Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
1400 பேருடன் அமிழ்ந்தது கப்பல்
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41290000/jpg/_41290006_ship.jpg' border='0' alt='user posted image'>

எகிப்துக்குச் சொந்தமானதும் சவுதியரேபியாவின் Duba துறைமுத்தில் இருந்து கடந்த வியாழன் புறப்பட்டதுமான பயணிகள் கப்பல் செங்கடலில் 1400க்கும் மேலான பயணிகளுடன் மூழ்கிவிட்டது. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன..!

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41290000/gif/_41290272_saudi_duba3_map203.gif' border='0' alt='user posted image'>

http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/4676916.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
1300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எகிப்த் குர்ஹாட்ட எண்ட இடத்தில் மூழ்கிய பயணிகள் கப்பலை மீட்புபடையினர் தேடிவருகின்றனர்,, இதுவரை 15 பேரின் இறந்த உடல்களை மீட்டிருக்கிறார்கள், 12 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டார்கள் எனவும், அந்த இடத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது,,

அந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் அநேகமானவர்கள் எகிப்தியர்கள் இவர்கள் சவுதியில் வேலை செய்பவர்கள் என்றும், மேலும் பலர் மெக்காவில் இருந்து எகிப்த் திரும்பியவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது,,,

ஐரோப்பிய தொலைக்காட்சி ஒன்று இதனை தெரிவித்தது, Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
உலகில் இதுவரை நடந்த பெரிய கப்பல் விபத்துக்கள்...

<b>SHIPPING DISASTERS</b>

<b>1912: Titanic, UK, 1,503 killed

1948: Kiangya, China, 3,920

1954: Toya Maru, Japan, 1,172

1987: Dona Paz, Philippines, 4,375

1991: Salam Express, Egypt, 464

1994: Estonia, Estonia, 852

1996: Bukoba, Tanzania, more than 500

2002: Joola, Senegal, more than 1,800</b>

தகவல்- பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
சவுதி அரபியாவின் டூபா துறைமுகத்திலிருந்து எகிப்து நோக்கி 1406 பேருடன் சென்ற அல் - சலாம் 98 என்ற எகிபது நாட்டிற்குச் சொந்தமான பயணிகள் கப்பல் செங்கடலில் மூழ்கியுள்ளது. இதனால் மிகப்பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுவரை 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவி;க்கின்றன.

1310 பயணிகளுடனும்இ 96 கப்பல் பணியாளர்களுடனும் சவுதி அரபியாவின் டூபா துறைமுகத்திலிருந்து சென்ற மேற்படி கப்பல் அதிகாலை 2.00 மணியளவில் எகிப்தின் சபாகா துறைமுகத்தை சென்றடைய இருந்தது. இரவு 10.00 மணிவரை கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் கப்பலிற்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும் அதன் பின்னர் ரேடார் திரையிலிருந்து கப்பல் மறைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பல் மூழ்கியதற்குரிய காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. குறித்த கடற்பகுதியில் கடும்காற்றுடன் மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப்பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த பலரின் சடலங்கள் கடலில் மிதப்பதாக பிந்திக்கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன


http://www.sankathi.com/
Reply
#5
1400 பயணிகளுடன் கப்பல் கடலில் மூழ்கியது.

சவுதியரேபியாவில் இருந்து எகிப்து நாட்டுக்கு 1400 பயணிகளுடன் இரவு வேளையில் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்று செங்கடல் பகுதியில் மூழ்கியுள்ளது.

விடிகாலை வேளையில் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்ட போர்க்கப்பல்களும், ஹெலிக்கொப்டர்களும் சுமார் 100 பேரை மீட்டுள்ளன. பலரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

உயிர் தப்பியவர்களை மீட்பதற்காக தமது அதிகாரிகள் தமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வதாக எகிப்திய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சலம் 98 என்ற பெயருடைய 34 வயதான இந்தக் கப்பல் கடற்பயணத்துக்கான அருகதை உடையதா என்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சவுதியரேபியாவில் இருந்து திரும்பிவரும் எகிப்தியர்கள் என்று எண்ணப்படுகிறது.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41293000/jpg/_41293180_ship_416afp.jpg' border='0' alt='user posted image'>
<b>ஏறத்தாள 1400 பயணிகளுடன் al-Salam Boccaccio 98 என அழைக்கப்படும் கப்பல் சவுதி அரேபிய பிரதேசமான Duba இல் இருந்து எகிப்தின் Safagaக்கு இரவு நேர பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது கடலில் மூழ்கியது.</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41293000/jpg/_41293198_crowd1_416ap.jpg' border='0' alt='user posted image'>
<b>கப்பலில் பயணம் செய்த உறவினர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலையில் எகிப்தின் Safaga பிரதேசத்தில் கூடியிருந்து பரிதவித்து கொண்டிருக்கும் மக்கள்</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41293000/jpg/_41293174_crowd_416ap.jpg' border='0' alt='user posted image'>
<b>பயணிகளுக்கு என்ன நடந்தது யார் உயிருடன் உள்ளார்கள், யார் இறந்துவிட்டார்கள் என்பது உள்ளிட்ட விபரம் ஏதும் இதுவரை வெளியிடபடாத நிலையில் அவர்களின் உறவினர்கள், அதிகாரிகள் தகவல்களை மறைப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.</b>

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41293000/jpg/_41293178_police_416ap.jpg' border='0' alt='user posted image'>
<b>பயணிகளின் உறவினர்கள் அதிகாரிகள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதை தொடர்ந்து கலகம் ஏதும் ஏற்பட்டால் அதனை சமாளிப்பதற்காக கலகம் அடக்கும் பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர்.</b>

நன்றி - பிபிசி இணையம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
வெறும் 100பேரா காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள்?
[size=14] ' '
Reply
#8
கடைசியாக வந்துள்ள BBC செய்திகளின்படி ஏறத்தாள 300 பேர் உயிருடனும் 185 பேர் பிணமாகவும் மீட்கப்பட்டிருக்கின்றார்கள். செய்திகள் முழுமையாக வந்த பின்பே எத்தனை பேர் உயிர் பிழைத்தார்கள் என்று தெரியவரும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
வழமையாக மக்கா புனித யாத்திரை எண்டு சொல்லுவார்கள் முன்னைய காலங்களில் வயதானவர்கள் இறுதிப்பயணமென செல்வது வழக்கம் ஆனால் இப்போ விஞ்ஞான வளர்ச்சி போக்குவரத்துகளை இலகுவாக்கியது இதில் முஸ்லீம் மதமல்லாதவர்கள் அந்த எல்லைக்குள் நுளையவே முடியாது அனேக ஹஜ் யாத்திரையின்போதும் நிறையபேர் சன நெருசலின் சிக்குன்டு இறப்பது வழக்கம் இம்முறை ஒரு ஹோட்டேல் இடிந்து விழுந்ததில் 80 பேர் மட்டில் கொல்லப்பட்டார்கள் இறப்பு வீதம் குறைந்திருக்கிறத எண்டு பாத்தால் கடைசியி;ல் இந்த கப்பல் அமிழ்ந்ததின் மூலம் ஹஜ் யகத்திரிகர்கள் இறந்ததாக கூறுகிறார்கள் அப்ப இம்முறையும் இறப்பு குறைந்தபாடில்லை பாவம் செய்தவர்களை இறைவன் தண்டித்து விட்டானா??????? எல்லாம் அல்வாவுக்கே வெளிச்சம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<b>பயணத்துக்கு ஏற்றதல்ல என்று கூறி எகிப்திய கப்பல் ஒன்றில் பயணிகளை ஏற்ற சவுதியரேபிய அதிகாரிகள் மறுப்பு.</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41303000/jpg/_41303948_alsalam203.jpg' border='0' alt='user posted image'>
<b>சென்ற வாரம் மூழ்கிய அல்சலாம் 98 </b>

சவுதி அரேபியாவில் இருந்து எகிப்துக்கு செல்லவிருந்த ஒரு கப்பல் கடல் பயணம் மேற்கொள்ள தகுதியற்றது என்று கூறி அக்கப்பலில் பயணிகள் ஏற்றப்படுவதற்கு சவுதி அரேபிய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் துபா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பலை சோதித்த அதிகாரிகள் கப்பலின் பாதுகாப்பு தரமானதாக இல்லை என்று தெரிவித்தனர். அதன் பிறகு அக்கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக எகிப்திய துறைமுகத்துக்கு சென்று சேர்ந்தது.

எகிப்திய கப்பல் ஒன்று கவிழ்ந்து ஆயிரம் பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்பட்டு சில தினங்களே ஆன நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான கப்பலின் நிறுவனத்தைச் சேர்ந்த வேறோறு கப்பலின் கேப்டன் முழ்கிப்போன கப்பலில் இருந்து உதவி வேண்டும் என்று கேட்டுவந்த வேண்டுகோள்களை தான் புறக்கணித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மோசமான வானிலையில் தனது கப்பலும் முழுகிவிடக்கூடும் என்று அச்சம் எழுந்த நிலையில் கப்பலை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செலுத்துமாறு கப்பல் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவர் தன்னிடம் கூறியதாக மற்றொறு கப்பலின் கேப்டன் கூறியதாக எகிப்திய செய்தித்தாள் ஒன்று மேற்கோள் காட்டியுள்ளது.

bbc.com
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)