Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண்கள் ஏமாற்றிய காலம் பெண்கள் ஏமாற்றும் காலம் இது.
#1
நிச்சயதார்த்தம் முடிýந்த பெண் கொழும்பிலிருந்து சென்னை ஊடாக காதலனிடம் லண்டன் செல்ல முயற்சி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்

வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துதர நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இலங்கையிலிருந்து காதலனுடன் விமானம்மூýலம் சென்னைக்கு வந்து, இங்கிருந்து லண்டனுக்குச் செல்ல முயன்ற இளம் பெண்ணை சென்னை விமானநிலையப் பொலிஸார் மீட்டு மீண்டும் இலங்கைக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூýறியதாவது:

இலங்கையைச் சேர்ந்த வாலிபரொருவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னையை அடுத்த வேளைச்சேரியில் தங்கியிருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினரான பெண்னுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடந்தது. இலங்கையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் வாலிபரும் கலந்து கொண்டார். ஆனால், மணமகள் லண்டனில் வசித்து வரும் இளைஞரொருவரைக் காதலித்து வந்த காரணத்தினால் அவருக்கு நிச்சயதார்த்தத்தில் உடன்பாடு இல்லை. இருப்பினும், நிச்சயதார்த்தத்துக்கு அவர் சம்மதித்தார்.

நிச்சயதார்த்தம் முடிýந்தவுடன் மணமகன் சென்னை திரும்பிவிட்டார். இந்நிலையில் லண்டனிலுள்ள தனது காதலனுடன் தொடர்பு கொண்ட பெண் திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவலைக் கூýறினார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காதலன் தனது நண்பருடன் லண்டனிலிருந்து கொழும்பிற்கு வந்தார். அங்கு தனது காதலியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து பெண் காதலன் மற்றும் அவரது நண்பர் ஆகிய மூýவரும் சென்னை வரத் திட்டமிட்டனர். பின்னர் திட்டமிட்ட படிý கொழும்பில் தனது வீட்டிýல் இருந்து வெளியேறிய பெண், கொழும்பு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு காதலனும், அவரது லண்டன் நண்பனும் இணைந்து கொள்ள மூýவரும் இந்தியன் எயர்லைன்ஸ் விமானம் மூýலம் புதன் இரவு சென்னை மீனம்பாக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

இதற்கிடையில், கடைக்குச் சென்று விட்டு வருவதாகக் கூýறிவிட்டுச் சென்ற மகள் மீண்டும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரின் தாயார், மகள் அநேகமாக சென்னைதான் வந்திருக்க வேண்டுமெனக் கருதி அது குறித்த தகவலை சென்னையில் தங்கியிருக்கும் மணமகனுக்கு தொலைபேசி மூýலம் கூýறினார். இந்தத் தகவல் கிடைத்ததும் வியாழன் காலை சென்னை மீனம்பாக்க விமான நிலையத்துக்கு வந்த மணமகன் இலங்கையிலிருந்து சென்னை வந்து சேரும் விமானங்களில் இருந்து வெளிவரும் பயணிகளை கண்காணிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், வியாழன் இரவு கொழும்பிலிருந்து சென்னை வந்து சேரும் இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பெண் தனது காதலன் மற்றும் அவரது நண்பர் வருகின்றனர் என்ற தகவல் அறிந்து அவர்களுக்காக மணமகன் விமான நிலையப் பார்வையாளர் பகுதியில் காத்திருந்தார். சிறிது நேரத்தில் அனுர்pயா உட்பட மூýவரும் விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்தனர். அப்போது அவர்களுக்கும் காத்திருந்த மணமகனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலையப் பொலிஸார் நடந்த சம்பவங்கள் குறித்து அறிந்தனர். பின்னர், அவர்களை சமாதானமாகப் போகும்படிý எச்சரித்த பொலிஸார் பெண்ணிடம் இது குறித்துக் கேட்டனர். அப்போதுதான் மீண்டும் கொழும்பிலுள்ள தனது தாயாரிடம் செல்ல திரும்புவதாக அந்தப் பெண் பொலிஸாரிடம் கூýறினார். இதைத் தொடர்ந்து விமான நிலையப் பொலிஸார் உடனடிýயாகச் செயற்பட்டு வியாழன் காலை சென்னையிலிருந்து கொழும்பு சென்ற இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பெண்ணை ஏற்றி கொழும்பிற்கு அனுப்பி வைத்தனர்.
Reply
#2
பாரதி கண்ட புதுமைப் பெண்!! தன் விருப்பத்தை நிறைவேற்ற எந்த பெண்ணுக்குதான் உரிமையுண்டு நம் சமுதாயத்தில்?
Reply
#3
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுப்பா !
[b] ?
Reply
#4
எமது சமுதாயத்தல் எத்தனை வீதமான பெண்கள் தனுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்ய முடிகிறது. ஆனால் 100 99.999 வீதம் ஆண்கள் தாங்கள் விரும்பிய அத்தனை தகமைகளும் உள்ள பெண்ணைதான் தேர்ந்தெடுப்பார்கள். கலிகாலம் ஆண்களுக்கு இல்லையோ?
Reply
#5
இங்கு பெற்றோர் தான் நன்றாக ஏமாந்துள்ளார்கள். தமது குழந்தையின் மனசறிந்து அவர்களால் நடக்க முடியவில்லையே. நிச்சயதாற்தம் செய்துகொண்ட ஆண் விட்டு விலகுவது நல்லது. சேர்ந்து வாழ்வது என்பது இனி பல சங்கடங்கைள தரலாம். பெண்ணை அவளது காதலனோடு சேற்து வைப்பது நன்மை. இதை அந்த பெற்றோரும் நிச்சயதாற்தம் செய்து கொண்ட அந்த இளைஞனும் சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் அந்தந்த மனநிலையில் நின்று சிந்தித்தால் இத்தகைய பிரச்சனைகளிற்கு தீர்வு கை கிட்டும். கடைசித்தருணத்தில் எடுத்த முடிவை நிச்சயதார்த்தத்திற்கு முதலே அந்த பெண் எடுத்திருந்தால் இத்தகையதொரு சிக்கல் தோன்றியிராது. அறுதி முடிவெடுத்தல் என்பது சற்று காலதாமதமாகி உள்ளது அவ்வளவு தான். இத்தகைய சம்பவங்கள் இனிமேல் காலத்தின் மற்றய அனைத்து சமூக அங்கத்தவர்களிற்கும் ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது உண்மை.

நட்புடன்
பாரதி.
Reply
#6
புல்லாகிப்.. பூடாகி........ பாரதியாகி.. எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான். எனக்கு இன்னொரு பிறவி வேண்டாம். என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
வயதாகி வி;ட்டது தாத்தாவுக்கு பெரிய புராணம் (சரிதானே) பாட வேண்டியது தான் காடு வாவா என்கிறது வீடு போபோ என்கிறது. அது சரி இந்தப் பிறவியில் எம்மை அறுத்தது போதாதா? ஐயகோ அடுத்தபிறவியிலுமா? தாங்கதாடா பெருமானே? இது காதலின் வேகம். அடங்கிய பின் பிரச்சனைகள் அவர்களுக்குள் வரும் போது பெண்ணினம் காலம் கடந்து யோசிக்கும். பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்களா? பெண்களுக்கு அனைத்திலும் சம அந்தஸ்து வேண்டும். ஏமாற்றுவதிலுமா? நிச்சய தார்த்தம் நடந்தவனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும். உண்மையை எடுத்துச் சொல்லி அனைவரின் மனதை மாற்றியிருக்கலாமல்லவா? அப்படிச் செய்திருந்தால் புரட்சிப் பெண்ணாக ஏற்றுக் கொண்டிருக்க முடியும்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#8
சீலன் நீங்கள் வெள்ளைக்காரன் கொண்டுவந்த சமயத்தை தழுவியதால் உங்களுக்கு எதுவென்று புரியவில்லை.. போகட்டும். நான் எழுதியது பாரதிக்கு நிச்சயமாகப் புரிந்திருக்கும். உங்களுக்கு தெரியவே தேவையில்லையே பிறகு எதற்கு விளக்கமும் வியாக்கியானமும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#9
ஏமாறுவது ஒன்றும் குற்றமில்லை
ஏமாற்றுவதுதான் குற்றம்

முந்தி ஆண்கள் ஏமாற்றுவது பெண்கள் ஏமாற்றுவதை விட கூடவாக இருந்திருக்கிறது...ஆனால் இப்பொழுது பெண்கள் ஏமாற்றுவது அதிகமாகிவிட்டது
பெண்கள் நல்லவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று கூறி
"பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பதில் இனிப் பயனில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#10
உந்த 'றேஸ்--ஓட்டம்' முந்தி கிராம மட்டத்தில இருந்துது பிறகு நகர மட்டத்துக்கு வந்துது...பிறகு தலைநகர் மட்டத்துக்கு வந்துது இப்ப இன்ரனஷனல் லெவலுக்கு வந்திட்டுது....! எல்லாம் உந்த அகதி அந்தஸ்து செய்யிற வேலை....வேற ஒண்டும் இல்லை...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
இன்டர் நஷனல் லெவல் அதுவும் ஒரு முன்னேற்றம் தானே. தமிழனின் முன்னேற்றம். குருவிகளே சரியாகச் சொன்னீர்கள். இந்த அகதிகள் பண்ணும் லொள்ளுகள் தாங்கமுடியாமல் இருக்கின்றது.தாத்தா எனக்கு எவனும் கொண்டு வந்து கொடுத்த ம(ல)தமும் தேவையில்லை. எனக்கென்றோரு மதம் நானே உருவாக்கியுள்ளேன். அந்த மதத்துடன் நிம்மதியாயிருக்கிறேன். பாபர் மசூதியும் தேவையில்லை ராமர் கோயிலும் தேவையில்லை ஜெருசலமும் தேவையில்லை. பாரதி உயிரோடு இருந்திருந்தால் சயனைட் கேட்டிருப்பான். தாத்தாவின் ஆக்கினை தாங்காமல் தப்பிவிட்டான் மீசைக்காரன்.


அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)