Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பினர் இரண்டு பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு அடுத்தபடியான வாக்குகளைப் பெற்றுள்ளதும் அதன் மூலம் ஸ்திரமான பாராளுமன்றம் அமைவதற்கு கூட்டமைப்பின் ஆதரவு இன்றியமையாததுமாகிவிட்டது
இந்நிலையில் தமிழ்க் கூட்டமைபின் நடவடிக்கை எவ்வாறு அமையும் அல்லது எவ்வாறு அமையவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்
1) எதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து அரசு அமைக்க ஆதரவு கொடுத்தல்
2) ஒரு கட்சியுடனும் சேராமல் ஆனால் வெளியிலிருந்து ஆதரவு வழங்கல்
இவற்றுடன் ஆதரவு வழங்கலின் நிபந்தனைகள் பற்றிய உங்கள் கருத்துகளைத் தாருங்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சமாதானக் கோரிக்கையை சிங்களமக்கள் நிராகரிப்பு
ஐ.தே. கட்சிக்கு எதிர்பாராத தோல்வி
ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பில்லை
தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவை நாடாதாம்
பெரும்பாலான தொகுதிகளில் ஐக் கிய தேசியக் கட்சி பின்தங்கிய நிலை யில் இருந்துவருகிறது.
சமாதானத்தை முன்னிறுத்தி தேர் தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசி யக் கட்சிக்கு எதிர்பாராத வகையில் தோல்வி கிட்டியிருக்கிறது.
தேர்தல் பெறுபேறுகளின் போக்கு அக்கட்சியின் தலைமைப்பீடத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் இன்று நண்பகல் தெரிவித்தன.
எனினும், மக்களின் தீர்ப்பை கட்சி முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் என் றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஆட்சி அமைப்பதற் கான முயற்சி எதிலும் ஐக்கிய தேசி யக் கட்சி இறங்காது என்று கட்சி யின் உயர்தலைவர்களுடன் தொடர்பு டைய வட்டாரம் ஒன்று தெரிவித் தது. ஆட்சி அமைக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆத ரவைக் கோருவதில்லை என்று கட்சி ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்று பெறுபேறுகள் வெளியா கிக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணி 88 ஆச னங்களைக் பெறும் என்று கணக் கெடுப்புக்கள் தெரிவித்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி மேற் கண்டவாறு கருத்து வெளியிட்டுள் ளது.
தாம் முன்னெடுத்த சமாதான முயற்சிகளைத் தொடர ஆணை தரும்படி சிங்கள மக்களிடம் கேட்டே ஐக்கிய தேசிய முன்னணி தேர்த லில் போட்டியிட்டது.
சிங்கள மக்கள் இதனை நிராக ரித்துள்ளதால் தமிழ்க் கூட்டமைப்பு டன் பேசி ஆட்சி அமைக்க முயற் சிக்கவில்லை|| - என்று அக்கட்சி வட் டாரங்கள் தெரிவித்தன.
நன்றி உதயன்
\" \"