Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எல்லாம் புரிந்தும் ஏன் இப்படியும் சிலர்....?!
#1
சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெருகி வரும் சமுதாயச் சீரழிவை நோக்கிய செயற்பாடுகளிற்கு முடிவு கட்டுவது போல் எல்லாளன் படையின் செயற்பாடுகளும் எச்சரிக்கையும் வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பல சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள்,ஈடுபடுபவர்கள் என சமூகக் குற்றவாளிகள் எல்லோரும் சிறிலங்கா அரச படைகளினாலும் காவல்துறையினராலும் பாராமுகப்போக்கில் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கொடும் சமூகச் சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 5 பேர் கடத்தப்பட்டு அதில் கடும் குற்றவாளியாகக் கருத்தப்படும் (சிறிலங்கா காவல்துறையின் பதிவுகளின் பிரகாரம்) ஒருவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது...மிகுதி நால்வரும் கடும் எச்சரிக்கைக்குப் பின்னர் நையப்புடைக்கப்பட்டு கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் எல்லாளன் படையினரால் விடுவிக்கப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையை மேற்கோள் காட்டி தமிழ் நெற் கூறுகிறது...!

இச்செய்தி வந்து ஓய முதல் இதோ இப்படியும் ஒரு செய்தி வருகிறது...

-----------------------------
<i>முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் பயணிகளுடன் தவறாக நடந்து கொள்வதாக முறைப்பாடு

வவுனியாவில் முச்சக்கரவண்டிகளை செலுத்தும் சாரதிகள் படு மோசமாக நடந்துக்கொள்வதாகவும் இதற்கு சமூகத்தில் ஆர்வம் உள்ளவர்களும் காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்காலத்தில் இதன் விளைவுகள் படுமோசமாக அமைந்து விடும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் சவாரிக்கு போகவரும் பெண்களிடம் முச்சக்கர வண்டி சாரதிகள் இரட்டை பொருள்படும் சொற் பிரயோகங்களை பாவிப்பதாகவும், தவறான முறையில் நடக்க எத்தனிப்பதாகவும், இதன் காரணத்தால் பெண்கள் தனியாக போவதில் கூட அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் இடம் பெறும் வீதிவிபத்துக்களுக்கு முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் காரணமாக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். போதிய அனுபவம் இல்லாமலும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமலும் முச்சக்கர வண்டிகள் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் சில முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் தென்னிந்திய பாணியில், அடிபாட்டுக்குத் தயாராக சைக்கிள் செயின்கள் கத்திகள் தடிபொல்லுகள் கொண்டு திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே பேருந்து நடத்துனர்களுக்கும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கும் முறுகல் நிலையிருந்தது. இது முடிவுக்கு வந்த பின்னர் கடந்த சனிக்கிழமை சிற்றூர்தி சாரதிகளுக்கும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டு மோதலில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆறு பேர்காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக தாம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி திரு.விஜேநாயக்க தெரிவித்தார். போக்குவரத்து காவல் துறையினர் வீதியின் பல பகுதிகளிலும் நிற்கின்றனர், இவர்கள் இத்தகைய தவறுகளையும் சமூக சீர்கேடுகளையும் கண்டுகொள்ளாது என்ன செய்கின்றனர் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவர்கள் தண்டப்பணம் அறவிடுவதில் கவனம் செலுத்துவதாகவும் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை என்றும் மக்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். </i>
-------------------------------

மரண தண்டனை என்பது ஒரு அதி உச்ச தீர்ப்பு என்பதுடன் அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்குள் வைத்து நியாயப்படுத்த முடியாத ஒரு தீர்ப்பும் கூட...! அப்படி இருந்தும் குற்றவாளிகளை நல் வழிப்படுத்தும் நோக்கில் மரண தண்டனை பற்றிய ஒரு உளவியல் பயத்தை தோற்றுவித்து அதன் மூலம் சமூகச் சீரழிவு நோக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்துவது எங்கும் பொதுவானதே...ஆனால் மனிதனில் சக மனிதனுக்கு எதிராக கொடும் குற்றங்கள் புரிபவர்கள் இதனை விளங்கிக் கொள்ளவோ அல்லது இது தொடர்பாக வரும் முன்னெச்சரிக்கைகளை உள்வாங்கிக் கொள்ளவோ முனையாது தமது சமூகச் சீரழிவு அநியாயங்களைத் தொடரும் போது பலரதும் அடிப்படை மனித உரிமைகளைக் காப்பாற்ற இப்படியானர்களின் மீதான மனிதாபிமானப் பார்வை இழக்கப்படுவது என்பது என்னவோ தவிர்க்கமுடியாது போகிறது போலும்...! இருந்தாலும் குற்றவாளிகளும் மனிதர்களே என்று தண்டனை வழங்குபவர்கள் அவர்களுக்கு ஒரு அதிகபட்ச காலத்தை தமது தீவிர ரகசிய கண்காணிப்பின் கீழ் அவர்கள் நல்லவர்களாக திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்....!

---------------------------
<i>Ellalan Army kills youth in Jaffna

[TamilNet, May 16, 2004 16:42 GMT]
Police found the body of a person identified as Subramaniam Chandralalith, 22, shot dead in Jaffna town in the early hours of Sunday morning. He was abducted in a van by unknown persons the day before, Police sources in the northern town said. In a note found near his body, a group calling itself Ellalan Army claimed that it had killed Chandralalith and punished five others for criminal activities including robbery, rape, abduction, extortion, fraud and child molestation.
Five persons who were abducted along with him by the group on Saturday were found in different places in the town blindfolded and with their hands tied.

They had been severely beaten up before they were pushed out of the van in which they were abducted, Police sources in Jaffna said.

There are several cases pending against Subramaniam Chandralalith in the Jaffna courts, according to them.

The note found near his body warned that the Ellalan Army would continue to punish criminals if they did not cease their anti-social activities in Jaffna immediately.

Police said they had not arrested anyone in connection with the murder and abductions. They said they do not know anything about the Ellalan Army.</i>
------------------------------

<i>தகவல் மூலம்...புதினம் மற்றும் tamilnet</i>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
மரண தண்டனை என்பது ஒரு அதி உச்ச தீர்ப்பு என்பதுடன் அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்குள் வைத்து நியாயப்படுத்த முடியாத ஒரு தீர்ப்பும் கூட...! அப்படி இருந்தும் குற்றவாளிகளை நல் வழிப்படுத்தும் நோக்கில் மரண தண்டனை பற்றிய ஒரு உளவியல் பயத்தை தோற்றுவித்து அதன் மூலம் சமூகச் சீரழிவு நோக்கிய குற்றங்களைக் கட்டுப்படுத்துவது எங்கும் பொதுவானதே...ஆனால் மனிதனில் சக மனிதனுக்கு எதிராக கொடும் குற்றங்கள் புரிபவர்கள் இதனை விளங்கிக் கொள்ளவோ அல்லது இது தொடர்பாக வரும் முன்னெச்சரிக்கைகளை உள்வாங்கிக் கொள்ளவோ முனையாது தமது சமூகச் சீரழிவு அநியாயங்களைத் தொடரும் போது பலரதும் அடிப்படை மனித உரிமைகளைக் காப்பாற்ற இப்படியானர்களின் மீதான மனிதாபிமானப் பார்வை இழக்கப்படுவது என்பது என்னவோ தவிர்க்கமுடியாது போகிறது போலும்...! இருந்தாலும் குற்றவாளிகளும் மனிதர்களே என்று தண்டனை வழங்குபவர்கள் அவர்களுக்கு ஒரு அதிகபட்ச காலத்தை தமது தீவிர ரகசிய கண்காணிப்பின் கீழ் அவர்கள் நல்லவர்களாக திருந்தி வாழ அனுமதிக்க வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் அவசியம்....!  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
Reply
#3

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்த கண்காணிப்பு, பல தடவைகள் எச்சரிப்புஇ ஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்காது தொடரந்தும் பணத்திற்கு கொலை செய்பவர்களை என்ன செய்யலாம். குறிப்பாக யாழ் குடாவில் இராணுவ கட்டுப்பாடு. இவரை நல்வளிப்படுத்த வன்னிக்கு கடத்திச்செல்ல வேண்டும். ஆனால் அதற்குள் இவர்கள் சும்மாயிருப்பார்களா? நியாயமான கூற்று ஆனால் நடைமுறை? சில இடங்களில் நடை முறை சாத்தியம் நியாயப்பாடுகளையும் நிராகரிக்க வைக்கும் என்பது வேதனையான உண்மை!
Reply
#4
எது சாத்தியமற்றிருப்பினும் ஒவ்வொருவரும் சத்தியம் செய்வோம் தம்மையும் காத்துத் தாம் வாழும் சுற்றமும் காப்போம் என்று...அது சாத்தியமே...மனமுண்டானால் இடமுண்டு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->எது சாத்தியமற்றிருப்பினும் ஒவ்வொருவரும் சத்தியம் செய்வோம் தம்மையும் காத்துத் தாம் வாழும் சுற்றமும் காப்போம் என்று...அது சாத்தியமே...மனமுண்டானால் இடமுண்டு....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:!: :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
எல்லாளன் படை - மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றது : மறு பிறவி எடுத்திருக்கின்றது.

"தர்மம் தலைகுனிகின்ற" வேளைகளில், தூக்கம் கலைந்து தட்டிக்கேட்பதற்கு ஒருவரும் இல்லையே என்று ஏங்கித்தவித்திருந்த வேளையில்,அநீதிகளுக்கெதிராக, அடக்கியாள்வதற்கென தலை தூக்கியிருக்கின்றது இந்த அமைப்பு. காலத்தின் தேவைகருதி இதன் செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன் யாழ்ப்பாணத்தில் இத்தகையதொரு அமைப்பு சங்கிலியன் படை என்றபெயரில் இயங்கி தமிழ் இன விரோதிகளாகச் செயற்படுபவர்களைப் போட்டுத் தள்ளியது. அதே காலப்பகுதியில் எல்லாளன் படை வவுனியாவில் செயற்பட்டுவந்தது.

தமிழின வரோதிகளாகச் செயற்பட்ட அரசியல்வாதிகளையும், தமிழ் விரோதக் குழுக்களையும் பழி வாங்கும் நோக்கிலேயே அவ் அமைப்புக்கள் செயற்பட்டு வந்தன.

இப்போது அவற்றின் பார்வை மறுபுறம் திசை திரும்பி இருக்கின்றது.

கொலை,கொள்ளை,வல்லுறவு, போன்ற சமூக விரோதச்செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் பணியில் இப்போது எல்லாளன் படை இறங்கியிருக்கின்றது. சமூக விரோதிகளை முதற் கட்டமாக எச்சரிக்கின்ற இப்படை அதன் பின் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கோரமாகக் கொலை செய்து வீதிகளில் விட்டெறிவதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், ஈடுபட்டுக்கொண்டி ருப்பவர்கள் என பலரது வயிற்றில் புளியையும் கரைக்க ஆரம்பித்திருக்கின்றது.

இப் படையில் இப்போதைய செயற்பாட்டின் முதற்கட்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியைச் சேர்ந்த ரதன் என அழைக்கப்படும் சந்திரலலித் என்பவர் பலியாகி இருக்கின்றார். இவருக்கு வயது ஆக இருபத்தியிரண்டு மட்டுமே.

இந்த வயதுக்குள் அவர் செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ள அக்கிரமங்கள் பட்டியலிடப்பட முடியாதவை.

மாற்றியக்கம் ஒன்றின் பூரண ஆதரவோடு செயற்பட்டு வந்த இவர் திட்டமிட்டு தமிழ் கலாசாரத்தை சீரழிக்கின்ற நடிவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகவும், பல முறை எச்சரிக்கப்பட் டபோதிலும் திருந்தியதாக இல்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவரைப் போலவே, இவரால் வளர்த்து விடப்பட்ட பலர் இன்னமும் செயற்பட்டுவருகிறார்கள். காவல் துறை, சட்டமன்று என்பதெல்லாம் இத்தகையவர்களுக்கு அத்துபடியான விடயம். கொலை,வல்லுறவு போன்ற பாரதூரமான செயற்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் கூட பொலீசாரை விலைகொடுத்து வாங்கி, சட்டத்துக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டே இத்தகையவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

திட்டமிட்டு தமிழர்களின் கலாசாரத்தை சீரழித்து விட வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்ற அரச படைகள், சமூகவிரோதிகளைக் கண்டிப்பதை விடுத்து, திரை மறைவில் இத்தகையவர்களை வளர்த்து வருகின்றன. அத்துடன் அத்தகையவர்களை அள்ளி அரவணைத்து அடைக்கலம் கொடுப்பதில் மாற்று இயக்கங்களும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றன. இவர்கள் அனைவரதும் ஒரே நோக்கம் ஜொலி வாழ்க்கையையும், சுக போகங்களையும் தருவதாகக் கூறி இளம் சமுதாயத்தை போராட்டத்தில் இருந்து திசை திருப்புவது தான்.

இவ்வாறான செயற்பாடுகள் 1996 முதல் இடம்பெற்று வருகின்றன. நீலப் படங்களையும், கள்ளச் சாராயத்தையும் தாராளமான புளக்கத்தில் விட்டு அதன் மூலம் இளம் சமுதாயத்தைச் சீரழிக்க முனைந்தது இவர்களது முதற்கட்ட பணி.

அதே போல இளைஞர்களிடம் காம எண்ணத்தினை ஏற்படுத்தி அவர்களைச் சிற்றின்பத்தின் பால் திசை திருப்பியதனால் பல வல்லுறவுச் சம்பவங்களும், சிறுமிகள் மீதான வல்லுறவுகளும் அதிகர்த்து காணப்பட்டன.

ஏ9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின் இந் நிலை இன்னும் மோசமடைந்தது, தென்னிலங்கையில் இருந்து கலாசாரச் சீரழிவுக் கோலங்கள் வடக்கு நோக்கி படை எடுக்கத் தொடங்கின.

நீலப்படங்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டன. இதனைப் பார்த்து இளைய சமுதாயம் ஒருபுறம் கலங்கியிருக்க,

விலை கூடிய மோட்டார் சயிக்கிள்களும், கையடக்கத் தொலைபேசிகளும் பாஷன் ஆக மாறியது.

மோட்டார் சயிக்கிளையும் தொலைபேசியையும் பாராமரிப்பதற்கான பணம் தேவைப்பட்டதால் திருட வேண்டி ஏற்பட்டது, திருட்டு.... வழிப்பறி ஆக மாறி, அதன் பின் கொள்ளையாக மாறி, வெற்றிகரமாக கொள்ளையிடுவதற்காக கொலை செய்யவும் துணிந்தார்கள். அதை விட தாராளமயகக் காணப்பட்ட மது,போதை பழக்கங்களும் வன்முறைகளைத் து}ண்டியதால் குறிப்பிடத்தக்களவு இளம் சமூதாயம் சீரழிந்து போய்விட்டது.

இதனை மாற்றுவதற்கு எத்தனையோ வழிகள் பின்பற்றப்பட்ட வண்ணமுள்ளன. நீலப் படங்களின் விநியோகம் தடைசெய்யப்படும் வகையில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டமை பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் தரை மட்டுமா வழி.? எப்படியாவது சமூகத்தை சீரழிப்பதில் குறியாய் இருக்கின்ற மாற்றியக்கக்காரர்கள் விமானம் மூலம் கொண்டு வந்து விநியோகிக்கிறார்கள். பழைய எதிரிகளைப் பழி வாங்குவதற்கும், காதல் விடயங்களை அரங்கேற்றுவதற்கும், கடத்திக்கொடுத்து காசு சம்பாதிப்பதிலும், காசு வாங்கிக்கொலை செய்வதிலும் சந்திரலலித் போன்றவர்களே ஈடுபட்டுவந்தார்கள்.

இத்தகையவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல். இவர்களது சாவு மற்றவர்களை நல்வழிப் படுத்த உதவுவதோடு, சமூகத்துக்கும் நல்லது. எனக்கொண்டால்,எல்லாளன் படை காலத்துக்கேற்ற ஒரு காற்றாடி. தன்னைக்கொல்ல வரும் பசுவையும் கொலை செய்யலாம் என்றால் சமூகத்தைச் சீரழிக்கின்ற கோடரிக்காம்புகளை அழிப்பதும் தப்பில்லையே?. இது தர்மத்துக்கான யுத்தம், எத்தனை நாள் தொடப் போகிறது? .... பொறுத்திருந்து பார்ப்போம்.

<i>ஆரூரன்/தமிழ் ஒசை

நன்றி சூரியன் டொட் கொம்....!</i>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)