Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நில்லாமல் வா நிலாவே...! பகுதி-04
#1
<b><span style='font-size:25pt;line-height:100%'>நில்லாமல் வா
நிலாவே...!</b></span>

பகுதி-04

நினைவு தெளிவாகத் தெரிந்த
நாட்களில் இருந்து
என்னை ஆழமாகப் பாதித்த
அழகிகள் பல...
நெஞ்சுக்குள் ஆணிவேராய் பதிந்து
கூரிய ஆணிகளால் அறைவதுபோல்
வேதனைகொடுத்த
தேவதைகள் பல...

எட்டாம் வகுப்பு
படிக்கும் போதே...
கணக்குப் பாடம்
தெளிவாக விளங்காதபோதிலும்
கள்ளமாங்காய்க்குக் கல்லெறியவும்
கன்னியரை கணக்குப்பார்க்கவும்
நல்லாவே தெரியும்...!

காலைக் கதிரவன்
பட்டொளிவீசி
வெளிச்சம் கொண்டுவர
வெள்ளைச் சீருடையில்
சிரிப்புக்களை வீதியில் சிதறவிட்டு
பள்ளிசெல்லும் கன்னியர்கள்
அடடா.......
எத்தனை அழகு...
அத்தனை அழகையும்
ஆசையோடு...
அள்ளிப் பருகிய
காலமல்லவா அது...!
இனி அப்படி ஒரு காலம்
எப்போது வரும்...?
கனவுதேவதையைக்கூட நான்
வேட்டிக்கேட்டுக்கொண்டிருக்கிறேன்
அப்படிப்பட்ட ஒரு காட்சியை
கனவிலாவது தாவென்று...!

அன்று....
பரித்தித்துறையில்
நான் பார்த்த வெள்ளைச் சீருடைத்
தேவதைகளில் இருந்து
இன்று....
பாரீசில் பார்க்கும்
வெள்ளைக்கார தேவதைகள் வரை...
மனதை வெகுவாக பாதித்த
அத்தனை அழகு தேவதைகளையும்
ஒவ்வொன்றாய் அழைத்து
அணிவகுத்து நிற்கச்சொன்னால்
இந்த மதனாவின் முகந்தான்
எந்தவரிசையில் நின்றாலும்
அதன் ஒளிக்கீற்றுக்கள்
ஓடிவந்தென் கண்களைப்பறித்து
குறுடாக்கும்....!

அவளுடைய நிறமென்றல்
அதற்கு வேறொரு நிறத்தை
ஒப்பிடுவது கடினம்..!
அதற்கு வேறொரு பொருளை
உதாரணம் காட்டுவதும் கடினம்..!

வெள்ளை நிலாவை
கருமேகங்கள் தழுவ
அந்த கருமேகங்கள் வழியாக
நிலவைப் பார்த்தால்
எப்படி இருக்கும்...?
அதுதான் அவள் நிறம்..!

அவள் சிரிக்கும் போதெல்லாம்
கன்னத்தில் குளிவிழும்
அப்போதெல்லாம் என்
இதயத்தில் இடிவிழும்...!
அற்புதமான வட்டமுகக்காறி
நிலவின் வட்டத்தைவிட
வேறொரு பொருளை
அவள் முகத்திற்கு
எப்படி ஒப்பிடுவது....?

நிலவுகூட கிட்டப்போய்ப் பார்த்தால்
வட்டமில்லாமல் மேடுபள்ளமாகத்தான்
இருக்கும் என்று
ஆராட்சியாளர்கள் சொல்கிறார்கள்
இருப்பினும்
என் கண்கள் மண்ணில் இருந்து
விண்ணை நோக்கும்போது
அந்த நிலவு
என் கண்களுக்கு
எப்படி காட்சிதருகிறதோ
அதே காட்சியைத் தவிர
வேறு எதையும் அவள் முகத்திற்கு
உதாரணம் காட்டவே முடியாது...!

நனைத்து உலரவிட்ட கூந்தல்
மேல்நாட்டு அழகிகள்போல்
அலங்காரம் செய்து
அலை அலையாய்
மிதக்கவிட்ட கறுப்பு தேசத்தை
தோழில் பரத்திக்கொண்டு
அது..........
அடிக்கடி வந்து முகம்தழுவ
அள்ளி அள்ளி
காதின் இடுக்குகளில்
செருகிக்கொண்டு
மொழிபெயற்க முடியாத
ஒரு மாயப்புன்னகையுடன்
என்னருகில் வந்தாள்
ஒரு புதிய
கவிதைத்தொகுப்புக்கு
முன்னுரை எழுத...

ஏதோ...
பலநாட்கள் பழகிய
பாவைபோல் பாவனைசெய்து
அன்போடு கைகுலிக்கிய
அழகிய நிலவு
ஆங்கிலம் பேசியது...
""கலோ""...!!!

அவள் என்னிடம்
எந்த மொழியில் பேசுகிறாள்...?
என்ன பேசுகிறாள்..?
நான் எப்படிப் பேசுவது..?
எதையும்
உணர முடியாத நிலையில் நான்
ஏனெனில்...
அவள் அன்போடு கைகுலுக்கும்போது
அந்தக் குளிர்ந்த மென்மையான
பளிங்குக் கைகளின் ஸ்பரிசம்
எனது சிவந்த கைவழியே
மின்னாரம் பாய்ந்ததுபோல்
நெஞ்சுக்குள் புகுந்து
இதயத்துக்குள்...
இன்பமாய் ஒரு வலிகொடுத்து
என்னையும்....
இலேசாக மயக்கிவிட்டது...!


(நிலவு வரும்...)

த.சரீஷ்
19.10.2003 (பாரீஸ்)
sharish
Reply
#2
ம்ம் இன்னும் அதி சுூடு பிடிக்கவில்லை. கியறை மாத்த எல்லாம் சரியாகும். அடுத்த அடுத்த பாகங்களில் புதிர்களுக்கான விடை கிடைக்கும் என நம்புகிறேன்.தங்களின் உன்னத இலக்கிய காதல் யாவும் புரியும். வாழ்த்துக்கள் கவிஞரே...!!!!
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#3
வணக்கம்

நில்லாமல் வா நிலாவே !
நின்றுவிட்டாளோ என ஏங்கி;க்கொண்டேன்
அவள் நின்று ஓளிகூட்டி வந்துள்ளாள். வாழ்த்துக்கள்

காதலிற்கு கவி புனைய நிலவு ஓன்று உவமையாகிவிட்டது. இனியென்ன முன்னேறிக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்

Quote:நினைவு தெளிவாகத் தெரிந்த
நாட்களில் இருந்து
என்னை ஆழமாகப் பாதித்த
அழகிகள் பல...
நெஞ்சுக்குள் ஆணிவேராய் பதிந்து
கூரிய ஆணிகளால் அறைவதுபோல்
வேதனைகொடுத்த
தேவதைகள் பல...
[b] ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)