Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசியக்காரி... பகுதி-9
#1
[size=18]<b>வசியக்காரி... பகுதி-9

காயம் தந்த
கவிதையே...
நீ
நாகரீக ஆடையணிந்தால்
புதுக்கவிதை...!
சேலைகட்டிவந்தால்
மரபுக்கவிதை...!


பார்ப்பவர்
மனம்மயங்க
பால்குடம்கொண்ட
பருவமங்கை
நீ...!


காண்பவர்
கண்திகை;க
கண்விழிக்குள்
மின்மினி கொண்ட
மின்னல்மலர்
நீ...!


முற்பிறப்பில்
நான்
உன் செல்ல.....
நாய்குட்டியாகத்தான்
இருந்திருப்பேன்
அதனால்தானோ என்னமோ...
நீ
செல்லும்போதெல்லாம்
உன்
பின்னாலே ஓடிவர
துடிக்கிறது என்
மனசு...!


நாண்பர்கள்
என்னைப் பழிக்கிறார்கள்..!
இப்போதெல்லாம்
நான்
முன்புபோல் இல்லையாம்
நிறையவே மாறிவிட்டேனாம்...!
ஒரு
மலரின் சிரிப்பால்
மரித்துப்போனவன்
மீண்டும்
©மியல் வந்து பிறந்தேன்
என்பது
அவர்களுக்கு தெரியாது..!


மழைநீர் நதியில்
காகிதக்கப்பல் செய்து
விளையாடக் கற்றுத்தந்தேன்
நீ
என் கண்ணீர் நதியில்
விளையாடிக்கொண்டிருக்கிறாய்....!


காதல்
நீதிமன்றங்களில்
வழக்குகளும்
விசாரணைகளும்
விசித்திரமாக நடக்கும்...?!
முடிவில்
குற்றவாழி
தப்பித்துக்கொள்கிறாள்...!
நிரபராதி
தண்டிக்கப்படுகிறான்...!!!


மனசு படும்
மரண வேதனையை
இதயம்
சொல்லிக்கொண்டிருக்கிறது
கண்களிடம்...!

இதயம் வாங்கிய
அடியைப்பற்றி
கண்கள் சொல்லியழுகிறது
கன்னங்களிடம்...!


உன்னை
காதலிக்கத் தொடங்கியபின்பு
குளியலறைக்குக்கூட
காகிதமும் பேனாவும்
கொண்டுசெல்கிறேன்
அங்குதானே...
அதிகம் கவிதை
சுரக்கின்றது..!


சாப்பிடும் நேரத்தில்
சாப்பாட்டை
மிகவும் வெறுக்கிறேன்...!
உன்
நினைவுகளைத்தான்
பிழிந்து
பழச்சாறுபோல்
குடிக்கிறேன்...!


நள்ளிரவில்
நடுவீட்டுக்குள்ளே
நடந்துதிரிகின்றேன்
என்ன செய்கிறாய்...?
என்று கேட்பவர்களுக்கு
காதலித்துக்கொண்டிருக்கிறேன்
என்று
பதில் சொல்லிக்கொண்டு...!


வேகமாக
ஓடிக்கொண்டிருக்கிறது
தொடரூந்து
மெதுவாகவே வருகிறது
அவள்
நினைவுகள் மட்டும்..!


ஆறுதலாகச் செல்லும்
தொடரூந்தில்தான்
நான் ஆசையோடு ஏறுவதுண்டு
ஏனெனில்...
தொடரூந்தின்
யன்னல்களை மூடிவிட்டு
மனக்கதவை திறந்து
நானும்
அவளும்
மனசும்
காதலும்
கவிதையும்
கலந்து பேசிக்கொண்டே
பயணம் செய்ய...!


நதிகளெல்லாம்
கடலில் விழுந்து
தற்கொலை செய்வது
ஏன் என்று
இப்போது புரிகிறது
நீ
குளிக்க வராததால்...!


உன் நினைவில்
என்னையறியாமல்
எழுதிக்கொண்டிருந்தேன்
அதை...
படித்தவர்கள்
நல்ல கவிதை
என்கிறார்கள்...!
நான்
உன் பெயரைத்தானே
எழுதினேன்...?!


உன் நினைவில்
பேசிக்கொண்டும்
சிலநேரம்
சிரித்துக்கொண்டும்
நடந்தேன்...
பைத்தியம் என்கிறார்கள்...!
நான்
உன்னோடுதானே பேசினேன்...?!

(இன்னும் வரும்...)

[b]த.சரீஷ்
12.02.2004 (பாரீஸ்)</b>
sharish
Reply
#2
உன் நினைவில்
என்னையறியாமல்
எழுதிக்கொண்டிருந்தேன்
அதை...
படித்தவர்கள்
நல்ல கவிதை
என்கிறார்கள்...!
நான்
உன் பெயரைத்தானே
எழுதினேன்...?!

உன் பெயரை
உச்சரித்தால்
பாடலென்பார்களோ!!
பயத்தினால்...
எழுதினேன்
கவிதயென்கிறார்கள்
போகட்டும்!
உன் கையெழுத்தை பார்த்து
ஓவியம்!
என்று சொன்னவர்கள் தானே
இவர்கள்!!!
\" \"
Reply
#3
ம் ம்
வசியக்காரி வலை வீசித்தான் வருகின்றார்.

அருமையான கவி நடை சாPஸ்
வாழ்த்துக்கள்

காதல் கவிதைகளிற்கு சாPஸ்தான் என்பதை மறுபடியும் நிலைநாட்டியள்ளீர்கள். வாழ்த்துக்கள்
[b] ?
Reply
#4
மிக நன்று நன்று நன்று. எந்த வரிகளையும் தள்ளி வைத்து விட முடியவில்லை.

மனசு படும்
மரண வேதனையை
இதயம்
சொல்லிக்கொண்டிருக்கிறது
கண்களிடம்...!

இதயம் வாங்கிய
அடியைப்பற்றி
கண்கள் சொல்லியழுகிறது
கன்னங்களிடம்...!


நாண்பர்கள்
என்னைப் பழிக்கிறார்கள்..!
இப்போதெல்லாம்
நான்
முன்புபோல் இல்லையாம்
நிறையவே மாறிவிட்டேனாம்...!
ஒரு
மலரின் சிரிப்பால்
மரித்துப்போனவன்
மீண்டும்
©மியல் வந்து பிறந்தேன்
என்பது
அவர்களுக்கு தெரியாது..!

உன் நினைவில்
பேசிக்கொண்டும்
சிலநேரம்
சிரித்துக்கொண்டும்
நடந்தேன்...
பைத்தியம் என்கிறார்கள்...!
நான்
உன்னோடுதானே பேசினேன்...?!
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)