Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கண்ணிக்கு அஞ்சும் கன்னி...!
#1
ஜெவின் பாதுகாப்பில் மாற்றம்: புல்லட் புரூ ஃப் கார் உடை பயன்படுத்த முடிவு

<img src='http://thatstamil.com/images14/jaya-45.jpg' border='0' alt='user posted image'>

சென்னை:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாயுடுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்த காரணத்தால்தான் கண்ணி வெடித் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் ஆந்திர நக்சல்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் ஆதரவும், ஆட்களும் உள்ளதால் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது. குறிப்பாக வீரப்பனின் காட்டுப் பகுதியில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுககும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆந்திராவில் மிக பலத்த பாதுகாப்பில் இருக்கும் நாயுடுவையே தாஙகள் நினைத்த நேரத்தில், நினைத்தபோது தாக்க முடியும் என்பதை நக்சலைட்டுகள் காட்டிவிட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நக்சல்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் நிச்சயம் ஆபத்து வரலாம் என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கருதுகின்றன.

தற்போது ஜெயலலிதாவுக்கு தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 'முதல் ரிங்' பாதுகாப்பு வழங்குகின்றனர். இது தவிர தமிழக போலீசாரின் கமாண்டோ படை 'இரண்டாவது ரிங்' பாதுகாப்பு வழங்குகின்றனர்.

நாயுடு மீதான தாக்குதலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பில் சில மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தியுள்ளது.

இனிமேல் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத உடைகளை அணியுமாறு ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதேபோல, குண்டு துளைக்காத காரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா இனிமேல் காரில் செல்லும்போது அந்த வழியில் செல்போன்கள், ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் போன்றவற்றை செயலிழக்கச் செய்யும் எலெக்ட்ரானிக் ஜாமர்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுதவிர தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலக பகுதியில் ஆட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை நகரில் சில குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் விழாக்களில் மட்டுமே இனிமேல் ஜெயலலிதா கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம், அண்ணா பல்கலைக்கழக அரங்கம், தலைமைச் செயலக மாநாட்டு அரங்கம் ஆகிய பாதுகாப்பு மிக்க இடங்களில் நடக்கும் கூட்டங்கள், விழாக்களில் மட்டுமே ஜெயலலிதா கலந்து கொள்வது நல்லது என்று மத்திய உளவுப் பிரிவும், போலீசாரும் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

வெளியூர்களுக்குச் செல்வதாக இருந்தால் விமானம் அல்லது ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. அதையே தொடர்ந்து கடைபிடிக்குமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழக ஆந்திர எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்கோ அல்லது கர்நாடகத்துக்கோ தப்பலாம் என்பதால் இரு மாநில எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன சோதனைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந் நிலையில் கண்ணிவெடிக் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மேலும் 8 வெடிக்காத கண்ணிவெடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
-------------------------------------
மேலும் சில தகவல்கள்....
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39400000/jpg/_39400772_naidu203.jpg' border='0' alt='user posted image'>
நாயுடு

நாயுடுவை சந்தித்த கலாம், அத்வானி
சென்னை:

நக்சலைட்டுகளின் கண்ணி வெடித் தாக்குதலில் படுகாயமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர் ஜனாதிபதி அப்துல் கலாமும் துணைப் பிரதமர் அத்வானியும்.

இன்று காலை சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் வந்த அத்வானி நேராக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள நாயுடுவின் இல்லத்துக்குச் சென்று அங்கு ஓய்வில் உள்ள நாயுடுவைச் சந்தித்தார். இருவரும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் நாயுடுவைச் சந்தித்த ஜனாதிபதி அப்துல் கலாமும் இன்று ஹைதாரபாத் வந்தார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று நாயுடுவின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நாயுடுவிடம் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கிளம்பினார் கலாம்.

முன்னதாக நேற்று சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார். கழுத்து எலும்பு உள்பட 3 எலும்புகள் உடைந்து போயுள்ள அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துபாய் செல்ல இருந்த இந்த விமானம் நேற்று முன் தினமே நாயுடுவுக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து துபாய் பயணிகள் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் நாயுடுவுக்கு சிகிச்சை தர அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தனி ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே நாயுடு மீது கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் கடும் கண்டனம் தெவித்துள்ளனர்.

இதற்கிடையே 'கிளேமோர் மைன்' எனப்படும் கண்ணி வெடியை 6 மாதங்களுக்கு முன்பே திருப்பதி மலைப் பாதையில் நக்சலைட்டுகள் புதைத்துவிட்டதாகவும், திருப்பதி கோவிலில் கருட சேவையின்போது ஆந்திர முதல்வர் அங்கு வருவது மரபு என்பதால், அந்த நாளில் தாக்குதல் நடத்த 6 மாதத்துக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

மேலும் நாயுடுவின் கார் வரிசையில் 20 கார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை வெள்ளை நிற அம்பாசிடர் கார்கள். இதில் சரியாக நாயுடுவின் காரை அடையாளம் வைத்து கண்ணிவெடியை வெடிக்கச் செய்துள்ளனர் நக்சலைட்டுகள்.

மேலும், நாயுடுவின் கார் வரும் நேரம், அந்த கார் வரிசையின் வேகம் இதையும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்து குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இது ஆந்திர போலீசாருக்கும் மத்திய உளவுப் பிரிவினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் ரகசிய வயர்லெஸ் உரையாடல்களை நக்சலைட்டுகள் தொடர்ந்து ஒட்டு கேட்டு வந்திருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந் நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, இது எனக்கு இறைவன் கொடுத்துள்ள மறு ஜென்மமாகவே கருதுகிறேன். இந்த மறு பிறவியை நான் மக்களுக்கே அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார்.
-------------------------------------------------

தகவல்கள் சுரதாவின் பொங்குதமிழ் கொண்டு தற்ஸ் தமிழில் எடுக்கப்பட்டவை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)