Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளைப் புரிதல்
#1
புலிகளைப் புரிதல்

<b>"புலிகள் எப்போதும் புலிகளாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வரைதான் தமிழனுக்கு மரியாதை. "</b>

ஊடகவியல் பணி மிகப் புனிதமானது. எந்த அளவிற்குப் புனிதமானது என்றால், கற்பித்தற் பணியைப் போல அது புனிதமானது. ஊடகத்துறையினரைப் பொறுத்தவரை - குறிப்பாக, செய்தியாளர்கள், ஆய்வுரையாளர்கள், மற்றும் ஊடக சேவையாளர்களைப் பொறுத்தவரை - வெறுமனே ஒரு தொழிலாக, அல்லது சுயதிருப்திக்காக, அல்லது புகழுக்காக அந்தப் பணியில் ஈடுபடுவதைவிட, தாம் சார்ந்த மக்கள் சமூகத்திற்கு சீரிய கருத்துக்களை ஊட்டி, அவர்களைப் பக்குவப்படுத்தி, அவர்களுக்குத் தெளிவான சிந்தனை முறைமையைப் புகட்டுவதை அவர்கள் முதன்மையாகக் கருத வேண்டும். அதை அவர்கள் ஒரு தார்மீகக் கடமையாகக் கொள்ள வேண்டும். ஆக மொத்தத்ததில் அது ஒரு தொழில் அல்ல அது ஒரு சேவை.

இப்போது - கருணா விவகாரத்தின் முதலாவது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. மட்டக்களப்பு அம்பாறை வழமைக்குத் திரும்பிவிட்டது. ஆனால், இதுவரை - கருணா விவகாரத்தை - வெளிநாட்டுச் செய்தியூடகங்கள் தங்கள் வியாபாரத்திற்காகப் பாவித்தன: அது அவர்களது தொழில்: அவர்களோடு கோபிப்பதில் நியாயமில்லை. சிங்களத்தரப்புச் செய்தியூடகங்கள் தங்கள் பேரினவாத நன்மைக்காகப் பாவித்தன: அவர்கள் அப்படித்தான் செய்வார்கள்: அவர்களோடு கோபிப்பதில் பயனேதுவும் இல்லை. ஆனால், சில தமிழ் ஊடகங்களும், சில தமிழ் செய்தியாளர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் - கருணா தனது முயற்சியில் வெல்லவேண்டும் என விரும்பியவர்கள் போலவும், வெல்லுவார் என நம்பியவர்கள் போலவும் தென்பட்டுக்கொண்டிருந்தார்கள். கருணா விவகாரத்தை, அந்த மிகச் சிலர் கையாண்டிருந்த முறை தான் மிகுந்த மனக்கவலையைத் தருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை - அதன் போராளிகளை தங்கள் சொந்தப் பிள்ளைகள் போல தமிழ் ஆய்வாளர்கள் பார்க்க வேண்டும் என்பது எனது அவா. புலிகள் தொடர்பாக எழுதும் பொழுது, பத்திரிகைகளுக்குப் பத்தி எழுதும் ஒரு தொழில் என்பதற்கு அப்பால், தங்களது ஒரு சொந்த விவகாரத்தைப் பற்றி எழுதுகின்றோம் என்ற ஒரு நெருடல் எந்தத் தமிழனுக்கும் இருக்க வேண்டும். நான்கு பக்கமும் வேலி கட்டி, அதற்குள்ளேயே குடும்பம் நடாத்தி, உள்ளுக்குள் என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் அதை எங்களுக்குள்ளேயே மூடிமறைத்து, வெளியில் சிரித்துக்கொண்டு இன்பமுகம் காட்டும் கலாச்சாரப் பண்பு தமிழர்களுடையது. அது சுயகௌரவத்தைப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளுள் ஒன்று. இன்னொரு வகையில் - 'எங்கள் உள்வீட்டுப் பிரச்சனை அடுத்தவர்களுக்கு எதற்கு?... எமது சிக்கல்களை நாமாகவே அவிழ்த்துக் கொள்வோம்' என்ற மனப்பாங்கு என்றும் சொல்லலாம். ஆனால், சொந்த வீட்டுக்குள் சச்சரவு வரும்போது எமக்குள் வெளிப்படும் இந்தச் சுயகௌரவ மனப்பாங்கு, சொந்த இனத்தின் விவகாரத்தில் ஏன் உருக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றது என்பது தான் புரியவில்லை. ஒரு விடயத்தில் எங்களுக்குத் தெளிவு வேண்டும். அதாவது - சரியும் சரியின்மையும் இருக்கலாம் நலமும் நலமின்மையும் இருக்கலாம். Perfection-னை எல்லாவற்றிலும் எதிர்பார்க்கமுடியாது - எதிர்பார்க்கவும் கூடாது. இப்பேர்ப்பட்ட ஒரு பிரமாண்டமான விடுதலை இயக்கத்தைக் கொண்டு நடாத்துகின்ற போது ஆங்காங்கே சின்னச் சின்ன கீறல்கள் விழத்தான் செய்யும்: அது தவிர்க்க முடியாதது. 'நிறைவு' என்பது அதைப் பார்ப்பவர்களின் சிந்தனையைப் பொறுத்தது. 'வீடு' என்று வரும் போது, அவர்களில் என்ன தான் குறைகள் இருந்தாலும், சொந்தப் பிள்ளைகளிலும், சகோதரர்களிலும் நாம் நிபந்தனையற்ற அன்பைப் பொழிகின்றோம் அல்லவா?.... நாடு என்று வரும்போது ஏன் எங்களால் அவ்வாறு உணரமுடியாமல் இருக்கின்றது?... எல்லாவற்றுக்கும் மேலால் - விடுதலைப்புலிகள் இயக்கம் எங்களுடைய இயக்கம்: எங்களுக்கான இயக்கம்: எங்களுடைய உற்றாரும் உறவினரும் நண்பர்களுமே புலிகளின் போராளிகள். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழர்களைப் புலிகளாகப் பார்க்கும் பக்குவத்தை உலகமே அடைந்துவிட்டது. அந்தப் பக்குவம் எங்களில் சிலருக்கே இன்னும் வரவில்லையென்றால், அது துயரமல்லவா?...

தமிழர்கள்; இன்று உலகில் இறுமாப்போடு வாழ்வதற்கு புலிகளே காரணம் என்பது அப்பழுக்கற்ற உண்மை. தனிப்பட்ட முறையில் எனக்கு தமிழனாக வாழ்வதில் ஒரு கர்வம் உண்டு. அந்தப் பெருமை புலிகளால் மட்டுமே கிடைத்தது. தமிழர்களது எதிர்காலமும், விடுதலைப்புலிகளது நல்வாழ்வும் பாலும் வெள்ளை நிறமும் போல இரண்டறக் கலந்தது. இந்த இயக்கமும், இந்தத் தலைவனும் இருக்கின்ற காலத்தில் தமிழனுக்கு ஒரு விமோசனம் கிடைக்கவில்லையென்றால், அடுத்த இரண்டாயிரம் வருடங்களுக்கு தமிழன் இப்படியே அல்ல, இதை விடவும் கேவலமான நிலையிலேயே கிடப்பான் என்பது விஞ்ஞான பூர்வமாகவும், வரலாற்று ரீதியாகவும் நீருபணமாகிவிட்ட உண்மை. இந்த நிலையில் விடுதலைப் புலிகளைப் பலவீனப் படுத்துவது போன்ற - அவை உண்மையானவையோ, அல்லது உருவாக்கப்பட்டவையோ - தகவல்களை தமிழர்களாகிய நாங்களே பரப்புவது, இனரீதியாக எவ்வகையான நன்மைகளையுமே எங்களுக்கக் கொண்டுவரப் போவதில்லை; மாறாக தீமையைத்தான் அது கொண்டு வரும்.

சில சமயங்களில் சில தமிழ் எழுத்தாளர்கள் தங்களை 'நடுநிலையாளர்கள்' என்பது போலக் காட்டிக் கொள்ள முனையலாம். அது ஒரு ?கனவான்தனமான? விடயம் என்றும் கருதலாம். அத்தோடு, ?நாங்களெல்லாம் புத்திஜீவிகள். நாங்கள் சாதாரண பாமர மக்கள் போல கண்மூடித்தனமாக ஒரு விடயத்தில் பற்றோ அல்லது வெறுப்போ கொள்ள மாட்டோம். அவர்களுக்கு ஒரு படி மேலே நின்று நிகழ்வுகளை நாங்கள் பகுத்தறிவுக் கண்கொண்டு தான் பார்ப்போம்' என்று காட்டவும் முனையலாம். அப்படியானவர்கள் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம் உண்டு. அடக்குகின்றவர்களுக்கும் அடக்கப்படுகின்றவர்களுக்கும் இடையிலான ஒரு பெரும் அரசியற் போராட்டத்தில் 'பக்கச்சார்பின்மை' என்பது அர்த்தமற்றது. அங்கே 'பக்கச்சார்பு' இருக்க வேண்டும்;. அடக்கப்படுகின்றவர்களின் பக்கம் சார்பாக இருக்கவேண்டும். எழுதும் போது ஒரு சீரிய நோக்கம் இருக்க வேண்டும். அதிலும், இது போன்ற சமூக ? அரசியல் விவகாரங்களை எழுத்திலிடும் போது அதன் நோக்கம், ஒர் உயரிய கருத்தைச் சொல்வதாக இருக்க வேண்டும். அந்தக் கருத்து அந்த எழுத்துத் தொடர்புபட்ட மக்கள் சமூகத்திற்கு அல்லது அந்த எழுத்துத் தொடர்புபட்ட மக்கள் சமூகத்தைப் பற்றி ஒரு உருப்படியான செய்தியைச் சொல்வதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் அந்த மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் அந்த எழுத்து சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தெளிவு இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை உலகம் தோன்றியது முதற்கொண்டு இன்றுவரையான காலகட்டத்தில் முதற் தடவையாக ஈழத்தமிழினம், வரலாற்றின் அதி சிறந்த காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றது. இந்தக்காலகட்டத்தில் எமக்கு ஒரு நல்லது நடக்கவில்லையென்றால் எனது கற்பனைக்கெட்டிய தூரம்வரைக்கும் இனி எப்போதுமே அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனவே, இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோருமே - சாதாரண பொது மக்களிலிருந்து பெரும் கல்விமான்கள், அறிவுஜுவிகள் வரை - ஒன்றுபட்டிருக்கவேண்டியது இன்றியமையாதது. தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைவர் பிரபாகரன் இரு முனைகளில் சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்கின்றார். ஒன்று - ஆயதப் போர் முனை: அதை அவரிடமே விட்டுவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்ளுவார். அடுத்தது ? அரசியற் போர்முனை: அது நாங்கள் எல்லோருமே சேர்ந்து வென்றெடுக்க வேண்டிய பொதுக்களம்.

இங்கே இன்னொரு விடயத்தையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உள் விவகாரங்களைச் செய்திகளின் மையப் பொருளாக்குகின்ற போது அது ஒரு 'விடுதலை இயக்கம்' என்ற அடிப்படை உண்மையை சில ஆய்வாளர்கள் மறந்து விடுகின்றார்கள். அவ்வாறு மறந்து, புலிகள் இயக்கத்தையும் ஒரு சாதாரண அரசியற் கட்சி போலப் பார்க்கத்தொடங்கும் போது, அவர்களது ஆய்வுக்கரு வலுவிழந்துவிடுகின்றது. அவ்வாறு அவர்கள் தவறான கண்கொண்டு பார்ப்பது மிகக் கவலைக்குரிய விடயமும் ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தொழில் சார் அரசியற் கட்சி அல்ல: புலிகளின் போராளிகள் பதவிச் சலுகைகளுக்கும், மாதச் சம்பளதிற்கும், உபரிக் கொடுப்பனவுகளுக்கும் உரியவர்களும் அல்லர். புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்: ஒரு அரசியற் கட்சியை விமர்சிப்பது போலப் புலிகள் இயக்கத்தை விமர்சிப்பது எவ்வகையிலுமே பொருத்தமற்றது. ஆய்வு செய்வதிலும் அதை எழுத்திலிடுவதிலும் எமக்கிருக்கும் வித்தகத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதுவுதைவிட, தேசத்தின் நன்மை கருதி ? எப்போதுமே ? எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்று ஒரு சுயதணிக்கை வைத்திருப்பது தேவையானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ந்து செல்லும் பாதையை இன்னும் சற்றுச் செப்பனிட முடியும் என்று யாராவது கருதினால், தங்களது அந்த அறிவார்ந்த ஆலோசனைகளை ஆங்கிலப் பத்திரிகைகளினுடாக வழங்குவதைவிட வேறு சிறந்த வழிகளும் உண்டு.

துரதிஸ்டவசமாகப் புலிகளின் உள் வீட்டு விவகாரம் வெளியில் வந்துவிட்டிருந்தத. செய்திகளதும், ஆய்வுகளதும் முக்கிய கருப் பொருளாக கருணா விவகாரம் உருவெடுத்ததன் பின்பு விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தங்களது பல்வேறு கருத்துக்களையும் சில தமிழ் ஆய்வாளர்கள் விலாவாரியாக விபரித்து வந்தார்கள். அவர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளில் உட்படுத்தும் தகவல்கள் உண்மையானவையா, அல்லது கற்பனையானவையா என்பது கூட அனேக வாசகர்களுக்குத் தெரிந்திருக்காது. அதன் விளைவு ? எல்லாம் தெரிந்தவர்கள் போல எம்மில் சில ஆய்வாளர்கள் வெளிப்படுத்திய உண்மையற்ற தகவல்களையும் மக்கள் உண்மையானவை என்று நம்பிவிடவும், அவ்வாறு நம்பிக் குழம்பிவிடவும் சாத்தியப்பாடுகள் இருந்தன.

தமிழ் மொழியில் உள்ள உலகத்தின் தலைசிறந்த ? செல்வாக்கு மிக்க கருத்துருவாக்க சாதனங்களுள் ஒன்று 'தமிழோசை'. BBC என்ற பெரும் உலக ஊடக சேவையின் அங்கமாக இருந்தாலும் - 'பக்கசார்பின்மை'யைக் கைக்கொள்ள வேண்டும் என்ற அந்தத் தலைமை நிறுவனத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய செயற்பட வேண்டிய விதிமுறை இருந்தாலும் - 'தமிழோசை'க்கு தமிழர்களின் ஆத்ம ஓசையாக இருக்கவேண்டிய ஒரு தார்மீகக் கடைமைப்பாடும் இருக்கின்றது என்பதை அதன் இயக்குனார்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். கருணா விவகாரம் போன்ற Sensitive-வான விடயங்களைக் கையாளும் போது - தமிழ் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான சுபீட்சம் கருதி - நடுநிலையாக இருந்து செய்திகள் வெளியிட வேண்டும் என்பதை விட நியாயத்தின்பால் நின்று, நன்மையின் பால் நின்று நிகழ்வுகளை ஆய்வு செய்ய வேண்டும் அல்லது செய்திகளை வெளியிட வேண்டும். ஒப்பீட்டளவில் 'தமிழோசை மேன்மையுடன் செயற்பட்டது என்றாலும் - கருணாவிடம் செவ்வி கண்டது, கருணாவின் ஆட்கள் அப்படிச் சொன்னார்கள், இப்படி உரையாற்றினார்கள் என்று செய்தி வெளியிட்டது, அல்லது தமிழ் தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகம் செய்வோரைத் தூர விலக்காமல் ஆதரித்தது எல்லாம் தேவையற்றது. இது ஆனந்தசங்கரி ஐயா, டக்ளஸ் அண்ணர் போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல், ?தமிழோசை?யின் சில செய்தியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறான செயல்கள் - தமிழ் பேசும் மக்களின் அரசியல் - சமூக வாழ்வில் எவ்விதமான நற்தாக்கத்தையும் ஏற்படுத்தும் தன்மையற்றவை என்பது அல்ல மாறாக, அவை பாதகமான விளைவுகளை மட்டுமே உண்டுபண்ணக்கூடியவை.

கொழும்பின் ஆங்கிலப் பத்திரிகைகள் சிலவற்றில் ஆய்வுரைகள் வரையும் சில தமிழ் எழுத்தாளர்கள் இதுவரை நாளும் தாங்களே கேள்விகளையும் கேட்டு அவற்றுக்குத் தாங்களே விடைகளையும் பகிர்ந்து வந்திருந்தார்கள். கருணா விவகாரம் வெளிப்பட்ட உடனடி ஆரம்பத்தில் அதனை உண்மையிலேயே ஒரு வடக்கு - கிழக்கு பிரதேசவாதப் பிரச்சனை என்றும் பின்பு, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களுக்கிடையில் சிக்கல் என்றும் வர்ணித்தார்கள். பின்பு, பிரச்சனைக்கான மூலத்தைப் பற்றி அலசுவதை விடுத்துவிட்டு, கருணாவின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும்?... அவரின் முன்னால் உள்ள தேர்வுகள் என்ன?... கருணா விவகாரத்தைப் புலிகள் எப்படிக் கையாளலாம்?... எப்படிக் கையாள வேண்டும்?. என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்துவந்தார்கள். புலிகளுக்கு ஆலோசனைகள் கூட வழங்கினார்கள்.

ஓட்டுமொத்தமான தமிழ் தேசிய இனமே எதிர் கொண்டு நின்ற ஒரு சவாலை --ஒரு பச்சைத் துரோகத்தை - ?அம்மான்களுக்கிடையிலான பிணக்கு: பொட்டு எதிர் கருணா? என்று ஒரு சிறிய வட்டத்திற்குள் சுருக்கி, இல்லாத ஒரு கதையை இருப்பதாவும், இருக்கிற ஒரு கதையை இல்லாத மாதிரியும் எழுதியிருந்தார் திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள் (Sunday Leader: 14 ? 3 ? 04). 'இந்தக் கருணா பிரச்சனை பொட்டம்மானால் உருவாக்கப்பட்டுத் தூண்டப்பட்டது' என ஆரம்பித்து, அதற்கு ஒரு நீண்ட பட்டியலான கற்பனைக் காரணங்களையும் அடுக்கி, ?இந்தப் பிரச்சனைக்குப் பிரபாகரன் தன்னுடைய தளபதிகளிடையே கைக்கொள்ளும் ஒருவகைப் பிரித்தாளும் தந்திரோபாயமும் கூடக் காரணம்? என்று முற்றிலும் உருவாக்கப்பட்ட ஒரு 20 ஆண்டுகாலக் கட்டுக்கதையையும் அவர் வளர்த்துச்சென்றிருந்தார். பின்பு -?பிரபாகரன் மீதான கருணாவின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள்? என்று ஈர்ப்புத்தன்மை கொண்ட ஒரு தலைப்பை இட்டு, திருவாளர் பாலசிங்கம் அவர்களின் படத்தையும் போட்டு, பாலசிங்கம் அவர்களது Tamil Guardian செவ்வியின் கவர்ச்சியான இரண்டு பந்திகளை கறுப்பு எழுத்துக்களில் பிரசுரித்து - திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள் எழுதியிருந்த (Sunday Leader: 21 ? 3 ? 04) இன்னொரு கட்டுரையின் உள்ளே இருந்த விடயங்கள், அவருக்கு உள்ளே என்ன இருக்கின்றது என்பதன் பிதிபலிப்பு. ஆங்கிலச் சொல் வண்ணங்களால் வெளிப்பார்வைக்குத் தமிழாபிமானச் சாயம் பூசும் அவரது எழுத்தலங்காரத்தின் பூடகமான உட்கருத்துக்களும், நுட்பமான - உள்ளார்ந்த - அர்த்தம் கொண்ட வார்த்தைப் பிரயோகங்களும் எல்லோராலும் விளங்கிக்கொள்ள முடியாததல்ல. "புலிகளிலிருந்து பிரிந்தவுடனே கருணாவுக்கு எக்கச்சக்கமான ஆதரவும் அவர் மேல் ஏராளமான இரக்கமும்" மற்றவர்களிடம் இருந்ததாக அவர் ஆரம்பித்திருந்தார். அதுவே சுத்தப் பொய். உடனடி ஆரம்பத்தில் மக்களுக்குத் திகைப்பு: ஆத்திரம். நோர்வே போன்ற வெளிநாடுகளுக்கு அதிர்ச்சி: கவலை. அது தான் உண்மை. அவர் தொடர்ந்து எழுதுகையில், "துரதிஸ்டவசமாகப் புலிகள் மற்றும் பிரபாகரனுக்கு ஆதரவும், கருணா மீது பலத்த கண்டனங்களும் பெருகி வருகின்றன. அவர் ஒரு துரோகி என்று வர்ணிக்கப்படுகின்றார். அவரது செயற்பாடுகள் துரோகத்தனமானவையாகக் காட்டப்படுகின்றன. இது சமரசமாகப் போவதற்கான நல்ல சகுணமாகத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம்: புலிகள் இயக்கம் ஒரு இராணுவ அமைப்பு: கருணா செய்தது துரோகம் இல்லையெனில், அதை வேறு எவ்வாறு தான் அழைப்பது?... உலகத்தின் எந்த ஒரு நாடாவது, அல்லது எந்த ஒர் இராணுவமானது இவ்வாறான ஒரு விசுவாசமற்ற துரோகச் செயலை சமரசமாகப் பேசித் தீர்க்கத் தயாராய் இருக்குமா?... பிரித்தானியாவில் இருந்து ஒரு பல்கலைக்கழக மாணவன் தொலைபேசியில் கேட்ட இதே போன்ற ஒரு ?சமரச முன்னெடுப்பு? கேள்விக்கு, தமிழ்ச்செல்வன் ஒரே வரியில் பதில் சொல்லியிருந்தார்: "எங்களுடைய தலைவர் இங்கே கொள்ளைக் கூட்டம் நடாத்திக் கொண்டிருக்கவில்லைத் தம்பி". அதை திரு. D.B.S ஜெயராஜ் அவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதே கட்டுரையில் அவர் தொடர்ந்து எழுதுதியிருந்தார்: "புலிகள் கருணாவுடன் தொடர்ந்து பகைமையை வளர்த்து ஆயுத நடவடிக்கையில் இறங்கினால், அவர் சிங்களப் படைகளுடன் தன்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்". ஏன், கருணாவுக்கு வேறு மார்ககங்களே இருந்திருக்கவில்லையா?... தான் செய்த தவறை உணர்ந்து புலிகள் வழங்கிய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளல்?... புலிகளிடம் சரணடைதல்?.... அல்லது, தன்னைத் தானே அழித்துக்கொள்ளல்?..... தனது கட்டுரையை அவர் இவ்வாறு முடித்திருந்தார்: "இந்தப் பிரச்சனையின் முடிவு என்னவாக இருந்தாலும், புலிகள் பலவீனப்பட்டுவிடுவார்கள் கொல்லப்பட்டுவிட்டாலும், கருணா கிழக்கின் தியாகியாகவே திகழ்வார்". பலவீனப்பட்டுவிடுவார்கள் என்பதற்காக, கருணா மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அப்படியே விட்டுவிடச் சொல்லியிருந்தாரா, அல்லது கருணாவை இப்படியே விட்டுவைத்தால் புலிகள் பலமாக இருக்கலாம் என்றிருந்தாரா?... ஒரு துரோகியைத் ?துரோகி? என்று சொல்லப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியாத அவர் மனது, அந்தத் துரோகியைத் ?தியாகி? என்று ஏற்றுக்கொள்ளவே தயாராய் இருந்திருக்கின்றதா?... உப்புச்சப்பற்ற இவ்வாறான கதைகளை எழுதுவதன் மூலம் அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பது புரியவேயில்லை. ?சண்டேலீடர்? காரனிடம் கட்டுரைக்காக வாங்கும் காசுக்காக ஒரு principle-லே இல்லாமல் எழுதுவது அவர் செய்யும் தொழிலுக்கே துரோகமாக அமையாதா?....

மிக அண்மையில் அவர் Frontline (March 27 - April 09) சஞ்சிகைக்கு இதே கருணா விவகாரத்தை வைத்து ஒரு ஆய்வு எழுதியிருந்தார். கருணாவை 'ஓயாத அலைக'ளின் கள நாயகன் என்றும், 'ஜெயசிக்குறி'யை முறியடித்த யுத்தபிதா என்றும், ஆனையிறவை வெற்றிகொண்ட அசகாயசூரன் என்றும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி என்றும் வர்ணித்தது மட்டுமல்ல, அவையெல்லாம் உண்மையென்று கருணாவையே நம்பவைத்தார். (இந்த 'அசகாயசூரன்' என்ன ஆனார் என்பது இப்போது தான் எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே!) ஆனால், உண்மையில் - 'ஜெயசிக்குறி'யைத் திருப்பி அனுப்பி, ஆனையிறவையும் துடைத்தெடுத்த கள நாயகர்களை வரிசைப்படுத்தினால், ஆகக் குறைந்தது பத்துப் பேராவது கருணாவுக்கு முன்னால் இருப்பார்கள். அது மட்டுமல்ல: வடக்குப் போர் முனையில் ஜெயந்தன் படையணி படைத்த வீரசாதனைகளையெல்லாம் கருணாவின் தனிப்பட்ட சாதனைகளாக திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள் உருமாற்றம் செய்கின்றார். அது, வரலாற்றுப் பதிவில் நிகழ்த்தப்படுகின்ற மாபெரும் திரிபு. அவர் எழுதும் இது போன்ற கட்டுரைகள்; உண்மைக்கு முற்றிலும புறம்பான ? அதீத கற்பனையான ? அவரே உருவாக்கிய, அல்லது எப்படியோ கிடைத்;த ஒரு சிறு கடுகை மலையாக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பது அவருக்கே தெரியும். வாசகர்களும், 'வேறு சில ஆட்களும்' - "புலிகளின் உட்கதை தெரிந்த ஆள்" என்று தன்னைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக, இவ்வாறு அவரே பொய்யான தகவல்களை உருவாக்கி தனது கற்பனை ஆய்வுகளை விரித்துச் செல்வது அவரது வழமையாகிவிட்டது

பொதுவாகவே, கடந்த கால நிகழ்வுகளை மீள் நோக்கினால் - புலிகள் இயக்கம் தொடர்பான அனேக ஊகங்களும், எதிர்வுகூறல்களும் பொய்த்துப்போய்விட்டன. உலகத்தின் புகழ்
பூத்த போரறிவியல் மற்றும் அரசறிவியல் ஆய்வு வித்தகர்கள் கூட அந்த விடயத்தில் தோற்றுப் போய்விட்டார்கள். சற்றே பின்னோக்கிப் பாருங்கள்: "ஓரு சுங்கான் புகைத்து முடிப்பதற்கிடையில் புலிகளின் கதை முடியும்" என்று சொன்ன டிக்சிற் ஒரே சுங்கானை இருபது வருடங்களாகப் புகைத்துக் கொண்டிருக்கின்றார். "எனது படைகளைக் கண்டவுடன் புலிப் பொடியங்கள் காற்சட்டையோடு மூத்திரம் விடுவார்கள்" என்று சொன்ன ரஞ்சன் விஜயரட்ணா, இப்போது ஆளே இல்லை. "97 வீதமான கதை முடிந்து விட்டது, 3 வீதம் தான் பாக்கி" என்று சொல்லித்திரிந்த ரத்வத்தையின் காலத்திலேயே புலிகள் சிங்களப் படைக்கு மிகக்கேவலமான தோல்விகளைக் கொடுத்தனர். சொல்லப்பட்ட எதிர்வுகூறல்கள் எல்லாமே தலைகீழ் ஆகிவிட்டன. திரும்பத் திரும்ப தங்கள் ஊகங்கள் எல்லாம் உண்மைக்கு முன்னால் தோற்றுப் போய்விடுவதைக் கண்கூடாகக் கண்டும், சில ஆய்வாளர்கள் திருந்துகின்றார்களே இல்லை. காரணம் என்னவெனில், எல்லாவற்றுக்கும் மேலான ஒரு யதார்த்த உண்மையை இந்த வித்தகர்களெல்லாம் கிரகத்துக்கொள்ளாமல் விட்டுக்கொண்டேயிருப்பது தான் அது. அது என்னவெனில், பிரபாகரன் என்பவர் ஊகங்களுக்கும் எதிர்வுகூறல்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு விசித்திரமான மனிதர் என்பது தான். பிரபாகரன் ஒரு புதிரான மனிதர். கூட இருப்பவர்களாலேயே புரிந்துகொளவதற்குக் கடினமான ஒரு தனித்துவமான மனிதர். அதிலும் குறிப்பாக - இராணுவ ரீதியாகத் தன்னைச் சுற்றிக் காலத்திற்குக் காலம் போடப்பட்டுவந்த நுட்பமான முடிச்சுக்களையெல்லாம் அவர் எவ்வளவு சாதுரியமாக அவிழ்த்து வருகின்றார் என்பது இன்றுவரையும் கண்டறியப்பட முடியாதிருக்கும் அவரது வியக்கத்தகு ஆற்றல். தமிழீழப் போர் முனைகளின் முழுமுதற் தளகர்த்தர் திருவாளர் வேலுப்பிள்ளை பிரபாகரனேயன்றி வேறு எவருமேயில்லை.

[Image: pir.bmp]

பிரபாகரனின் யுத்த முறை பற்றிய ஒரு மிக அடிப்படையான உண்மையை இந்த ஆய்வாளர்கள எவருமே சரியாகப் புரிந்துகொள்கின்றார்களில்லை என்று தான் நான் கருதுகின்றேன். அது என்னவெனில், பிரபாகரன் வகுக்கும் போர் விய10கங்கள் ஆட் தொகையின் வலுவையோ, அல்லது படைக்கலக் களஞ்சியத்தின் அளவையோ நிச்சயமாக அடிப்படையாhகக் கொண்டவையல்ல என்பது தான். 13 ஆண்டுகளுக்கு முன்னால், ஆனையிறவு மீது மேற்கொள்ளப்பட்ட - ஒரு மாத காலம் நீண்ட -வெற்றி பெற முடியாமற் போன சமரின் பின், "இலங்கையில் இரண்டு இராணுவங்கள்" இருக்கின்றன என்றவிதமான ஒரு கருத்தை BBC சொல்ல, அந்தக் கருத்துத் தொடர்பாகக் கருத்துச் சொன்ன பொட்டம்மான் சொன்னார், "இரு இராணுவங்கள் என்பதின் அளவுகோல் 'போர்வலு' எனின், அது சரியானதே". அதாவது, பிரபாகரனின் போர்வலு என்பது என்னவெனில் - தேர்ந்தெடுக்கப்பட்ட மூலோபாயம், நுண்ணறிவு கொண்ட வேவு, போர்நுட்பம் மிக்க திட்டமிடல், தேவைக்குச் சற்றும் அதிகமில்லாத ஆள் வலு, பொருத்தமான போருபகரண வழங்கல், மதிநுட்பம் வாய்ந்த படைநகர்த்தல், அர்ப்பணிப்பும் துணிவுடநுமான மனநிலை போன்ற இன்னோரன்ன காரணிகளின் மிகத் துல்லியமான அளவுகளிலான - உச்சப் பெறுபேற்றைத் தரக்கூடிய கலவை ஆகும். இந்த இடத்தில், இந்த 'ஜெயந்தன் படையணி' பற்றிய ஒரு உண்மையையும் சொல்லுவது பொருத்தமாக இருக்கும்: அது என்னவோ கருணா புலிகளில் இருந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டப் போராளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால், அதற்குத் தகுந்த பயிற்சிகளைக் கொடுத்து, உகந்த ஆயுதங்களை வழங்கி, பொருத்தமான சண்டைக்களங்களில் தொடர்ச்சியாக இறக்கி, தேர்ந்த அனுபவப் பாடங்களைப் புகட்டி, புலிகளின் முதன்மைப் போரணிகளுள் ஒன்றாகத் திகழந்தெழச் செய்த பெருமை - தலைவர் பிரபாகரனை மட்டுமே சாரும். "வன்னியில் ஜெயந்தன் படையணிப் போராளிகள் ஆயுதங்கள் களையப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்" என்று BBC-'தமிழோசை'க்கு கருணா சொன்ன கதைக்கு இன்னும் மெருகேற்றி, "பொட்டம்மானின் ஆட்கள் அவர்களை ஒவ்வொருவராகப் பரிசோதித்துக்கொண்டு இருக்கின்றார்கள்" என்றும் எழுதியிருந்தார் திரு. D.B.S ஜெயராஜ் அவர்கள். ஜெயந்தன் படையணி மட்டக்களப்புக் களத்தைத் திறந்த போது, தான் எழுதியது எப்பேர்ப்பட்ட பொய் என்பது அவருக்குப் புரிந்திருக்கும்.

தமிழ்ச்செல்வன் திரும்பத் திரும்ப "கருணா ஒரு தனி ஆள்" என்று சொல்லிக்கொண்டேயிருந்தார். ஆனால் திருD.B.S ஜெயராஜ் அவர்களோ ? 'கருணாவிடம் ஆறாயிரம் பேர் இருக்கின்றார்கள், ஆட்டிலறிப் பீரங்கிகள் இருக்கின்றன, பெரும் ஆயுதக்கிடங்கே இருக்கின்றது. கருணா மீது புலிகள் பாயும் போது, கருணாவும் அவர்களைச் சும்மா விட்டுவிடப் போவதில்லை. சிங்களப் படை வேறு சண்டைக்குள் இழுக்கப்படப்போகின்றது. மட்டக்களப்பு வாவிகளில் இரத்த ஆறு ஓடப் போகின்றது' என்றவிதமாகப் பயமுறுத்திக்கொண்டே இருந்தார். அதை நம்பியவர்களும், ?என்ன ஆகுமோ?!... ஏது ஆகுமோ?!...? என்று தலையில் கை வைத்துக்கொண்டிருக்க, பிரபாகரனோ, மூன்றே நாளில் விசியத்தை முடித்து, எல்லோரையும் மூக்கில் விரல்வைக்க வைத்துவிட்டார். உண்மை என்ன என்பது இப்போது ஐயம் திரிபுறத் தெளிவாகிவிட்டது. இந்த 'ஆள் வலு' தொடர்பாக, அனேகமானவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்ற இன்னொரு பரிமாணமும் உண்டு. அது போரியல் பரிமாணம் அல்ல உளவியல் பரிமாணம். சாதாரண மனிதர்கள் போராளிகளாகும் போது, அவர்களை - சுயத்தின் வரம்புகளைக் கடந்து, ஒரு பொது அபிலாசைக்காகத் துறவறம் பூணவைக்கும் தெயவீக ஆளுமை, பிரபாகரனிடம் மட்டுமே தான் உண்டு. பொதுமக்களாக சாதாரண வாழ்வில் இருந்து விட்டுப் பின்பு போராளிகளாக இருப்பவர்களாகவும், போராளிகளாக இருந்துவிட்டுப் பின்பு சாதாரண வாழ்வுக்கு வந்தவர்களாகவும் அனேகருடன் எனக்குப் பரிச்சயம் உண்டு. அவர்கள் பிரபாகரனின் போராளிகளாக இருந்தபோது முற்றிலும் மாறுபட்ட மனிதர்களாக இருந்தார்கள் இருக்கின்றார்கள்.

தேர்தலுக்குப் பின்பு, கருணா விவகாரத்தைப் புலிகள் என்னவிதமாகக் கையாளலாம்?... என்று ஆராய்ந்திருந்தார் திரு. தராகி அவர்கள். Daily Mirror (March 25, 2004) பத்திரிகையில் எழுதிய நீண்ட ஆய்வின் முடிவில் அவர் இவ்வாறு சொல்லியிருந்தார்: "புலிகளுக்கு இருக்கும் முதல் வழி கருணாவை மட்டக்களப்பு - அம்பாறைக்குள் ?பூட்டிச்சிறைப்படுத்தி?, அவர் சிங்களத்தரப்புடன் தொடர்புகளை உருவாக்குவதைத் தடுக்க வேண்டும்". இது உள் ஒன்று வைத்து வெளியில் வேரொன்று சொன்னது போல இருந்தது. அவ்வாறாக கருணாவை மட்டக்களப்பு அம்பாறைக்குள் முடக்கிவிட்டிருந்தால், அது கருணாவே கேட்ட அந்த 'மட்டக்களப்பு அம்பாறைக்கு தனியான சுய நிர்வாக அலகு' ஒன்றை உத்தியோகப்பற்றற்ற முறையில் புலிகளே கொடுத்த மாதிரியல்லவா ஆகிவிட்டிருந்திருக்கும்;?... ஆக, கருணா செய்த துரோகத் தனத்தை மறந்து - அவரை மட்டக்களப்புக்குள் முடக்கி - அவரை அப்படியே விட்டுவைப்பதன் மூலம், கருணா கேட்டதையே அவருக்குக் கொடுத்துவிடச் சொல்லியிருந்தாரா இந்த ஆய்வாளர்?

கருணா தான் முன்பு சார்திருந்த இராணுவ அமைப்பின் விதிமுறைகளை மீறியவர் என்ற வகையில் அவர் அந்த அமைப்பின் இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப் படவேண்டியவர். அல்லது, அதன் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். அவர் சிங்களப் படையுடன் சோந்துவிடுவார் என்பதற்காக அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையைப் புலிகள் கைவிட்டிருக்க முடியாது. ஒரு இராணுவக் கட்டமைப்பின் நியதி எவ்வாறு இருக்கும் என்பது பிரபல்யமான இந்தப் போரியல் ஆய்வாளருக்குப் புரியவில்லை என்பது ஆச்சர்யமானது.

இந்த ஆய்வாளர்கள் எல்லோருமே - புலிகளின் பாரம்பரியப் பின்னணியைச் சரியாகக் கிரகித்துக் கொள்ளாமல், அல்லது கிரகித்துக்கொள்ளாதது போலக் காட்டிக்கொண்டு கருத்துரைத்து வந்தார்கள் என்று தான் நினைக்கின்றேன்.

துரோகிகளைக் கையாள புலிகளுக்கு இருக்கின்ற முதலும், இடையும், கடைசியுமான ஒரே வழி, அந்த ஒரே வழி தான். அது புலிகள் வழமையாகத் துரோகிகளை எவ்வாறு கையாளுகின்றார்களோ அதே வழிதான்.

புலிகள் எப்போதும் புலிகளாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கும் வரைதான் தமிழனுக்கு மரியாதை.

இணையத்தில் சூரியனுக்காக -குழைக்காட்டான்.

சுடரொளி, 18 ? 04 - 2004
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
[b]தேர்தலுக்குப் பின்பு, கருணா விவகாரத்தைப் புலிகள் என்னவிதமாகக் கையாளலாம்?... என்று ஆராய்ந்திருந்தார் திரு. தராகி அவர்கள். Daily Mirror (March 25, 2004) பத்திரிகையில் எழுதிய நீண்ட ஆய்வின் முடிவில் அவர் இவ்வாறு சொல்லியிருந்தார்: "புலிகளுக்கு இருக்கும் முதல் வழி

திரு தராக்கி சொன்னதை இந்தக் கட்டுரை எழுதியவர் ஒழுங்காக உள்வாங்கவில்லை என்று எண்ணுகிறேன்! :?


Reply
#3
அதே போல் தராகி அவர்கள் சமாதான காலம் ஆரம்பமாகும்போதே இந்த சமாதான காலத்தை பாவித்து போராட்டத்தை எப்படி எதிரி சீர்குலைப்பான ; என்றும் எழுதியிருந்தார்.
எனது கணிப்பின்படி தராகி மிகச் சிறப்பாகவே எழுதிக்கொண்டு வருகிறார்..
Reply
#4
துரோகிப்பட்டம் எடுத்த எடுப்பில் கொடுத்தது பிழை என்பதை உணரும்காலம் நெருங்கிலிட்டதுபோல் கதைகள் இங்கு தெடருகின்றனவே.. எல்லாம் நன்மைக்கே..

மற்றறைய தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் தெடங்கப்பட்டுள்ளன போலும்.. குடாநாட்டுச் செய்திகள் பிரச்சாரமயமாகப்போகின்றனவே..

அதுசரி கருணாவின்ரை புத்தகம் எப்ப வரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
Mathivathanan Wrote:அதுசரி கருணாவின்ரை புத்தகம் எப்ப வரும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தாத்தா நீங்க ரொம்பத்தான் லொள்ளு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)