Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
PDF Software
#1
பிடிஎப் பைல்களை உருவாக்க உதவும் இலவச சாப்ட்வேர்கள்

எந்தக் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுதத வேண்டுமானால் அந்த பைல், டெக்ஸ்ட் பைலாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட டெக்ஸ்ட் பைலை விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ், மேகின்டோஷ், சோலாரிஸ் என எப்படிப்பட்ட ஆப்ரேடிங் சிஸ்டம் நிறுவப்பட்ட கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தலாம். ஆனால் எழுத்துக்களை பார்மட் செய்ய முடியாது. படங்களை நுழைக்க முடியாது போன்ற குறைகள் டெக்ஸ்ட் பைல்களுக்கு உண்டு.

ஹெச்டிஎம்எல் பைல்களையும் எல்லா வகை கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்தலாம். ஆனால் வெவ்வேறு பிரவுசர்களில் வெவ்வேறு விதமாக ஹெச்டிஎம்எல் பைல்கள் காட்சியளிக்கும் என்பது இதன் குறையாகும்.


Portable Document Format என்ற பிடிஎப் பைல்களை எல்லா கம்ப்யூட்டரகளிலும் பயன்படுத்த முடியும். எழுத்துக்களை பார்மட் செய்யலாம். படங்களை நுழைக்கலாம். எல்லா கம்ப்யூட்டர்களிலும் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கும் என பிடிஎப் பைல்களின் நிறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்கிற பல கட்டுரைகள், கதைகள் போன்றவை பிடிஎப் பார்மட்டில்தான் உள்ளன. பிடிஎப் பைல்களைப் படிப்பதற்குத் தேவையான Adobe Acrobat Reader சாப்ட்வேரை அடோப் நிறுவனம் இலவசமாகவேத் தருகிறது. எனவே பிடிஎப் பைல்களில் விபரங்களை பதிந்து தர எல்லோரும் விரும்புகின்றனர்.

பலர், தங்களிடம் உள்ள எம்எஸ் வேர்ட், எக்செல் பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற விரும்புகின்றனர். ஆனால் இப்படி மாற்றவதற்கு Adobe Acrobat என்ற சாப்ட்வேர் தேவை. இது இலவசமாக வருவதில்லை. பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். அடோபி அக்ரோபேட் சாப்ட்வேருக்குப் பதிலாக இலவச சாப்ட்வேர் ஏதாவது கிடைத்தால் அதைப் பயன்படுத்தி தங்களது பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்றினால் நன்றாக இருக்குமே என்று பலர் ஏங்குகின்றனர். ஒன்றல்ல பல இலவச சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றுள் உங்களுக்குத் தேவையானதைப் பயன்படுத்தலாம். அவை பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

Free PDF

இந்த சாப்ட்வேரை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவினால் புதிய பிடிஎப் பிரின்டர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரில் உண்டாகும். எந்த பைலை பிடிஎஃப்பாக மாற்ற விரும்புகிறீர்களோ அந்த பைலை அதற்கான அப்ளிகேஷனில் திறந்து அச்சடிக்க கட்டளை கொடுக்க வேண்டும். பிரின்டராக பிடிஎப் பிரின்டரைத் தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவுதான் அந்த பைல் பிடிஎப் வடிவில் கிடைக்கும்.

விண்டோஸ் 9x, விண்டோஸ் மி, விண்டோஸ் என்டி ஆப்பரேடிங் சிஸ்டங்களில் இயங்குகிற Free PDF சாப்ட்வேரின் அளவு 767 கேபி ஆகும். இதைப் பெற www.webxd.com/zipguy/freepdfobtm தளத்தில் நுழையுங்கள்.

Pdf Edit 995

எம்எஸ் வேர்ட், எக்செல் போன்றவற்றில் நீங்கள் தயாரித்த பைல்களை பிடிஎப்பாக மாற்ற இந்த Pdf Edit 995 சாப்ட்வேர் பயன்படும். பல பைல்களை வெவ்வேறு அப்ளிகேஷன்களில் அவை உருவானாலும் சரி அவற்றை இணைத்து ஒரேயொரு பிடிஎப் பைலாக மாற்ற முடியும். பக்கங்களை வெவ்வேறு கோணங்களில் திருப்ப பாண்டுகளைப் புகுத்த, வாட்டர்மார்க்கை நுழைக்க எனப் பல்வேறு வசதிகள் இதில் உண்டு.

எல்லா பதிப்பு விண்டோஸ்களிலும் இயங்குகிற இதன் அளவு வெறும் 366 கேபி என்பது குறிப்படித்தக்கது. www.pdf995.com என்ற தளத்தில் இருந்து இதை டவுன்லோடு செய்யலாம்.

PDF Producer

வெறும் 19 கேபி அளவு கொண்டு இந்த சாப்ட்வேரைக் கொண்டு டெக்ஸ்ட் பைலை பிடிஎப் பைலாக மாற்ற முடியும். பிடிஎப்பாக மாற்றும் பொழுது அதில் பான்டின் அளவு, வடிவம் போன்றவற்றை உங்கள் விருப்பப்படி நிர்ணயிக்க முடியும்.

விண்டோஸ் 9x, விண்டோஸ் மி ஆகியவற்றில் இயங்குகிற இதைப் பெற http://maramcheez.netfirms.com/free.html தளத்தில் நுழையுங்கள்.

Cute PDF Printer

விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிற எந்த அப்ளிகேஷன்களிலும் உள்ள உங்களது பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. இதை நிறுவிய பின்பு, விண்டோஸ் அப்ளிகேஷனில் இருந்து பிடிஎப் பைலாக மாற்ற விரும்புகிற பைலை அச்சடிக்க கட்டளை கொடுங்கள். பிரின்டராக இந்த Cute PDF Printer என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிடிஎப் பைல் கிடைத்துவிடும்.

எல்லா வகை விண்டோஸ் ஆப்பரேடிங் சிஸ்டங்களிலும் இயங்குகிற இதைப் பெற www.acrosoftware.com/download.htm என்ற தளத்தில் நுழையுங்கள்.

PDF Creater

முந்தையத் தலைப்பில் குறிப்பிடப்பட்ட சாப்ட்வேர் போன்றே இதுவும் செயல்படுகிறது. இதைப் பெற http://sourceforge.net/projects/pdfcreator என்ற தளத்தில் நுழையுங்கள்.

HTML DOC

உங்களிடம் உள்ள ஹெச்டிஎம்எல் பைலை பிடிஎப் மற்றும் போஸ்ட்ஸ்கிரிப்ட் (Postscript) பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகிறது. ஹெச்டிஎம்எல் 3.2 மற்றும் 4.0 ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளுகிற இந்த சாப்ட்வேரை எளிதாக எல்லோரும் கையாள முடியும்.

1185 கேபி அளவு கொண்ட இந்த சாப்ட்வேர் விண்டோஸ் 9x, என்டி ஆகியவற்றில் செயல்படும். இதை டவுன்லோடு செய்ய www.easysw.com/ nmike/html.doc தளத்தில் நுழையுங்கள்.

மேலே பார்த்த ஆறு சாப்ட்வேர்கள் போக பிடிஎப் பைல்களை உருவாக்குவதற்காக மேலும் பல இலவச சாப்ட்வேர்களும், ஷேர்வேர் புரோகிராம்களும் இன்டர்நெட்டில் உள்ளன.

நன்றி: தினமலர்

இங்குள்ள இணைப்புக்கள் எதனையும் நான் பரீட்சித்துப்பார்க்கவில்லை.
[i][b]
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)