Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஆச்சிக்கு நிச்சயமாக தமிழர் அனைவரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். தன் செய்கையாலே யார் சமாதான விரோதி என்பதனை நிருபீத்து வி;ட்டதற்கு. சமாதான புறா வேடம் கலைந்தும் சில நாடுகள் வேறேதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களுக்கும் புரிந்திருக்கும். ஆச்சியின் தகிடுதத்தங்கள்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<b><span style='font-size:25pt;line-height:100%'>சரிதானா சந்திரிகா?</b></span>
சி. மகேந்திரன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர்)
<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p89.jpg' border='0' alt='user posted image'>
ஒருபுறம், புலிகளின் சமரசத் திட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்ட அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்ஷ#டன் பேச்சு நடத்துகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.. ஆனால், மறுபுறம் இலங்கையின் முக்கிய மூன்று துறை மந்திரிகளை டிஸ்மிஸ் செய்து, அந்த துறையின் அதிகாரத்தையும் கையிலெடுத்ததோடு பாராளுமன்றத்தையும் இரண்டுவார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் இலங்கை அதிபர் சந்திரிகா... அரசியல் பதற்றம் பரவி இலங்கை இக்கட்டில் இருக்கும் இந்த நிலையில், சமரசத் திட்டம் சாத்தியம்தானா என்ற கேள்வி பூதாகரமாகியிருக்கிறது. இந்நிலையில், இலங்கையிலிருந்து இரண்டு செய்திகள் வந்திருக்கின்றன.
இலங்கை அரசாங்கத்துக்குத் தனது புதிய சமரசத் திட்டத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்துவிட்டார் என்பது வரவேற்கத்தக்க ஒன்று. தமிழர்கள், சமஉரிமை பெற்ற குடிமக்களாகத் தங்கள் அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்ள இந்தப் புதிய திட்டம் முயற்சிக்கிறது.
ஆனால், 'நார்வே குழுவினரின் சமரச யோசனைகளை ஏற்கவேண்டாம்' என்று அதிபர் சந்திரிகா அறிவிப்பு செய்துள்ளார். இது, இலங்கைத் தமிழனுக்கு நிரந்தர மகிழ்ச்சியைத் தரக்கூடியதல்ல. தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு விடியல் வந்துவிடக்கூடாது என்பதில் சந்திரிகா உறுதியாக இருப்பதைப்போல் தெரிகிறது.
இதுவரையில் விடுதலைப்புலிகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவையும் கடும் வார்த்தைகளால் குற்றம்சாட்டி வந்த ஜனாதிபதி சந்திரிகா, எந்த லாபமும் எதிர்பார்க்காமல் சமாதானம் பேச வந்திருக்கும் நார்வே குழுவை யும் இப்போது விமரிசிக்கத் தொடங்கியிருக் கிறார்.
இலங்கையின் ராணுவம், கப்பல், விமானத் தளபதிகளுக்கு, 'நார்வே சமரசக் குழுவின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டாம்' என்று உத்தரவிட்ட சந்திரிகா, நார்வே பிரதமர் கஜேல் மக்னேவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், 'தூதுக்குழுத் தலைவர் டெல்லேப் சென் நீக்கப்பட வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
கடந்த இருபது மாத காலமாக இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு, அமைதி முயற்சியாக ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தி முடித் திருக்கும் நிலையில், இதற்குக் காரணமான நல்லெண்ண சக்திகள்மீது குற்றச்சாட்டை வீசுவது ஒரு ஜனாதிபதிக்கு விவேகமானதல்ல. இலங்கையில் தான் இழந்த செல்வாக்கை மீண்டும் கைப்பற்ற, சிங்கள இனவெறியைத் தூண்டிவிடும் வேலையில் சந்திரிகா இறங்கி இருக்கிறார்.
இதே நிலையில், நார்வே நாட்டுச் சமாதான முயற்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார். கடந்த காலத்தில் இவரது கட்சி சிங்களப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற, தமிழர்களுக்குச் செய்த அநீதி, வார்த்தைகளில் விவரிக் கக்கூடியதல்ல. ஆனாலும், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த ரணில், அமைதி முயற்சியில் அக்கறை காட்டி, போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து நீட்டிக்க வைத்துக்கொண்டிருப்பதே பாராட்டக் கூடிய ஒன்று.
ஆயுதங்களின்மீது முழு நம்பிக்கை கொண்ட விடுதலைப்புலிகள் குழு, கடந்த ஒரு மாதமாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் போய்விட்டுத் திரும்பியிருக்கிறது. 'இலங்கையிலிருந்து பிரிந்து தனித் தமிழீழம் அமைப்பது தான் இறுதித் தீர்வு' என்று விடாப் பிடியாகச் சொல்லி வந்தவர்களுக்கு, நீண்ட போராட்ட வாழ்க்கை சிறந்த அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கிறது!
அதனால்தான் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு, வடகிழக்கு மாகாணத்தில் நிர்வாக கவுன்சில் அமைக்க புலிகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்திடம் புலிகள் கொடுத்திருக்கும் புதிய சமரசத் திட்டம், இலங்கைத் தமிழர் வாழ்க்கையில் புதிய அத்தியாயத் துக்கான ஆரம்பம்!
வடகிழக்கு மாகாண நிர்வாக கவுன்சிலில் நூறு பேர் இருப்பார்கள். இதில் இருபது பேர் கொண்ட கவுன்சில்தான் மந்திரிசபையாக இருக்கும். இதிலும் பத்துப் பேர் வடக்கு மாகாணத்துக்காரர்களாகவும் பத்துப் பேர் கிழக்கு மாகாணத்துக் காரர்களாகவும் இருப்பார்கள் என்றெல்லாம் புலிகள் தங்கள் திட்டத்தில் கூறியிருக்கிறார்கள்.
இந்த மந்திரிசபையில் இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர் கள், முஸ்லிம்கள், ஏன்... சிங்களர் உட்பட இடம் பெறப்போகிறார்கள் என்ற செய்தி, உலகம் முழுவதும் அகதிகளாக லட்சக்கணக்கில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இனிப்புச் செய்தி.
'ஒற்றையாட்சியைத் திருத்தி, கூட்டாட்சியாக மாற்றுவதில்தான் இலங்கை இனப்பிரச்னையின் தீர்வு அடங்கியுள்ளது' என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இன்று அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை நிலை சரியானது என்பதை நிரூபிக்கின்றன.
'இன்னொரு போரை நாங்கள் எவரும் விரும்பவில்லை' என்று தமிழர் களும் சிங்களர்களும் சொல்லிவிட் டார்கள். வன்முறை தவிர்த்து வாழ்க்கை தேடும் கட்டத்துக்குப் புலிகளும் ரணிலும் வந்ததற்குக் காரணம் இதுதான்.
ஐந்தாண்டுகளுக்குமுன் தேர்தலில் வெற்றி பெற்று தமிழர் பகுதிக்கு சந்திரிகா வந்தபோது வெள்ளைக் கொடி பிடித்து தமிழர்கள் வரவேற்றார்கள். அந்தக் கொடி பிடித்த ஈழத்தமிழர்கள் அமைதியை பரிசாகத் தரும்படி கேட்கிறார்கள்.
ஆனால், சந்திரிகா மேலும் மேலும் தனது முடிவுகளை கடுமையாக்கிக் கொண்டே போவதன் விளைவாக ஒட்டுமொத்த இலங்கை யும் அமைதி இழந்து தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
இது சரிதானா சந்திரிகா?
<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p139b.gif' border='0' alt='user posted image'>
''இந்த அம்மா செஞ்சது கொஞ்சம்கூட சரியில்லை.
என்னதான் பிரதமரோட சண்டை சச்சரவு இருந்தாலும்,
அவர்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம சர்வாதிகாரத்தனமா நடந்துக்கிறது தப்பு!''
''என்ன சொல்றே..
ஜெயலலிதாவுக்கும், வாஜ்பாய்க்கும் இப்ப என்ன தகராறு?''
''அட, நான் சொன்னது சந்திரிகா - ரணில் பத்தி..''
<span style='font-size:25pt;line-height:100%'>அத சொல்லு மொதல்ல..</span>
நன்றி: ஆனந்தவிகடன்
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
காலம் கடந்தாவது இவர்கள் ஆச்சியின் வெள்ளைப் புறா வேடங்ளைப் புரிந்து கொள்கின்றார்கள்.அதற்காவது அவருக்கு நன்றி சொல்வோம். அவர்கள் நாட்டு அம்மணியும் புரிந்து கொண்டால்; மிகவும் சந்தோஷப்படுவோம். உதவிகளுக்காக அல்ல உபத்திரவம் கொடுக்கமல் இருப்பதற்கு.
அன்புடன்
சீலன்
seelan