Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் சார்ஸ்
#1
சார்ஸ் தொற்றுக்கு இலக்கான நூற்றுக்கணக்கான
சீனர்களுக்கு மருத்துவமனையில் தனியாக சிகிச்சை

சார்ஸ் எனும் பயங்கர ஆட்கொல்லியால் ஆட்கொள்ளப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான நோயா ளர்கள் சீனமருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உலகையே அச்சுறுத்திய சார்ஸ் நோய் அபாயம் உலகை விட்டுமுற்றாக நீங்கிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள இத்தகைய சந்தர்ப்பத்தில் சீனாவில் மீண்டும் சார்ஸ் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவியர் எகுரிடி ரெஸ்பியரிடி சின்றம் எனப்படுகின்ற இந்த சார்ஸ் நோய் காரணமாக கடந்த ஆண்டில் உலகில் 800 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வாரம் சார்ஸ் தொற்றுக்கு இலக்கான இளம்பெண்மணி ஒருத்தி உயிரிழந்ததை அடுத்தே சீனாவில் சார்ஸ் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சார்ஸ் தொற்றுக்கு இலக்கான 450 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட போதிலும் நேற்றைய தினம் அந்தத்தொகை மேலும் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப சார்ஸ் நோய்த்தொற்றுக்கு இலக்கான 600 பேர் சீன மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கென தனியான மருத்துவ சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வைத்தியர்கள் மற்றும் தாதியர் என்பன நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒரு வாரகால விடுமுறை சீனாவில் வழங்கப்படவுள்ளது. இதன் பொருட்டு ஆயிரக்ணக்கானோர் தம் இருப்பிடங்களைவிட்டு கிராமங்களை நோக்கி விமானம் மற்றும் ஏனைய மார்க்கங்கள் ஊடாக திரும்பிக் கொண்டிருக்கின்றனர். போக்குவரத்து சனநெரிசல் காரணமாகவும் சார்ஸ் காற்றுவழியாக பரவலாம் என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சார்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 24 சீனமருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவர்களுடன் உலக சுகாதார நிபுணர்களும் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது.

இதேவேளை, தலைநகர் சீனாவில் மாத்திரம் 30,000 பேர் சார்ஸ் தொற்றுக்கு இலக்காகி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

சார்ஸ் சீனாவின் தென்மாகாணத்திலேயே ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்தமை இனங் காணப்பட்டது

வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)