Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காந்தீய தேசத்தில் நரபலி...!
#1
3 வயது சிறுமி நரபலி: கண்களைத் தோண்டி கொடூரம்

கோவை அருகே 3 வயது சிறுமி கண்கள் தோண்டப்பட்டு, ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறாள். இச் சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

கோவையைச் சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் மகேஸ்வரி தம்பதியின் மகள் ஷாலினி (வயது 3). மகேஸ்வரி இப்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பிரசவத்துக்காக கோவை போரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு மகள் ஷாலினியுடன் சென்றார்.

துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்த ஷாலினி இரு தினங்களுக்கு முன் திடீரென காணாமல் போனாள். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீடே கவலையில் ஆழ்ந்திருந்தது.

இந் நிலையில் அருகே உள்ள குளக்கரையில் ஷாலினி கோரமான நிலையில் பிணமாகக் கிடந்தாள். அவளது உடலைக் கைப்பற்றிய பெற்றோர் மற்றும் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அச் சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டிருந்தன. கை, கால்களில் ரத்தக் குழாய்கள் அறுக்கப்பட்டு உடலில் இருந்து முழு ரத்தமும் வழிந்தோடச் செய்யப்பட்டு மிகக் கொடூரமான முறையில் இந்தக் கொலை நடந்துள்ளது.

கைகளில் மடக்கும் இடத்திலும், கால்களில் முட்டிக்குப் பின் புறத்திலும் கத்தியால் ரத்தக் குழாய்களை வெட்டியிருக்கிறது நரபலிக் கும்பல். அழகிய சிறுமியின் கண்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் அந்தப் பகுதியையே பெரும பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த நரபலிக் கொலைக் கும்பலைப் பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். இது கேரள மாந்தீகக் கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் கருதப்படுவதால் ஒரு போலீஸ் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
[size=14]கொடுமை.
நெஞ்சில் துளியும் ஈவிரக்கமில்லா அரக்கர்கள் செய்யும் நரபலிகள் இன்றும் தொடர்வது மனதை துளைக்கிறது.
Reply
#3
நெஞ்சை கலக்க வைக்கும் சம்பவம்.

நரபலி நடக்கின்றதா... அல்லது உறுப்புக்களை எடுத்து விற்பனை செய்யும் கும்பலின் ஈவிரக்கமற்ற செயலா....
Reply
#4
[quote=shanmuhi]நெஞ்சை கலக்க வைக்கும் சம்பவம்.

நரபலி நடக்கின்றதா... அல்லது உறுப்புக்களை எடுத்து விற்பனை செய்யும் கும்பலின் ஈவிரக்கமற்ற செயலா..
[Image: jbulgericon.jpg]
[size=14]
உங்கள் கேள்வியில் உள்ளதுமாதிரியான உறுப்புகளை பெறுவதற்கான பலியானால் எங்கே போய் முடியுமோ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)