11-12-2003, 05:09 PM
<b>இரசிக்க - சில நிகழ்வுகள்</b>
<b>வழிவிட்டார்
---------------</b>
ஒரு நாள் ஆங்கில நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட்சா, குறுகலான பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார். பெர்னாட்சாவைப் பிடிக்காத ஒருவர் எதிரில் வந்து கொண்டிருந்தார்.
யார், யாருக்கு வழிவிடுவது என்கிற பிரச்சினை எழுந்தது. எதிரில் வந்தவர், "முட்டாள்களுக்கு நான் வழிவிட்டு ஒதுங்குவதில்லை" என்றார் காரமாக.
"நான் ஒதுங்குவது உண்டு" எனச் சொல்லி பெர்னாட்சா வழிவிட்டு விலகி நின்றார்.
<b>முழு ரூபாயும் போயிற்று
-------------------------------</b>
ஒரு தத்துவ ஞானி ஆற்றைக் கடப்பதற்காகப் படகில் ஏறினார். படகுக்காரனைப் பார்த்து, "உனக்குப் பூகோளம் தெரீயுமா?" என்று கேட்டார். "எனக்குப் படகு ஓட்டத்தான் தெரியும் - பூகோளம் தெரியாது" என்றான் படகுக்காரன்.
வாழ்க்கை ஒரு ரூபாய் என்றால், அதில் கால் ரூபாயை நீ இழந்துவிட்டதாக அர்த்தம் என்றார் தத்துவ ஞானி.
சற்றுத் துரம் போனவுடன், "சரித்திரம் தெரியுமா" என்று கேட்டார். "தெரியாது" என்றான் படகுக்காரன். "அரை ரூபாயை இழந்துவிட்டாய்" என்றார் அவர்.
பிறகு அவனைப் பார்த்து "விஞ்ஞானம் தெரியுமா?" எனக் கேட்டார். "அதெல்லாம் தெரியாது, படகு ஓட்ட மட்டும் தான் தெரியும்" என்றான் படகுக்காரன். "முக்கால் ரூபாயை இழந்துவிட்டாய்" என்றார் அவர்.
அப்பொழுது திடடீரென்று ஆற்றில் சுழல் ஏற்பட்டு படகு கவிழும் நிலை ஏற்பட்டது.. "சாமி, உங்களுக்கு நீந்தத் தெரியுமா?" என்று படகுக்காரன் கேட்டான். "தெரியாது" என்றார் அவர்.
"இப்பொழுது முழு ரூபாயையும் அல்லவா நீங்கள் இழக்கப் போகிறீர்கள்", எனக் கூறிய படகுக்காரன் நீரில் குதித்து கரை சேர்ந்தான்.
<b>கனவில் வந்த கடவுள்
---------------------------</b>
இரண்டாவது உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் சர்ச்சில், அமெரிக்க சனாதிபதி ரூஸ்வெல்ட், ரஸ்யத் தலைவர் ஸ்ராலின் ஆகிய மூவரும் ஓரிடத்தில் சந்தித்து நேச நாடுகள் பெற்ற வெற்றியைக் குறித்துப் பேசிக் கொண்டார்கள்.
"என்னுடைய கனவில் நேற்று கடவுள் வந்து போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றிக்கு உன்னுடைய இரா தந்திரம் தான் காரணம்" என்று சொன்னதாகச் சர்ச்சில் குறிப்பிட்டார்.
உடனே ரூஸ்வெல்ட் குறுக்கிட்டு "அப்படியெல்லாம் இருக்க முடியாது - ஏனெனில், நேற்றுத்தனர் கடவுள் என்னுடைய கனவில் வந்து அமெரிக்காவிலிருந்து நீ கொடுத்து உதவிய போர்க்கருவிதான் வெற்றிக்குக் காரணம் என்று என்னிடம் சொன்னார்" என்று குறிப்பிட்டார்.
இரண்டு பேர் கூற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ராலின் "நீங்கள் இருவர் சொல்வதும் பொய் - நான் உங்கள் யாருடைய கனவிலும் வரவில்லையே" என்றார்.
நன்றி: வளர்நிலா (சிறுவர்மலர்) - புரட்டாதி 1995 - நோர்வே