12-03-2003, 10:05 PM
தன்னைக் காண ஆயிரக்கணக்கில் மக்களை படையெடுக்க வைத்திருக்கும் பலஸ்தீனக் குழந்தை
<img src='http://www.yarl.com/forum/files/akla_klikk.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/alaj.jpg' border='0' alt='user posted image'>
இயேசுநாதர் பிறந்த புனித இடமாக கிறிஸ்தவர்களால் கருதப்படும் பெத்லகேமில் குழந்தையொன்றைப் பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
மேற்குக் கரையில் பலஸ்தீனியரின் குடியிருப்புப் பகுதியிலுள்ள அகதி முகாமில் பிறந்து 11 நாட்கள் ஆகியிருக்கும் இந்தப் பாலகனை 'அதிசயக் குழந்தை"யாகக் கருதி மக்கள் சென்று பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழந்தை கன்னத்தில் அடையாளத்துடன் (Birth Mark) பிறந்திருக்கிறது.
குழந்தையின் மாமனின் பெயரான அலா (Ala) என்ற நாமத்துடன் பிறப்படையாளம் காணப்படுகிறது. அராபியமொழி எழுத்துகளில் இந்தப் பெயர் உள்ளது. குழந்தையின் மாமனான அலா பலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸைச் சேர்ந்தவர். தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டார் என்று குற்றச்சாட்டுத் தெரிவித்து அலாவை இஸ்ரேலியப் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர்.
அலா என்ற பிறவி அடையாளக் குறியுடன் பிறந்திருக்கும் இந்தப் பாலகன் இஸ்ரேலுக்கு எதிராகவும், பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் கடவுளால் அனுப்பப்பட்டிருக்கும் 'நற்செய்தி" என குடும்பத்தவர்கள் கருதுகின்றனர். ஆனால், நத்தார் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் அப்பகுதிக் கிறிஸ்தவர்கள் மதரீதியான முக்கியத்துவம் எதுவும் இக் குழந்தை தொடர்பாக இல்லையென நிராகரிக்கின்றனர்.
இக்குழந்தையின் தன்மை குறித்து இஸ்ரேலிய இராணுவத்தினர் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் அதன் பேத்தியாரான ஆயிர்h அயாத் (58 வயது) தெரிவிக்கையில் தனது மகன் (Ala) இஸ்ரேலியப் படையினரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பில் இரகசியமாக இணைந்தார் என ராய்ட்டருக்குக் கூறினார்.
படையினர் எமது புதல்வர்களைக் கொல்ல முடியும். ஆனால், ஆன்மாவை அழிக்க முடியாது என்று கூறும் அந்தப் பெண், இஸ்ரேலியர்களும், பலஸ்தீனர்களும் சமாதானத்தை ஏற்படுத்தி தனது பேரனை வன்முறைச் சூழ்நிலைக்கப்பால் வாழ விடுவார்களென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ரமழான் மாதத்தின் 27 ஆவது தினத்தில் இக்குழந்தை பிறந்திருக்கிறது.
நன்றி- தினக்குரல்

[i][b]
!
!

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: