Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
#1
thatstamil
நவம்பர் 19, 2003

2 வாரம் முடக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது

கொழும்பு:

இரு வாரகால முடக்கத்திற்குப்பின், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.


அதிபர் சந்திரிகா மூன்று மந்திரிகளின் பதவியைப் பறித்ததோடு, கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தையும் இரு வாரங்களுக்கு முடக்கி வைத்தார். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தடை ஏற்பட்டது.

இந் நிலையில் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் இருமுறை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந் நிலையில் இரு வார கால முடக்கம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று காலை நாடாளுமன்றம் கூடியது.

செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரைரா,

நாடாளுமன்றத்தை முடக்கி வைத்த சந்திரிகாவின் உத்தரவு சட்ட விரோதமானது. நாடாளுமன்றம் சம்பந்தமான முடிவுகளை பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர்தான் அதிபர் அறிவிக்கவேண்டும். ஆனால், தன்னிச்சையாக அதிபர் இந்த முடிவை வெளியிட்டார்.

இதுபோன்று சந்திரிகா வருங்காலத்தில் செயல்பட மாட்டார் என நம்புகிறேன். அவ்வாறு செயல்பட்டால், நாடாளுமன்றம் தானாகவே கூடி, செயல்படும் என்றார்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)