Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகதியா குடியேறியா என்ன நினைக்கிறீர்கள்?
#1
என்ன நினைக்கிறீர்கள்?

நான் பெயர் இங்கு குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் ஒருவர் அனுப்பிய தனிமடல் வாசகங்களை பாருங்கள்:

<b>அண்ணா நானுங்க ஸ்பொன்சருலதான் வந்தேனுங்க. என்னை அகதிகள் பட்டியலில் சேர்காதையுங்கோ ஏனெனில் நான் ******** நாட்டுக்கு விமானம் ஏறும் போது *******குரிய வதிவிட அனுமதியுடன் தான் ஏறினேன். நான் ஒன்றும் உங்களை மாதிரி திருட்டு தனமாக எல்லைகளுக்காலேயோ அல்லது விமான நிலையத்தினூடாகவோ இந்த நாடுகளுக்குள் பிரவேசிக்கவில்லை</b>

இவ்வாறு பெரிய கெளரவபட்டுக்கொள்கிறார் - தன்னோட புலம்பெயர்வு வாழ்வு பற்றி-!
எனக்கு அவர்கிட்ட கேக்கணும் போல இருந்தது என்னன்னா - என்னதான் ஸ்பொன்சரில வந்தேன் என்று அவர் நெஞ்சை நிமிர்த்தினாலும்- அவரை ஸ்பொன்ஸர் பண்ணியவர்கள் எப்படி நுழைந்தார்கள் - அந்த நாட்டினுள்ளே என்பதுதான் -! 8)

இக்கருத்து பற்றி - நீங்க ஏதும் நினைக்கிறீகளா-? 8)
-!
!
Reply
#2
நீங்கள் கேட்க நினைத்த கேள்வியை தான் நானும் கேட்கின்றேன். அவரை ஸ்பொன்சர் பண்ணியவர் எப்படி வந்தவர் என்று?
ஆமா அகதிகள் தான் வந்தோம் என்று சொல்வதில் என்ன தயக்கம்? நாம் அப்படி வந்தபடியால் தான் தாயகத்தில் பெரும்பலான உறவுகள் பட்டினி இன்றி இருக்கின்றனார். அந்த அகதி நிலை வழங்க படமாலேயே எவ்வளவு உறவுகள் காசை செலவழித்து வந்து திரும்பி தாயகத்திற்கு உடைந்த மனதுடன் சென்று இருக்கின்றார்கள்.
அகதியாக வந்தாலும் பிறந்த நாட்டினினதும் இருக்கும் நாட்டின் இறையமையையும் போற்றி பாதுகாக்கின்றோம். நமக்கு அதுவே சந்தோசமான விடயம்.
அகதிகளாக வந்தவர்களை பார்க்க அப்படி என்ன இளக்காராம் அவருக்கு? அகதிகளாக வந்த உறவுகள் தான் தமது குடும்பத்தின் ஏழ்மையை உணர்ந்து வேலையுண்டு தம் உண்டு என்று இருக்கின்றார்கள். பெரும்பாலும் ஸ்பொன்சரில் வந்தவர்களுக்கு பணக்கஸ்டம் இருக்காது ஆகவே தன்னுடைய தேவைக்கு என்றாலும் உழைக்க வேண்டும் என்றா கவலை இல்லை. வீதிகளில் திரிந்து பிரச்சனைகளை உருவாக்குபவர்களும் இவர்கள் தான்.

Reply
#3
varnan Wrote:இக்கருத்து பற்றி - நீங்க ஏதும் நினைக்கிறீகளா-? 8)

யாராவது உறவுக்காறன் ஐரோப்பா வெள்ளைக்காறனாக இருக்கணும். ( அப்பா.! :roll: )
Reply
#4
ரமா, வர்ணன் நீங்கள் அவரை இப்படித் தான் கேட்டு எழுதியதுக்கு மகிழ்ச்சியடைகிறேன்.

நன்றி
Reply
#5
ரமா ஸ்பொன்சரில் வந்த எல்லாரும் அப்படியல்லா :oops: :oops:
!!!
Reply
#6
இப்படி ஒருவர் எனக்கும் நேரடியாகக் கூறியிருந்தார். அவர் என்னுடன் ஒரே பாடசாலையில் படித்தவர். அவரிற்கும் இப்படியான விளக்கம் தான் கொடுத்திருந்தேன்.

ஆனால் அவர் எனக்குக் கூறியது, "என்னை ஸ்பொன்சர் பண்ணினது என்னுடைய அக்கா, அக்கா ஸ்பொன்சரில வந்தவர்". அப்பொழுது அக்காவை யார் ஸ்பொன்சர் பண்ணியது என்று கேட்டபோது அவரின் துணைவர் ஸ்பொன்சர் பண்ணினாராம். அவர் எப்படி கனடா வந்தவர் என்றால் அதற்கு ஆள் மூச்சு விடவில்லை. அந் நிகழ்வின் பின் அவர் என்னுடன் கதைப்பதை குறைத்துக்கொண்டுள்ளார்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#7
Jeeva Wrote:ரமா ஸ்பொன்சரில் வந்த எல்லாரும் அப்படியல்லா :oops: :oops:

அப்படி இல்லை என்று சொல்ல வாறீர்களா.
ம் அனைவரும் அப்படி இல்லைத்தான். ஆயினும் அப்படியானவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#8
அன்னை மண்ணிலும் அகதியடா
அன்னியன் மண்ணிலும் அகதியடா
ஆடம்பரமாய் நாம் இங்கு வாழ்ந்தாலும்
அன்னை மண்விட்டு வந்தால்-இங்கு
அணைவருமே அகதிதாண்டா.


-
!

Reply
#9
அப்பிடி போடுங்க அரிவாளை அனுராஜ் ! 8)
-!
!
Reply
#10
anuraj.nl Wrote:அன்னை மண்ணிலும் அகதியடா
அன்னியன் மண்ணிலும் அகதியடா
ஆடம்பரமாய் நாம் இங்கு வாழ்ந்தாலும்
அன்னை மண்விட்டு வந்தால்-இங்கு
அணைவருமே அகதிதாண்டா.

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை அனுராஜ்....
Reply
#11
Jeeva Wrote:ரமா ஸ்பொன்சரில் வந்த எல்லாரும் அப்படியல்லா :oops: :oops:

நான் எல்லோரையும் சொல்லவில்லை ஐிவா. பெரும்பாலனோர் அப்படித்தான் என்று தான் சொல்ல வந்தேன்.
அது சரி அதை சொல்லிட்டு நீங்கள் ஏன் வெட்கப்படுகிறீர்கள் :roll:

Reply
#12
anuraj.nl Wrote:அன்னை மண்ணிலும் அகதியடா
அன்னியன் மண்ணிலும் அகதியடா
ஆடம்பரமாய் நாம் இங்கு வாழ்ந்தாலும்
அன்னை மண்விட்டு வந்தால்-இங்கு
அணைவருமே அகதிதாண்டா.

இதனை சிலர் உணர மறுக்கின்றனரே
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#13
-1- படிப்பு தொழில்ரீதியான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வந்தவர்கள்.
-2- நாட்டின் நெருக்கடி நிலமையால் வேறு வழிகள் இல்லாமல் பாரிய ஆபத்துக்களை எதிர்கொண்டு மாற்றுவழிகளில் வந்தவர்கள்.
-3- ஏற்கனவே மேற்கூறிய ஏதே ஒரு வழியில் வந்தவர்களின் பொன்சர் உதவியில் வந்தவர்கள் மூன்றாம் தரப்பு.

புலம் பெயர்ந்த சமூகத்தில் 1 ஆவது முறையில் வந்தவர்கள் இல்லை என்ற எண்ணவேட்டத்தில் கதைப்பது தவறு. முக்கியமாக பிரத்தானியா அவுஸ்ரேலியா நியுசிலாந்து அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் இந்த முறையில் பலர் சென்றிருக்கிறார்கள்.

2 ஆம் தரப்பில் உள்ளவர்களை தவறாக விமர்சிப்பவர்கள் கீழ்தரமாக பார்ப்பவர்கள் தங்களது அறிவியல் வரட்டுத்தனத்தை காட்டிக் கொள்கிறார்கள்.

எனக்கு தெரிந்த பலர் உயர்கல்வி மற்றும் தொழில்ரீதியில் மேற்குலகத்திற்கு வரவதற்குரிய வசதி உள்ளவர்கள், உரிய வழியில் முயற்சி செய்து நிராகரிக்கப்பட்ட பின்னர் மாற்று வழிகளின் மூலம் வந்திருக்கிறார்கள்.

திருமணம் முடித்து பொன்சரில் வர சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் மாற்றுவழிகளை தேர்ந்தெடுத்தவர்களையும் அறிவேன். எனவே பொன்சரில் வந்தவர்களில் பலர் அந்த சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள்?

1 ஆவது முறையில் வந்தவர் பெருமைப்பட்டால் அவரது சொந்த கல்வி தொழில் சார்ந்த திறமையில் வந்தவர் என்றரீதியில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 3 ஆம் முறையில் வந்தவர்களள் கொக்கரிப்பது தான் மிகவும் நகைப்புக்கிடமானது.
Reply
#14
<b>டம்பீமார் நமக்கு ஸ்பொன்சர் பண்ணியவர் இந்த நாட்டு ஐனாதிபதி</b>

<b>ஓய் வேலையைப் பாருங்கப்பாாாாா</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img503.imageshack.us/img503/4743/3612111ua.gif' border='0' alt='user posted image'>
[b]
Reply
#15
சின்னப்பு சின்னதா ஒரு டவுட்டு, உங்கடை நாட்டிலை சனாதிபதி ஆட்சியோ பிரதமமந்திர ஆட்சியோ நடக்குது?
Reply
#16
ஊரில் சாதி முறை இருந்தது (தற்போது அழிந்துகொண்டு போகின்றது). இங்கு புதிய சாதி முறைகளை அறிமுகப் படுத்திவிட்டால் போயிற்று.
1. ஸ்ருடன்ற் விசாக்காறர்
2. ஸ்பொன்சர்காறர்
3. அகதிக்காறர்
அ) நிரந்தர வதிவுடமை பெற்றோர்
ஆ) இன்னும் அகதியாக இருப்போர்
இ) நிராகரிக்கப்பட்டோர்

தரப்பட்ட வரிசையின்படி இறங்குவரிசைப் படுத்திக் கொள்ளலாம்.
<b> . .</b>
Reply
#17
இதிலை பகிடி என்னவென்றால்.. படிக்கவெண்டு ஸ்பொன்சரிலை வந்த 83க்கு முன் லண்டன் வந்தாக்காள்...அகதியாவந்தவனுக்கு உள் நாட்டவனுக்குரிய சலுகையை கண்ட லண்டன் ஸடண்ட் ஆக்கள் அகதிகளாய் பேசாமால் பறையாமால் மாறினஆக்கள் கனபோர்...பேந்துமோனை இதிலை அகதி குடியேறியாஎன்ற கதை வோறை..எல்லாரும் பேணி அடுக்கினவை தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#18
என்னை பொருத்த மட்டில் அகதி என்று சொல்பவன் மட்டுமே தாய் நாட்டை பற்றி யோசக்கிறான் :roll: :roll: :roll:
!!!
Reply
#19
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->சின்னப்பு சின்னதா ஒரு டவுட்டு, உங்கடை நாட்டிலை சனாதிபதி ஆட்சியோ பிரதமமந்திர ஆட்சியோ நடக்குது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஓய் உமக்கு 1000 டவுட்டு வரும் இருக்கட்டும் சுவிசில நடக்கிறது 7 அமைச்சர்களின் ஆட்சி ராஐா அதாவது
Bundesrat

http://www.admin.ch

ஆணால் குறுக்கு மக்களை கேக்காமல் ம்கூம் ஒரு விடயமும் செய்யமாட்டினம் ஒரு சின்ன குச்சி ஒழுங்கை போடுறது எண்டாலும் ஒரு தேர்தல் வச்சுத்தான் போடுவினம் ராசா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)