Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எம் அருமைத் தமிழ்மக்களே....!
#1
'பிரதேசவாத பிரசாரத்திற்கு இடமளிக்கவேண்டாமென கிழக்கு கல்விச் சமூகம் தமிழ் மக்களிடம் கோரிக்கை'
இக்கல்விச் சமூகத்தின் கருத்தே எமதென்றும் மாணவர்களாகிய நாமும் இக்கருத்தை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் மீண்டும் இங்கு தருகின்றோம்....!


----------------------------------------------------

<b>பிரதேசவாத பிரசாரத்திற்கு இடமளிக்கவேண்டாமென கிழக்கு கல்விச் சமூகம் தமிழ் மக்களிடம் கோரிக்கை

அந்நிய சக்திகளுக்கு விலைபோன தனிமனிதனின் அழைப்பை புறக்கணிக்க வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையால் ஏற்படப்போகும் எதிர் விளைவுகளை ஒரு கணம் சிந்தித்து, அந்நிய சக்திகளுக்கு விலைபோன ஒரு தனி மனிதனின் அழைப்புக்கு செவிசாய்க்காது, தமிழ் மக்கள் செயற்படவேண்டுமென கிழக்கின் கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை, மட்டு.கல்வியியல் கல்லூரி, மட்டு. தொழில்நுட்பக் கல்லூரி, சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பில் ஏற்பட்டுள்ள பிரிவினைகோரும் நிலைமை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள ஒரு வரலாற்று அவமானமாகும். உலகமே வியக்கும் வண்ணம் தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் தனது இலட்சியப் பயணத்தில் வீறுகொண்டெழுந்து, வெற்றி நடைபோடுகின்ற இந்நேரத்தில், சர்வதேச சமூகத்தின் கணிப்பும், அங்கீகாரமும் விரைவில் கைகூடி வரும் இறுதிச் சந்தர்ப்பத்தில் ஒரு தனி மனிதனின் வரலாற்றுத் துரோகத்தால் தமிழ் இனத்தின் விடுதலைக்கனவு இன்று கேள்விக்குறியாகி நிற்கின்றது.

ஆயிரம் ஆயிரம் தமிழ் உறவுகளின் அதி உன்னதமான உயிர்த் தியாகத்தால் கட்டிý எழுப்பப்பட்ட ஒரு விடுதலை அமைப்பை தமிழர்களின் தேசியப் படை பலத்தை தனி மனிதனின் சுயநல விருப்பு, வெறுப்புகளுக்காக பலியிட அனுமதிக்கலாமா?

பாசத்தைத் துறந்து தேசத்தைக் காக்கும் இலட்சிய வாழ்வைத் தொடங்கும் ஒரு போராளி, அந்தக் கணமே சாதி, சமய, வர்க்க, பிரதேச வேறுபாடுகளை எல்லாம் கடந்து விடுதலை நெருப்பை மட்டுமே நெஞ்சிலே சுமந்து இலட்சிய வாழ்வைத் தொடங்குகின்றான்.

தமிழீழத்திற்காக தனது மண்ணிலேயே வீரச்சாவடைகின்றான். இதுவே, விடுதலைப்புலிகளின் இரு தசாப்தகால கொள்கைப் பற்றுதியாகும். இதுவரை இதில் குற்றமோ, குறையோ எவரும் கண்டதில்லை. அதனைப்பற்றிப் பேசுவதற்கு நா எழுந்ததும் இல்லை.

பிரதேச வேறுபாடுகளுக்குத் தூபமிட்டு தனது துரோகத்தனத்தை மூடிýமறைத்து, தமிழின விடுதலைக்கு குந்தகமும், பழியையும் ஏற்படுத்த முயல்பர் தமிழீழ சமூகத்தால் என்றுமே மறக்கமுடியாத அவமானச்சின்னவாக கறைபடிந்து நிற்கிறார்.

அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு விலைபோய் தன் இனமானத்தை விற்கத் துணிந்துள்ள ஒருவர் அவரே விசமத்தனமாகப் பரப்பி வருகின்ற பிரதேசவாத கருத்துகளை தமிழ் மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

புலிகளே தமிழர்கள்! தமிழர்களே புலிகள்! இது அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சியில் மக்களாகிய நாம் அணிதிரண்டு எடுத்துக் கொண்ட கொள்கைப் பிரகடனமாகும்.

தமிழ் இனத்தில் தேசியத் தலைவர் என்றுமே மக்களுக்காக தீர்க்கதரிசனம் மிக்க தீர்மானங்களை எடுத்து, இன்றுவரை புலிகள் அமைப்பையும், தமிழ் மக்களையும் அரும்பாடுபட்டுக் காத்து வந்தவர் என்பதை யாரும், யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கடந்த காலங்களில் விடுதலைப் போராட்டம் பெரும் சவால்களையும், துயரங்களையும் சந்தித்த போதெல்லாம் நச்சுவிதைகள் களையெடுக்கப்பட்டு, விடுதலைப்பயிர் செழித்து வளர்ந்தது என்பதுதான் வரலாறாகும். இவற்றை மனதில் நிறுத்தி, "தீர்க்கதரிசனமிக்க விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தின் தீர்மானத்தைப் புத்திசாதுர்யமாக ஏற்றுக் கொண்டு, தமிழர் ஒற்றுமைக்கும், விடுதலைக்கும் வலுச்சேர்ப்போமாக.

அன்பான தமிழ் உறவுகளே!

பிரிவினையால் ஏற்படப்போகும் எதிர் விளைவுகளை ஒரு கணம் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து அந்நிய சக்திகளுக்கு விலைபோன ஒரு தனிமனிதனின் அழைப்புக்கு செவி சாய்க்காமல் கடையடைப்பு, ஊர்வலம் மற்றும் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் எந்தவித விடுதலைப்போராட்டத்திற்கு விரோதமான செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாமென உரிமையுடன் வேண்டிý நிற்கின்றோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</b>

நன்றி தினக்குரல்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஐ.பி.சி.யின் திண்ணை ஆய்வில் சோதிலிங்கம் அவர்கள் கூறியது போல தலைவர் வடக்குடன் போராட்டத்தை நிறுத்தியிருந்தால் 25 வருட காலம் இவ்வளவு இழுபட்டிருக்கத் தேவையில்லை.

இந்தக் கருத்தில் நியாயம் இருக்கத்தால் செய்கிறது. தமிழ் மக்களின் தீர்க்கமான பலத்தை காட்டும் இத்தருணத்தில் பிரதேசவாதத்தை தற்சமயம் எழுப்புவதன் மர்மம் என்ன? இந்தியாவின் பின்னணி இருப்பது என்பது சர்வ நிச்சயமாகிவிட்டது.

வட பகுதியில் 31 விடுதலை இயக்கங்கள் தோன்றின ஆனால் கிழக்கில் ஒரு இயக்கம்தானும் தொடங்கவில்லை. (இது எனக்கு தெரிந்தவை மட்டும். வேறு யாருக்கும் தெரிந்திருந்தால் கூறுங்கள்) தலைவர் கட்டிக்காத்த இயக்கம் இப்படியான சுயநலவாதிகளின் கையில் அகப்பட்டு பிரதேசவாதத்தைக் காட்டி தமிழ்த் தேசியவாதத்தை கொச்சைப்படுத்துவது மிக வேதனையான விடயம். இப்போது எமக்கு தேவை தமிழீழம், தமிழீழத் தேசியவாதம்.

நாம் முதலில் தமிழிழீழம் காண்பதற்கே கடினமாக இருக்கிறோம். இந்த லட்சணத்தில் பிரதேசவாதத்தை கருணா தூக்கியிருப்பது வேதனையான விடயம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)