Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இதன் பொருள் என்ன
#1
என் சுவாசக்காற்றே படத்தில் வரும் தீண்டாய் மெய் தீண்டாய் பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அந்தப்பாட்டல் கவிஞர் வைரமுத்து எழுதியது. அந்தப்பாடல் தொடக்கத்தில் ஐந்து வரிகள் எதோ ஒரு சங்கஇலக்கியத்தில் இருந்து எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அதில் பசலைநோயால் அல்லலுறும் தலைவியின் வேதனையை தலைவியே பாடுவதாக உள்ளது.

ராகா.கொம் தளத்தில் அதன் வரிகள் கிடைத்தன.

<b>கன்றும் உண்ணாது களத்திலும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்கான்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உனியார் வேன்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே</b>

இதில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். இந்தச்செய்யுள் எந்த இலக்கியத்தைச்சேர்ந்தது. இதன் பொருள் என்ன என்பதை யாரும் தெரிந்து கூறமுடியுமா?.

நன்றி
அன்புடன் ஆதிபன்

http://www.raaga.com/channels/tamil/lyrics/182.html
Reply
#2
வெள்ளிவீதியார் எழுதிய குறுந்தொகைப் பாடல் இது.

"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே"


கன்று=சேய் பசு(குட்டி)
கலம்=பாத்திரம்
ஆ=பசு, எனவே நல்லான்=நல்+ஆ+ன்=நல்ல பசு
தீம்=இனிய
ஐ=தலைவன்
பசலை=தலைவன் பிரிவால் தலைவிக்கு ஏற்படும் நிறமாற்றம்
திதலை=தேமல்
அல்குல்=இடுப்பு,பெண்குறி
மாமை=மேனி,நிறம்
கவின்=அழகு.


வீணாக்கப்படும் பசுவின் பாலை போல் என் பெண்மை எனக்கும்,என் கணவனுக்கும் பயன்படாததால் என் பொலிவு குன்றுகின்றது
\"


\" -()
<i><b></b></i>
Reply
#3
நன்றி நன்றி பொழிலாரே நீங்கள் நிச்சயம் விடையிறுப்பீர்கள் என நான் எதிர்பார்த்தேன் உங்கள் உதவி சிறியவர்களாகிய எமக்கு மிகவும் தேவை
\" \"
Reply
#4
எத்தனையோ முறை அந்த பாட்டை கேட்டிருந்தாலும் விளக்கத்தை அறிந்திருக்கவில்லை. விளக்கத்திற்கு மிக்க நன்றி பொழில்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
மிக்க நன்றி திரு.பொழில் உங்கள் விளக்கம் மிகமிக நன்றாக இருக்கின்றது. நன்றி
[b] ?
Reply
#6
வட நாட்டின் கோக்கவியே பொழிலரே....எமக்கோர் ஐயம்... தாங்கள் செப்பிய குறுந்தொகை வள்ளுவன் முன்வந்ததா பின் வந்ததா.....???!

வள்ளுவன் வரி நிறை பசலை இங்கது விழம்பிடக் கண்டோம்.....பொருளதும் பொருந்திடக் கண்டோம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
விளக்கம் அருமையாக இருந்தது திரு. பொழில்.
Reply
#8
kuruvikal Wrote:தாங்கள் செப்பிய குறுந்தொகை வள்ளுவன் முன்வந்ததா பின் வந்ததா.....???!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

ஐயன்மீர்,
நிகழும் ஆண்டு 2035-வது திருவள்ளுவர் ஆண்டாம்.சங்ககாலம் என்பது கி.மு 1000 முதல் கி.பி 100 வரை என நவிலப்படுகின்றது. கணிக்கப்பெற்ற இக் காலவரம்புகளின் படி தேறும்போது குறுந்தொகை குறளின் முன்னம் தோன்றியிருக்கலாம். ஆனால் குறுந்தொகை பல புலவர்களால் பாடப்பெற்ற தொகைப்பனுவலாம்.வெள்ளிவீதியார் வாழ்ந்த காலம் ஞான் ஆய்ந்தும் அறியப்பெற்றிலேன்.

-----------------------------------------------------
விழம்பு= சாதம். தட்டுப்பிழையிலும் ஒரு கருத்து புதைத்திருக்கின்றீர் .மகிழ்ச்சி.
\"


\" -()
<i><b></b></i>
Reply
#9
அப்போ வள்ளுவன் கடன் கொண்டு குறளமுதம் தனில் காமத்துப்பால் கலந்திட்டது என்பதாகிடுமே...தங்கள் பார்வைதான் என்ன...?!

ஆன்றோர் செப்பிய வடிவம் கொண்டு இன்றுளோர் மானிடர் கொண்ட காமன் உணர்சிகள் பக்குவமாய் இயம்பிடுதல் கண்டிலோமே.....காமன் வெறும் நிர்வாணமாய்....திரையாகிலும் பாரதி வழி வந்த கவியாகினும் எங்கும் நிறைந்துளானே....காரணம் தான் யாதோ...தங்கள் சிந்தையில் பட்டதைச் செப்பலாம் கேட்போமே....!

விழம்பில் விளம்பிட வித்தகர் நீவிர் தவறு சரித்துப் பொருள் கண்டீர்....பாராட்டுக்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
சங்ககாலம் என்பது முப்பால் கவிஞனுக்கு முந்தைய காலமாக கணிக்கப்டுகின்றது.பனுவல்களின் தோற்றப்பகுப்பை இவ்விணைப்பில் காண்க.http://www.geocities.com/Athens/5180/chrono1.html

இதை வைத்து வள்ளுவன் கடன் வாங்கினான் என்பதை எங்ஙனம் கணிக்கயியலும்.
காமத்தை குறித்து கருத்திட என் சிந்தை விழையும் முன் என் மனதை புழுவாக்கிய பட்டினத்தார் வரிகளை நினைவு கூர்கின்றேன்.

"சிற்றம்பலமும் சிவனும் அருகே இருக்க
வெற்றம்பலம் தேடிவிட்டோமே இறைவா-நித்தம்
பிறந்தயிடம் தேடுதே பேதை மடநெஞ்சம்
கறந்தயிடம் காணுதே கண்."
.......................... ம்...
தன்மனை தாண்டி பிறமனை நாடும் காமம் பக்குவமல்ல என்பதே எனக்கு மட்டுப்படுவது.
கவிக்கண்,கலைக்கண் மோகனமாகா.
திரைக்கண்ணில் காமம் கொச்சையும் , மிருகமும் மிகுதியாம்.
இது என் சிற்றறிவே பிழையாயின் சுட்டுக.
\"


\" -()
<i><b></b></i>
Reply
#11
தரவுகளுக்கும் தங்கள் பார்வைதனை நயம்பட இயம்பியதற்கும் நன்றிகள்.!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
அற்புதமான விளக்கங்கள். தங்கள் இலக்கய அறிவை ரசிக்கின்றேன். அன்று அங்கு படித்து விட்டு வந்தவை மீண்டும் இங்கு இணையத்தால் கிடைப்பதும் மகிழ்ச்சி தான்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)