02-10-2006, 08:35 PM
இன்றைய சமூகத்தில் தொலைக்காட்சி நாடகங்கள் என்பது மிகவும் இன்றியமையாத ஓரிடத்தைப் பெற்றுள்ளது. பொருளாதார மட்டத்தில் உயர்வு, தாழ்வோ, அல்லது கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளோ இல்லாதவாறு வாழ்வியல் அம்சங்களில் ஒன்றாக பிரதான இடத்தினை இது பிடிக்கக் காணலாம். இத்தகைய சமூகத்தின் மீதான செல்வாக்குப் போக்கும் அது சார் நிலைப்பாடுகளுமே இங்கு நோக்கப் பொருளாகின்றது.
நவீனம் (Modern) எனும் போர்வையின் கீழ் இலத்திரனியலை மூலதனமாகக் கொண்டதாக, குறிப்பிட்ட சிலரது, சிறப்பாக ஐரோப்பிய நாடுகளால் காலனித்துவத்திற்குப் பின்னரான முதலாளித்துவ, ஏகாதிபத்தியவாதிகள் சிலரது உடமைகளாகவே இக்கருவிகளுள்ளன.
இவ்வாறு உடமைகளாக உள்ளமையால் அவைகளின் உள்ளடக்கங்களான படைப்புக்களும், வெளியீடுகளும் தங்களது நலன் நோக்கான பொருளாதார ஈட்டலை மையமாகக் கொண்ட வணிகம் சார் நடவடிக்கையாகவே உள்ளமையைக் காணலாம்.
பொழுது போக்கு, கலை நுகர்வு எனும் விடய நோக்கில் பலர் இவை நன்மை பயப்பனவெனப் பறைசாற்றினும், அவைகளுடாக பல வழிகளிலும், எம்மை செயலிழக்கச் செய்யும் செய்ய விளையும், அதனூடாக திட்டமிடல்களுடன் கூடிய திணிப்புக்களாய் தம் நலன் நோக்கினை செயற்படுத்த விளையும் ஏற்பாடுகளாகவே இவை அமையக் காணலாம். இதுவே இங்கு முக்கியமானதும், அடிப்படையானதுமான விடயமாகும். இதுவே இங்கு அசலப்படுகின்றது. விரும்பியோ, விரும்பாமலோ இத்தகைய நோக்கங்களை சமன்செய்துவிட தாரை வார்ப்பனவாகவே இத்தொலைக்காட்சி நாடகங்கள் முயல்கின்றன என்பதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
வாழ்வியல் அம்சங்களில் ஒன்றாக விலக்கி ஒதுக்கிவிட முடியாதளவு பிரதான இடத்தை இந்த நாடகங்கள் பிடித்துள்ளன. உண்மையில் வாழ்வோடிணைந்த வளமூட்டும் மனிதப் பண்பு மிக்க பயன்தரு படைப்புக்களும் நாடகங்களாக வெளிவருகின்றன என்பது ஏற்புடையது. எனினும், மாறாக பல்போக்குகளிலும், செயலிழக்கச் செய்யும் செயற்பாடுகள் தாங்கிய செல்வாக்குப் போக்குகளையே பெரிதும் கொண்டுள்ளமையைக் காணலாம். சக்தி, செரச, ரூபவாஹினி, சுவர்ணவாஹினி, ஐ.ஐ.ரி.என் என அதிகப்பட்ட அலை வரிசைகள் போல் அவற்றின் ஊடாக அண்ணாமலை, ஆனந்தம், நீ- நான் - அவள், மனைவி, காவ்யாஞ்சலி, கோபுரம், மெட்டி ஒலி, கோலங்கள் எனப் பல கோலங்களாய் அமைகின்றன. சிறப்பாகத் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களையே இங்கு நோக்கலாம்.
காலையில் கண் விழித்தது முதல் நித்திரைக்குச் செல்லும் வரை தொடர் நாடகங்கள் தொடர் சங்கிலிப் பிணைப்புக்களாக வருகின்றன. ஒரே நேரத்தில் வெள்வேறு அலை வரிசைகளில் வெள்வேறு நாடகங்கள். அவைகளைப் பார்ப்பதில் பிரச்சினை, பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வேலைத் தளங்களில் வேலை செய்வோர் வரை இதே சிந்தை, குடும்பம் முதல் பக்கத்து வீட்டினருடன் கூட இதேபேச்சு. அடுத்த கட்டம் என்ன? அது அவ்வாறமையும். இது எவ்வாறு அமையும் என்ற நிலையால், சமையல், பிள்ளைகள் பராமரிப்பு, குடும்ப உறவு எனப் பல்நிலைகளிலும் அந்நியோன்னியத் தன்மையின்மை.
தொடர் நாடகங்களாக அமைவதால் குடும்ப நேர அட்டவணை இந்நாடகங்களை வைத்தே தீர்மானிக்கப்படும் நிலை. தாய், தந்தை, பிள்ளைகள், உறவினர்கள் சுற்றம் என்ற உறவு நிலை விரிசலையடைதல் ஆடிப்பாடி கூடி விளையாடி ஆர்ப்பரித்து, சண்டை செய்து, ஊரை அறிந்து உற்றாரை அறிந்து வாழ்வியல் நிகழ்வுகளில் பங்கு கொண்டு கருத்துப் பரிமாறி, களிப்போடு வாழ்ந்த சூழலோடிணைந்த நிலைமாறி சில என்ன பல விடயங்களைப் புறக்கணித்து வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னர் பார்ப்போராய்ப் புடம் போடச் செய்யும் நிலையையே நாம் இங்கு செல்வாக்காக நோக்கலாம். ஏன் வேளைக்கு உணவு உண்ணக் கூட மறந்து விடுவதாக சிலர் கூறுவதைக் கேட்கின்றோம். நாளைக்கு நாடகத்தில் அது இருக்கிறது நான் வரமாட்டேன்’ எனக் கூறக் கேட்கின்றோம். அடுப்பில் பானை ஏறாவிட்டாலும் தொலைக்காட்சியில் நாடகங்கள் அரங்கேறியே விடும் நிலை. அதுவே நாகரீகம் எனக் கருதும் நிலை. பொருளாதார மட்டத்தைப் பொறுத்து இல்லாது வீட்டுக்கொன்றென தொலைக்காட்சியமைய இந்நாடகங்களும் பிரதான காரணம்.
அதை இதை அடகு வைத்துக்கூட தொலைக்காட்சி வாங்குகிறார்கள், இந்நாடகங்களால் குடும்பப் பிணக்குகள், தாம்பத்தியத்தில் புரிந்துணர்வின்மையென அனைத்து நிலையிலும் எம்மைப் பார்ப்போராகத்தன் முன்னிறுத்தி ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குப் போக்கையே இன்று இந்நாடகங்கள் வகிக்கக் காணலாம்.
தேடலும், படைப்பாக்கத்திறனுமே ஒருவரை முழுமையாக வாழ வழிசமைக்கும். ஆளுமை விருத்தி, நிர்வாகம் என்பவைகளை வளர்க்க முடியாத நம்மில் நாம் தங்கி வாழ முடியாத, காலாகாலமாக தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு கையளிக்கப்பட்டு வரும் சூழலோடிணைந்த வாழ்வியலம்சங்களை வளர்த்தெடுத்து வளம்பெற முடியாத நிலையை இந்நாடகங்கள் ஏற்படுத்துகின்றன.
சிறப்பாக ஆக்கத் திறன்கள் கலை நிகழ்வுகளை கைவிடச் செய்யும் நிலையை அதனூடாக படைப்போராகவன்றி பார்ப்போராகவே உருவாக்குவோராகவன்றி நுகர்வோராகவே எம்மை மாற்றியமைத்துக் கொண்டிருக்கக் காணலாம். விடிய விடிய ஆடப்பட்ட கூத்துக்கள், கரகம், கும்மி, வசந்தன், மகுடி என விளையாட்டு, தொழில்கள், பொழுதுபோக்கு சார் ஆக்கத்திறன்மிகு செயற்பாடுகள் இந்நாடகங்களின் மீதான நாட்டங்களால் அருகிப் போகும் வேளை காலாகாலமாக தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வந்த அரிய உயரிய தனித்துவமிகு படைப்புக்கள் அனைத்து நிலைகளிலும் பறிபோக இந் நாடகங்களும் காலாகின்றன.
கோயில்கள், விழாக்கள், களியாட்ட வேளையில் விடிய விடிய ஆக்கத்திறன்மிகு படைப்புக்களுக்குப் பதில் இன்று நாடகங்களின் தொகுப்புக்களே போடப்படுகின்றன. இங்கு பங்கு பற்றி பயன்பெற்ற நிலை மாற்றம் பெற்று பார்ப்போராய் எம்மை தங்கி வாழச் செய்கின்றமை கண்கூடு.
இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள் யாவும் சினிமாப் பாணி மிக்கனவாகவே உள்ளன. பெரிதும் பாடல்கள், ஆடல்கள், கருத்தியல்கள் யாவும் பாரம்பரிய மடமைசார் கருத்தியல்களை வலுவூட்டுவனவாகவே அமையக் காணலாம்.
சிறுவர் முதல் பெரியவர் வரை சிறப்பாக இளைஞர்கள், அங்கே காட்டப்படுவதுதான் வாழ்க்கை, நாகரீகம் என்று தம்மை சூழலிலிருந்து அந்நியப்படுத்துகின்றனர். புரியமறுக்கின்றனர். தகவல் யுகப் போக்கின் வளர்ச்சிக்கேற்ப காட்டப்படும் யதார்த்தத்துக்கொவ்வாத செயற்பாடுகளையே வாழ்வியலம்சமாக நம்பும் நிலையையும் அவைகள் சார்ந்து நாடும் நிலைமையையும் அதன் பால் நமது தனித்துவங்களைப் பறிகொடுக்கும், நாசம் செய்யும் நிலைமையையும் இவைகள் மூலமாகச் செய்து, தம்நலன் நோக்கை திருப்திப்படுத்துபவர்களாக முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் விளங்க ஊன்றுகோலாக எம் சமூகத்தினூடே இத்தொலைக்காட்சி நாடகங்கள் விளங்கக் காணலாம்.
காலாகாலமாக நிலவி வரும் பாரம்பரிய மடமைசார் கருத்தியல்களை வலுவூட்டுவதாகவே (சிறப்பாக பெண்கள் சார்ந்த நிலைப்பாடுகளைக் கூறலாம்) இத்தொலைக்காட்சி நாடக ஒளிபரப்பு வேளையில் வணிகம் சார்ந்து முதலாளித்துவத்தைச் சார்ந்ததாய் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் நோக்கும், போக்கும் இக்கருத்தியல்களை வலுவூட்டுவதாய் அமையும். அதே வேளை, சுரண்டல் தன்மைக்குள் எம்மை உள்வாங்கச் செய்வதாகவே உள்ளன.
வாழ்வின் அனைத்து விடயங்களையும் நுகர்வுப் பொருள்களின் மூலம் சமன் செய்து விடலாம் எனும் நிலையை பெரிதும் விளம்பரங்கள் செய்கின்றன. பெண்களின் உடல்கள் பாலியல் ரீதியாக விலை பேசப்படுகின்றன. குடிபானமா? பாடப்புத்தகமா?, பணப்பரிமாற்றமா?, ஆடையணியா? அனைத்து விளம்பரங்களிலும் பெண்கள் அலசப்படுகின்றனர். பொருளை விற்கவா? அங்கங்களை விற்கவா? எனும் நிலை அவ்விளம்பரங்களை நோக்கின் புரியும்.
பெண் என்பவள் ஆணின் பார்வையில் சுகம் தரும் கவர்ச்சிப் பொருளாக பணிந்து சேவை செய்யும் பொம்மையாகவே நாடகங்கள், விளம்பரங்கள் என்பவைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றாள். பெண் வேறு ஆண் வேறு எனப் பாகுபடுத்திப் பார்க்கும், பெண்களைத் தனிமைப்படுத்தும் வேலைகளை விளம்பரங்கள் எல்லா நிலைகளிலும் செய்கின்றன. இதேபோன்று மடமைசார் கருத்தியல்களை உரமூட்டி எம்மை நுகர்வுக் கலாசாரத்திற்குள் உள்வாங்கி அதன் மூலம் குறித்த முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகளின் நலன் நோக்கான பொருளாதாரத்தை வலுவூட்ட வழிசமைப்பனவாகவே இவை அமையக் காணலாம். இத்தகைய நிலைக்குள் உள்வாங்கும் வண்ணமாய் இந்நாடகங்களையும் அதுசார் விளம்பரங்களையும் வைத்திருத்தலென்பதே செல்வாக்காகும்.
இன்றைய எம் சமூகத்தில் வாழ்வியல் ஒழுங்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை தொலைக்காட்சி நாடகங்களே வைத்துள்ளன என்றே சொல்லலாம். இவை நாடகங்களின் செல்வாக்கையே துலங்கப்படுத்துகின்றது. இவ்வாறான செல்வாக்கு பொருத்தமானதாக சில வழிகளில் அமைந்தாலும் எமது சமூகத்தை மட்டுப்படுத்தி தம் நலன் நோக்கை நிவர்த்தி செய்வதாகவே அமைகின்றதென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மட்டக்களப்பு ஈழநாதம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>