01-19-2004, 12:57 PM
[b]இலங்கை இடைக்கால நிர்வாகம்: ஜெயாவின் வழக்கறிஞருடன் சந்திரிகா ஆலோசனை
விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள இடைக்கால நிர்வாக ஆணையம் குறித்து இலங்கை அதிபர் சந்திரிகா, பிரபல இந்திய வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ராணுவத் துறையை சந்திரிகா தன்வசம் வைத்துக் கொண்டதையைடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தையை அவரே மேற்கொள்ளட்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இந் நிலையில் சந்திரிகா, விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள இடைக்கால நிர்வாக ஆணையம் அமைக்கும் திட்டம் குறித்து அரசியல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். இதில் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் ஆஜராகி வெற்றி தேடித் தந்தவருமான கே.கே.வேணுகோபால் கலந்து கொண்டார்.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குப் பாதகம் நேராத வகையில் இத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இத் திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்வைத்தபோது, இது தனி நாட்டுக்கான முன்னோடித் திட்டம் என்று சந்திரிகா குறை கூறியது குறிப்பிடத்தக்கது.
-----------
Thatstamil.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>