்திகளையும் ,இரு தரப்பாரையும் சம்ச்சீராக நடத்துவதற்கு ஏதுவான புற நிலைகளை உருவாக்குவதாகவே அமைந்துள்ளது.இதுவே இறுதியில் புலிகள் எதிர் பார்க்கும் சமச்சீரை ,இந்தச் சக்திகள் விரும்பாவிட்டாலும் ஏற்படுத்தும்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு சந்தேகம்.. உடன் பதில் வேண்டும்.
இலங்கையின் வடக்கு பகுதி முதலமைச்சர் என்று
யாராவது இருக்கினமா? :?
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
vasisutha Wrote:ஒரு சந்தேகம்.. உடன் பதில் வேண்டும்.
இலங்கையின் வடக்கு பகுதி முதலமைச்சர் என்று
யாராவது இருக்கினமா? :?
அந்த போஸ்ட் காலியாத்தான் இருக்கு வசி.. ஏன் அந்த வெற்றிடத்தை நிரப்ப போறீங்களோ?? கவனம் ஈபி** சினைப்போரட நிக்குது...  :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இதை பாருங்க டன் அண்ணா நான் ஏன் கேட்டன்
என்று தெரியும்.
:x http://www.dinamalar.com/2005Aug19/imp8.asp
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
பேட்டி கொடு்த்தவர் வடக்கு மத்திய மாகாண முதல்வர்...உள்ளுக்கு வாசி வசி
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
அப்படி வேற இருக்கா? ஏன் அப்ப தலைப்பில
அப்படி போடனும்? :evil:
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
தினமலர் க்காரனைததான் கோட்கோணும் ...ஏன் அப்படிபோட்டனியென்று....எங்களுக்கு இந்தியாகாரிண்ரை விண்ணாணம்கள் தெரிந்தளவுக்கு ...எங்கட நாட்டுவிசயங்கள் அவைக்கு தெரியாது
Posts: 31
Threads: 2
Joined: Jul 2005
Reputation:
0
முன்னாள் முதலமைச்சர் இருக்கிறார் வரதராச பெருமாள்
|