12-07-2003, 09:11 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்
|
இந்திய ஊடகங்கள்...!
|
|
12-07-2003, 09:11 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்
12-07-2003, 09:22 PM
இங்கு கதைக்கப்படுகின்ற விடயம் எதுவென்பது புரிகிறதா அஜீவன் அவர்களே ? எங்கள் தொலைக்காட்சியின் இருப்புப் பற்றியே இங்கு பேசப்படுகிறது.
AJeevan Wrote:புலம் பெயர் கலைஞர்கள் பங்கு கொண்ட சில குறும்படங்கள் (குழந்தைகள்) இணையத்தில் வந்த போது ஒரு வார்த்தை கூட பேசாதவர்கள், <!--emo& Quote:இப்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமான வேற்று தயாரிப்புகளோடு வாழும் தொலைக்காட்சிகளுக்காக பேச வந்தது வியப்பாக இருக்கிறது?பலர் தங்கள் சொந்தப்பணத்தில் அதாவது குழந்தையின் பால்மாவுக்கான பணத்தைக்கூட ஊடக வளர்ச்சிக்காக் கொடுத்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் வாய்பலம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை வெளியில் சொல்ல முடிகிறது. [quote]நான் ஒரு சாராருக்காக வேலை செய்ய விரும்புவதில்லை. நான் ஒரு கலைஞன். கலைஞன் அனைவருக்கும் பொதுவானவன். நான் அரசியல்வாதியல்ல.என் நண்பர்கள் எல்லா ஊடகங்களிலும் இருக்கிறார்கள்.நான் அனைத்து ஊடகங்களுக்கும் செல்வதுண்டு.அவர்களுக்கு என்னைத் தெரியும்.அதனால் பலருக்கு நான் பிடிவாதக் காரணாகத் தெரிவதுண்டு.அது பிடிவாதமல்ல, எனது கொள்கை. உங்கள் கொள்கையை இங்கு விட்டுத்தரச்சொல்லியோ விற்கச்சொல்லியோ வற்புறுத்தவில்லை. ஒரு கலைஞனின் கடமையாக இப்படியுமொரு விடயம் இருக்கிறது. அதாவது தான் சார்ந்த சமூகத்தின் நன்மை தீமைகளில் பங்கெடுப்பதும் சிலவேளை தடம்மாறிவிடும் அச்சமூகத்திற்கு தனது தனி;ப்பட்ட கோபங்களைத் தள்ளிவைத்து தகுந்த நேரத்தில் கைகொடுப்பதுமேயாம். ஆனால் நான் அது செய்தேன் ஏன் அதை யாரும் கவனிக்கவில்லை. நான் இது செய்தேன் என்னையேன் கவனிக்கவில்லையென வாதிட்டுக்கொள்வது எந்தவிதமான பலனையும் தந்துவிடப்போவதில்லை.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
12-07-2003, 09:49 PM
ganesh Wrote:ஆழ்ந்த அனுதாபங்கள் பாவம் நல்லா கஸ்டப்படுறீங்கள். <img src='http://skins.hotbar.com/skins/mailskins/em/033102/033102bebe_1_prv.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
12-08-2003, 01:57 PM
வணக்கம்.
இந்த இந்திய மற்றும் புலம் பெயர் தொலைக்காட்சிகள் பற்றிய விமர்சனங்களை அனைவரும் வைத்தோம். நமது தொலைகாட்சிகளுக்கு மன்னிடம் கொடுக்க வேண்டும், இந்திய தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்பினோம. அனால் மற்றைய நேயர்களின் கருத்தக்களை உள்வாங்கிய போது எனக்கு மனச்சாட்சி ஏனோ உறுத்த ஆரம்பித்தது. அதனால் இந்த வார இறுதியை இந்த தொலைக்காட்சிகள் அனைத்தiயும் பார்ப்பது என முடிவுசெய்தேன். சன் தொலைக்காட்சி, ரீரீஎன், தீபம், வெக்றோன். இதற்காக ஒரு சந்தா அட்டையை நண்பரிடம் கடன் வாங்கவும் நேர்ந்தது. அவருக்க நன்றி! சரி விடயத்திற்கு வருவம். நமது தொலைக்காட்சி என்ற வெறி என் கண்களை எவ்வளவு து}ரம் பாதித்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. காரணம். நமது தொலைக்கட்சிகளில் வந்த சில நிகழ்ச்சிகளை நான் பாரக்க பட்ட வேதனை அப்பா சொல்ல முடியாது. கிட்டாதட்ட 3 பியர் கான்களை மடக்கு மடக்கு என்று குடிக்க வைத்து விட்டார்கள். (நல்லவேளை எனது குடும்பம் முழுவதையும் வார இறுதிக்கு நண்பர்கள் வீட்டிற்கு அனுப்பி விட்டேன். ஒரு தொலைக்காடசியில் ஒருவர் சோதிடம் சொல்கிறார். சோதிடம் செய்தவர் முகம் கூட ஒழுங்கா கழுவவில்லை போலை, அல்லது என்னை மாதிரி இரவு நல்ல தண்ணியோ தெரியாது. விடியதா முகம், இவர் மக்களிற்கு விடிவை சொல்கிறார் சோதிடமாக! இவை இன்னும் எவ்வளவு நாளைக்குதான் எங்களை பிற்போக் சமூகமாக வைத்திருக்கப்போகினமோ தெரியாது. ஆனால் நம்மட சனங்கள் சும்மாவே அவையின்றை காட்டிலை காசு செலவழித்து இந்த து}ங்கு மூஞ்சியிடம் சாத்திரம் கேட்குதுகள். காலை 9 மணிக்கே முதலாவது பியர்கானை உடைக்க வைத்த பெருமை இந்த தொலைக்காட்சிக்கு சேரும். அடுத்தது இந்த சினிமாப்பட்டை (இதை வழமையா படங்கள் பாரக்கேக்கை ஓட விடுவினம்) தொலைபேசியல் வந்து அறிவிப்பாளரிடம் கேட்கும் நிகழ்ச்சிகள். இதில் ஒரு அறிவிப்பாளர் சுகம் எல்லாம் நல்லா விசாரிக்கிறார், ஆனால் ஆள் உந்த நிகழ்சிக்கு பொருத்தமானவாரா என்பது கேள்விக் குறி? அவருக்கு சினிமா பற்றிய அறிவே கிடையது, அதுவும் இன்றைய சினமா பற்றி, பாலும் பழமும் காலப் பேர்வழி சும்மா வந்தவையை விசாரிச்சிப்போட்டு பாட்டு போடினம், இதே மாதிரி நிகழ்சி தென்னிந்திய தொலைக்காடசியிலும் பார்த்தேன் அலுப்புத் தட்டவில்லை, ஓரளவு சுவாரஸ்யமாகவும் இருந்தது, அவையும் இவை டீபாடுற பாட்டைத்தான் போடினம். அனால் நம்மடையிலை ஏன் அலுப்படிக்குது? விசாரிச்சுப் பார்த்ததிலை தென்னிந்திய தொலைக்காட்சியிலை வாறவை பயிற்சி எடுத்து தான் வருகினம். நம்மடை தொலைக்காட்சியிலை சிலதுக்கு வாறவைக்கு குரல் நல்லாயிருந்தா போதுமாம். சிலதுக்கு வடிவாயிருக்கவேண்டுமாம், சிலது ஓசி அறிவிப்பாளர்களை நாடுது, இன்னும் சிலத றெக்கமண்டேசன் வேணும். இந்த தொலைக்கட்சி அறிவிப்புத்துறை பற்றிய பயிற்சியோ அல்லது ஒரு குறைந்த பட்சம் ஒரு கலந்துரையாடலைக் கூட நடாத்த இந்த தொலைக்கட்சிகள் அக்கறை காட்டுவதில்லை! அப்ப தரம் எப்படி இருக்கும். மனதுக்கு பிடித்த நிகழ்ச்சிகள் நமது தொலைக்காட்சியில் இல்லாமல் இல்லை. ஞாயிறு மாலை நகைச்வை நிகழ்ச்சிகள் நன்றாகவே இருந்தது, ஆனால் யானைப்பசிக்கு ஏதோ கோர்ன்பிளேக்ஸ் (இது நம்மடை தொலைக்காட்சி ஸ்ரைல்) போட்டது பொல் உள்ளது. இன்னும் வரும்!
12-08-2003, 03:33 PM
இரவு நேரம்- சினிமாப்படத்திற்கு குறைவில்லை! பழைய புதிய படங்கள் எண்டு நல்லாதான் இருக்குது. வார இருதி நாடகள்pல் நம்மவர் தொலைக்கட்சிகளில் நமது ஊர் நிகழ்ச்சிகள் வந்து போகிறது. இதில் ஒரு தொலைக்காட்சி நமது நிகழ்ச்சிகளை போடவேணும் எண்டதிலை வலு அக்கறையாக இருக்கினம். நல்லது, ஆனால் அது அனைத்து நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் ஒரு 20 விதம் தான் உள்ளது. அனால் அதில் முக்கியமான ஒரு விடயம் இந்த புலம் பெயர் சமூகத்தின் பிரச்சனைகளை மையமாக வைத்து நடைபெறும் நிகழ்ச்சிகள் வலு குறைவு! மொத்தத்தில் தென்னிந்திய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் பெரிய வித்தியாசம் இல்லை. ஏதோ சாட்டுக்கு கொடுப்பது போல தானே இருக்கு! தாயக நிகழ்ச்சிகளை பாரக்கும் சந்தோசத்தை ஒரு தொலைக்காட்சி அதிகவில் தந்தாலும் புலம் பெயர் மக்களின் நிகழ்ச்சிகள் வீதம் அதிலும் கூறைவாகவே உள்ளது. ஒரு தொலைக்காட்சி நம்மடை பிரச்சனைகளை கதைக்கினம். அவையின்றை காட்டை வாங்கி தான் அதுவும் கதைக்கலாம். நல்லது நல்ல வியாபார தந்திரம். ஆனால் எல்லாரினதும் கருத்தை அது பிரதிபலிக்க வைக்குமா? கோயிலரகளை பற்றி விளாசினார்கள், ஆனால் அந்த நிகழ்ச்சியை நடாத்துபவர் ஏதோ சண்டியன் மாதிரி நிண்டது இன்னமும் என் கண்களை உறுத்துது. சிரிச்சா ஏதோ குறைஞ்சுபோவினம் எண்ட மாதிரி இருந்தது. அடுத்த பியரர் கான் மடக் மடக் மடக்! சனலை மாத்தினால் அங்காலை பழைய படம். சனி, ஞாயிறு கிழமை வடிவாக ஓய்வெடுக்கிற நாளோ என்னவோ உதுகளை பார்த்த அசதியில் பகலே நல்ல நித்திரை. செய்திகள் பற்றி பாரப்பம். தென்னிந்திய தொலைக்கட்சியில் ஒரு அம்மா இழுத்து செய்தி வாசிக்கிறதை விவேக்கெ நக்கலடித்திருக்கிhர். அதைநேரில் கேட்ட போது செய்தியை விட அது நல்ல நகைச்சுவையாக இருந்தது. நம்மவர் தொலைக்கட்சிகள் அனைத்திலும் அதாவது அனைத்திலும் செய்திகள் கடுமை, ஆக்களும் கடுமைஈ அதாவது செய்தி வாசிப்பவர்கள் - இதற்கு முக்கிய காரணம் இது பற்றிய பயிற்சி இன்மையே! பிரபலமான செய்தி ஸ்தபானங்கள் தமது செய்திகளை வாசிப்பவர்களுக்கு கடும் பயிற்சி கொடுப்பார்கள் - குறிப்பாக கண் தொடர்பாடல், அங்க அசைவுகள் உச்சரிப்பு. அது மட்மல்ல உலக செய்திகள் பற்றிய அறிவை வளர்க்கும் வாசிப்புகள், கலந்துரையாடல்கள் அடிக்கடி நடை பெறும். உதாரணத்திற்கு ஒரு செய்தியில் ஒரு புதிய அரசியல் வாதி பற்றிய செய்தி வருகிறது என்றால். செய்தி வாசிப்பவருக்கு அவர் பற்றிய முழு தகவல்களையும் கொடுப்பாரகள். முந்தி ஒருக்கா ஒரு வானொலியில் கோபி அனானை கோப்பி அண்ணான் என்று கூறினார்கள். நானும் அறிவு குiறுஞ்சனான் உதுகளை கேட்டுதான் அறிவு வளர்க்கிறனான். நானும் அவரை கோப்பி அண்ணான் என்றே அழைத்தேன். பிறகு ஒரு நாள் வேறை ஒரு வானொலியிலை கோவி அனான் என்டிச்சினம், கடைசியா கோப்பி அண்ணனை கோவில் அண்ணையாக மாத்த முந்தி அந்த அறிவிப்பாளரை மாத்தீட்டினம். நான் இதை சொல்ல வந்த காரணம், செய்திகளை வாசிப்பவர்களின் தரம் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை புரிய வைக்கவே. செய்திகளை சொல்பவர்கள் அதை மிக ஒழுங்காக பிழையின்றி சொல்ல வந்ததை அழகாக விழங்கிற மாதிரி சொல்ல வேண்டும். நமக்கு ஊடகங்களாக இருந்து அறிவுப்பசியை தீர்ப்பவர்களே பட்டினி கிடந்தவர்கள் எண்டால் எங்கடை நிலைமை? நல்லா வாசிக்கிறவை வேணுமெண்டால், கந்த புராணம், பைபிள், குரான் இது களை வாசிக்கலாம். ஆனால் செய்தி வாசிப்பவர்கள் வாசிக்கும் திறமை மட்டும் உள்ளவர்களாக இருக்க கூடாது, அந்த துறை பற்றிய அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் பெயரை வாசிக்கும் போது குறைந்த பட்சம் அந்த நா பற்றிய ஒரு பொது அறிவாவது இருக்க வேண்டும். ஒருமுறை செய்தி வாசிக்கும் ஒருவரை நான் சந்தித்து உரையாடும் போது பெருவை பற்றி ஏதோ கதை வந்து விட்டது. அந்த நபருக்கு பெரு எந்த கண்டத்தில் இருக்கெண்டே தெரியாது. இதைபற்றி அவரும் அவ்வளவு அலட்டிக்கொள்ளவில்லை. நாம் முக்கியமாக இந்த ஊடகங்களை பார்ப்பது பொழுது போக்குக்காக மட்டுமல்ல உலக நடப்பு ஊர் நடப்பு பற்றி அறியவே, ஆனால் அதை செய்திகளாக நமக்கு வழங்கும் அந்த அறிவிப்பாளர்களே இதில் மந்தமாக இருந்தால் நமது கதி? ஒவ்வரு வானொலி தொலைக்காட்சியிலும் ஒரு புத்திஜீவி இருப்பார். அவர்தான் எல்லாவற்றிற்கும் குரு, செய்திகள் சேகரிப்பது முதல் தயாரிப்பது வரை அவரே! பாவம் அவருக்கு நிச்சியம் இது பற்றி விளங்கப்படுத்த நேரமிருக்காது, ஆனால் அதைப்பற்றி அறியும் நோக்கம் கூட இந்த செய்தி வாசிப்பவர்கள் சிலருக்கு இல்லாமையே மிகவும் கலைக்கிடமானது. நம்மடை தொலைக்காட்சிகள் வளர இன்னும் எவ்வளது து}ரம் இருக்கு, ஆனால் அது வளருமா என்ற கேள்வியுடன் தான் நான் நேற்று தொலைக்காட்சி நிகழ்சிகளை பாரப்பதை முடித்தேன். கடைசில் ஏதோ ஒருவெறுமையுடன் அங்கில சனல் ஒன்றில் அருமையான ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை பார்த்து முடித்தேன். சரி நம்மாலை நல்லா செய்யத்தான் முடியேல்லை உதுகளை கொப்பியடிக்கவுமா முடியேல்லே? அதை தானே இந்த தென்னிந்திய தொலைக்காட்சிகளும் செய்யுது? ஆதங்கத்துடன் ….
12-08-2003, 09:35 PM
ஒரே ஒரு சந்தேகம் பியரையும் மடக் மடக் என்று குடித்து, நிகழ்ச்சிகளையும் எப்படி நிதானமாக பார்க்க முடிந்தது ? ? ?
12-09-2003, 10:44 AM
அதையும் குடிச்சிருக்காட்டி என்றை ரீவீயை எல்லே அடிச்சுடைச்சிருப்பன்! மற்றது நான் பெரும் குடிகாறன் பாருங்கோ, பியய் குடிச்சால்தான் கொஞ்சம் நிதானமா நிற்பன்.
12-09-2003, 10:53 AM
சண் hPவி சத்தமில்லாமல் காட்சி மட்டும் போகுது.தொழில் நுட்ப பிரச்சனை போலை
என்னெண்டு நம்பி காட்டை வாங்குறது?
12-09-2003, 11:18 AM
தொழில் நுட்ப பிரச்சனை இல்லை மட்டை வாங்கிபோட்டாதான் சத்தம் வரும்.
வாங்குங்கோ வாங்குங்கோ.. வாங்க வசதியில்லாட்டி பிள்ளையார் அப்பனை விழுந்து கும்பிடுங்கோ வாங்கிj;தருவார். எல்லாம் ஒரே Link தானே..
12-09-2003, 12:01 PM
படத்தை காட்டி மடக்கிற பிளான் யாழ் அண்ணை! ஓம் உதை தான் ஆசை காட்டி மோசம் செய்யிற பிளான் எண்டு சொல்லுறவை. சரி பிள்ளையார் கள்ள காட் ஏதும் விக்கிறாரே? மலிவெண்டால் வாங்கத்தான். ஏற்கனவே மாதம் 40 பவுண் கட்டிறன். ஒண்டு புலம்பெயர் தொலைக்காட்சிக்கு மற்றது விiளாயட்டு(Sky Sports)தொலைக்கட்சிக்கு, இனி வாங்கினால் பட்ஜட் உதைக்கும் அதுதான்!!!
12-09-2003, 12:16 PM
pepsi Wrote:தொழில் நுட்ப பிரச்சனை இல்லை மட்டை வாங்கிபோட்டாதான் சத்தம் வரும். அறிவுக் களஞ்சியம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
12-09-2003, 12:47 PM
யாழ் என்னை அதிகம் புகழாதிங்கோ.
நான் அறிவுக் களஞ்சியம். நீங்கள் உலகமகா அறிவுக் களஞ்சியம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
12-09-2003, 01:02 PM
பெப்சி.. எந்தப் பிள்ளையாரை விழுந்து கும்பிடணும்.. யாருக்கு முதுகு வளையுமோ தெரியாது..
.
12-10-2003, 10:20 AM
Dear Friends,
I will be back soon and write some details. Greetings from UK. AJeevan (sorry,I can not write Tamil in this computer)
12-11-2003, 03:35 AM
வணக்கம் அஜீவன் நலமா?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
12-11-2003, 05:58 AM
ஜீவன் எப்படி இலன்டன் குளிப்பு முளுக்கு காரனம் சுடுதன்னி வேறு பைப்பில் பச்சத்தன்னி வேறு பைப்பில்.
12-11-2003, 02:12 PM
நான் இருக்கிற இடத்தில பிரச்சனையேயில்லையப்பா, இல்லாட்டா இந்த குளிரில செத்தன்..................
வந்து புதினங்கள் எழுதுறன். |
|
« Next Oldest | Next Newest »
|