Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முதல் செயற்கை உயிரி....!
#1
சில வாரங்களை மட்டுமே செலவு செய்து முற்றிலும் ஆய்வுசாலையில் பிறப்பிக்கபட்ட டி என் ஏ யைக் கொண்டு எளிமையான வைரஸ் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.....ஆனால் உருவாக்கப்பட்ட வைரஸ் ஏற்கனவே உலகில் பக்றீரியாவில் தொற்றி வாழும் வைரசின் பிறப்புரிமைத் தகவல்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது....!

இதே உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் மாசடைதலைத்தடுக்கும் வகையிலான புதிய உயிரிகளை உருவாக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்....!

http://story.news.yahoo.com/news?tmpl=stor.../artificial_bug
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
செயற்கை வைரஸ்
இனப்பெருக்கம் செய்துகொள்ளும் செயற்கை வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Institute of Biological Enegry Alternatives என்ற தனியார் ஆராய்ச்சிக் கூடத்தில் இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கூடத்தின் தலைவர் டாக்டர். கிரெய்க் வெண்டர் மரபியல் ஆராய்ச்சிகள் சம்பந்தமான பல்வேறு சர்ச்சைகளில் இடம் பெற்றவர். (அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற The Human Genome Project ஐ எதிர்த்து இவர் நிறுவனம் தனியாக மனிதனின் மரபியல் கூறுகளை வரைபடமாக்க முயன்றது).

இந்த செயற்கை வைரஸ் பாக்டீரியாக்களைப் பாதிக்கும் பாக்டீரியோபேஜ் என்ற வகையிலானது. இது பாக்டீரியாக்களிடம் ஒட்டி அவற்றைப் பாதித்துத் தம்மைப் பெருக்கிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் சக்தித் துறையின் மானிய உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சின் நோக்கம் புதிய வகையான நுண்ணுயிரிகளைக் கண்டுபிடித்து அதன்மூலம் காற்றில் கார்பன் வளிக்களின் அளவைக் கட்டுப்படுத்துவது. வெண்டரின் சித்தாந்தத்தில் இந்த வைரஸ்கள் மாசுக்களை வெளியிடும் (உதாரணமாக கார்களின் புகைபோக்கிகள்) கருவிகளில் உட்கார்ந்து கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை தின்று சீரணித்து மாசுக்களைக் கட்டுப்படுத்த உதவப் போகின்றன.

ஆனால் அதனுடன் நின்று விடுமா என்பதுதான் கேள்வி. எந்த ஒரு இனப்பெருக்கம் செய்து கொள்ளும் உயிரியும் பெருகும்போது அதன் மரபுக்கூறுகளில் பிழை ஏற்படுவது இயற்கை, இது போன்ற பிழைகளில் சிலசமயம் அதி சக்திவாய்ந்த சந்ததி உருவாக்கப்படும். அதன் தன்மைகள் எதிரிபார்த்ததைவிட முற்றிலும் வேறு விதமாக இருக்கலாம். 'அபானவாயு ஜீர்னோ பவந்து; சர்வ ஜனோ சுகினோ பவந்து' என்று சமர்த்தாக இல்லாமல் இது கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக மாறலாம்.

2002ல் போலியோ வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது . ஆனால் கொஞ்சம் நாட்கள் கழித்து அப்படி செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வைரஸில் சில குறைகள் இருக்கின்றன என்றும் அவை அழிந்து போகின்றன, என்றும் சொல்லிவிட்டார்கள். சிக்கல்களால் அழிந்துபோனால் பரவாயில்லை; ஆனால் விஸ்வரூபம் எடுத்தால்தான் சிக்கல்.

Thanks: http://www.tamillinux.org/venkat/myblog/ar...00099.html#more
[i][b]
!
Reply
#3
சாமிக்கு நன்றி எமது செய்தியை மேலும் விரிவாக கொடுத்ததற்கு.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)