Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெற்காசியா நோக்கி பலமடைய முனையும் அமெரிக்க வல்லாதிக்கம்...
#1
மத்திய ஆசியாவில் அதிகரித்து வரும் அமெரிக்க தலையீட்டுக்கு இருப்பிட வசதியளிக்கும் இலங்கை

அமைதி காக்கும் படைக்கான பயிற்சி முகாமும் அமெரிக்க - இலங்கை இராணுவ உறவுகளும்

இலங்கையில் ஏப்ரல் 2 தேர்தலை அடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றிய அதன் வரையறுக்கப்பட்ட விமர்சனங்களை கைவிட்டுள்ள அதேவேளை, அது 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" ஆதரவளித்தல் என்ற போர்வையில் புஷ் நிர்வாகத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குகிறது.

வெளியுறவு அமைச்சர் லஷ்மன் கதிர்காமர், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உட்பட ஒரு தொகை விடயங்கள் பற்றி சிரேர்ட அமெரிக்க அலுவலர்களுடன் ஒரு தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக மே நடுப்பகுதியில் வார்pங்டனுக்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டார். ஈராக்கினுள் பரந்தளவிலான அமெரிக்க விரோத எழுச்சியும் மற்றும் ஈராக்கிய கைதிகள் மீதான திட்டமிடப்பட்ட அமெரிக்க சித்திரவதைகள் பற்றிய அம்பலப்படுத்தல்களும் இடம்பெற்ற சமயத்திலேயே கதிர்காமர் தனது பயணத்தை மேற்கொண்டிருந்த போதிலும், அவர் அமெரிக்க கொள்கைகள் பற்றிய எந்தவொரு விமர்சனமும் செய்யவில்லை.

மாறாக, புரூகிங்ஸ் நிலையத்தில் கதிர்காமர் உரையாற்றும் போது, புஷ் நிர்வாகத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். செப்டெம்பர் 11 க்கும் நீண்ட காலத்திற்கு முன்னதாகவே இலங்கை பயங்கரவாதத்திற்கு இலக்காகி வந்துள்ளது. இப்போது அது உலகம் அறிந்த விடயம். பயங்கரவாதத்தின் கொடுமைகளையிட்ட உங்களுடைய மனவேதனைகளை நாமும் பகிர்ந்து கொள்கிறோம். அமெரிக்காவை உலகம் முழுவதும் மெச்சுகிறது. நாம் அமெரிக்காவின நிரந்தர நண்பர்களாக இருப்போம் என அவர் தெரிவித்தார்.

இலங்கை, அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு வழங்கும் ஆதரவிற்கு பிரதியுபகாரமாக, கொழும்பு அரசியல் நிறுவனம் வழமையாகவே 'பயங்கரவாதிகள்" என முத்திரை குத்தி வரும் விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதில் அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றது. வாசிங்டன், விடுதலைப் புலிகளுடனான இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு நெருக்கி வருகின்றது. கொழும்பு அரசாங்கம் தன்னுடைய நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தைக்கு தள்ளுவதற்காக புஷ் நிர்வாகத்தின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றது.

கதிர்காமரின் கருத்துகள், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவரது சிலங்கா சுதந்திரக் கட்சியின் (சி.ல.சு.க.) பக்கம் ஒரு பெரும் மாற்றத்தை பிரதிபலிக்கவில்லை. 2001 இல் அவரது முன்னைய ஆளும் கூட்டணியான பொதுஜன ஐக்கிய முன்னணியும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை வெளியேற்றுவதற்காக தனது முழு ஆதரவையும் கொடுத்தது. இது ஐம்பது வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்குள் இந்தியத் துணைக்கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவத் தலையீடாகும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமெரிக்காவிற்கு விமானத்தள மற்றும் துறைமுக வசதிகளை வழங்குவதற்கு தனது தயார் நிலையை பிரகடனப்படுத்தியது.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட சமயம் பொதுஜன ஐக்கிய முன்னணி, அரசாங்கத்தில் இருக்கவில்லை. ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் யுத்தத்திற்கு சந்தேகத்திற்கிடமற்ற ஆதரவைப் பிரகடனப்படுத்தியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது, ஐ.தே.மு.வின் நிலைப்பாட்டை தொகுத்துரைத்தார். ஐ.நா.வை குற்றம் சாட்டுவதன் மூலம் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி வாசிங்டனுக்கு ஒரு உலக பொலிஸ்காரனைப் போல் தலையீடு செய்வதைத் தவிர வேறு தேர்வுகள் இல்லாத நிலைமையை தோற்றுவித்துள்ளது எனப் பிரகடனம் செய்தார்.

குமாரதுங்கவோ அல்லது 'இடதுசாரி" பங்காளிகளான லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியோ சரி அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பையும், அதை நியாயப்படுத்துவதற்கு கூறப்பட்ட பொய்களையும் அல்லது இந்த எண்ணெய் வள நாடு மீதான சட்டவிரோதமான நவ காலனித்துவ ஆக்கிரமிப்பையும் கண்டனம் செய்யவில்லை. யுத்த விரோத எதிர்ப்பை பயன்படுத்திக் கொள்வதன் பேரில், குமாரதுங்க சில எச்சரிக்கைகளை வெளிப்படுத்தியதோடு விக்கிரமசிங்கவையும் விமர்சித்தார். சில சி.ல.சு.க. தலைவர்கள் யுத்த விரோத எதிர்ப்புகளிலும் இணைந்து கொண்டனர்.

எவ்வாறெனினும், குமாரதுங்கவின் நிலைப்பாடானது எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் ஐ.நா.வின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் எனும் பிரான்ஸினதும் ஜேர்மனியினதும் அழைப்பிற்கு ஆதரவளிப்பதோடு வரையறுக்கப்பட்டிருந்தது. கடந்த பெப்ரவரியில் கோலாலம்பூரில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய போது, ஐ.நா. அமைப்பின் அங்கீகாரமின்றி ஒரு இறைமையுடைய நாட்டை ஆக்கிரமிப்பது இலங்கையின் நிலைப்பாடு அல்ல எனப் பிரகடனப்படுத்தினார். அவரது உரையில், அமெரிக்கா பற்றியோ அல்லது ஈராக்கிலான அதன் திட்டங்கள் பற்றியோ குறிப்பிடுவதற்குக் கூட தவறி விட்டார். இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து குமாரதுங்க இந்த முணுமுணுப்பு விமர்சனங்களைக் கூட கைவிட்டு விட்டார்.

எவ்வாறெனினும், குறிப்பிடத்தக்க வகையில், சுதந்திரக் கூட்டமைப்பில் சி.ல.சு.க.வின் பிரதான பங்காளியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) அரசாங்கத்தின் நிலைப்பாட்டையிட்டோ அல்லது அமெரிக்காவுடன் இராணுவ உறவுகளை பலப்படுத்துவதையிட்டோ எந்தவொரு எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. 1960 இல் சிங்கள பேரினவாதம் மற்றும் காஸ்ட்ரோவாதத்தின் ஒரு கலவையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஜே.வி.பி., இன்னமும் சில சந்தர்ப்பங்களில் ஏகாதிபத்திய விரோதியாக காட்டிக் கொள்வதோடு மற்றும் அடிக்கடி ஊடகங்களில் மார்க்சிச அமைப்பாகவும் விபரிக்கப்படுகிறது.

ஜே.வி.பி. அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது, யுத்தத்திற்கு தனது எதிர்ப்பை பிரகடனப்படுத்தியதோடு பிரான்ஸையும் ஜேர்மனியையும் சமாதானத்தின் வல்லுநர்கள் என புகழ்ந்தது. ஆனால், புஷ் படையெடுப்பை பிரகடனப்படுத்திய பின்னரும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஈராக்கிலான அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்வதை ஏற்றுக் கொண்டதை அடுத்தும் ஜே.வி.பி. 'எதிர்ப்பு" மங்கிப்போனது.

இப்போது சி.ல.சு.க. முதலாளித்துவ அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கும் ஜே.வி.பி. அரசியல் நிறுவனத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. அதன் யுத்தவிரோத வாய் வீச்சுகள் சம்பிரதாய சொற்பொழிவுகளுக்காக விதிவிலக்கற்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு இராணுவங்கள் ஈராக்கை விட்டு 'வெளியேற வேண்டும்" என்பது ஜே.வி.பி.யின் இந்த வருட மே தினக் கூட்டத் தீர்மானங்களில் ஒன்றாக இருந்த போதிலும், சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அத்தகைய கொள்கைக்கு அடிபணிய வேண்டும் மற்றும் பிரசாரம் செய்ய வேண்டும் எனக் கோரும் எண்ணம் அந்தக் கட்சிக்கு கிடையாது.

அமெரிக்க - இலங்கை இராணுவ உறவுகள்

சுதந்திரக் கூட்டமைப்பு சொற்களில் மாத்திரமன்றி செயலிலும் பிராந்தியத்திலான வார்pங்டனின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றது. புதிய அரசாங்கமானது வார்pங்டனுடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள முன்செல்கின்றது. இது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்புக்கு வசதியளிக்கும். இலங்கைத் தீவானது முக்கிய கடல் மார்க்கங்களைச் சார்ந்திருக்கும் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் விசேடமாக தெற்காசியாவிலான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு வசதியான தேவை நிரப்பும் மையமாக விளங்கும் இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கின்றது.

கதிர்காமரின் விஜயத்தின்போது, அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ், அமெரிக்காவின் மூலோபாயத்திற்கு இலங்கையில் அதிகரித்துவரும் முக்கியத்துவம் பற்றி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் சமிக்ஞை செய்தார். 'எல்லா விவகாரங்களிலும் இலங்கையின் உதவி பெறப்படும்... பயங்கரவாதம் மீதான யுத்தம் பற்றிய விடயத்தில்" என அவர் விபரிக்காமலே பிரகடனம் செய்தார்.

ஐ.தே.மு. அரசாங்கம், அமெரிக்க யுத்தக் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு எண்ணெய் நிரப்புவதற்கும் மற்றும் ஏனைய சேவைகளுக்குமாக இலங்கையிலுள்ள தளங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதற்காக பாவனைக்கும் பரிமாற்றத்திற்குமான உடன்படிக்கை ஒன்றைப் பற்றி அமெரிக்காவுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களைத் தொடங்கிவிட்டது. கதிர்காமர் வார்pங்டனில் இருக்கும்போது, பிராந்தியத்தில் ஒரு விரிவான அமெரிக்க இராணுவ தேவை நிரப்பு வலையமைப்புக்கான திட்டத்தின் பாகமாக விளங்கும் இத்தகைய உடன்படிக்கையுடன் முன்செல்வதற்கு சுதந்திரக் கூட்டமைப்பின் விருப்பத்தைச் சுட்டிக்காட்டினார்.

2002 இல் பிலிப்பைன்ஸால் கைச்சாத்திடப்பட்ட இதுபோன்ற ஒரு உடன்படிக்கை அமெரிக்காவின் கோரிக்கையின் அளவு என்ன என்பதை சுட்டிக் காட்டுகிறது. இராணுவ அணிவகுப்பு மற்றும் உதவி உடன்படிக்கையானது, படைவீரர் தங்குவதற்கு வசதியளிப்பது போன்ற அடித்தள சேவைகள், தொலைத் தொடர்பு மற்றும் வைத்திய சேவை உட்பட, விரிவான தேவை நிரப்பு மற்றும் களஞ்சிய வசதி போன்றவற்றை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்குகின்றது.

சுதந்திரக் கூட்டமைப்பு ஈராக்கிற்குத் துருப்புகளை அனுப்பாத போதிலும், இலங்கை தற்போது 'அமைதிகாக்கும்" படைக்கு அமெரிக்க அனுசரணையிலான ஒரு பயிற்சி முகாமை நடத்துகிறது. முதற்தடவையாக பங்களாதேர்pய, நேபாள மற்றும் மொங்கோலிய துருப்புகள் தெற்காசிய அமைதி காக்கும் முன் நடவடிக்கையின் ஆதரவின் கீழ் தீவின் தெற்குப் பகுதியில் ஒரு இரகசியமான இருப்பிடத்தில் கூட்டு காலாட்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்கிலி பத்திரிகையின் அண்மைய வெளியீட்டில், இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் லயனல் பலகல்ல, ஆரம்பத்தில், இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு, நாம் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மாத்திரமே ஈடுபடவேண்டி வரும். பின்னர், எங்களால் சமாதான அமுலாக்கத்திற்கு செல்லமுடியும் எனக் குறிப்பிட்டார். இந்தக் கருத்துகள், இலங்கை அமெரிக்காவின் பூகோளம் முழுவதும் கொள்ளையிடும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய தயாராகின்றது என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. இவை அனைத்தும் அமைதிகாத்தல் என்ற போர்வையிலேயே இடம்பெறுகின்றன.

அமெரிக்கா இலங்கை இராணுவத்தில் நீண்ட தலையீடு செய்துள்ள வரலாற்றைக் கொண்டுள்ளது. இதில், இலங்கையின் விசேட படைப் பிரிவுகளுக்கு பயிற்சியளிப்பதும் அடங்கும். ஆயினும், இந்த அபிவிருத்திகள், சுதந்திரக் கூட்டமைப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான இராணுவ உறவை அமைப்பதை சுட்டிக் காட்டுகின்றன. கதிர்காமர் அமெரிக்காவில் இருக்கும்போது, அமெரிக்க கடற்படை இலங்கைக்கு விற்கவுள்ள கடற்கரை பாதுகாப்பு கப்பலையும் பார்வையிட்டார். பென்டகனும் மே மாதத்தில் தாய்லாந்தில் நடைபெற்ற அமெரிக்க அனுசரணையிலான கோப்ரா கோல்ட் கூட்டு இராணுவப் பயிற்சியைப் பார்வையிட இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இலங்கை, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்ப்பதோடு எல்லா வெளிநாட்டு துருப்புகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் வெளியேற்றக் கோருமானால், இந்த அனைத்தும் இயல்பாகவே சாத்தியமற்றதாகிவிடும். இது குமாரதுங்கவும் சி.ல.சு.க. வும் மற்றும் ஜே.வி.பி.யும் செய்ய விளையாத ஒன்று.

thinakkural.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
இந்தியாப்புராணம் முடிஞ்சு இப்ப அமெரிக்காப்புராணமாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
தாத்ஸ் இதை வடிவா வாசித்து தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கோ....இது அப்படியில்லை..........
அதுதான் உங்கட சங்கரி புராணம்...டக்ளஸ் புராணம்...கருணா புராணம் மாதிரி :wink:
Reply
#4
உங்கை படிக்க என்ன இருக்கு..?? எனக்கு பாரதம் படிக்க நேரமில்லையப்பா..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
இல்ல ஆயுத சன நாய் அக நீரோட்டதில்ல இணைந்த அத்தியடிக்குத்தியனின் பேட்டி கேட்டு எழுத்தில வடிக்க நேரமிருக்கு... அப்ப எல்லாம் உந்த ரம் பிழையில்லாமல் வேலை செய்யும் ....ஆனா உது படிக்கத்தான் நேரம் இல்லையாக்கும்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
ஏன்ராப்பா கரைச்சல்படுத்திறா..? அவங்கள் ரெயினிங் குடுத்தாலென்ன..? 10000 ;தை கொண்டுவந்து இருத்தினாலென்ன.. அது அவங்கள் சிங்களவன் பிரச்சனை.. அதுக்குள்ளை நீங்கள் அம்பிட்டா உங்கடை அவங்கடை பிரச்சனை.. கூப்பிடுறது நீங்கள் விலக்குப்பிடிக்கிறது நானே..?
:oops: :oops: :oops:
Truth 'll prevail
Reply
#7
உங்களை ஒருத்தரும் விலக்குப் பிடிக்கச் சொல்லிக் கூப்பிடேல்லையே... உங்களுக்கும் பெரிய நினைப்பு.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சிங்களவன் உப்படித்தான் போத்துக்கேயர் ஒல்லார்ந்தர் ஆங்கிலேயர் எண்டு கூட்டிக் கொண்டாந்துட்டு அடிவாங்கினவன்... அவங்கட கையாலையே....பட்டும் திருந்தல்ல....அதுகளோட சேர்ந்து உங்கள மாதிரிக் கூட்டங்களும்.....இன்னும் பட்டும் திருந்தல்ல..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)