Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மே தினம்
#1
[size=15] [align=center:16aaa3c826]அருங் கேடன் என்பது அறிக மருங்கு
ஓடித் தீவினை செய்யான் எனின்

(ஆத்திரப்பட்டுப் பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்பவனே
தனக்கு ஒரு துன்பமும் வராமல் இருக்கக்கூடியவன் என்பதை அறியவேண்டும்) [/align:16aaa3c826]

[align=center:16aaa3c826][Image: mayday.jpg][/align:16aaa3c826]

<b>[align=center:16aaa3c826]மேதின சங்கற்பம் [/align:16aaa3c826]</b>
இன்று மேதினம். உலக தொழிலாளர் தினமாக இது கொண்டாடப்படுகின்றது. சர்வதேசரீதியாக கொண்டாடப்படும் 118ஆவது மே தினமான இன்றைய தினத்தின் மகத்துவம் தொழிலாளர் வாழ்வில் ஓர் அற்புதமான விடிவெள்ளியாக மலர்ந்த நாளாகும்.

நவீன விஞ்ஞானத்தின் வளர்ச்சியுடன் ஏற்பட்டுவிட்ட கைத்தொழில் புரட்சியுடன் உலகம் வித்தியாசமானதொரு யுகத்தினை நோக்கிய பயணத்தில் ஈடுபடவாரம்பித்தபோதும் உற்பத்தி அம்சங்கள் அனைத்தும் சொத்துடைமை வர்க்கத்திற்கு சொந்தமாகவிருந்தது உற்பத்தியின் பிரதான அம்சமான உழைப்பாளிகள், ஈவு இரக்கமற்ற முறையில் சலுகைகள் எதுவும் வழங்கப்படாத நிலையுடன் குறிப்பிட்ட கால நேரத்திற்கு தொழில் செய்தல் என்ற வரையறைகூட இல்லாது உழைப்புச் சுரண்டலுக்குள்ளாகியிருந்தனர்.

இத்தகையதொரு கொடூர நிலைக்கு எதிராக அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் தொழிலாளர் எழுச்சி உருவானது. ஒன்றிணைந்த தொழிலாளர் சில உரிமைகளை முன்வைத்து கோஷம் எழுப்பி ஊர்வலம் சென்றார்கள். அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதுடன் துப்பாக்கிச்சூடும் இடம்பெற்று உயிர்ப்பலியும் ஏற்பட்டது. தட்டுங்கள் திறக்கப்படும் என்ற யேசுபிரானின் திருவாக்கியத்திற்கு விளக்கமாக தொழிலாளர் போராட்டம் அவர்களுக்கு சில உரிமைகளை வழங்குவதற்கு வழிவகுத்தது.

எட்டுமணி நேர வேலை என்ற காலவரையறுப்பும் போராட்டத்தின் பெறுபேறாகக் கிடைக்கப் பெற்ற வரப்பிரசாதமாகும். இன்று முழு உலக நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் சில நாடுகளில் அமுலில் இருப்பதுமான உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தொழிலாளர் சாசனத்தின் ஏற்றுக்கொள்ளலுக்கும் வழிவகுத்தது மகிமைமிக்க இப்போராட்டமாகும். அனைத்து தொழிலாளர் போராட்டங்களுக்கும் மூலவித்தாக வழிகாட்டுவது இப்போராட்டமே என கார்ல் மாக்ஸ் தனது கம்யூனிஸ பிரகடனத்தில் குறிப்பிட்டு அதனை மேலும் கௌரவப்படுத்தினார். ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் போராட்டம் ஒன்றிருக்கிறது என்று சீனத்தலைவர் மாவோ சேதுங் சுட்டிக்காட்டினார்.

கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட சோவியத் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியின் பின்னர் உலக பொருளாதாரத் தன்மைகளில் மாறுதல் ஏற்பட்டது. சுதந்திரப் பொருளாதார கட்டமைப்பு அரச மூலதனம், தனியார் மூலதனம் என்ற விதமாக பொருளாதார கட்டமைப்புகளில் விரிவுகள் ஏற்பட்டன. இவை உழைப்பை மூலதனமாகக் கொண்டவர்களை பலபிரிவுகளுக்குள் இட்டுச்சென்றுவிட்டன. தொழிற்சங்கங்கள் ஒரே தலைமைக்குள் அமையாமல் சிதறல்தன்மை ஏற்பட்டுவிட்டது.

இதன் பெறுபேறாக தொழிலாளர் சார்பு அற்ற அரசுகள் தொழிலாளருக்குரித்தான பல உரிமைகளையும் தட்டிக்கழிக்கும் போக்கினை மேற்கொள்கின்றன. எனினும் தொழில் கோடுகள் பிரச்சினைகளை தீர்த்துவைப்பனவாக உள்ளன. இலங்கை போன்றவொரு அபிவிருத்தியடைந்துவரும் நாட்டிலும் இந்நிலைமையே காணப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயம் போன்ற பகுதிகளில் இன்றும் தொழிலாளர் சாசனத்திற்கு முரணான பல உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடியும்.

இலங்கையின் இன்றைய அரசான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொழிலாளர் சார்பாக குரல் எழுப்பும், கம்யூனிஷ்ட், லங்கா சமசமாஜ மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

இவற்றின் பின்னால் சகல இன தொழிலாளர்களையும் விவசாயிகளையும் உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் உள்ளன.

இன்று இந்நாட்டின் சகல இன மக்களும் தொழிலாளர் விவசாயிகள் மற்றும் சிறுதொழில்களை செய்பவர்களை உள்ளடக்கியவையாகும். தமிழர் பிரச்சினை காரணமாக பெரிதும் இன்னல்களுக்குள்ளாகி வருபவர்களும் சகல இனங்களையும் சேர்ந்த தொழிலாளர் விவசாய மக்களே ஆவர்.

இம்மேதின நாளில் இவற்றை இக்கட்சிகள் பெரிதும் உள்வாங்கி இக்கஷ்டங்களிலிருந்து சகல இன உழைப்பாளிகளையும், அவர்களின் குடும்பங்களையும் மீட்டெடுக்கும் சங்கற்பமுடன் செயல்படவேண்டும்.

இன, மத பேதமற்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே சமாதானத்தையும் வளமிக்கதொரு சுபிட்சத்தையும் இந்நாட்டில் ஏற்படுத்த முடியும்.

வீரகேசரி
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)