Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமைதி முயற்சிக்கு பின்னடைவு - புலிகள்
#1
அமைதி முயற்சிக்கு பின்னடைவு - விடுதலைப் புலிகள்!

<img src='http://www.webulagam.com/homepage/mainimages/img2_292004_44357am.jpg' border='0' alt='user posted image'>

இலங்கை நாடாளுமன்றத்தை அதன் ஆயுட் காலத்திற்கு முன்னரே கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட்டிருக்கும் அதிபர் சந்திரிகாவின் முடிவு, இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வந்த அமைதி முயற்சிகளுக்கு ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம், தமிழர் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதில் சிங்கள அரசியல் தலைமைக்கு உள்ள உறுதியின்மையையே இந்த முடிவு வெளிப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

புலிகள் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட்.காமிற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள ஆண்டன் பாலசிங்கம், கொழும்புவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிச்சயமற்றத்தன்மையும், குழப்பமும் நீடித்தாலும், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை தொடர்ந்து தீவிரமாக கடைபிடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

அமைதி முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததன் வாயிலாகவும், போர் நிறுத்தத்தை எந்தவித மீறலும் இன்றி தீவிரமாக கடைபிடித்து வருவதும் அமைதி முயற்சிகளின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உள்ள நேர்மையான அக்கறையை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டுள்ளது என்று கூறியுள்ள ஆண்டன் பாலசிங்கம், தேர்தல் முடிந்து புதிய ஆட்சியில் பொறுப்பேற்று அமைதி முயற்சிகளை தொடர்வது வரை காத்திருக்காமல் தமிழர்களுக்கு தேவைப்படும் மனிதாபிமான உதவிகளை உடனடியாக செய்ய முன்வருமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய உரிமைகளையும், எதிர்பார்ப்புகளையும் அமைதி வழியில் பெற்றுத் தர முன்வந்த அரசியல் சக்திகளுக்கு சிங்கள மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டணிக்கு மறைமுகமாக ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாலசிங்கம்.

இந்த தேர்தலில், தமிழர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து ஒருமித்து செழிப்புடன் வாழ்வதா? அல்லது தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் அரசியல் விடுதலைக்கு தமிழர்களைத் தள்ளுவதா என்கின்ற கேள்விக்கு இலங்கையின் பெரும்பான்மை சிங்கள சமூகம் விடையளிக்க வேண்டும் என்று ஆண்டன் பாலசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.

---------------
webulagam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: