Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டெஸ்மன் டூட்டூ
#1
இடைக்கால நிர்வாகசகை தொடர்பான புலிகளின் வரவை இறுதிசெய்யும் அயர்லாந்துக் கூட்டம் ஆரம்பமானது

வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பாக புலிகள் சமர்ப்பிக்கவிருக்கும் திட்டத்தை இறுதி செய்வதற்கான கலந்துரையாடல் நேற்றுக்காலை அயர்லாந்தில் நல்லிணக்கத்துக்கான கிளன்கிறீ நிலை யத்தில் ஆரம்பமானது.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளும் சட்ட மற்றும் அரசமைப்பு நிபுணர்களும் அங்கு ஒன்றுகூடி இடைக்கால நிர்வாகம் தொடர்பான புலிகளின் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கலந்துரையாடல் நடைபெறும் நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி இயன் வைற்றும், திட்ட இணைப்பாளர் சீன் ஓ பொயிலும், அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான புலிகளின் குழுவை வரவேற்றனர். தங்கள் நிலையம் குறித்தும் அதன் செயற்பாடுகள் பற்றியும் அவர்கள் ஆரம்ப நிகழ்வில் சிறிய விளக்கம் ஒன்றை அளித்தனர். அதைத் தொடர்ந்து புலிகளின் அரசமைப்பு விவகாரக்குழு அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் இடைக்கால நிர்வாகத் திட்டம் தொடர்பான ஆராய்வை ஆரம்பித்தது.
இக்கலந்துரையாடலில் புலிகளின் மட்டு - அம்பாறை விசேடதளபதி கேணல் கருணா, சட்டநிபுணர்களான உருத்திரகுமாரன், இலங்கையின் முன்னாள் சட்டமாஅதிபர் சிவா பசுபதி, பேராசிரியர் போல் டொமினிக், பேராசிரியர் இராமசாமி, வழக்கறிஞர் இந்திரன் மற்றும் ஷிரான் பணிப்பாளர் இரேனியஸ் செல்வின், விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலணிச்செயலர் புலித்தேவன், பொருளியல் நிபுணர் ஜோய் மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சில தினங்கள் நடைபெறும் இக்கலந்துரையாடலை முடித்துக்கொண்டு எதிர்வரும் 11ஆம் திகதி புலிகளின் குழுவினர் வன்னி திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் இம்மாத நடுப்பகுதியில் இடைக்கால நிர்வாகம் பற்றிய தமது இறுதித்திட்ட வரைவை நோர்வே அனுசரணையாளர்கள் ஊடாக இலங்கை அரசுக்கு புலிகள் அனுப்பிவைப்பர் என எதிர்பார்க்கப் படுகின்றது.
http://www.uthayan.com/news/newsmain.htm

கடைசியாக வந்த செய்திகளின்படி சுகயீனம் காரணமாக..? நெல்சன் மண்டேலா கலந்துகெகாள்ளமாட்டாரெனவும் அவருக்குப் பதிலாக அவரது பிரதிநிதியாக டாக்கர் டெஸ்மன் டூட்டூ கலந்துகொள்வாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி
Truth 'll prevail
Reply
#2
ஆச்சிபிஷெப் டெஸ்மன் டூட்டு வந்தாரோ தெரியேல்லை.. 5 நாள் ஆராச்சி செய்து மாத்திக்கீத்தியெல்லாம் எழுதி முடிஞ்சுது. சொல்கெய்மும் இடையிலை வந்து பார்த்திட்டுப்போய் விபரம் அகாசியிட்டை சொல்லியிருக்கிறார். இனி வன்னிக்குப்போய் திரும்ப 17 ஆம் திகதி டென்மாக்.. நேர்வேயெண்டு செட்யூல் போட்டிருக்குது. அடுத்து எந்தநாடு..? என்னப்பா..? பூந்திரியா..? மத்தாப்பா..?அல்லது சீனவெடியா..?வானவேடிக்கையெல்லாம் றெடிபோலை.. குடை பட்டம் எல்லாம் விடுவாங்களோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
பாப்பம் இனி அரசாங்கம் என்ன வெடி கொழுத்துகிறது என...
Reply
#4
யாழ்/yarl Wrote:பாப்பம் இனி அரசாங்கம் என்ன வெடி கொழுத்துகிறது என...
என்ன.. மத்தாப்பு வெடி சகலதும் நோர்வேட்டை குடுக்கவேணும். அது முதல் எண்டு சொல்லும்.. முதல் வெடி கொழுத்திற நோக்கம் அங்கையில்லை.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
யாழ்/yarl Wrote:பாப்பம் இனி அரசாங்கம் என்ன வெடி கொழுத்துகிறது என...

[size=14]இலங்கையின் வாக்குகளைப் பெறுவதற்காக சமாதானத்தை விட எந்தவொரு பாச்சாவையும் எந்த ஒரு கட்சியும் முன் வைத்தல் தன் தலையில் தானே நெருப்பைக் கொட்டிக் கொள்வது போன்றது. அரசாங்கம் என்று சொல்வதை விட ஆளும் ரணில் குழுவினர் நிச்சயம் சமாதானத்துக்கு எதிராக எதுவும் செய்யப் போவதில்லை.மக்கள் வேண்டுவது சமாதானத்தையே தவிர யுத்தத்தையல்ல.

சந்திரிகா தரப்பும் அதைத்தான் நினைக்கிறது.அதுதான் JVPயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்கான காரணம். அடுத்த இலங்கையின் அதிபராகும் நிலை ரணில் தரப்பினருக்கு கிடைக்கும் போல இருக்கு என அணுரா பண்டாரநாயக்க, உட் கட்சிக்குள்ளேயே சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார்.

உண்மைதான். இலங்கையின் வளர்ச்சிக்கு தமது இரத்தத்தை வியர்வையாக்கி அழிந்து போன மலையக இந்திய வம்சாவழியினருக்கு இலங்கை குடியுரிமையைக் கொடுக்க 50 ஆண்டுகளாகு மேலாகியிருக்கிறது. இது ஒன்றும் பெருமைப்பட வேண்டிய விடயமல்ல,வெட்கப்பட வேண்டிய விடயமென்று ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தமது கொதிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.

UNP இவர்களது குடியுரிமையை பெறவிடாது ஆரம்பத்தில் தடுத்தது.அவர்களுடன் சேர்ந்து ஒத்து ஊதியவர்கள் எமது தமிழர்கள்.அதுவே பாராளுமன்றத்தில் குறைவான தமிழர்கள் எண்ணிக்கையில் அங்கத்துவம் பெறுவதற்கு வழி வகுத்தது.........................

ஆனால் அதே கட்சியினரே அதற்கு பரிகாரம் தேடியிருக்கிறார்கள்.அவ்வளவுதான்.எனவே மலையக வாக்குகள் நிச்சயம் இக்குழுவுக்கேயாகும். ரணில் குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தரப்பும் இக்குழுவில் இருந்து பிரியப் போவதில்லை.

என்ன இருந்தாலும் ரணில் பகுதியில் ஒருவர் எதிர்கால அதிபர் கதிரையில் உட்காருவது மட்டும் உறுதி.

சந்திரிகாவுக்கு 3வது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதைவிட அணுரா சேரும் கட்சிகள் எப்போதும் தோல்வியை தழுவுவது உறுதி. அணுராவே அதிபர் போட்டியாளரானால்???????????
Reply
#6
அப்ப அடுத்த தேர்தல் மட்டும் சமாதனப் பேச்சுக்கள் இழுத்தடிக்கப்படும் என்று சொல்லவாறியளோ? :wink:
Reply
#7
Kanani Wrote:அப்ப அடுத்த தேர்தல் மட்டும் சமாதனப் பேச்சுக்கள் இழுத்தடிக்கப்படும் என்று சொல்லவாறியளோ? :wink:

பந்து இப்போது யார் கையிலிருக்கிறதோ,அவர்கள்தான் எறியவேண்டும் என்ற நிலை இன்று.................அதுவரை எப்போதும் போல சமாதானப் பேச்சுக்கள் இழுத்தடிக்கப்படலாம்.
Reply
#8
இரண்டு கட்சிகளும் சமாதானத்தை இழுத்தடித்தால் பொது சனம் வேறு வழி தேட வேண்டி வரும். சமாதானம் என்பதன் கருத்தை இப்போது அதிக சிங்கள சாதாரண மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். சந்திரிகா ஜேவீப்பியுடன் கூட்டு வைக்கப் பயந்தது. முன் போல தனது முதுகில் ஏறியிருந்து தனது குடுமியைப் பிடித்து ஆட்டுவார்கள் என்ற பயம் ஒன்று. தனது கட்சியிலே அவர்களுக்கு விரோதமானவர்கள் பிரிந்து போய் விடுவார்கள் என்ற பயமும் கூடத் தான். சமாதானத்தைப் பற்றி இந்த ஆச்சிக்கு எள்ளளவும் கவலையில்லை. இன்னுமோரு முறை அடிவாங்கும் வரை யுத்த நாட்டத்துடன் தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#9
ஆச்சியோ அல்லது அணிலாரோ யுத்தத்தின் அருமை பெருமை எல்லாம் நல்லா அறிஞ்சவை...இப்ப யார் நல்ல தீர்வைத் தந்து ஆட்சியைப் பிடிக்கிறதென்பதுதான் கேள்வி
Reply
#10

கொச்சைப்படுத்தும் கருத்து நீக்கப்பட்டுள்ளது.
உந்த நியாயம் ஐந்தறிவு நாலுகால் பிராணிக்குத்தான் சரியாம்.. பகுத்தவுள்ள ஆறறிவு மனிதருக்கு சரிப்படாதாம்.. நீங்கள் எழுதியது உங்களுக்கு பொருத்தமாக இருந்ததால் இங்கு தருகின்றேன்
- மோகன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
[quote=Mohan]
கொச்சைப்படுத்தும் கருத்து நீக்கப்பட்டுள்ளது.
உந்த நியாயம் ஐந்தறிவு நாலுகால் பிராணிக்குத்தான் சரியாம்.. பகுத்தவுள்ள ஆறறிவு மனிதருக்கு சரிப்படாதாம்.. நீங்கள் எழுதியது உங்களுக்கு பொருத்தமாக இருந்ததால் இங்கு தருகின்றேன்
- மோகன்

என்னடாயிது கவுண்டி விக்லோவிலை சரிட்டி றன் பீஸ் சென்ரரிலை நடந்த கதையெழுத கொச்சையெண்டு தணிக்கை செய்திருக்கு..
கனடாக்காரன் சந்திக்க வாரான் எண்டு கொட்டையெழுத்திலைபோட்டுக்கிடந்து வாசிச்சன்.

வழக்கமா சொல்லுறது சொல்லுவாங்களோ எண்டு கேட்டால்.. கோபப்படுறியள்.. பச்சையா எழுதினாலும் கொச்சையெண்டால் என்ன செய்யிறது.

கனடாக்காரன் ஏதொ உந்திவிட வாரான்.. கனடாக்காரன் சந்திக்க வாரான் எண்டு கொட்டையெழுத்திலைபோட்டுக்கிடந்து வாசிச்சன்.. இப்ப பார்த்தால் செய்தி வேறைமாதிரி வந்திருக்குது.

கொட்டையெழுத்திலை சர்வதேச அங்கீகாரமெண்டு போடலாம்.. எழுதலாம்.. செய்தியிலை முதற் செய்தியா சொல்லி பிரச்சாரமும் செய்யலாம்..

நெல்ஸனுமில்லை.. டெஸ்மனுமில்லை.. இப்ப பார்த்தால் கனடாக்காரனுமில்லை.. அதைத் திருத்தி அப்டேற்றுமில்லை.. எல்லாம் மிளகாயரைப்பு.. ம்.. இப்பிடி எத்தனை நடக்குது.. ஆண்டவா.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
மதித்தாத்தா பொறுக்கி எழுதும்போது கொஞ்சம் புரிவதுமாதிரி புரியாத மாதிரி கலங்கிய நீரோடை போல் தெளிந்தவானம்போல் எழுதிக்கொள்ளுங்கள். முழுமையாக எழுதினால் நீங்கள் பொறுக்கி எடுத்த கருத்துக்கள் அசிங்கமானவையாகவும் தோன்றக்கூடும். அதனால்தான் மோகன் அண்ணா நீக்கிக்கொள்கின்றார்..
[b] ?
Reply
#13
தெளிவில்லாமல் ஏதேதோ பிதற்றித் திரிபவர்களிடம் தெளிவை எதிர்பார்ப்பது மடமையல்லவா? பொறுக்கித் தானே எழுதுகிறார். அப்படித் தான் எழுத வரும

அன்புடன்
சீலன்
seelan
Reply
#14
பேரினத்திடம் நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்பது இலவம் பஞ்சுக் கதைதான். நம்பிக்கை வைப்போம். ஆனால் மறுபடியும் ஏமாறதிருப்போம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)