Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தினமுரசு
#1
தினமுரசு

தினமுரசு பற்றி ஏற்கனவே பல அபிப்பிராயங்கள் இருந்தன.அற்புதன் வாழும் காலத்திலேயே இந்தப் பத்திரிகை புலிக்கு எதிரா சார்பா என கணக்கிடமுடியாதிருந்தது.

அற்புதன் கொலையின் பின் பல வதந்திகள் வெளிவந்தன...புலத்தில் தடை என்றார்கள்

இங்கு எனது நகரத்தில் எப்போதும் போல
கலர் கலராக நீளமாக வழமைபோல் வந்துகொண்டுதானிருந்தது.

இப்போது செய்திக்கு வருகிறேன்..வழமையாக நாம்தான் தென்னிந்திய சினிமாவை சாடுவோம் இந்தமுறை......

ஒரு தமிழ்நர்டு குடிமகனின் பார்வையில் கொழும்பு..

அலைச்சலுக்கு இடமில்லாமல் அப்படியே உருவி இங்கு இடுகிறேன்.


Sunday, August 17, 2003

கொழும்பு பயணம்
வேலை நிமித்தமாக இன்று ஒருநாள் கொழும்பு வர வேண்டியிருந்தது.

நேற்று இரவு ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம். இப்பொழுது இந்தியப் பயணிகள் இலங்கை வருவதற்கு விசா வாங்க வேண்டிய தேவையில்லை. இறங்கியவுடன் விமான நிலையத்திலேயே கடவுச்சீட்டில் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்.

சென்னை விமான நிலையத்தில் இலங்கை ரூபாய்கள் வாங்க பாரத ஸ்டேட் வங்கியை அணுகினால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர் பத்து நிமிடம் கழித்து வரச்சொன்னார். இருபது நிமிடம் கழித்துச் செல்கையில் அங்கு வேறொரு ஊழியர், மிகக் கண்ணும் கருத்துமாக ஏதோ அமீரகப் பணக்கட்டில் தாள்களை எண்ணிக் கொண்டிருந்தார். அவரும் சொன்னது: "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்களேன்." கொஞ்சம் தள்ளி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியின் நாணய மாற்றுக் கிளை. அதற்கு முன் பெருங்கூட்டம். அங்கு போய் ஒரு வழியாகக் கொஞ்சம் இலங்கைப் பணத்தாள்களைப் பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே வம்புக்காக, ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கி ஊழியரை அணுகினேன். மீண்டும், "இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க."

இரு வங்கிக் கிளைகளிலும் வேலை பார்ப்பது நம்மூர் ஆசாமிகள்தான். ஏன்தான் இப்படி ஒரு உழைப்பில் வித்தியாசமோ?

ஒரே இரைச்சலுடன் ஏர்பஸ் விமானம் சென்னையிலிருந்து கிளம்பி கொழும்பு வந்தடைய வெறும் ஒரு மணி நேரமே பிடிக்கிறது. சும்மா இல்லாமல் விமானத்தில் இருந்த 'தினமுரசு' என்ற வாரப் பத்திரிக்கையைத் திருப்பினால் உள்ளே சுஜாதாவின் தொடர்கதை 'வண்ணத்துபூச்சி வேட்டை' என்று நினைக்கிறேன். புதிதாக எழுதுகிறாரா அல்லது பழைய சரக்கா என்று தெரியவில்லை. வாலி தன் சொந்த வாழ்க்கை பற்றி எழுதுகிறார். நிறைய அரசியல் கட்டுரைகள். இந்தப் பத்திரிக்கை புலி ஆதரவா, எதிரா என்று புரியவில்லை. ரணில் விக்கிரமசிங்கேயின் பிரதம ஆலோசகர் ஸ்ரீலங்கன் நிறுவனத்தில் ஏதோ ஊழல் செய்து விட்டார் என்று ஒரு கட்டுரை. நம்மூர் சமாசாரம்தான். நடுப்பக்கம் திருப்பினால் குறைந்த ஆடைகளோடு கோடம்பாக்கம் "அழகிகள்" அழகு காட்டுகின்றனர். தமிங்கிலம் தலை விரித்தாடுகிறது. ஷாலினி அஜித்துக்கு அறிவுரை சொல்கிறாராம், "ஒழுங்கு மருவாதையா படத்துல நடி, சும்மானாச்சிக்கும் துப்பாக்கி சுடறது, கார் ரேஸ் போறதுன்னு டயத்த வேஸ்டு பண்ணாத". அப்புறம் கருணாஸுக்கும், விவேக்குக்கும் தகராறு, ரதி என்னும் நடிகையை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய தயாரிப்பாளர், பல "ஸ்டில்" படங்கள் என்று கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. அடுத்த பìகம் இன்னும் பயங்கரம்: யாரோ ஒரு இலங்கைத் தமிழ் அபிமானி, நடிகர் விஜய் பேரில் எழுதிய அருமையான கவிதை, இன்னும் பல 'புதுக்கவிதை' என்ற பெயரில் சினிமாக்கள் பற்றி எழுதப்பட்ட கொடுமைகள்.

வெளியே வந்தால் குடியேறல் துறை அலுவலர் பொறுமையாக கடவுச்சீட்டில் அச்சடித்து வெளியே அனுப்புகிறார். சுங்க அதிகாரியைத் தாண்டி வெளியே வருகையில் நாளுக்கு நாள் மாறி வரும் கொழும்பு தெரிகிறது.

காரில் தங்குமிடத்துக்குச் செல்லும்போது, போர் நிறுத்தத்தினால் உள்ள தெளிவும், அமைதியும், கேளிக்கையும், சந்தோஷமும் மனதைத் தொடுகிறது. கூட்டம் கூட்டமாக இளம் பெண்களும், ஆண்களும் இரவு பதினொரு மணிக்கு மேல் தெருவில் கை கோர்த்து நடந்து கொண்டிருக்கின்றனர். எங்கு பார்த்தாலும் விளக்குச் சரங்கள் மின்னுகின்றன. எப்பொழுதும் காட்டமாக இருக்கும் தெருவோர செக்போஸ்டுகள், அதிலிருந்து முறைத்துப் பார்க்கும் கையில் துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் என்ற கெடுபிடிகள் மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. என் கடவுச்சீட்டைக் காண்பிக்கும்படி யாரும் கேட்கவில்லை.

இன்று காலையில் ஹோட்டல் அறையிலிருந்து வெளியே பார்த்தால் நுரை பொங்கும் கடலும், கரையெல்லாம் கூட்டமும். தெருக்களும், கடற்கரையும் சென்னையை விடப் பலமடங்கு துப்புறவாக உள்ளன.

அமைதி வேண்டும். சந்தோஷம் வேண்டும். தெருவில் கூட்டம் கூட்டமாய்ப் போய்க்கொண்டிருக்கும் இளைஞர்களை நினைத்துக் கொள்கிறேன். நன்றாகக் குடிக்கட்டும். காதலிலும், கலவியிலும் சந்தோஷம் பெறட்டும். அவ்வப்போது வேண்டுமென்றால் புத்தனோ, சிவனோ, சிலுவையோ, மசூதியோ அதன்முன் ஒரு நிமிடம் கண்மூடி நிற்கட்டும்.

அப்பொழுதாவது போர் மீண்டும் மூளாமல் தடுக்கப்படலாம்.


- Badri, 11:25


http://thoughtsintamil.blogspot.com/
Reply
#2
நன்றி சுரதா.. நடுப்பக்கத்தைப்பற்றிச் சொல்லத்தான் நினைவுவருகிள்றது.. வந்தவுடன் சுடரெழி பத்திரிகையின் நடுப்பக்கம் திருப்பிப் பார்த்தவர்களையும்.. அதனுடைய வர்ணப்படங்களை மற்றைய பத்திரிகைகளுடன் ஒப்பிட்டு வர்ணித்த விதமும் ஞாபகத்திற்குவருகின்றது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
எல்லாவற்றிலும் இப்ப நடுப்பக்த்திற்குத்தான் மவுசு அதிகம்

உண்மையில் அற்புதனுடன் தினமுரசு விற்பனையில் வீழ்ந்துவிட்டது என்றுதான் தோன்றுகின்றது.
[b] ?
Reply
#4
ஒரு காலத்தில் யாழ் இணையம் நல்லதொரு அழகாக இருந்தது. ஆனா இப்போ அதிலும் சினிச்செய்திகள் என தாறுமாறாக. சில பக்கங்கள் வாசிக்காமல் இருப்பது நல்லது போன்ற உணர்வு. களம் இப்போ பல தொழில் நுட்பங்களால் வளர்ந்தாலும் ஏனோ மனதில் பலரின் அதீத உழைப்பு வீணாகிறதே என்ற கவலை தான். ஒரு ஓப்பிண் சற்றாகிவந்துள்ளது அது தான் உண்மை.இதை மனவருத்தத்தோடு தெரிவித்து கொள்வதுடன் எல்லோரும் ஐPரணித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். ( ஆரம்ப காலங்களில் இருந்த களம் பார்ப்பவர்களுக்கும் கருத்தாடல் செய்பவர்களிற்கும் இது புர்pயும் என நினைக்கிறேன். ) அர்த்தமற்ற உரையாடல்களே அதிகமாகி வருகிறது.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#5
nalayiny Wrote:ஒரு காலத்தில் யாழ் இணையம் நல்லதொரு அழகாக இருந்தது. ஆனா இப்போ அதிலும் சினிச்செய்திகள் என தாறுமாறாக.
சரி சினிச் செய்தியைவிடுவம்.. சண் சூர்யா ரிவியள் இலவசமோ.. கட்டணமோ..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
தினமுரசின் பனிப்பாளர் டக்களஸ் தேவாணந்தாவே நம்பகரமாக நாம் அதை சொல்கிறோம்.
Reply
#7
[quote=nalayiny]ஒரு காலத்தில் யாழ் இணையம் நல்லதொரு அழகாக இருந்தது. ஆனா இப்போ அதிலும் சினிச்செய்திகள் என தாறுமாறாக. சில பக்கங்கள் வாசிக்காமல் இருப்பது நல்லது போன்ற உணர்வு. களம் இப்போ பல தொழில் நுட்பங்களால் வளர்ந்தாலும் ஏனோ மனதில் பலரின் அதீத உழைப்பு வீணாகிறதே என்ற கவலை தான்.<b> ஒரு ஓப்பிண் சற்றாகிவந்துள்ளது அது தான் உண்மை.இதை மனவருத்தத்தோடு தெரிவித்து கொள்வதுடன் எல்லோரும் ஐPரணித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். </b>( ஆரம்ப காலங்களில் இருந்த களம் பார்ப்பவர்களுக்கும் கருத்தாடல் செய்பவர்களிற்கும் இது புர்pயும் என நினைக்கிறேன். ) அர்த்தமற்ற உரையாடல்களே அதிகமாகி வருகிறது.
[b] ?
Reply
#8
[quote=nalayiny]ஒரு காலத்தில் யாழ் இணையம் நல்லதொரு அழகாக இருந்தது. ஆனா இப்போ அதிலும் [b]சினிச்செய்திகள் என தாறுமாறாக



தங்கள் கருத்துக்கு முதலில் நன்றிகள்....!

தாங்கள் களத்தில் குருவிகளின் சினிச் செய்தியும் களம் சீர்கெடுவதற்கு காரணம் எனக் கூறியிருக்கிறீர்கள்....அப்படியானால்...சினிமா என்ற பகுதியின் நோக்கம் தான் என்ன...அதனை வினைத்திறனான வழியில் கொண்டு செல்ல உங்கள் படைப்புக்களால் வழிகாட்டலாமே....செய்வீர்களா....?! உங்களின் அபிமானப்பகுதியான கவிதைப்பகுதியிலேயே உங்கள் கவிதைகளைக் காணவில்லை ஏன்....?!
:evil: :?: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தங்கள் கருத்துக்கு  முதலில் நன்றிகள்....!

தாங்கள் களத்தில் குருவிகளின் சினிச் செய்தியும் களம் சீர்கெடுவதற்கு காரணம் எனக் கூறியிருக்கிறீர்கள்....அப்படியானால்...சினிமா என்ற பகுதியின் நோக்கம் தான் என்ன...அதனை வினைத்திறனான வழியில் கொண்டு செல்ல உங்கள் படைப்புக்களால் வழிகாட்டலாமே....செய்வீர்களா....?! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->சும்மா சினிமாவைச் சாட்டாமல் நான் கேட்ட கேள்விக்குப் பதில் எழுதுங்கப்பா.. சண்ரிவி ஜெயா ரிவி இப்பவும் இலவசமாப் போகுதோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
ஆமாம் தாத்தா இலவசமாகத்தான் போகின்றது.
ஆனாலும் எனக்குத்தான் சிக்கலாக இருக்கின்றது.4 மணித்தியாலங்கள் தாமதமாகத்தான் நிகழ்வுகள் கிடைக்கின்றன. அதாவது இரவு 7 மணிக்கு பார்க்கும் நிகழ்ச்சியை தற்போது 11 மணிக்குத்தான் பார்க்கமுடிகின்றது. இந்த கொட்பேர்ட் வந்த பலன்............
[b] ?
Reply
#11
இக்கரைக்கு அக்கரை பச்சை.. அக்கரையில் அக்கறை வந்தால்.. அக்கரையின் சினிமாவும் தெரியுாது.. கிசுகிசுவும் தெரியாதே..!!
.
Reply
#12
இலங்கையில் 5000 உந்தப்பத்திரிகை தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆனால் ஜரோப்பாவில் அந்த பத்திரிகையை போட்டிபோட்டு தாயக கடைகள் விக்கிண்றன் இது தமிழ் உணர்வாளர்களை சிந்திக்க வைக்கிண்றது.
Reply
#13
மதி ராஜ்ரீPவிக்கும் நாள் குறித்துவிட்டார்கள் .கூடிய சீக்கிரம் அவரும் வருவார்.
எல்லாம் சேர்த்து 250 யுரோ என பட்சி சொல்கிறது.

சினிமாச் செய்திகள் நான் இங்குதான் பார்ப்பது குருவி..
களம் என்றால் பலதும் பத்தும்தான் இருக்கும் நளாயினி...இன்னதுதான் போடவேண்டும் என்றால் அதற்கு இணையபக்கம்தான் நடாத்தவேண்டும்.களம் முன்னரும் இப்படித்தான் இருந்தது.மாடு கூட களத்தில் மேய்த்தார்கள்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#14
sethu Wrote:இலங்கையில் 5000 உந்தப்பத்திரிகை தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆனால் ஜரோப்பாவில் அந்த பத்திரிகையை போட்டிபோட்டு தாயக கடைகள் விக்கிண்றன் இது தமிழ் உணர்வாளர்களை சிந்திக்க வைக்கிண்றது.
இவையைத்தான் அடாவடித்தனம் அடக்குமுறை வன்முறை என்பதோ.. :?: :?: :?:
Truth 'll prevail
Reply
#15
தாத்தா இது தெரியாதா....
இதுதான் உங்கள் சன நாய் அகப் பாஷையில்
எதிர்ப்பைக் காட்டும் முறை....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
[quote=சுரதா/suratha]மதி ராஜ்ரீPவிக்கும் நாள் குறித்துவிட்டார்கள் .கூடிய சீக்கிரம் அவரும் வருவார்.
எல்லாம் சேர்த்து 250 யுரோ என பட்சி சொல்கிறது.

சினிமாச் செய்திகள் நான் இங்குதான் பார்ப்பது குருவி..
களம் என்றால் பலதும் பத்தும்தான் இருக்கும் நளாயினி...இன்னதுதான் போடவேண்டும் என்றால் அதற்கு இணையபக்கம்தான் நடாத்தவேண்டும்.களம் முன்னரும் இப்படித்தான் இருந்தது.மாடு கூட களத்தில் மேய்த்தார்கள்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அது அந்த நேரத்திற்கு அவசியமாகவும் இருந்தது.








இப்ப எல்லாவற்றையும் மாற்றியவுடன் பழைய சட்டி வைத்திருப்பவர்கள் அதை என்ன செய்வது என தெரியாமல் தலையை சொறியினம். இங்கை எந்த வீட்டின் மொட்டை மாடியை பார்த்தாலும் வானத்தை பார்த்தபடி சட்டி இருக்கும். (ஜெயலலிதாவின் மழை நீர் சேகரிப்புத்திட்டம் இதைப்பார்த்துத்தான் தொடங்கியதோ தெரியாது.) இப்ப என்னடாவென்றால் வெள்ளை வெள்ளையாக கவிட்டுக்கிடக்கின்றது.
[b] ?
Reply
#17
Mathivathanan Wrote:
sethu Wrote:இலங்கையில் 5000 உந்தப்பத்திரிகை தீயிட்டு கொளுத்தப்பட்டது. ஆனால் ஜரோப்பாவில் அந்த பத்திரிகையை போட்டிபோட்டு தாயக கடைகள் விக்கிண்றன் இது தமிழ் உணர்வாளர்களை சிந்திக்க வைக்கிண்றது.
இவையைத்தான் அடாவடித்தனம் அடக்குமுறை வன்முறை என்பதோ..
kuruvikal Wrote:தாத்தா இது தெரியாதா....
இதுதான் உங்கள் சன நாய் அகப் பாஷையில்
எதிர்ப்பைக் காட்டும் முறை....!
நீங்கள் வளர்க்கப்பட்ட சன நாய் அக முறை அதுதான் என்பது புரிகிறது.. இதையே பேரினத்தார் செய்யும்போது என்ன சொன்னீர்கள்.. சொல்கிறீர்கள்.. சொல்லப்போகிறீர்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#18
nalayiny Wrote:ஒரு காலத்தில் யாழ் இணையம் நல்லதொரு அழகாக இருந்தது. ஆனா <b>இப்போ அதிலும் சினிச்செய்திகள் என தாறுமாறாக</b>. சில பக்கங்கள் வாசிக்காமல் இருப்பது நல்லது போன்ற உணர்வு. களம் இப்போ பல தொழில் நுட்பங்களால் வளர்ந்தாலும் ஏனோ மனதில் பலரின் அதீத உழைப்பு வீணாகிறதே என்ற கவலை தான். ஒரு ஓப்பிண் சற்றாகிவந்துள்ளது அது தான் உண்மை.இதை மனவருத்தத்தோடு தெரிவித்து கொள்வதுடன் எல்லோரும் ஐPரணித்து தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளோம். ( ஆரம்ப காலங்களில் இருந்த களம் பார்ப்பவர்களுக்கும் கருத்தாடல் செய்பவர்களிற்கும் இது புர்pயும் என நினைக்கிறேன். ) அர்த்தமற்ற உரையாடல்களே அதிகமாகி வருகிறது.

sOliyAn Wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை.. அக்கரையில் அக்கறை வந்தால்.. அக்கரையின் சினிமாவும் தெரியுாது.. கிசுகிசுவும் தெரியாதே..!!
:?: :?: Idea Idea :roll: :?
Reply
#19
சேது
மதிக்கு 7 என பகிடி பண்ணினீங்கள் ..உங்களுக்கு 6 என்றவுடன் அழுகிறியள். ஆனால் ஆறாக இருந்தாலும் நீங்கள் தொடர்வதா இல்லையா என தீர்மானிப்பவர் மோகன்...இப்பிடியே அனுப்பக் கூடிய அலுவல்களைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்..ஆதாரமற்ற செய்திகளை எப்படி ப் பரப்புவது என்பதை உங்களிடம்தான் கற்க வேண்டும்..ஆனால் யர்ரும் அதைக் கற்க விரும்பவில்லையென்பதே உண்மை.
சேது எழுதியது
Quote:தினமுரசின் பனிப்பாளர் டக்களஸ் தேவாணந்தாவே நம்பகரமாக நாம் அதை சொல்கிறோம்.
உங்கள் கதைகளை (கரடிகளை) உண்மையாகவிருந்தாலும் நம்ப முடியாமற் செய்த பெருமையும் உங்கலையே சாரும்

-
Reply
#20
பிழைதிருத்தம்: உங்களையே

-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)