02-13-2006, 02:51 AM
<b>சிங்களத்தையே முன்நிறுத்தும்
தென்னிலங்கைப் போக்கு
இலங்கை அரசுப் படைகளை அல்லது இலங்கை அரசை குறிப்பிடும் சமயங்களில் தமிழர் தரப்பு அதனை "சிங்களப்படை' என்றோ, "சிங்கள அரசு' என்றோ குறிப்பிடுவது வழமை. நடுநிலையாளர் கள் சிலர் இதனைத் தவறு என்று குற்றம் சுமத்து வதும் உண்டு.
ஆனால், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று அரச கரும மொழி ஆணைக்குழுத் தலைவரை மேற்கோள்காட்டி வெளியிட்டிருக்கும் சில தகவல் களும் மற்றும் புள்ளிவிவரங்களும் அப்படி அழைப்பதில் தப்பு ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத் தியிருக்கின்றன.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் (தமிழர், முஸ்லிம்கள் உட்பட) எண்ணிக்கை முழு மக்கள் தொகையில் 26 வீதமாகும். அதாவது, நாட்டின் சனத் தொகையில் கால் பங்கிலும் அதிகமானோர் தமிழ்ப் பேசுவோர்கள். ஆனால், மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் அரச ஊழியர்களாகப் பணிபுரியும் இந்த நாட்டில் அவர்களில் 8.3 வீதத்தினரே தமிழ்ப் பேசுவோர்.
நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்குப் பொறுப்பாக அமைக்கப்பட்டுள்ள பொலீஸ் திணைக்களத்திலோ நிலைமை மோசம்.
மொத்தம் 36 ஆயிரம் பேர்கள் கொண்ட பொலீஸ் அமைப்பில் 35 ஆயிரத்து 400 பேர் சிங்களவர்கள். 231 பேர் தமிழர்கள்; 246 பேர் முஸ்லிம்கள். ஆக தமிழர்கள், முஸ்லிம்களை ஒன்று சேர்த்துப் பார்த்தால் கூட நாட்டில் 26 வீதத்தைக் கொண்ட தமிழர்க ளுக்கு பொலீஸில் ஆக ஒன்றரை சதவீதம்தான் இடமளிக்கப்பட்டிருக்கின்றது.
இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய வற்றை எடுத்துக் கொண்டால் நிலைமை படுமோசம். கறிக்குக் கறிவேப்பிலை சேர்த்த மாதிரி அங்கொன் றும் இங்கொன்றுமாக ஓரிரு தமிழர்களோடு சரி.
பெயருக்குத் தலைநகரில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வெள்ளவத்தைப் பொலீஸ் பிரிவை எடுத்துப் பார்க்கலாம். அந்தப் பிரிவில் மக்கள் தொகை சுமார் 29 ஆயிரம். அதில் 21 ஆயிரத்து 400 பேர் தமிழர்கள். 7 ஆயிரத்து 600 பேர் சிங்களவர் கள். நூற்றிஐம்பது பொலீஸ் ஆளணியைக் கொண்ட அந்த நிலையத்தில் எத்தனை தமிழ்ப் பேசும் ஊழியர்கள் பணிபுரிகின்றார்கள் தெரியுமா? ஆக ஆறே ஆறு பேர்தான்.
இது குறித்து அரச கருமமொழி ஆணைக்குழுத் தலைவர் ராஜா கொலுரே என்ன கூறுகிறார் தெரி யுமா?
""உதாரணத்துக்கு அதிகாரிகள் யாழ்ப்பாணத் தில் உள்ள ஒரு பொலீஸ் நிலையத்துக்குச் சென்று பார்த்தபோது ஆச்சரியப்பட்டனர். அங்கு ஆக இரண்டே இரண்டு பொலீஸார்தான் தமிழில் பேசக் கூடியவர்களாக இருந்தார்கள். அங்கு வாக்குமூலங் கள் கூட சிங்களத்தில்தான் பதியப்படுகின்றன என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது.'' என்றார் கொலுரே.
முற்று முழுதாகத் தமிழ்ப்பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகத்தின் மைய நிலமான யாழ்ப்பாணத்திலேயே இதுதான் நிலைமை என்றால் இந்த நிர்வாகத்தை தமிழ் மக்கள் மீது திணித்திருக்கின்ற அரசை "ஆக்கிரமிப்பு அரசு' என்றும், "சிங்கள அரசு' என்றும், தமிழர் தாயகத்தைக் கைப்பற்றி நிலைகொண்டிருக்கின்ற படைகளை "ஆக்கிரமிப் புப் படை' என்றும் "சிங்களப்படை' என்றும் தமிழர்கள் அழைப்பதில் தவறு ஏதும் இருக்க முடியுமா?
தமிழுக்கும் சம உரிமை, தமிழும் அரச கரும மொழி என்றெல்லாம் தென்னிலங்கை பீற்றுவது வெறும் வாய்ச் சவடால்தாம்; வெறும் காகிதத்தில் எழுதப் பட்ட விடயங்கள்தாம். அவை எவையும் நடைமுறையில் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
மொழி உரிமை விடயத்தில் மட்டுமல்ல, வேலை வாய்ப்பு விவகாரங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு வாழ்வியல் அம்சங்களிலும் தமிழர்கள் தமிழ் புறக்கணிக்கப்படுவதுதான் தென்னிலங்கைப் போக்காக இருக்கின்றது. அதனால்தான் தமிழர்கள் தமக்கென தமது தாயகத்துக்கென தனிநாடு கேட்கத் தலைப்பட்டார்கள்.
கல்வி உரிமை, பாரம்பரியத் தாயகத்தில் வாழ் வியல் உரிமை, தமது மொழி, பண்பாடு, மதம், கலாசார விழுமியங்கள் போன்றவற்றைப் பேணும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்திலும் தமிழர்கள் சிறுபான்மையினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகின்றனர் என்பதே உண்மை.
தமது தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு அந்த முடிவை அவர்கள் எடுத்தமை நியாயமானதே என்பதை அரச கரும மொழி ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்த தகவல்களும், புள்ளிவிவரங்களும் மீண்டும் உறுதிப் படுத்தியிருக்கின்றன. </b>
http://www.uthayan.com/editor.html

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>