02-24-2004, 01:28 PM
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பயங்கர விபத்து: 6 இஸ்ரோ ஊழியர்கள் பலி
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39893000/gif/_39893343_india_sriharikota_map203.gif' border='0' alt='user posted image'>
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 ஊழியர்கள் பலியாயினர். ஒரு பெரிய கட்டடமே சிதைந்து, தரைமட்டமானது.
சதீஷ் தாவன் விண்வெளி ஆய்வு மையம் என்றழைக்கப்படும் இந்த தளத்தில் இங்கு ராக்கெட்களை உருவாக்கும் பிரிவுகளும், ராக்கெட் ஏவுதளமும் உள்ளன.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்படும் செயற்கைக் கோள்கள் இந்தத் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வருகின்றன.
இங்கு ராக்கெட்டுகளுக்குத் தேவையான திட, திரவ எரிபொருள்களும் உருவாக்கப்படுகின்றன. நேற்று திட எரிபொருள் உருவாக்கும் மையத்தில் திடீரென பயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த மையத்தின் கட்டடம் சிதறி, சின்னாபின்னாவானது.
14.5 டன் திட எரிபொருள் வெடித்ததால் 3,000 டிகிரி வெப்பம் உண்டானது. இதில் கட்டட இடிபாடுகள் கூட உருகிப் போயின.
அங்கு பணியில் இருந்த கிருஷ்ணரெட்டி, சீனிவாசுலு, பஷீர் அகமது ஆகிய ராக்கெட் நிபுணர்களும் பண்டிட் என்ற காண்ட்ராக்ட் தொழிலாளரும் அந்த இடத்திலேயே உடல் உருகிப் போய் பரிதாபமாகப் பலியாயினர். கட்டடமும் தீப் பிடித்து வெடித்துச் சிதறி உருகியது.
மேலும் கிருஷ்ணய்யா மற்றும் சஞ்சீவ் என்ற காண்ட்ராக்ட் தொழிலாளி உள்ளிட்ட 2 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக அங்குள்ள தீயணைப்புப் படைப் பிரிவுகள் அங்கு விரைந்தன. ஆனால், தீயை அணைக்க முடியாமல் அவை திணறின.
சுமார் 4 மணி நேரம் போராடித் தான் ராக்கெட்டின் திட எரிபொருளை அணைக்க முடிந்தது. இதனால் கட்ட இடிபாடுகளில் சிக்கிய கிருஷ்ணய்யா. சஞ்சீவ் ஆகிய இருவரும் பலியாகிவிட்டனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.
திட எரிபொருள் உருவாக்கும் பிரிவுக்குள் நுழையும் அனைவரும் அங்கு தங்களை டிசார்ஜ் செய்து கொண்டு நுழைய வேண்டும். நம் உடலில் உள்ள சிறிய அளவிலான மின் இயக்கம் கூட திட எரிபொருளைத் தூண்டி வெடிக்கச் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இந்த மையத்தில் உருவாக்கப்பட்ட திட எரிபொருளாள் ஆன ராக்கெட் பூஸ்டர் இன்னொரு இடத்துக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது அது வெடித்துச் சிதறியதாக இஸ்ரோ செயலாளரான தாஸ் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மிக உயர் மட்ட விசாரணைக்கு இஸ்ரோ உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணபிரசாத், நாராயணன் மற்றும் சச்சின் ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாராயணனைத் தவிர மற்ற இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த விண்வெளி மையத்தில் நடந்துள்ள முதல் பெரிய விபத்து இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து அறிந்தவுடன் இந்திய விண்வெளி ஆய்வு கழகத் (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். அங்கிருந்து சிறப்பு ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டா புறப்பட்டுச் சென்றார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது. இருப்பினும் இதனால் ஸ்ரீஹரிகோட்டா மையத்தின் பணிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
இதற்கிடையே ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றிலும் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு முழு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்தில் பலியான4 இஸ்ரோ ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதே போல பலியான காண்ட்ராக்ட் தொழிலாளிகள் இருவரின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம வழங்கப்படும் என்று விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
விபத்தால் இஸ்ரோவுக்கு ரூ. 70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து குறித்து ஆராய ராக்கெட் நிபுணர் ஆராவமுதன் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-------------
Thatstamil.com and BBC.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>